என் மலர்
நீங்கள் தேடியது "நக்சலைட்டுகள்"
- பிஜாபூர் மாவட்டத்தில் நக்சலைட்டு நடமாட்டம் இருந்ததை தொடர்ந்து தேடுதல் வேட்டை.
- பாதுகாப்புப்படை வீரர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதால், பதில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நக்சலைட் மற்றும் மாவோயிஸ்ட் இல்லாத இந்தியாவை உருவாக்க மத்திய அரசு உறுதிப்பூண்டுள்ளது. இதனால் சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டு அதிகமான இடங்களில் பாதுகாப்புப்படையினர், போலீசார் உள்ளிட்ட பல பிரிவுகளைச் சேர்ந்த வீரர்கள் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சத்தீஸ்கர் பிஜாபூர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்புப்படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது பாதுகாப்புப்படை வீரர்களுக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 6 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
- சிறப்பு அதிரடிப்படை, கோப்ரா வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
- அடர்ந்த காட்டில் நடைபெற்ற சண்டையில் 8 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
சத்தீஸ்கர் மாநிலம் கரியாபந்த் மாவட்டத்தில் இன்று நக்சலைட்டுகளுக்கும், பாதுகாப்புப்படை வீரர்களுக்கும் இடையிலான துப்பாக்கிச் சண்டையில் 8 நக்சலைட்டுகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
சிறப்பு அதிரடிப்படை (SIT) கோப்ரா (CoBRA) படை வீரர்களுடன் உள்ளூர் போலீஸ் குழுவினர் சேர்ந்து மெய்ன்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட காட்டுப்பகுதியில் நக்சலைட்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது நக்சலைட்டுகளுக்கும்- வீரர்களுக்கும் இடையில் கடும் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் குறைந்தது 8 நக்சலைட்டுகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ராய்ப்பூர் சரக ஐஜி தெரிவித்துள்ளார்.
- வரிசையாக வைக்கப்பட்டிருந்த சடலங்களுக்கு முன்னால் ஆயுதங்களுடன் நடனமாடி புகைப்படங்களை எடுத்துள்ளனர்.
- இந்த நடவடிக்கைகள் போர்க்குற்றங்களுக்குச் சமம்.
நக்சலிசத்தை அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் ஒழித்துக்கட்ட வேண்டும் என்று மத்திய அரசு சபதம் எடுத்துள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷா மேடைதோறும் இதேயே முழங்கி வருகிறார். இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த சில மாதங்களில் அதிக எண்ணிக்கையிலான நக்சலைட்டுகள் பாதுகாப்பு நடவடிக்கையில் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் இந்த வரம்பற்ற என்கவுன்டர்கள் குறித்து கவலை தெரிவித்து வெளிநாடு வாழ் இந்தியர்களின் அமைப்புகள் கூட்டாக கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையில், இந்தியாவில் கல்வி சுதந்திரத்திற்கான சர்வதேச ஒற்றுமை (InSAF India), SOAS Bla(c)k Panthers, இந்திய தொழிலாளர் சங்கம் GB, இந்திய தொழிலாளர் ஒற்றுமை (UK) உள்ளிட்ட பல்வேறு சர்வதேச அமைப்புகள் கையெழுத்திட்டுள்ளன.
கடந்த மாதம் சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள அபுஜ்மத் காட்டில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் தடைசெய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மாவோயிஸ்ட்) பொதுச் செயலாளர் நம்பலா கேசவ ராவ் மற்றும் 26 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். இதில் 12 பெண்களும் அடங்குவர்.
நக்சல்கள் பேசுவார்த்தைக்கு சம்மதித்தும் மத்திய அரசு அதை ஏற்காமல் பாசிச போக்குடன் நடந்து கொண்டதாக கம்யூனிஸ்ட் கட்சியும் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில் இந்த என்கவுன்டர்களை மையப்படுத்தி கண்டன அறிக்கை வெளியாகி உள்ளது.
சத்தீஸ்கர் என்கவுன்டர்கள்
அந்த அறிக்கையில், "சத்தீஸ்கரில் உள்ள பஸ்தர் பிரிவின் நாராயண்பூர் மாவட்டத்தில் அபுஜ்மத் பகுதியில் கடந்த மே 21, 2025 அன்று 28 பேர் கொல்லப்பட்ட சம்பவம் உட்பட, ஆதிவாசி பகுதிகளில் மாநில மற்றும் மத்தியப் படைகள் தொடர்ந்து கொலைகளை செய்து வருவதை வன்மையாகக் கண்டிக்கிறோம். அதே அளவில், சத்தீஸ்கர் காவல்துறையினர், கொல்லப்பட்ட எட்டு பேரின் உடல்களை சட்டவிரோதமாக எரித்ததையும் கண்டிக்கிறோம்"
"ஆரம்பத்திலிருந்தே அரசின் நடவடிக்கைகள் சட்டத்தின் ஆட்சியின்படி இல்லாமல், திட்டமிட்ட கொடுமையின் வடிவமாகவே இருந்துள்ளன. கொலைகளைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் பொதுவெளியில் அதை கொண்டாடினர்.
வரிசையாக வைக்கப்பட்டிருந்த சடலங்களுக்கு முன்னால் ஆயுதங்களுடன் நடனமாடி புகைப்படங்களை எடுத்துள்ளனர். எந்த ஒரு முறையான நடைமுறையும் இல்லாமல் தனது சொந்த குடிமக்களைக் கொல்வதில் அரசின் வெற்றியை இது வெளிப்படுத்துகிறது" என்றும் அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

உடல்கள் முறையாக பாதுகாக்கப்படாமல் சிதைக்க விடப்பட்டதாகவும், உடல்களைப் பெற வந்த குடும்பத்தினர் துன்புறுத்தப்பட்டு வாய்மொழியாகத் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் ஆதாரங்களை அழித்து நீதித்துறை ஆய்வைத் தவிர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது" என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது, வாழ்க்கையிலும் இறப்பிலும் கண்ணியத்திற்கான உரிமையை உத்தரவாதம் செய்யும் இந்திய அரசியலமைப்பின் 21வது பிரிவின் கடுமையான மீறல் என்று அந்த அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
"சட்டத்திற்குப் புறம்பான மரணதண்டனை, உடல்களை வலுக்கட்டாயமாக எரித்தல், குடும்பங்களுக்கு இடையூறு விளைவித்தல் மற்றும் உடல்களை வேண்டுமென்றே மறைத்தல் ஆகியவை மனிதாபிமானச் சட்டத்தை மீறுவதாகும். இந்த நடவடிக்கைகள் போர்க்குற்றங்களுக்குச் சமம்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"சிபிஐ (மாவோயிஸ்ட்) மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடமிருந்து போர்நிறுத்தம் மற்றும் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கான பல கோரிக்கைகள் இருந்தபோதிலும், அரசாங்கம் இந்தப் படுகொலையை நடத்தியது மற்றும் சொந்த குடிமக்களை பொதுவில் சட்டவிரோதமாக எரித்தது வருத்தமளிக்கிறது" என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

"சர்வதேச சமூகமும், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் இந்த அநீதிக்கு எதிராக அவசரமாகவும், வலுவாகவும், சமரசமில்லாமலும் பதிலளிக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.
நாராயண்பூரில் நடந்தது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட நிகழ்வு அல்ல. இது ஒரு திருப்புமுனை. இந்த மோதல் தீர்க்கப்படாவிட்டால் இதன் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும்" என்று அந்த அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் நக்சலைட்டுகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
- அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நக்சலைட்டுகளை முற்றிலும் ஒழித்து விடுவோம்
ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டத்தின் லால்பானியாவில் உள்ள லுகு மலைப் பகுதிகளில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து இன்று அதிகாலை 5.30 மணியளவில் நக்சலைட்டுகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் துப்பாக்கியால் சுட்டனர் இதனால் பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் 8 நக்சலைட்டுகளை மத்திய பாதுகாப்பு படையி னர் சுட்டு கொன்றனர், பாதுகாப்புப் படையினருக்கு எந்த காயமும் ஏற்பட வில்லை.
சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் நக்சலைட்டுகளின் தலைவன் ஒருவனும் அடங்கும். அவனது தலைக்கு அரசு ரூ.1 கோடி அறிவித்து இருந்தது. என்கவுண்டர் நடந்த இடத்தில் இருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து நக்சலைட்டுகளை தேடும் பணி நடைபெற்று வருகின்றன.
சமீபகாலமாக, சத்தீஸ்கர், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை பாதுகாப்புப் படையினர் தீவிரப்படுத்தி உள்ளது.
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நக்சலைட்டுகளை முற்றிலும் ஒழித்து விடுவோம் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சமீபத்தில் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உங்கள் ஆயுதங்களைக் கைவிட்டு, மைய நீரோட்டத்தில் சேருங்கள்.
- வளர்ச்சிக்கு நமக்குத் தேவை துப்பாக்கிகள் அல்ல, கணினிகள்.
சத்தீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்திற்கு பழங்குடி கலாச்சார நிகழ்வான பஸ்தர் பந்தமின் நிறைவு விழாவவில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில அவர் பேசியதாவது, பஸ்தரில் துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிப்புகள் நடந்த காலம் போய்விட்டது. இன்றும் கூட, ஆயுதம் ஏந்திய அனைத்து நக்சலைட் சகோதரர்களுக்கும் எனது வேண்டுகோள் என்னவென்றால், உங்கள் ஆயுதங்களைக் கைவிட்டு, மைய நீரோட்டத்தில் சேருங்கள்.
நீங்கள் எங்களில் ஒருவர். ஒரு நக்சலைட் கொல்லப்படும்போதெல்லாம், யாரும் மகிழ்ச்சியாக இருப்பதில்லை. ஆனால் இந்தப் பகுதி வளர்ச்சியை விரும்புகிறது. சரணடைந்த நக்சலைட்டுகள், வளர்ச்சிக்கு நமக்குத் தேவை துப்பாக்கிகள் அல்ல, கணினிகள் என்றும், பேனாக்கள் தேவை IEDகள் அல்லது குண்டுகள் அல்ல என்றும் புரிந்துகொள்கிறார்கள்.
2025 ஆம் ஆண்டில், மூன்று மாதங்களில் 521 நக்சலைட்டுகள் சரணடைந்தனர், கடந்த ஆண்டு 881 பேர் சரணடைந்தனர். இன்னும் ஆயுதங்களை வைத்திருக்க விரும்புபவர்களை ராணுவம் கையாளும். என்ன நடந்தாலும், அடுத்த மார்ச் மாதத்திற்குள் முழு நாடும் நக்சல்களிடமிருந்து விடுபடும்" என்று அமித் ஷா கூறினார்.
- போலீஸ்காரர்களை சுட்டுக்கொன்ற நக்சலைட்டுகள் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளுக்கும் தீ வைத்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
- சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 180 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த சம்பவம் நடந்தது.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த போலீஸ்காரர்கள் ராஜேஷ்சிங்ராஜ்புத் மற்றும் அணில்குமார்சாம்ராட் ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் மராட்டிய மாநில எல்லையையொட்டி உள்ள போலீஸ் நிலைய முகாமுக்கு சென்று கொண்டு இருந்தனர்.அவர்கள் துப்பாக்கி எதுவும் எடுத்துசெல்லவில்லை.
அப்போது நக்சலைட்டு கும்பல் போலீஸ்காரர்களை சுற்றி வளைத்தது.இதனால் போலீஸ்காரர்கள் அதிர்ச்சி அடைந்தனர் . அவர்கள் சுதாரிப்பதற்குள் நக்சலைட்டுகள் 2 பேரையும் நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.இதில் சம்பவ இடத்திலேயே ஒரு போலீஸ்காரர் உயிர் இழந்தார்.மற்றொருவர் ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லும் வழியில் இறந்தார்.
போலீஸ்காரர்களை சுட்டுக்கொன்ற நக்சலைட்டுகள் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளுக்கும் தீ வைத்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 180 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த சம்பவம் நடந்தது. தப்பி ஓடிய நக்சலைட்டுகளை போலீசார் தேடி வருகின்றனர்.
- நக்சலைட்டுகள் நடமாட்டம் குறித்து பாதுகாப்பு படை வீரர்களுக்கு தகவல் கிடைத்தது.
- நக்சலைட்டுகளுக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே வனப்பகுதியில் துப்பாக்கி சண்டை நடந்தது.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. அவர்களை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி கடந்த சில தினங்களில் நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று நடந்த துப்பாக்கி சண்டையில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அங்குள்ள நாராயணன்பூரி, கன்கேர் மாவட்ட எல்லையில் நக்சலைட்டுகள் நடமாட்டம் குறித்து பாதுகாப்பு படை வீரர்களுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் அங்கு சென்றனர். அப்போது நக்சலைட்டுகளுக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே வனப்பகுதியில் துப்பாக்கி சண்டை நடந்தது.
இதில் 2 பெண் உள்பட 7 நக்சலைட்டுகளை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர். அங்கிருந்த ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த பகுதியில் தொடர்ந்து நக்சலைட்டுகள் வேட்டை நடந்து வருகிறது.
- பயங்கரவாதத்தை தடுப்பதில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது.
- இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்கள் எதுவும் இல்லை.
ராஞ்சி, மே. 4-
பிரதமர் மோடி இன்று காலை ஜார்கண்ட் மாநிலம் பாலமுவில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.
2014-ம் ஆண்டு உங்கள் வாக்கு மூலம் ஊழல் நிறைந்த காங்கிரஸ் அரசை அகற்றினீர்கள். ஜார்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், பீகார், ஆந்திராவில் நக்சலைட்டுகள் பயங்கரவாதத்தை பரப்பி வந்தனர்.
எனவே பல தாய்மார்கள் தங்கள் மகன்களை இழந்தனர். அவர்களது மகன்கள் கெட்ட சகவாசத்தால் ஆயுதம் ஏந்திக் காடுகளை நோக்கி ஓடினார்கள். ஜார்கண்ட மாநிலம் நக்சலைட்டுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டது.
பா.ஜ.க. ஆட்சியால் உங்களது ஒவ்வொரு வாக்கும் இளம் பிள்ளைகளை காப்பாற்றியது. அவர்களின் தாய்மார்களின் நம்பிக்கையை நிறைவேற்றியது. இதுதான் ஒரு வாக்கின் பலம். உங்கள் ஒரு வாக்கின் மதிப்பை உணர்ந்து கொள்ளுங்கள், அதன் விளைவாக ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது. 500 ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு ராமர் கோவில் கட்ட உங்கள் ஒரு வாக்கு பங்களித்தது.
உங்களின் வாக்கு பயங்கரவாதத்தை தடுப்பதில் எங்களுக்கு உதவியது. பயங்கரவாதத்தை தடுப்பதில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது.
காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாதம் அதிகமாக இருந்தது. தற்போது இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்கள் எதுவும் இல்லை.
ஒரு காலத்தில் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பலவீனமான காங்கிரஸ் அரசு உலகம் முழுவதும் சென்று கதறி அழுதது. இப்போது பாகிஸ்தான் உலகம் முழுவதும் கதறிக் கொண்டிருக்கிறது. சர்ஜிக்கல் மற்றும் பாலகோட் தாக்குதல்கள் பாகிஸ்தானை உலுக்கியது.
துல்லிய தாக்குதல்களால் அதிர்ச்சியடைந்த பாகிஸ்தான் தலைவர்கள், காங்கிரசின் இளவரசர் இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறார்கள். ஆனால் வலுவான இந்தியா தற்போது வலுவான அரசாங்கத்தை மட்டுமே விரும்புகிறது.
ஏழைகளுக்கு காந்தி குடும்பம் எதையும் செய்யவில்லை. அவர்களது தலைமுறைக்காக ஏழைகளிடம் இருந்து கொள்ளையடித்தனர்.
காங்கிரசும், ஜார்கண்ட முக்தி மோர்ச்சா கட்சியும் அவர்களது பிள்ளைகளுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் நான் உங்களது பிள்ளைகளுக்காக உழைத்து கொண்டிருக்கிறேன். நான் மக்கள் பணி செய்வதற்காக பிறந்தவன்.
கடந்த 25 ஆண்டுகளாக முதல்வராகவும், பிரதமராகவும் இருக்கும் என் மீது எந்த ஊழல் புகாரும் இல்லை. எனக்கு சொந்தமாக வீடு இல்லை, சைக்கிள் கூட இல்லை. ஊழல் நிறைந்த ஜார்கண்ட முக்தி மோர்ச்சா கட்சி, காங்கிரஸ் தலைவர்கள் தங்களது வாரிசுகளுக்காக பெரும் சொத்து குவித்துள்ளனர்.
ஆனால் எனது வாரிசுகள் நீங்கள் அனைவரும்தான். உங்கள் பிள்ளைகளும் பேரக்குழந்தைகளும் என் வாரிசுகள். வளர்ச்சியான பாரதத்தை உங்கள் குழந்தைகளுக்கு பாரம்பரியமாக கொடுக்க விரும்புகிறேன். என் குடும்பமும், கோடிக்கணக்கான குடும்பங்களும் சந்திக்க நேர்ந்ததை (வறுமை) நீங்கள் சந்திக்க வேண்டியதில்லை.
வறுமையின் வலி பற்றி எனக்கு தெரியும். நான் ஏழ்மையில் வாழ்ந்தேன். ஒரு ஏழையின் வாழ்க்கை எவ்வளவு சிரமமானது என்பதை அறிவேன். கடந்த 10 ஆண்டுகளில் தொடங்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் எனது வாழ்க்கை அனுபவங்களால் ஈர்க்கப்பட்டவை.
நான் பயனாளிகளை சந்திக்கும் போது எனக்கு ஆனந்தக் கண்ணீர் வரும். ஏழ்மையையும், போராட்டத்தையும் கண்டவர்களால்தான் இந்த கண்ணீரைப் புரிந்து கொள்ள முடியும். தனது தாய் அடுப்பில் புகையால் இருமுவதைக் காணாதவரால் இந்த கண்ணீரைப் புரிந்து கொள்ள முடியாது.
மோடியின் கண்ணீரில் காங்கிரசின் இளவரசர் (ராகுல் காந்தி) தனது மகிழ்ச்சியைத் தேடுகிறார். வறுமை பற்றி காங்கிரசுக்கு என்றைக்குமே தெரியாது. காங்கிரஸ் இளவரசர் தான் பணக்காரராக இருப்பதற்காக பெருமைபட்டுக் கொண்டிருக்கிறார்.
நீங்கள் வறுமையில் வாழ்வதை நான் விரும்பவில்லை. வறுமையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்.
நான் உயிருடன் இருக்கும் வரை முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக அரசியல் சட்டத்தை மாற்றுவதில் காங்கிரசின் எந்த வடிவமைப்பையும் வெற்றிபெற அனுமதிக்க மாட்டேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
- நக்சல் தடுப்பு வேட்டையில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
- நக்சல் தடுப்பு வேட்டையில் நக்சல் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச் சண்டை.
சத்தீஸ்கரில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 12 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம், பிஜாப்பூர் மாவட்டத்தில் கங்களூர் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், நக்சல்களுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது.
நக்சல் தடுப்பு வேட்டையில் நக்சல் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், 12 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் நாராயணபூர் மாவட்டம் அடுஜ்மத் வனப்பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படை வீரர்களும், 4 மாவட்ட போலீசாரும் இணைந்து நக்சல்வேட்டையில் ஈடுபட்டனர்.
நக்சலைட்டுகளும், பாதுகாப்பு படை வீரர்கள் மீது தாக்கினார்கள். இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது.
பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் 8 நக்சலைட்டுகள் குண்டு பாய்ந்து பலியானார்கள்.
இந்த என்கவுண்டரில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். மேலும் 2 வீரர்கள் காயம் அடைந்தனர்.
- சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படை நடத்திய தாக்குதலில் 9 நக்சலைட்டுகள் உயிரிழந்தனர்.
- தப்பியோடியவர்களை தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மற்றும் பீஜப்பூர் மாவட்ட எல்லையில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற பாதுகாப்புப் படையினர் அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அங்கு பதுங்கியிருந்த நக்சலைட்டுகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
அப்போது பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 9 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் 6 பேர் பெண்கள்.
மேலும் தப்பியோடியவர்களை தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆண்டு சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 153 நக்சலைட்டுகள் உயிரிழந்துள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.
- போலீசார் சிந்தவாகு அருகே வனப்பகுதியில் நக்சலைட்டுகள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
- மறைந்து இருந்த நக்சலைட்டுகள் பாதுகாப்புபடையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர்.
சத்தீஸ்கர்:
சத்தீஷ்கார் மாநிலம் சுக்மாவில் நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகரித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில் பாதுகாப்புப்படை வீரர்களின் உதவியுடன் தனிப்படை போலீசார் சிந்தவாகு அருகே வனப்பகுதியில் நக்சலைட்டுகள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு மறைந்து இருந்த நக்சலைட்டுகள் பாதுகாப்புபடையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். உடனே பாதுகாப்பு படையினரும் திருப்பி சுட்டனர்.
இதில் 2 நக்சலைட்டுகள் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தனர்.






