என் மலர்
நீங்கள் தேடியது "encounter"
- தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர்.
- பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாதி.
ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பட்டான் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதி துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து, பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர்.
இந்த என்கவுண்டரில் இர்ஷாத் அகமது பட் என்ற பயங்கரவாதியை சுட்டுக் கொன்ற பாதுகாப்பு படையினர், ஏகே ரக துப்பாக்கி மற்றும் குண்டுகள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர். இர்ஷாத் அகமது, லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக காஷ்மீர் மண்டல காவல்துறை தெரிவித்துள்ளது.
- லலித் குமாரிடம் இருந்து துப்பாக்கி, நாட்டு ஆயுதம், மோட்டார் சைக்கிள் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட பணம் ஆகியவை மீட்பு.
- தப்பியவர்களை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
உத்தரப் பிரதசேம் மாநிலம், சப்ராலி காவல் நிலையத்திற்கு உட்பட்ட குர்தி கிராமத்தில் உள்ள பெட்ரோல் பங்கில், மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் காடுகளை நோக்கி தப்பிச்சென்ற மூவரையும் காவல்துறையினர் துரத்தினர். அப்போது, அவர்களை நோக்கி போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் மூன்று பேரில் லலித் குமார் என்பவர் பலியானார். மற்ற இருவரும் தப்பிவிட்டனர். தப்பியவர்களை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், துப்பாக்கிச் சூட்டில் கான்ஸ்டபிள் ராகுல் என்பவர் காயமடைந்தார். இவருக்கு கையில் காயம் ஏற்பட்டதை அடுத்து மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று காவல்துறை கண்காணிப்பாளர் நீரன் குமார் ஜடான் கூறினார்.
லலித் குமாரிடம் இருந்து துப்பாக்கி, நாட்டு ஆயுதம், மோட்டார் சைக்கிள் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட பணம் ஆகியவை மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
- என்கவுன்டரின்போது இரண்டு பயங்கரவாதிகளும் அவர்களது பெற்றோர் மற்றும் காவல்துறையின் வேண்டுகோள் விடுத்ததை அடுத்து சரணடைந்துள்ளனர்.
- பயங்கரவாதிகளிடம் இருந்து வெடி பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டம் ஹதிகம் பகுதியில் நேற்று நள்ளிரவில் என்கவுன்டர் தொடங்கியது. இதில் இரண்டு பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர்.
சரணடைந்த இரண்டு பயங்கரவாதிகளும் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், என்கவுன்டரின்போது இரண்டு பேரும் அவர்களது பெற்றோர் மற்றும் காவல்துறையின் மூறையீட்டின்பேரில் சரணடைந்துள்ளனர். பின்னர், பயங்கரவாதிகளிடம் இருந்து வெடி பொருட்கள், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன என்று காஷ்மீர் மண்டல காவல்துறை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
- காஷ்மீரில் இன்று 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
- பயங்கரவாதிகள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஸ்ரீநகர்:
ஐம்மு காஷ்மீரின் சண்டிகம் லோலாப் பகுதியில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி ஷோகத் அஹ்மத் ஷேக்கிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், குப்வாரா மற்றும் குல்காம் மாவட்டங்களில் நேற்று காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினர் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு மறைவிடத்தில் இருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதன் முடிவில் பயங்கரவாத அமைப்பான லஷ்கர் ஈ தொய்பாவை சேர்ந்த இரண்டு பேர் உள்பட 4 பயங்கரவாதிகளை, பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
இந்நிலையில் இன்றும் தொடர்ந்து தேர்தல் வேட்டை நடைபெற்றது. இதில் புல்வாமா உள்பட இரண்டு பகுதிகளில் நடைபெற்ற என்கவுண்டர்களில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 7 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
- குப்வாரா மற்றும் குல்காம் மாவட்டங்களில் தேடுதல் வேட்டை நடைபெற்றது.
- சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் 2 பேர் பாகிஸ்தான் பயங்கரவாதிகள்.
குப்வாரா:
ஐம்மு காஷ்மீரின் சண்டிகம் லோலாப் பகுதியில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி ஷோகத் அஹ்மத் ஷேக்கிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், குப்வாரா மற்றும் குல்காம் மாவட்டங்களில் மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த பகுதிகளில் காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினர் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மறைவிடத்தில் இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர்.
இந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டான். இதை தொடர்ந்து தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர் ஈ தொய்பாவை சேர்ந்த இரண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதேபோல் குல்காம் பகுதியில் மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். தொடர்ந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
- சோபூர் என்கவுண்டரில் இருந்து தப்பிய அதே பயங்கவாதக் குழு ஆகும். அவர்களின் நடமாட்டத்தை நாங்கள் கண்காணித்து வருகிறோம்.
- கொல்லப்பட்ட மற்றொரு பயங்கரவாதி அனந்த்நாக் மாவட்டத்தில் வசிக்கும் சுஃபியான் என்கிற அடில் ஹூசைன் மிர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர், ஸ்ரீநகரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுண்டரில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி உள்பட இரண்டு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர்.
இதுகுறித்து காஷ்மீர் மண்டல காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் விஜய் குமார் கூறியதாவது:-
ஸ்ரீநகர் நகரின் பெமினா பகுதியில் நடந்த என்கவுண்டரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த என்கவுண்டர் நடவடிக்கையில் போலீஸ் ஒருவருக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளது.
என்கவுண்டர் நடந்த பகுதியில் இருந்து ஆவணங்கள் மற்றும் பிற பொருட்களை ஆராய்ந்ததில், கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் பாகிஸ்தானில் உள்ள பைசலாபாத்தில் வசிக்கும் அப்துல்லா கவுஜ்ரி என அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஏற்கவனே நடந்த சோபூர் என்கவுண்டரில் இருந்து தப்பிய அதே பயங்கவாதக் குழு ஆகும். அவர்களின் நடமாட்டத்தை நாங்கள் கண்காணித்து வருகிறோம்.
கொல்லப்பட்ட மற்றொரு பயங்கரவாதி அனந்த்நாக் மாவட்டத்தில் வசிக்கும் சுஃபியான் என்கிற அடில் ஹூசைன் மிர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கண்டிபோரா பகுதியில் இன்று அதிகாலை என்கவுன்டர் நடந்தது.
- பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காமில் என்கவுன்டரின்போது தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதியை என்கவுன்டரில் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
இதுகுறித்து காஷ்மீர் மண்டல காவல்துறையினர் பதிவிட்ட டுவிட்டர் பதிவில், " கண்டிபோரா பகுதியில் இன்று அதிகாலை நடந்த என்கவுன்டரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். மேற்கொண்டு நடவடிக்கை நடந்து வருகிறது" என்றார்.
