என் மலர்
நீங்கள் தேடியது "நக்சலைட்"
- தேடுதல் வேட்டையின்போது பாதுகாப்பு படை வீரர்களை நோக்கி அவர்கள் தாக்குதல் நடத்தினார்கள்.
- பல மாவோயிஸ்டுகளின் உடல்கள் இன்னும் மீட்கப்படவில்லை.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா-நாராயண்பூர் எல்லையில் அபுஜ்மத்தின் அடர்ந்த காட்டுப் பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது.
பாதுகாப்பு படை வீரர்களின் தாக்குதலில் 5 முதல் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தேடுதல் வேட்டையின்போது பாதுகாப்பு படை வீரர்களை நோக்கி அவர்கள் தாக்குதல் நடத்தினார்கள். பாதுகாப்பு படையின் பதிலடி தாக்குதலில் மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். பல மாவோயிஸ்டுகளின் உடல்கள் இன்னும் மீட்கப்படவில்லை.
- சல்வா ஜூடும்' சட்டவிரோதமானது என்று நீதிபதி சுதர்சன் ரெட்டி 2011 இல் தீர்ப்பளித்தார்.
- சல்வா ஜூடும் இருந்திருந்தால், நக்சலைட் இயக்கம் 2020 ஆம் ஆண்டிலேயே முடிவுக்கு வந்திருக்கும்.
செப்டம்பர் 9 அன்று நடைபெற உள்ள துணை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார். என்டிஏ கூட்டணி சார்பில் ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்ட மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் நிற்கிறார்.
இதற்கிடையே கேரளாவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, " இந்தியா கூட்டணி, நக்சலைட்டுகளின் தீவிர ஆதரவாளரான சுதர்சன் ரெட்டியை துணை ஜனாதிபதி வேட்பாளராகத் தேர்ந்தெடுத்துள்ளது.
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளுக்கு எதிராகப் போராட பழங்குடி இளைஞர்களைக் கொண்டு அரசாங்கம் உருவாக்கிய 'சல்வா ஜூடும்' சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று நீதிபதி சுதர்சன் ரெட்டி 2011 இல் தீர்ப்பளித்தார்.
அந்தத் தீர்ப்பை அவர் வழங்கியிருக்காவிட்டால், சல்வா ஜூடும் நடைமுறையில் இருந்திருந்தால், நக்சலைட் இயக்கம் 2020 ஆம் ஆண்டிலேயே முடிவுக்கு வந்திருக்கும்.
இடதுசாரிகளின் அழுத்தத்தின் பேரில்தான் காங்கிரஸ் கட்சி நீதிபதி சுதர்சன் ரெட்டியை துணை ஜனாதிபதி வேட்பாளராகத் தேர்ந்தெடுத்துள்ளது" என்று குற்றம் சாட்டினார்.
அமித் ஷாவின் இந்த குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளித்த சுதர்சன் ரெட்டி, "அந்த தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது, என்னால் தனிப்பட்ட முறையில் வழங்கப்பட்டது அல்ல. விவாதத்தில் கண்ணியம் இருக்க வேண்டும். ஆனால் இந்த விஷயத்தில் உள்துறை அமைச்சருடன் விவாதிக்க விரும்பவில்லை என்றும் கூறினார்.
இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டியை நக்சல் ஆதரவாளர் என விமர்சித்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்றங்களின் ஓய்வு பெற்ற 18 நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியை கண்ணியத்துடன் விமர்சிக்க வேண்டும் என 18 முன்னாள் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
- அந்தத் தீர்ப்பை அவர் வழங்கியிருக்காவிட்டால், சல்வா ஜூடும் நடைமுறையில் இருந்திருந்திருக்கும்.
- இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையிலான போட்டியாகப் பார்க்க வேண்டும்.
செப்டம்பர் 9 அன்று நடைபெற உள்ள துணை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார். என்டிஏ கூட்டணி சார்பில் ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்ட மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் நிற்கிறார்.
இதற்கிடையே கேரளாவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, " இந்தியா கூட்டணி, நக்சலைட்டுகளின் தீவிர ஆதரவாளரான சுதர்சன் ரெட்டியை துணை ஜனாதிபதி வேட்பாளராகத் தேர்ந்தெடுத்துள்ளது.
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளுக்கு எதிராகப் போராட பழங்குடி இளைஞர்களைக் கொண்டு அரசாங்கம் உருவாக்கிய 'சல்வா ஜூடும்' சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று நீதிபதி சுதர்சன் ரெட்டி 2011 இல் தீர்ப்பளித்தார்.
அந்தத் தீர்ப்பை அவர் வழங்கியிருக்காவிட்டால், சல்வா ஜூடும் நடைமுறையில் இருந்திருந்தால், நக்சலைட் இயக்கம் 2020 ஆம் ஆண்டிலேயே முடிவுக்கு வந்திருக்கும்.
இடதுசாரிகளின் அழுத்தத்தின் பேரில்தான் காங்கிரஸ் கட்சி நீதிபதி சுதர்சன் ரெட்டியை துணை ஜனாதிபதி வேட்பாளராகத் தேர்ந்தெடுத்துள்ளது" என்று குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் இந்த குற்றச்சாட்டு குறித்து சுதர்சன் ரெட்டி விளக்கம் அளித்துள்ளார்.
ஊடகத்தினரிடம் பேசிய அவர், அந்த தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது என்றும், அவரால் தனிப்பட்ட முறையில் வழங்கப்பட்டது அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், விவாதத்தில் கண்ணியம் இருக்க வேண்டும் என்றும், ஆனால் இந்த விஷயத்தில் உள்துறை அமைச்சருடன் விவாதிக்க விரும்பவில்லை என்றும் கூறினார்.
துணை ஜனாதிபதி தேர்தலை இரண்டு தனிநபர்களுக்கு இடையிலான போட்டியாகப் பார்க்கக்கூடாது, மாறாக இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையிலான போட்டியாகப் பார்க்க வேண்டும் என்றும் சுதர்சன் ரெட்டி தெரிவித்தார்.
- கடந்த மூன்று நாட்களில் முக்கிய தலைவர் உள்பட 7 பேர் சுட்டுக்கொலை.
- நேற்றிரவு மற்றும் இன்று காலை நடைபெற்ற சண்டையில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கர் மாநிலம் பிஜாபூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையில் நடைபெற்ற என்கவுண்டரில் 5 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். கடந்த மூன்று நாட்களில் முக்கிய தலைவர்கள் சுதாகர், பாஸ்கர் உள்பட 7 நக்சலைட்டுகள் சுட்டு வீ்ழ்த்தப்பட்டனர்.
பிஜாபூர் மாவட்டத்தில் உள்ள இந்திராவதி தேசிய பூங்கா பகுதியில் நடைபெற்ற நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஏழு நக்சலைட்டுகள் சுட்டு வீழ்த்திப்பட்டனர். அவர்களின் உடல்களை பாதுகாப்புப்படையினர் கண்டெடுத்துள்ளனர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு நடைபெற்ற சண்டைக்குப்பிறகு 3 உடல்கள் கண்டெடுக்கப்பட்டது. இன்று காலை இரண்டு உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் சிறப்பு அதிரடிப்படை (Special Task Force), மாவட்ட ரிசர்வ் கார்டு (District Reserve Guard), மத்திய ரிசர்வ் காவல் படையின் (CRPF) சிறப்புக் குழுவான CoBRA ஆகியவை இணைந்து கடந்த 4ஆம் தேதி ரகசிய தகவல் அடிப்படையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
நேற்று பாஸ்கர் சுட்டு வீழ்த்தப்பட்டார். நேற்று முன்தினம் சுதாகர் சுட்டு வீழ்த்தப்பட்டார். இவர்களது தலைக்கு சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சுட்டுக்கொலை செய்யப்பட்ட மற்ற 5 பேர்களில் இருவர் பெண்கள் ஆவார்கள். இந்த சண்டையின்போது பாம்பு, தேனீக்கள் காரணமாக சில வீரர்கள் காயம் அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- இலங்கை தமிழீழ விடுதலை புலிகளிடம் பசவராஜு பயிற்சி பெற்றவர்.
- அவருடைய கூர்மையான திட்டமிடல், தாக்கும் திறன் மற்றும் பயிற்சி அளித்து படைகளை மேம்படுத்தியது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த பாதுகாப்பு படையினரின் அதிரடி வேட்டையில் மாவோயிஸ்டுகளின் முக்கிய தலைவர் பசவராஜு சுட்டுக் கொல்லப்பட்டார்.
இலங்கை தமிழீழ விடுதலை புலிகளிடம் பயிற்சி பெற்ற பசவராஜு திறமை மிக்க வலிமையான தலைவராக விளங்கினார். அவருடைய கூர்மையான திட்டமிடல், தாக்கும் திறன் மற்றும் பயிற்சி அளித்து படைகளை மேம்படுத்தியது மாவோயிஸ்டு அமைப்புக்கு பெரும் வலிமையாக இருந்தது.
பசவராஜை குறிவைத்த பாதுகாப்பு படையினர் அவரை கடந்த 6 மாதங்களாக திட்டமிட்டு பிடிக்க முடிவு செய்தனர். முதற்கட்டமாக பசவராஜு அமைப்பில் நெருங்கிய தொடர்புடையவர்களை பாதுகாப்புப்படையினர் தீவிரமாக கண்காணித்தனர்.
பாதுகாப்பு படையினரின் அதிரடி வேட்டை காரணமாக தெலுங்கானா சத்தீஸ்கர் எல்லையில் உள்ள மலை காடுகளில் மாவோயிஸ்டுகள் தஞ்சமடைந்தனர்
மேலும் பாதுகாப்பு படையினர் என்கவுண்டர்களும் அதிகரித்தன. இதனால் பசவராஜுன் பாதுகாப்பு பிரிவில் இருந்த ஒரு முக்கிய தளபதி உட்பட 6 பேர் சரணடைந்தனர். இது பாதுகாப்பு படையினருக்கு மிகப்பெரிய உதவியாக இருந்தது.
மாவோயிஸ்டுகள் நடமாட்டம் பசவராஜு அடுத்த கட்டமாக எங்கு செல்வார். எப்படிப்பட்ட இடங்களில் மறைந்து இருப்பார்கள் என்பது போன்ற தகவல்களை அவர்களிடம் இருந்து பாதுகாப்பு படையினர் பெற்றுக்கொண்டனர்.
ஜனவரி மாதம் ஒரே இடத்தில் 60 மாவோயிஸ்டுகள் தங்கி இருந்தனர். பாதுகாப்பு படை நெருங்குவதை தொடர்ந்து அவர்கள் குழுக்களாக பிரிந்து செல்ல வேண்டும் என பசவராஜு உத்தரவிட்டுள்ளார்.
அப்போது சில மூத்த உறுப்பினர்கள் பசவராஜை பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். ஆனால் அவர் தனக்காக கவலைப்பட வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
சரணடைந்த மாவோயிஸ்டுகள் மூலம் பல்வேறு தகவல்களை பெற்றுக்கொண்ட பாதுகாப்பு படையினர் துல்லிய தாக்குதல் நடத்தி பசவராஜு உள்ளிட்ட 27 மாவோயிஸ்டு களை என்கவுண்டர் மூலம் சுட்டுக் கொன்றனர்.
மேலும் பசவராஜு உள்ளிட்ட 7 பேர் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கவில்லை. போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் உடல்களை அடக்கம் செய்தனர்.
இன்னும் 3 ஆண்டுகள் வரை பசவராஜு தலைமை பொறுப்பு வகிக்க இருந்தார். சரணடைந்த அவருடைய அமைப்பைச் சேர்ந்தவர்கள் துரோகம் செய்து காட்டிக் கொடுத்ததால் தான் அவர் எளிதில் வீழ்த்தப்பட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து பசவராஜுன் பாதுகாவலராக இருந்த பாபு கவுசி என்பவர் கூறுகையில்:-
காடுகளில் தற்போது போதிய பாதுகாப்பு இல்லை. மேலும் பாதுகாப்பு படையினர் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதனால் நான் எனது மனைவியுடன் சரணடைந்து விட்டேன்.
பசவராஜு சரணடைந்திருந்தால், அவர் உயிருடன் இருந்திருப்பார். நாம் முன்பே புரிந்து கொண்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
மாவோயிஸ்டு இயக்கத்தில் இருப்பவர்கள் தங்கள் குடும்பங்களுக்காக, தங்கள் சொந்த எதிர்காலத்திற்காக வெளியே வருமாறு நான் வேண்டுகோள் விடுத்துள்ளேன் என்றார்.
பசவராஜை உயிரோடு பிடித்த பிறகு சுட்டுக்கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் இதற்கு போலீசார் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
- இந்தியாவில் மிகவும் தேடப்படும் மாவோயிஸ்ட் தலைவர்களில் பசவராஜும் ஒருவர்.
- பசவராஜுவை பிடிப்பதற்கு, ரூ.1.5 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது.
மத்திய அரசு நக்சலைட்டுகளை முற்றிலும் அழிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதன் காரணமாக சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்டுகளை ஒழிக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
அவ்வகையில், சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர்- பிஜபூர் மாவட்டங்களுக்கு இடையிலான அடர்ந்த காட்டுப்பகுதியில், நான்கு மாவட்டத்தின் மாவட்ட ரிசர்வ் கார்டு (DRG) போலீசார் நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அபூஜ்மாத் மற்றும் இந்திராவாதி தேசிய பூங்கா இடையில் உள்ள அடர்ந்த காட்டில் இருதரப்பினருக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
இதில் 26-க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இந்த சண்டையின்போது பசவராஜு என்று அழைக்கப்பட்டு வந்த மாவோயிஸ்ட் தலைவர் நம்பலா கேசவ் ராவ் கொல்லப்பட்டார்.
இந்தியாவில் மிகவும் தேடப்படும் மாவோயிஸ்ட் தலைவர்களில் ஒருவரான பசவராஜுவை பிடிப்பதற்கு, ரூ.1.5 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- இரண்டு மாவட்டங்களுக்கு இடையிலாக அடர்ந்த காட்டில் துப்பாக்கிச்சூடு.
- போலீஸ் தரப்பில் ஒருவர் காயம் அடைந்தார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் போலீசாருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 26-க்கும் அதிகமான நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர்- பிஜபூர் மாவட்டங்களுக்கு இடையிலான அடர்ந்த காட்டுப்பகுதியில், நான்கு மாவட்டத்தின் மாவட்ட ரிசர்வ் கார்டு (DRG) போலீசார் நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அபூஜ்மாத் மற்றும் இந்திராவாதி தேசிய பூங்கா இடையில் உள்ள அடர்ந்த காட்டில் இருதரப்பினருக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
இதில் 26-க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இந்த சண்டையின்போது போலீசாருக்கு உதவி புரிந்த ஒருவர் உயிரிழந்தார். போலீஸ்காரர் ஒருவர் காயம் அடைந்தார். இந்த தகவலை சத்தீஸ்கர் மாநில துணை முதல்வர் விஜய் சர்மா தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு நக்சலைட்டுகளை முற்றிலும் அழிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதன் காரணமாக சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்டுகளை ஒழிக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
- கொல்லபட்ட மாவோயிஸ்டுகள் தலைகளுக்கு மொத்தம் 1.72 கோடி ரூபாய் பரிசுத்தொகை இருந்தது.
- இந்த நடவடிக்கையின்போது 18 பாதுகாப்புப் படையினர் காயமடைந்தனர்
தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களின் எல்லையில் உள்ள பிஜாப்பூர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
உசுரு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கர்ரேகுட்டாவில் நடத்தப்பட்ட நடவடிக்கையில் மொத்தம் 31 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக சிஆர்பிஎஃப் டிஜி ஜிபி சிங் மற்றும் சத்தீஸ்கர் டிஜிபி அருண்தேவ் கவுதம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தனர்.
சுமார் 21 நாட்கள் நீடித்த இந்த தேடுதல் வேட்டையில் கொல்லப்பட்ட 31 மாவோயிஸ்டுகளில் 16 பேர் பெண்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொல்லபட்ட மாவோயிஸ்டுகள் தலைகளுக்கு மொத்தம் 1.72 கோடி ரூபாய் பரிசுத்தொகை இருந்தது. இந்த நடவடிக்கையின்போது 18 பாதுகாப்புப் படையினர் காயமடைந்தனர் என்றும் அதிகாரிகள் தெரிவிதித்தனர். சம்பவ இடத்திலிருந்து பாதுகாப்புப் படையினர் 35 அதிநவீன ஆயுதங்களையும் மீட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

- மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் நக்சலைட்டுகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
- அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நக்சலைட்டுகளை முற்றிலும் ஒழித்து விடுவோம்
ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டத்தின் லால்பானியாவில் உள்ள லுகு மலைப் பகுதிகளில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து இன்று அதிகாலை 5.30 மணியளவில் நக்சலைட்டுகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் துப்பாக்கியால் சுட்டனர் இதனால் பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் 8 நக்சலைட்டுகளை மத்திய பாதுகாப்பு படையி னர் சுட்டு கொன்றனர், பாதுகாப்புப் படையினருக்கு எந்த காயமும் ஏற்பட வில்லை.
சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் நக்சலைட்டுகளின் தலைவன் ஒருவனும் அடங்கும். அவனது தலைக்கு அரசு ரூ.1 கோடி அறிவித்து இருந்தது. என்கவுண்டர் நடந்த இடத்தில் இருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து நக்சலைட்டுகளை தேடும் பணி நடைபெற்று வருகின்றன.
சமீபகாலமாக, சத்தீஸ்கர், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை பாதுகாப்புப் படையினர் தீவிரப்படுத்தி உள்ளது.
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நக்சலைட்டுகளை முற்றிலும் ஒழித்து விடுவோம் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சமீபத்தில் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- காயமடைந்தவர்கள் அல்லது கொல்லப்பட்டவர்களை நக்சலைட்டுகள் காட்டுக்குள் இழுத்துச் சென்றனர்.
- அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே இன்று கடுமையான துப்பாக்கிச்சூடு சண்டை நடந்தது. இதில், 4 முதல் 6 நக்சலைட்கள் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. ஆனால், இதில் இவர்கள் உயிருடன் இருக்கிறார்களா அல்லது படுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளனரா என்று தெரியாமல் அதிகாரிகள் குழம்பியுள்ளனர்.
காரணம், துப்பாக்கிச்சூடுக்கு பிறகு அந்த இடத்தில் நக்சலைட்களின் உடல்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் அல்லது கொல்லப்பட்டவர்களை நக்சலைட்டுகள் காட்டுக்குள் இழுத்துச் சென்றதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சிந்தாகுஃபா மற்றும் கிஸ்டாரம் காவல் நிலைய எல்லையில் உள்ள மாவோயிஸ்டுகளின் கோட்டையான சோடேகெட்வால் கிராமத்தின் வனப்பகுதியில் நடந்த இந்த என்கவுண்டரில் மாநில காவல்துறையின் மாவட்ட ரிசர்வ் காவலர் (டிஆர்ஜி) மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் எலைட் கமாண்டோ பட்டாலியன் ஃபார் ரெசல்யூட் ஆக்ஷன் (கோப்ரா) ஆகியவற்றைச் சேர்ந்த பணியாளர்கள் ஈடுபட்டனர்.
இந்நிலையில், அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் விரைவு நடவடிக்கைக் குழுக்கள் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன.
- நக்சலைட்டுகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர்.
மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் காவல்துறையினருடன் இன்று நடந்த என்கவுன்டரில் 4 நக்சலைட்டுகள் உயிரிழந்துள்ளனர்.
மக்களவை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், நாசகார செயல்களில் ஈடுபடும் நோக்கத்தில், தெலுங்கானாவில் இருந்து சில நக்சலைட்டுகள், பிரன்ஹிதா நதியைக் கடந்து கட்சிரோலிக்குள் நுழைந்ததாக, நேற்று மதியம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கட்சிரோலி காவல்துறையின் சிறப்புப் போர்ப் பிரிவான சி-60 மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் விரைவு நடவடிக்கைக் குழுக்கள் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன.
ரெப்பன்பள்ளி அருகே உள்ள கோலமார்கா மலைப்பகுதியில் இன்று காலை சி-60 பிரிவு குழு ஒன்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போது, நக்சலைட்டுகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். அதற்கு பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நிறுத்தப்பட்ட பிறகு, அப்பகுதியில் தேடுதல் நடத்தப்பட்டது. இதில், நான்கு ஆண் நக்சலைட்டுகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
மேலும், அவர்களிடம் இருந்து ஒரு ஏகே-47 துப்பாக்கி, ஒரு கார்பைன், இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள், நக்சல் புத்தகம் மற்றும் பிற பொருட்களும் மீட்கப்பட்டதாக அதிகாரி கூறினார்.
உயிரிழந்த நக்சலைட்டுகள் வர்கீஸ், மக்து, இருவரும் வெவ்வேறு நக்சல் குழுக்களின் செயலாளர்கள் மற்றும் படைப்பிரிவு உறுப்பினர்களான குர்சங் ராஜு மற்றும் குடிமெட்டா வெங்கடேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
- ஆறு மணி நேரம் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 12 பேர் சுட்டுக்கொலை.
- இரண்டு பாதுகாப்புப்படை வீரர்கள் காயம் அடைந்தனர்.
சத்தீஷ்கர் மாநிலம் எல்லை அருகே உள்ள மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டம் வண்டோலி கிராமத்தில் போலீசாருடன் இணைந்து கமோண்டோ படை வீரர்கள், நக்சலைட்டைடுகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது இரு தரப்பினருக்கும் இடையில் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. சுமார் ஆறு மணி நேரம் நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சண்டையில் 12 நக்சலைட்டுகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இந்த சண்டையில் இரண்டு பாதுகாப்புப்படை வீரர்கள் காயம் அடைந்தனர்.
12 நக்சலைட்டுகளின் உடல்களை மீட்ட நிலையில் போலீசார் ஏகே 47 துப்பாக்கிகள், இரண்டு INSAS துப்பாக்கிகள் உள்ளிட்டவைகளை கைப்பற்றினர்.
நக்சலைட்டுகளுக்கு எதிரான இந்த சண்டையில் ஈடுபட்ட போலீசார் மற்றும் கமோண்டோ வீரர்களுக்கு 51 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என மகாராஷ்டிர மாநில உள்துறை மந்திரி துதேவேந்திர பட்நாவிஸ் தெரிவித்துள்ளார்.






