என் மலர்
நீங்கள் தேடியது "போலீஸ் விசாரணை"
- என்.ஐ.ஏ. அதிகாரிகள் தூத்துக்குடி வந்து முஸ்பிக் ஆலம் மற்றும் அவருடன் தங்கியிருந்த 7 பேரிடம் அதிரடி விசாரணை நடத்தினார்.
- என்.ஐ.ஏ. அதிகாரிகள் முஸ்பிக் ஆலம் உள்பட 4 பேரையும் தாளமுத்துநகர் போலீசில் ஒப்படைத்தனர்.
தூத்துக்குடி:
சென்னை அருகே பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ஒருவரை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) பிரிவினர் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த முஸ்பிக் ஆலம் என்பவருடன் அவர் அடிக்கடி பேசியது தெரியவந்தது.
மேலும் முஸ்பிக் ஆலம் தற்போது தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே உள்ள சிலுவைப்பட்டி பகுதியில் தங்கி அங்கு தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்திற்கு பெயிண்ட் அடிக்கும் பணி செய்து வருவதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று தூத்துக்குடி வந்து முஸ்பிக் ஆலம் மற்றும் அவருடன் தங்கியிருந்த 7 பேரிடம் அதிரடி விசாரணை நடத்தினார். அவர்கள் தங்கியிருந்த அறையில் சோதனை செய்தனர். முஸ்பிக் ஆலமின் செல்போனை வாங்கி அதில் இருந்த தகவல்களை ஆய்வு செய்தனர். அவர் தங்கியிருந்த குடியிருப்பு பகுதிகள் முழுவதும் அதிரடி சோதனை நடத்திய அதிகாரிகள் அவருடன் நெருங்கி பழகிய 3 பீகார் வாலிபர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில் அவர்களுக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய எந்த ஆவணங்களும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் முஸ்பிக் ஆலம் உள்பட 4 பேரையும் தாளமுத்துநகர் போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் 4 பேரிடமும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் மாநில உளவுப்பிரிவு அதிகாரிகள் உள்பட பல்வேறு அதிகாரிகளும் தொடர்ந்து அதிரடி விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் 4 பேரிடமும் போலீஸ் கண்காணிப்பில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- தூய்மை பணியாளர் ஒருவர் கர்நாடக அரசுக்கு கடந்த மாதம் 3-ந்தேதி புகைப்பட ஆவணங்களுடன் புகார் கடிதம் அனுப்பினார்.
- மாணவிகள் கொடூரமாக தாக்கி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக பகீர் தகவலை வெளியிட்டார்.
கர்நாடக மாநிலம் தட்சினகன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகாவில் உள்ளது தர்மஸ்தலா. இங்கு பிரசித்திபெற்ற மஞ்சுநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் அரசியல் பிரமுகர்கள், தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வது உண்டு.
இந்தநிலையில் அந்த கோவில் அருகே, கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள், மாணவிகளின் உடல்கள் புதைக்கப்பட்டதாகவும், அவர்கள் அனைவரும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகவும் பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இவ்வாறு புதைக்கப்பட்ட பெண்களின் உடல்கள் நிர்வாண நிலையிலும், கொடூரமாக தாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக தர்மஸ்தலா கோவில் நிர்வாகத்தின் கீழ் பணியாற்றிய தூய்மை பணியாளர் ஒருவர் கர்நாடக அரசுக்கு கடந்த மாதம்(ஜூன்) 3-ந்தேதி புகைப்பட ஆவணங்களுடன் புகார் கடிதம் அனுப்பினார்.
தனது பெயரை வெளியிடாத அந்த தூய்மை பணியாளர் மங்களூரு கோர்ட்டில் ஆஜராகி நீதிபதி முன்பு விளக்கம் அளித்தார். அப்போது அவர் தன்னுடன் சில எலும்புகளையும் கொண்டு வந்தார். அவர் கடந்த 1998-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் 100-க் கும் மேற்பட்ட பெண்கள், மாணவிகள் கொடூரமாக தாக்கி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக பகீர் தகவலை வெளியிட்டார்.
குறிப்பாக இந்த கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கில் தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவில் நிர்வாகத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக அவர் கூறி அதிர வைத்தார்.
இதன் பேரில் கடந்த 4-ந்தேதி பெல்தங்கடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கடந்த 13-ந்தேதியன்று புகார்தாரர், பெல்தங்கடியில் உள்ள முதன்மை ஜுடீசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மீண்டும் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
கர்நாடக மாநில பெண்கள் மேம்பாட்டு ஆணைய தலைவி நாகலட்சுமி சவுத்ரி, கடந்த 14-ந்தேதி இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தும்படி முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு கடிதம் எழுதினார்.
புகார்தாரரின் வக்கீல்களுடன், மங்களூரு வக்கீல்கள் சங்கத்தினர் முதல்-மந்திரி சித்தராமையாவை பெங்களூருவில் நேரில் சந்தித்து இச்சம்பவம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி.) விசாரணைக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்தனர். உள்துறை மந்திரியிடமும் கோரிக்கை மனு அளித்தனர்.
இந்த விவகாரத்தில் வழக்கு விசாரணையை போலீசார் தாமதப்படுத்துவதாகவும், அதனால் கூடுதல் டி.ஜி.பி. தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வு குழு, தடயவியல் குழு ஆகியவற்றை அமைத்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும், குற்றவாளிகளை உடனே கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், கோவில் பகுதியில் மர்மமான முறைகளில் நடைபெற்ற மரணங்கள் குறித்த விசாரணை எஸ்ஐடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
- 2 பேர் துப்பாக்கியால் சுரேந்திர கெவத்தை நோக்கி சுட்டுவிட்டு தப்பி சென்றனர்.
- பீகாரில் சட்டம்-ஒழுங்கு மோசமாக உள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஷேக்புரா பகுதியை சேர்ந்தவர் சுரேந்திர கெவத் (வயது 52). பா.ஜ.க. சேர்ந்த அவர் அக்கட்சியின் கிசான் மோர்ச்சா தலைவராக பணியாற்றினார்.
இந்த நிலையில் சுரேந்திர கெவத் தனது வயல்கள் உள்ள பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் துப்பாக்கியால் சுரேந்திர கெவத்தை நோக்கி சுட்டுவிட்டு தப்பி சென்றனர்.
இதில் அவரது உடலில் 4 தோட்டாக்கள் பாய்ந்தது. ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த அவரை மீட்டு பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி சுரேந்திர கெவத் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பாட்னாவில் பிரபல தொழில் அதிபர் கோபால் கெம்கா அவரது வீட்டுக்கு முன்பு சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதையடுத்து பீகாரில் சட்டம்-ஒழுங்கு மோசமாக உள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இந்த நிலையில் பா.ஜ.க தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- காவல்துறை விசாரணை என்ற பெயரில் கடுமையாகத் தாக்குவது, திமுக ஆட்சியில் மிகவும் அதிகரித்துள்ளது.
- உயிரிழந்த இளைஞர் அஜித் குடும்பத்தினருக்கு நியாயம் கிடைக்கும் வரை நாங்கள் விடப்போவதில்லை.
பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல்நிலையத்தில், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட 29 வயது இளைஞர் அஜித், காவல்துறை விசாரணையில் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்தக் கொலையை மூடிமறைக்கும் வேலையில், காவல்துறையினரும், அந்தப் பகுதி திமுகவினரும் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.
பாலியல் குற்றங்களில் ஈடுபடும் திமுகவினர், போதைப் பொருள்கள் விற்பனை செய்யும் திமுகவினர் யாரும், காவல்துறை விசாரணையின்போது தாக்கப்படுவதில்லை. ராஜமரியாதையுடன் நடத்தப்படுகின்றனர். சிறு சிறு குற்றங்களில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் அப்பாவிகளைக் காவல்துறை விசாரணை என்ற பெயரில் கடுமையாகத் தாக்குவது, திமுக ஆட்சியில் மிகவும் அதிகரித்துள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த 2022 ஆம் ஆண்டிலிருந்து, 23 பேர் காவல்துறை விசாரணையின்போது மரணமடைந்துள்ளனர். ஆனால், காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர், இது குறித்து எந்தக் கவலையுமின்றி இருக்கிறார்.
தமிழகத்தில், ஆளுங்கட்சியினர், அமைச்சர்களின் நண்பர்கள் குற்றம் செய்தால், அவர்களைக் காப்பாற்ற, பாதிக்கப்பட்டவர்களையே மிரட்டும் திமுக அரசு, ஏழை எளிய மக்கள் என்றால், அவர்கள் உயிர் போனாலும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது.
உடனடியாக, திருப்புவனம் இளைஞர் அஜித், காவல்துறை விசாரணையில் கொலை செய்யப்பட்டது குறித்து முழு விசாரணை நடத்த வேண்டும். இதில் தொடர்புடையவர்கள் அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காகப் போராடும் திருப்புவனம் மக்களோடு நாங்கள் துணை நிற்கிறோம். உயிரிழந்த இளைஞர் அஜித் குடும்பத்தினருக்கு நியாயம் கிடைக்கும் வரை நாங்கள் விடப்போவதில்லை.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றினர்.
- குழந்தையின் தலையை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே எமனேஸ்வரத்தில் இரண்டரை வயது பெண் குழந்தையை தலை துண்டித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குழந்தை லெமோரியாவை தனது சொந்த மாமா சஞ்சய் கொலை செய்து தலையை துண்டித்துள்ளார். குழந்தையின் கழுத்தறுத்து கொலை செய்து தலையை குளத்தில் வீசிவிட்டு தப்பியுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றினர்.
பிறகு, குழந்தையின் தலையை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டனர்.
இந்நிலையில், குளத்தில் வீசப்பட்ட குழந்தையின் தலையை போலீசார் மீட்டனர்.
கொலைக்கான காரணம் குறித்து தகவல் வெளியாகாத நிலையில், போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- ரூ. 20 லட்சம் மதிப்பிலான 33.5 கிலோ எடை கொண்ட வெள்ளியை வாங்கி சென்றார்.
- பல மாதங்கள் ஆகியும் தேவேந்திரன் அதை திருப்பிக் கொடுக்கவில்லை
சேலம்:
சேலம் சிவதாபுரம் பன ங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீ ஆனந்தராஜன் (வயது 45). வெள்ளி வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் கடந்த ஜூன் மாதம் குடுமியான் தெருவை சேர்ந்த தேவேந்திரன் (44) என்பவர், வெள்ளி வேலை செய்து தருவதாக கூறி ரூ. 20 லட்சம் மதிப்பிலான 33.5 கிலோ எடை கொண்ட வெள்ளியை வாங்கி சென்றார்.
பல மாதங்கள் ஆகியும் தேவேந்திரன் அதை திருப்பிக் கொடுக்கவில்லை. மேலும் வெள்ளிக்கான பணத்தையும் கொடுக்காமல் காலம் கடத்தி வந்தார்.இது குறித்து பலமுறை கேட்டும் கொடுக்காத நிலையில் நேற்று முன்தினம் ஆனந்தராஜனின் வீட்டிற்கு சென்ற தேவேந்திரன், பூபதி, முரளி ஆகிய 3 பேர், ஆனந்தராஜனுக்கு கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர். இது குறித்து ஸ்ரீ ஆனந்தராஜன் கொண்ட லாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆற்றில் அடையாளம் தெரியாத 55 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் இறந்த நிலையில் நீரில் மிதந்து வந்தது.
- உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கடலூர்:
கடலூரில் அருகே திருவந்திபுரத்தில் கெடிலம் ஆறு உள்ளது. இன்று காலை இந்த ஆற்றில் அடையாளம் தெரியாத 55 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் இறந்த நிலையில் நீரில் மிதந்து வந்தது. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீரில் மிதந்து வந்த மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காந்திநகர் மணி முத்தாற்றங்கரையிலுள்ள முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.
- மர்ம நபர்கள் அம்மன் சிலை கழுத்திலிருந்து 6 கிராம் தாலி, 3000 ரூபாய் பணத்தை திருடிச் சென்றனர்.
கடலூர்:
விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட காந்திநகர் மணி முத்தாற்றங்கரையிலுள்ள முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று இரவு கோயில் பூசாரி வழக்கம் போல் பூஜை முடித்து விட்டு கோவிலை பூட்டிச் சென்றுள்ளார். இன்று காலை, கோயில் பூசாரி தனவேல் கோயிலுக்கு வந்து பார்த்த போது கோயில் கதவு பூட்டை உடைத்து, நேற்று இரவு மர்ம நபர்கள் அம்மன் சிலை கழுத்திலிருந்து 6 கிராம் தாலி, 3000 ரூபாய் பணத்தை திருடிச் சென்றனர்.
இதுகுறித்து கோயில் உண்டியல் மற்றும் இரும்பு கம்பி கோயில் எதிரே உள்ள மணிமுத்தாற்றங்கரையில் கிடந்துள்ளது. இதனையடுத்து, விருத்தாச்சலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் அங்கு வந்த குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இத்திருட்டு சம்பத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- கிருத்திகா கலைக் கல்லூரியில் பி. காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
- திருச்செந்தூர் நோக்கி சென்ற விரைவு ெரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர்:
சிதம்பரம் வல்லம்படுகை ெரயில்வே நிலையம் அருகில் கணேசமூர்த்தி மகள் கிருத்திகா (வயது 19) இவர் கடலூர் கலைக் கல்லூரியில் பி. காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று கிருத்திகா கல்லூரிக்கு சென்று விட்டு பின்னர் சிதம்பரத்தில் உள்ள கம்ப்யூட்டர் பயிற்சி நிலையத்திற்கும் சென்று விட்டு இரவு வீட்டிற்கு திரும்பி உள்ளார்.
அப்போது வல்ல ம்படுகை -மயிலாடுதுறை ெரயில் நிலையத்திற்கு உட்பட்ட ெரயில் நிலையத்தில் சென்னையில் இருந்து திருச்செந்தூர் நோக்கி விரைவு ரயில் ஒன்று வந்தது. இந்நிலையில் கிருத்திகா வீட்டின் பின்புறம் உள்ள ெரயில் நிலையத்திற்கு வந்து திருச்செந்தூர் நோக்கி சென்ற விரைவு ெரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து இது குறித்து மயிலாடுதுறை ெரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த மயிலாடுதுறை ெரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிருத்திகா உடலை மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக சேர்த்தனர். மேலும் இதுகுறித்து ெரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அனைவரும் ஒன்றாக வீட்டில் வசித்து வருகின்றனர்.
- வீட்டுக்கு வந்து பார்த்தபோது தாய் மற்றும் தங்கை காணவில்லை.
கடலூர்:
கடலூர் முதுநகரை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 21).மீனவர். இவரது தாய் வனரோஜா (வயது 42). தங்கை அனுசியா (வயது 19). அனைவரும் ஒன்றாக வீட்டில் வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று ஆகாஷ் வீட்டில் இருந்து வெளியில் சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது தாய் மற்றும் தங்கை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த ஆகாஷ் 2 பேரையும் பல்வேறு இடத்தில் தேடிப் பார்த்தார். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வன ரோஜா, அனுசியா ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் முதுநகரில் தாய், மகள் மாயமான சம்பவம் பரபரப்பாக காணப்பட்டு உள்ளது.
- ஆற்றின் மணல் திட்டு நடு பகுதியில் இன்று காலை வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார்.
- நெல்லிக்குப்பம் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்றனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே வளவனூர் போலீஸ் சரகம் சொர்ணாவூர் மேல்பாதியில் தடுப்பணைக்கட்டு உள்ளது. இந்த தடுப்பணை தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. தற்போது வடகிழக்கு பருவ மழை காரணமாக ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆற்றின் இருகரை களை தொட்டும் தண்ணீர் சீறி பாய்ந்து செல்கிறது. இந்த ஆற்றின் மணல் திட்டு நடு பகுதியில் இன்று காலை வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து வள வனூர் போலீ சாருக்கு தகவல் தெரிவி க்கப்பட்டது.
தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பால முருகன், நெல்லிக்குப்பம் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்றனர். வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆற்றில் பிணமாக மிதந்த வாலிபர் யார்? அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? அவரை யாராவது அடித்து கொன்று உடலை வீசி விட்டு சென்றார்களா? அந்த பகுதியில் யாராவது காணாமல் போனார்களா? என்பது குறித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சாலையோர பள்ளத்தில் சரவணன் இருசக்கர வாகனத்துடன் பிணமாககிடந்தார்.
- இது தொடர்பாக போலீசார் கிடுக்கிப்படி விசாரணை நடத்தி வருகிறாார்கள்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தொளார் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (வயது 26). இவர் சென்னையில் தனியார் ஹோட்டலில் காசாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 4நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்திருந்தார். நேற்று இரவு 7 மணி அளவில் பெண்ணாடம் சென்று விட்டு வருவதாக வீட்டில் இருந்தவரிடம் கூறி சென்றவர் இது வரை வீட்டிற்கு வரவில்லை.
இந்த நிலையில் பெண்ணாடத்திலிருந்து தொளார் செல்லும் சாலையோர பள்ளத்தில் சரவணன் இருசக்கர வாகனத்துடன் பிணமாககிடந்தார். இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து ஆவினங்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டனர். சரவணனின் முகத்தில் காயங்கள் உள்ளது. எனவே அவரை யாராவது அடித்து கொன்று உடலை வீசி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக போலீசார் கிடுக்கிப்படி விசாரணை நடத்தி வருகிறாார்கள். சரவணன் உடலை போலீசார் திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேதனைக்கான அனுப்பி வைத்தனர்.






