என் மலர்
பீகார்
- போலீஸ்காரர் வாகன ஓட்டியிடம் லஞ்சம் வாங்கியதாகவும், இதனை சக போலீஸ்காரர் தட்டிக் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
- 2 போலீஸ்காரர்களும் ஒருவரையொருவர் கைகளாலும், கம்பாலும் தாக்கிக் கொண்டனர்.
பீகார் மாநிலம் நாலந்தா மாவட்டத்தில் உள்ள சொஹ்சராய் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் முக்கிய சாலையில் போலீசார் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு போலீஸ்காரர் வாகன ஓட்டியிடம் லஞ்சம் வாங்கியதாகவும், இதனை சக போலீஸ்காரர் தட்டிக் கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது.
2 போலீஸ்காரர்களும் ஒருவரையொருவர் கைகளாலும், கம்பாலும் தாக்கிக் கொண்டனர். பட்டப்பகலில் போலீஸ்காரர்கள் முக்கிய சாலையில் சண்டை போட்டுக் கொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், சிலர் இந்த சண்டையை வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். வீடியோ வைரலானதைத் தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சாலையில் சண்டை போட்ட 2 போலீஸ்காரர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- நாடு முழுவதும் முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என பா.ஜ.க. எதிர்பார்க்கிறது.
- முன்கூட்டியே தேர்தல் வந்தால் அதை எதிர்கொள்வதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றார்.
பாட்னா:
பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நாடு முழுவதும் முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என பா.ஜ.க. எதிர்பார்க்கிறது. அதற்காகத்தான் நாங்களும் காத்திருக்கிறோம்.
எவ்வளவு சீக்கிரம் தேர்தலை நடத்துகிறீர்களோ, அவ்வளவு நல்லது. தேர்தலுக்கு நாங்கள் எப்பொழுதும் தயாராக இருக்கிறோம். முன்கூட்டியே பாராளுமன்றத் தேர்தல் நடந்தால் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். மக்களுக்காக உழைத்து வருகிறோம், தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்வோம்.
சாலைகள், பாலங்கள், மின்சாரம், குடிநீர் வசதிகளை அமைப்பது முதல் பல உள்கட்டமைப்பு திட்டங்கள் வரை மாநிலத்தில் பல பணிகளை செய்துள்ளோம். வாக்காளர்களே இறுதி முடிவை எடுப்பார்கள் என தெரிவித்தார்.
- ரூ.12 லட்சம் கோடிக்கு ஊழல் புரிந்தவர்கள் அவர்கள்
- ரெயில்வே மந்திரியாக இருந்த போது லல்லு பிரசாத் பல கோடிக்கு ஊழல் செய்தார்
இந்தியாவின் 18-வது மக்களவைக்கான தேர்தல் அடுத்த வருடம் நடைபெறவுள்ளது. இதனையொட்டி தற்போதைய ஆளும் பா.ஜ.க.வை உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளும், பா.ஜ.க. கூட்டணியை எதிர்க்க "இந்தியா கூட்டணி" எனும் பெயரில் 25க்கும் மேற்பட்ட மாநில கட்சிகளை உள்ளடக்கிய எதிர்கட்சி கூட்டணியும் இப்போதிலிருந்தே மும்முரமாக தங்களை தயார்படுத்தி வருகின்றன.
பா.ஜ.க.வின் சார்பில் "லோக் சபா பிரவஸ்" எனும் திட்டத்தின் கீழ் தற்போது நாடு முழுவதும் ஆங்காங்கே அதன் சாதனை விளக்க பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன.
ஆளும் பா.ஜ.க.வின் உள்துறை அமைச்சரான அமித் ஷா, பீகார் மாநில மதுபானி மாவட்டத்தில் லோக் சபா பிரவஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக ஜஞ்சர்பூர் நகரில் ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது இந்தியா கூட்டணியை எதிர்த்து அமித் ஷா பேசியதாவது:
"எதிர் கட்சியினர் ஒரு புது பெயரில் பழைய கூட்டணியையே உருவாக்கியுள்ளனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணி எனும் பெயரில் ஒரு கூட்டணி அமைத்து முன்பு ஆட்சியில் இருந்த போது ரூ.12 லட்சம் கோடி அளவிற்கு ஊழல் செய்தனர்."
"அப்போது ரெயில்வே மந்திரியாக இருந்த பீகாரின் லல்லு பிரசாத் யாதவ் பல கோடிக்கு ஊழல் செய்தார். அதே பெயரில் மீண்டும் அவர்கள் ஓட்டு கேட்டு ஆட்சிக்கு வர முடியாது என உணர்ந்து இந்தியா கூட்டணி என புது பெயரிட்டு உலா வருகிறார்கள். இக்கூட்டணியை சேர்ந்தவர்கள் இந்துக்களின் புனித ராம்சரிதமானசை அவமானப்படுத்துகிறார்கள்."
"ரக்ஷாபந்தன் மற்றும் ஜன்மாஷ்டமி ஆகிய இந்துக்களின் பண்டிகை தினங்களுக்கு விடுமுறையை ரத்து செய்கிறார்கள். இந்துக்களின் சனாதன தர்மத்தை வியாதிகளோடு ஒப்பிடுகிறார்கள். ஆனால் வேறு சிலரோடு மற்றும் சமாதான அணுகுமுறையை கடைபிடிக்கிறார்கள்," என்று கூறினார்.
- இரு தரப்பினரையும் சேர்ந்த 11 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வெறும் 400 ரூபாய்க்காக 3 உயிர்கள் பலியானது பீகாரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலம் பதுஹா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சுரகா கிராமத்தில் பால் நிலுவை தொகை ரூ.400 வழங்குவது தொடர்பான தகராறில் 2 பிரிவினர் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. 2 பிரிவினரும் கைகளாலும், ஆயுதங்களாலும் தாக்கிகொண்டனர். அப்போது இரு தரப்பினருமே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டனர்.
இதில் 50 ரவுண்டுகள் துப்பாக்கி சூடு நடந்தது. இந்த துப்பாக்கி சூட்டில் ஒரு தரப்பை சேர்ந்த ஜெய்சிங்(வயது50), சைலேஷ் குமார்(35) ஆகிய 2 பேர், மற்றொரு தரப்பில் பிரதீப்குமார்(35) என 3 பேர் கொல்லப்பட்டனர்.
இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. சம்பவ இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இரு தரப்பினரையும் சேர்ந்த 11 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
துப்பாக்கி சூட்டில் காயமடைந்த மின்டு குமார் (22) என்பவர் நாளந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. வெறும் 400 ரூபாய்க்காக 3 உயிர்கள் பலியானது பீகாரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- பாக்மதி நிதியை கடக்கும்போது கவிழ்ந்து விபத்து
- மீட்புப் பணி நடைபெற்று வருவதாக முதல்வர் தெரிவித்துள்ளார்
பீகார் மாநிலம் முசாபர்புர் மாவட்டத்தில் பாக்மதி நதி ஓடிக்கொண்டிருக்கிறது. மதுபுர் பாத்தி காட் இடையே, 30 குழந்தைகளை படகு ஒன்று பள்ளிக்கு ஏற்றிச் சென்று கொண்டிருந்தது. இந்த படகு திடீரென கவிழ்ந்தது. இதனால் குழந்தைகள் தண்ணீர் தத்தளித்தனர்.
உடனடியாக மீட்புப்பணி நடைபெற்றது. இதன் பயனாக 20 குழந்தைகள் மீட்கப்பட்டனர். ஆனால், 10 குழந்தைகளை காணவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்தத் தகவல் அறிந்ததும் பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் ''மீட்புப்பணி நடைபெற்று வருகிறது. இவ்விவகாரத்தை அவசரமாக கவனிக்குமாறு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் கேட்டுக் கொண்டேன். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அனைத்து விதமான உதவிகளையும் அரசு செய்யும்'' எனத் தெரிவித்துள்ளார்.
- பலமுறை கோரிக்கை விடுத்தும், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை.
- பள்ளி மாணவிகள் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
பீகார் மாநிலத்தின் பாட்னாவை அடுத்த வைஷாலி மாவட்டத்தில் உள்ள மனார் பிளாக்-இல் அரசு பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லாததை கண்டித்து மாணவிகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தின் போது அங்கு வந்த கல்வித்துறை அதிகாரிகளின் வாகனத்தை பள்ளி மாணவிகள் அடித்து நொறுக்கிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போராட்டத்தில் ஈடுபட்ட போது, பெண் காவல் துறை அதிகாரி ஒருவர் தங்களை அடித்த காரணத்தால் தான், கல்வித்துறை அதிகாரியின் வாகனத்தை அடித்து நொறுக்கியதாக பள்ளி மாணவிகள் தெரிவித்து உள்ளனர்.
மதன் சவுக் மற்றும் படேல் சவுக் அருகில் உள்ள மனார் மௌதிநகர் பிரதான சாலையை மாணவிகள் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பலமுறை கோரிக்கை விடுத்தும், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்று மாணவிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
பள்ளி மாணவிகள் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டது, போராட்டத்தின் போது கல்வித் துறை அதிகாரியின் வாகனம் மாணவிகளால் அடித்து நொறுக்கப்பட்டது போன்ற சம்பவங்களால் அந்த பகுதியில் பதற்ற நிலை உருவாகி இருக்கிறது. மேலும் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
- அன்சுர்குமார் என்பவர் தன்னுடைய சொகுசு காரில் கால்நடைகளுக்கு தீவனங்களை ஏற்றி சென்றுள்ளார்.
- தீவனங்கள் கீழே விழாமல் இருப்பதற்காக கயிறு கட்டி பாதுகாப்பாக கொண்டு சென்றுள்ளார்.
சமூக வலைதளங்களில் ஏராளமான வீடியோக்கள் உலா வந்தாலும் ஒரு சில வீடியோக்கள் அதிகம் பேரால் பகிரப்படுகிறது. அந்த வகையில் தற்போது வெளியாகி உள்ள ஒரு வீடியோவில் சொகுசு கார் ஒன்றில் கால்நடைகளுக்கு தீவனத்தை ஏற்றி செல்லும் காட்சிகள் பார்வையாளர்களை திகைக்க வைத்துள்ளது.
இந்த வீடியோ பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அப்பகுதியை சேர்ந்த அன்சுர்குமார் என்பவர் தன்னுடைய சொகுசு காரில் கால்நடைகளுக்கு தீவனங்களை ஏற்றி சென்றுள்ளார். காரின் மேல்புறம் அவற்றை ஏற்றிக் கொண்டு, அந்த தீவனங்கள் கீழே விழாமல் இருப்பதற்காக கயிறு கட்டி பாதுகாப்பாக கொண்டு சென்றுள்ளார்.
இதனை அப்பகுதியை சேர்ந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ வைரலானதையடுத்து பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
- சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
- ரெயிலில் பயணித்த போது கீழே விழுந்ததில் ஒரு கை துண்டானதாகவும், அதனை இணைப்பதற்காக ஆஸ்பத்திரிக்கு சென்றதாகவும் தெரிவித்தார்.
பீகார் மாநிலம் பாகல்பூர் பகுதியில் வாலிபர் ஒருவர் தன்னுடைய ஒரு கை துண்டான நிலையில், அந்த கையை மற்றொரு கையால் எடுத்துக்கொண்டு சாலையில் நடந்து சென்றுள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். சிலர் அதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த வாலிபர் அதே பகுதியை சேர்ந்த சுமன்குமார் என தெரியவந்தது. அவர் ரெயிலில் பயணித்த போது கீழே விழுந்ததில் ஒரு கை துண்டானதாகவும், அதனை இணைப்பதற்காக ஆஸ்பத்திரிக்கு சென்றதாகவும் தெரிவித்தார்.
உடனடியாக அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
- கணவர் வீட்டில் இல்லாத சமயம் பெண்ணிடம் ஆனந்த் செல்போனில் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.
- வாலிபர் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு கம்பத்தில் கட்டப்பட்டிருந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
லக்னோ:
பீகார் மாநிலம் காதிர்கர் மாவட்டம் காபர் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த். இவர் அங்குள்ள ஒரு மாவு மில்லில் வேலை பார்த்து வந்தார். வேலை தொடர்பாக உரிமையாளரின் வீட்டுக்கு செல்வது வழக்கம். அப்போது அவரது மனைவிடம் பேசுவது உண்டு. இந்த வாய்ப்பை பயன்படுத்தி அடிக்கடி அவர் தனது உரிமையாளரின் மனைவிக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.
கணவர் வீட்டில் இல்லாத சமயம் அந்த பெண்ணிடம் ஆனந்த் செல்போனில் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதை அவர் கண்டித்தார். சம்பவத்தன்று உரிமையாளர் வீட்டுக்கு சென்ற அவர் அவரது மனைவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். இது பற்றி வெளியில் சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டினார். ஆனந்தின் தொந்தரவு தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். இதை கேட்டு அருகில் இருந்த அவரது உறவினர்கள் அங்கு திரண்டனர்.
அவர்களை பார்த்ததும் ஆனந்த் தப்பி ஓட முயன்றார், ஆனால் அவர்கள் அவரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர், மேலும் அவரது தலையை மொட்டையடித்து அருகில் இருந்த கம்பத்தில் கட்டி வைத்தனர், செருப்பு மாலையும் அணிவித்தனர். இது பற்றி அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்து ஆனந்தை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
ஆனால் இந்த பாலியல் தொந்தரவு குறித்து போலீசில் யாரும் புகார் கொடுக்காததால் போலீசார் அவரை விடுவித்தனர்.
ஆனந்த் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு கம்பத்தில் கட்டப்பட்டிருந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
- ஆன்லைன், டியூசன் மூலம் பாட்னாவில் பிரபலம்
- ஆயிரக்கணக்கான பெண்கள் கூடியதால் வியப்பு
பீகார் மாநிலம் பாட்னாவில் ஆன்லைன் மூலமாகவும், டியூசன் மூலமாகவும் மாணவ- மாணவிகளுக்கு பாடம் எடுத்து வருபவர் கான் என்ற ஆசிரியர். இவர் தனது அர்ப்பணிப்பு மூலம் மாணவ- மாணவிகளுக்கு சிறப்பான முறையில் கல்வி கற்று கொடுத்து வருகிறார்.
இதனால் பாட்னாவில் பிரபலமான திகழ்ந்து வருகிறார். நேற்று ரக்ஷா பந்தன் விழா கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து சகோதரிகள் எனது மணிக்கட்டில் ராக்கி கயிறு கட்ட வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பெண்கள், மாணவிகள், சிறுமிகள் திரண்டு. கான் மணிக்கட்டில் ராக்கி கயிறுகளை கட்டினர். இதனால் அவரது கை முழுவதும் ராக்கி கயிறுகளாக காட்சியளித்தன. சுமார் 7 ஆயிரம் பெண்கள் தனது மணிக்கட்டில் ராக்கி கயிறு கட்டியதாக கான் தெரிவித்துள்ளார். மேலும், இது உலக சாதனை என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டு வீடியோ வைரலாகி வருகிறார்.