search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Naxalite"

    • மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் விரைவு நடவடிக்கைக் குழுக்கள் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன.
    • நக்சலைட்டுகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர்.

    மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் காவல்துறையினருடன் இன்று நடந்த என்கவுன்டரில் 4 நக்சலைட்டுகள் உயிரிழந்துள்ளனர்.

    மக்களவை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், நாசகார செயல்களில் ஈடுபடும் நோக்கத்தில், தெலுங்கானாவில் இருந்து சில நக்சலைட்டுகள், பிரன்ஹிதா நதியைக் கடந்து கட்சிரோலிக்குள் நுழைந்ததாக, நேற்று மதியம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, கட்சிரோலி காவல்துறையின் சிறப்புப் போர்ப் பிரிவான சி-60 மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் விரைவு நடவடிக்கைக் குழுக்கள் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன.

    ரெப்பன்பள்ளி அருகே உள்ள கோலமார்கா மலைப்பகுதியில் இன்று காலை சி-60 பிரிவு குழு ஒன்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போது, நக்சலைட்டுகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். அதற்கு பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்துள்ளனர்.

    துப்பாக்கிச் சூடு நிறுத்தப்பட்ட பிறகு, அப்பகுதியில் தேடுதல் நடத்தப்பட்டது. இதில், நான்கு ஆண் நக்சலைட்டுகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

    மேலும், அவர்களிடம் இருந்து ஒரு ஏகே-47 துப்பாக்கி, ஒரு கார்பைன், இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள், நக்சல் புத்தகம் மற்றும் பிற பொருட்களும் மீட்கப்பட்டதாக அதிகாரி கூறினார்.

    உயிரிழந்த நக்சலைட்டுகள் வர்கீஸ், மக்து, இருவரும் வெவ்வேறு நக்சல் குழுக்களின் செயலாளர்கள் மற்றும் படைப்பிரிவு உறுப்பினர்களான குர்சங் ராஜு மற்றும் குடிமெட்டா வெங்கடேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    • பயணிகள் பஸ்சிலிருந்து கீழே இறங்கியதும் பஸ் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்தனர்.
    • ஆந்திரா சத்தீஸ்கர் மாநில எல்லையில் வாகனங்களுக்கு தீ வைத்து எரித்த சம்பவம் கடும் பீதியை ஏற்படுத்தி்யது.

    திருப்பதி:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள நக்சலைட்டுகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை பந்த் நடைபெறும் என அழைப்பு விடுத்துள்ளனர்.

    ஆனால் மாநில அரசு வழக்கம்போல் அரசு அலுவலகங்கள் வாகனங்கள் இயங்கும் என அறிவித்தது. இதனால் நக்சலைட்டுகள் தங்களது பலத்தைக் காட்ட முடிவு செய்தனர்.

    இந்நிலையில் நேற்று இரவு ஆந்திர மாநிலம், கன்னவரம் பகுதியில் ஆந்திர மாநில அரசு பஸ் ஒன்று 20-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சத்தீஸ்கர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தது. அப்போது 20-க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் பஸ்சை தடுத்து நிறுத்தினா்.

    பஸ்சில் இருந்த பயணிகளை கீழே இறக்கிவிட்டனர். பயணிகள் பஸ்சிலிருந்து கீழே இறங்கியதும் பஸ் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்தனர்.

    இதேபோல் சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டம், ஆசிரி கூடேம், குந்தா என்ற இடத்தில் ஜக்தல்பூரில் இருந்து விஜயவாடா நோக்கி சென்ற அரசு பஸ்சை மடக்கினர். பயணிகளை இறக்கி விட்டு தீ வைத்து எரித்தனர்.

    அந்த வழியாக வந்த மேலும் 2 லாரிகள், 1 காரையும் தீ வைத்து எரித்து விட்டு தப்பிச் சென்றனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆந்திரா சத்தீஸ்கர் மாநில எல்லையில் வாகனங்களுக்கு தீ வைத்து எரித்த சம்பவம் கடும் பீதியை ஏற்படுத்தி்யது.

    • மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 2 வீரர்கள் காயம் அடைந்தனர்.
    • நக்சலைட்டுகளை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டம் தேகமேடா மலைப் பகுதி அருகே இன்று காலை 10.30 மணியளவில் குண்டு வெடித்தது. இதில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 2 வீரர்கள் காயம் அடைந்தனர்.

    நக்சலைட்டுகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டனர். காயம் அடைந்த 2 ராணுவ வீரர்களும் ராய்ப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அந்த பகுதியில் நக்சலைட்டுகளை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    • பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் எதிரொலியாக மாவட்டங்கள் தோறும் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
    • புளியரை சோதனை சாவடியில் போலீசார் நேற்று இரவு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    தென்காசி:

    தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் எதிரொலியாக மாவட்டங்கள் தோறும் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்டத்திலும் போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் அறிவுறுத்தலின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக-கேரள எல்லையான புளியரை சோதனை சாவடியில் புளியரை போலீசாருடன் இணைந்து நக்சலைட் தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார் நேற்று இரவு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அவர்கள் விதிமுறைகளை மீறி வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து தகுந்த அறிவுரைகள் வழங்கினர். மேலும் மெட்டல் டிடெக்டர் மூலம் கார் உள்ளிட்ட வாகனங்களில் இருந்த உடைமைகளை போலீசார் சோதனை செய்த பின்னரே வாகனங்களை செலுத்த அனுமதித்தனர்.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் முதற்கட்டமாக 18 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. #ChhattisgarhAssemblyElection2018 #Chhattisgarh
    ராய்ப்பூர்:

    90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கரில் இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

    அந்த வகையில், 18 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு சத்தீஸ்கரில் இன்று (12-ந்தேதி) தொடங்கியது. பஸ்தார், பிஜப்பூர், தண்டேலாடா உள்பட நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த மாவட்டங்களில் தேர்தல் நடப்பதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் தேர்தலை புறக்கணிக்குமாறு நக்சலைட்டுகள் மிரட்டல் விடுத்துள்ளதால், வாக்குப்பதிவுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவுக்காக துணை ராணுவத்தினர், போலீசார் என சுமார் ஒரு லட்சம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பலத்த பாதுகாப்புக்கு இடையே காலை முதல் மக்கள் வாக்குச்சாவடிகளுக்கு ஆர்வமுடன் வந்து தங்களது ஓட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.


    படம் - நன்றி ANI

    சத்தீஸ்கர் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் அஜித்ஜோகி கூட்டணி இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. மொத்தம் 190 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். சத்தீஸ்கரில் அடுத்த கட்டமாக எஞ்சிய பகுதிகளுக்கு வருகிற 20-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    இதுதவிர மத்திய பிரதேசம், மிசோரமில் வருகிற 28-ந் தேதியும், ராஜஸ்தான், தெலுங்கானாவில் டிசம்பர் 7-ந் தேதியும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. #ChhattisgarhAssemblyElection2018 #Chhattisgarh #ChhattisgarhElections

    ஒடிசா மாநிலத்தில் தலைக்கு 9 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டிருந்த இரண்டு நக்சலைட்களை பாதுகாப்பு படையினர் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர்.

    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலம், பாலங்கிர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் தலைக்கு 9 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட நக்சலைட் இயக்கத்தை சேர்ந்த இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    ஒடிசா மாநிலம், பாலங்கிர் மாவட்டத்தில் உள்ள துட்கமல் கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் நக்சலைட்கள் பதுங்கி இருப்பதாக நக்சல் ஒழிப்பு சிறப்பு கூட்டுப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, சிறப்பு அதிரடிப்படை மற்றும் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். காட்டுக்குள் பதுங்கி இருந்த நக்சலைட்கள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டனர். 

    இருதரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் ஒடிசா மாநில அரசின் சார்பில்  தலைக்கு 9 லட்சம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த  சஞ்சிப் மற்றும் ராகேஷ் ஆகிய இரு நக்சலைட்கள் கொல்லப்பட்டதாக அம்மாநில நக்சல் ஒழிப்பு சிறப்புப் படையினர் இன்று தெரிவித்துள்ளனர்.
    ×