என் மலர்
நீங்கள் தேடியது "மாவோயிஸ்ட்டு"
- சத்தீஸ்கர் துணை முதல்வர் விஜய் சர்மா 8 நாட்களுக்கு முன்பு ஹித்மாவின் தாயாருடன் மதிய உணவு சாப்பிட்டார்.
- மாவோயிஸ்ட் மத்திய குழு உறுப்பினர் மத்வி ஹித்மா, அவரது மனைவி ராஜே கொல்லப்பட்டனர்.
ஆந்திரா, சத்தீஸ்கர், தெலுங்கானா உள்ளிட்ட மாவட்ட எல்லையில் அமைந்துள்ள அல்லுரி சீதாராமராஜ் மாவட்ட காட்டுப்குதியில் மாவோயிஸ்டுகள் நேற்று காலை 6:30 மணி முதல் 7:00 மணி வரை பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இந்த நடவடிக்கையில் மிகவும் தேடப்படும் மாவோயிஸ்ட் மத்திய குழு உறுப்பினர் மத்வி ஹித்மா, அவரது மனைவி ராஜே மற்றும் நான்கு மாவோயிட்டுகள் கொல்லப்பட்டதாக ஆந்திரப் பிரதேச உளவுத்துறை கூடுதல் டிஜி மகேஷ் சந்திர லட்டா ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
இந்த என்கவுண்டருக்கு 8 நாட்களுக்கு முன்பு நவம்பர் 10 அன்று, சத்தீஸ்கர் துணை முதல்வர் விஜய் சர்மா மாவோயிஸ்ட் கோட்டையான சுக்மா மாவட்டத்தில் உள்ள பூவர்த்தி கிராமத்திற்கு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சென்றார்.
அங்கு, அவர் ஹித்மாவின் தாயாரைச் சந்தித்து அவருடன் மதிய உணவு சாப்பிட்டார். அவரது மகனை சரணடையச் செய்யுமாறு ஹித்மா தாயிடம் கேட்டுக் கொண்டார். மறுபுறம், ஹித்மாவின் நடமாட்டத்தை உளவுத்துறை உன்னிப்பாகக் கண்காணித்து வந்தது.
சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினரின் அழுத்தம் அதிகரித்து வருவதால், ஹித்மா உட்பட பல உயர்மட்டத் தலைவர்கள் ஆந்திராவிற்குள் நுழைந்து அங்கு இயக்கத்தை மீண்டும் உருவாக்க முயற்சிப்பதாக தகவல் கிடைத்து வந்த நிலையில் இந்த என்கவுண்டர் நடந்துள்ளது.
என்கவுண்டர் நடந்த இடத்திலிருந்து உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக டிஜி மகேஷ் சந்திர லட்டா தெரிவித்தார்.
- அடர்ந்த காட்டில் பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.
- 2025 இல் மட்டும் 357 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் இன்று பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் மூன்று மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.
சுக்மா காவல் கண்காணிப்பாளர் கிரண் சவான், "மாவோயிஸ்டுகள் இருப்பது குறித்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்புப் படையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
அடர்ந்த காட்டில் பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. துப்பாக்கிச் சண்டையில் இதுவரை மூன்று மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். பாதுகாப்புப் படையினர் தங்கள் நடவடிக்கைகளைத் தொடர்கின்றனர்" என்றார்.
2025 இல் மட்டும் 357 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். மாவோயிஸ்டுகளை அழிக்க 2026 மார்ச் மாதத்தை இலக்காக த்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நிர்ணயித்துள்ளார்.
- போலீசாரின் பதில் தாக்குதலில் மாவோயிஸ்ட்டுகள் குண்டு பாய்ந்து பலியானார்கள்.
- கொல்லப்பட்ட 3 மாவோயிஸ்ட்டுகளின் தலைக்கு ரூ.38 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது.
மராட்டிய மாநிலம் கட்சிரோலி அருகே உள்ள ராஜ்ராம் கிராமத்தில் மாவோயிஸ்டுகளுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடத்தப்பட்டது.
போலீசாரின் அதிரடி என்கவுண்டரில் மாவோயிஸ்ட்டுகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட 3 மாவோயிஸ்ட்டுகளின் தலைக்கு ரூ.38 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது.
ரகசிய தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்றனர். போலீசை பார்த்ததும் அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர். போலீசாரின் பதில் தாக்குதலில் மாவோயிஸ்ட்டுகள் குண்டு பாய்ந்து பலியானார்கள்.
- போலீசார் சுட்டதில் துப்பாக்கி குண்டு காயத்துடன் அவர்கள் வனப்பகுதிக்குள் தப்பிச் சென்றிருக்கின்றனர்.
- 3 மாவோயிஸ்ட்டுகளையும் பிடிப்பதற்காக வனப்பகுதிகளில் தீவிர தேடுதல்வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கம்பமலை பகுதியில் உள்ள அரசு அலுவலகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை பிடிக்கும் நடவடிக்கையில் மாவோயிஸ்ட்டுகள் தடுப்புபிரிவான தண்டர் போல்ட் போலீசார் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் வயநாடு மாவட்டம் மானந்தவாடி தாலுகா தலப்புழா பேரிளா சம்பாரத்து கிராமத்தை சேர்ந்த வாடகை கார் டிரைவரான அனீஸ் என்பவரின் வீட்டுக்குள் நேற்று முன்தினம் இரவு 4 மாவோயிஸ்ட்டுகள் துப்பாக்கிகளுடன் நுழைந்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த கேரள தண்டர்போல்ட் போலீசார் மற்றும் கமாண்டோ படையினர் அங்கு சென்றனர். அப்போது மாவோயிஸ்ட்டுகளுக்கும், போலீசாரும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் துப்பாக்கியால் சுட்டபடி மோதலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
இந்நிலையில் சந்துரு (வயது36), உன்னி மாயா(31) ஆகிய 2 மாவோயிஸ்ட்டுகளை போலீசார் கைது செய்தனர். லதா, சுந்தரி ஆகிய 2 பெண்கள் உள்பட 3 மாவோயிஸ்ட்டுகள் தப்பிவிட்டனர். போலீசார் சுட்டதில் துப்பாக்கி குண்டு காயத்துடன் அவர்கள் வனப்பகுதிக்குள் தப்பிச் சென்றிருக்கின்றனர்.
அவர்களை பிடிக்க தண்டர்போல்ட் போலீசார் மற்றும் கமாண்டோ படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட்டுகள் சந்துரு மற்றும் உன்னிமாயா ஆகிய இருவரிடம் இருந்தும் ஏ.கே.47, இன்சாஸ் லைட் மெஷின்கன் உள்ளிட்ட துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன.
அவர்களுக்கு இது போன்ற நவீன துப்பாக்கிகள் எப்படி கிடைத்தது? என்பது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்களுக்கு வடமாநிலங்களில் இருந்து இந்த நவீன ரக துப்பாக்கிகள் கிடைத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அதுபற்றி போலீஸ் காவலில் உள்ள சந்துரு, உன்னிமாயா ஆகிய மாவோயிஸ்ட்டுகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் சிறப்பு புலனாய்வு பிரிவினரும் விசாரணை நடத்த உள்ளனர்.
அதே நேரத்தில் காட்டுக்குள் தப்பிச்சென்ற 3 மாவோயிஸ்ட்டுகளையும் பிடிப்பதற்காக வனப்பகுதிகளில் தீவிர தேடுதல்வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் வனப்பகுதிகளில் ஆளில்லாத விமானத்தை பறக்கச்செய்து போலீசார் கண்காணித்தனர். ஆனால் தப்பிச்சென்றவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.






