என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Gun shot"
- பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் போலீசார் மீது வெடிகுண்டுகளை வீசி தாக்குதல்.
- அதிரடிப்படையின் பதில் தாக்குதலில் 2 மாவோயிஸ்டுகள் படுகாயம் அடைந்தனர்.
கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம் அய்யன்குளம் வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக அதிரடிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசாருக்கும் மாவோயிஸ்டுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது.
இந்நிலையில், பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் போலீசார் மீது வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அதிரடிப்படையின் பதில் தாக்குதலில் 2 மாவோயிஸ்டுகள் படுகாயம் அடைந்தனர்.
- துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
- தாதியா மாவட்டத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
மத்தியப் பிரதேசம் மாநிலம் தாதியா மாவட்டத்தில் டாங்கி மற்றும் பால் சமூகத்தினருக்கு இடையே நிலத்தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதை அடுத்து அங்கு துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும், துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெண் வைத்திருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்து அவரை போலீஸ் காவலில் வைத்தனர்.
- பெண் மனநல காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா, சான் பிரான்சிஸ்கோ- ஓக்லாண்டு விரிகுடா பாலத்தில் நெரிசலான நேரத்தில் காரில் இருந்து திடீரென இறங்கிய பெண் ஒருவர் நிர்வாண கோலத்தில் அந்த வழியாக சென்ற மற்ற கார்களை நோக்கி துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முதலில் அந்த பெண் நெடுஞ்சாலையின் நடுவே கத்தியுடன் காரில் இருந்து இறங்கி கத்த ஆரம்பித்துள்ளார். பின்னர், அந்த பெண் மீண்டும் காரில் ஏறி சிறிது தூரம் சுங்கச்சாவடி அருகே நிர்வாணமாகி துப்பாக்கியுடன் மீண்டும் காரில் இருந்து இறங்கி அவ்வழியாக சென்ற கார்கள் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இதுதொடர்பாக தகவல் அறிந்த கலிப்போர்னியா நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு, பெண் வைத்திருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்து அவரை போலீஸ் காவலில் வைத்தனர்.
மேலும், அந்த பெண் மனநல காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் அங்கிருந்து வெளிவந்தவுடன் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
- காயமடைந்த ஆசாத் மற்றும் அவரது சேதமடைந்த வாகனத்தின் புகைப்படங்களை பீம் ஆர்மி சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளது.
- தேசியத் தலைவர் பாய் சந்திரசேகர் ஆசாத்தின் பாதுகாப்பையும் உறுதி செய்ய கோரிக்கை.
உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் பீம் ஆர்மியின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் ராவன். இவர், தனது காரில் சென்றுக் கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில், இரண்டு தோட்டாக்கள் கார் மீது பாய்ந்தது. முதல் தோட்டா காரின் இருக்கை மீது பாய்ந்தது. மற்றொரு தோட்டா கதவு வழியாக சென்றபோது ஆசாத்தின் இடுப்பை உரசியது. பின்னர் மர்ம நபர்கள் தப்பியுள்ளனர்.
சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி விபின் தடா கூறுகையில், "சந்திர சேகர் ஆசாத்தின் கான்வாய் மீது காரில் வந்த ஆயுதம் ஏந்திய சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஒரு தோட்டா அவரைத் தாண்டிச் சென்றது. அவர் நலமாக உள்ளார். மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்" என்றார்.
காயமடைந்த ஆசாத் மற்றும் அவரது சேதமடைந்த வாகனத்தின் புகைப்படங்களை பீம் ஆர்மி சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளது.
மேலும், பீம் ஆர்மி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,"சஹாரன்பூரில் உள்ள தியோபந்தில் பீம் ஆர்மி தலைவரும் தேசியத் தலைவருமான பாய் சந்திரசேகர் ஆசாத் மீது நடத்தப்பட்ட கொடிய தாக்குதல், பகுஜன் மிஷன் இயக்கத்தைத் தடுத்து நிறுத்தும் கோழைத்தனமான செயல்.
குற்றம்சாட்டப்பட்டவர்களை விரைவாகக் கைது செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசியத் தலைவர் பாய் சந்திரசேகர் ஆசாத்தின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தது.
- துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- துப்பாக்கிச் சூடு தொடர்பாக தகவல் தருபவர்களுக்கு ரூ.25 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும்.
அமெரிக்காவில் உள்ள மிசவுரி கன்சாஸ் நகரின் டவுன்டவுனில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 5 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு இன்று அதிகாலை 4.30 மணியளவில் போலீசார் விரைந்தனர். அங்கு, துப்பாக்கிச்சூடு காயங்களுடன் 8 பேர் கிடந்தனர். இதில், மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் போலீசார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து தெளிவாகத் தெரியவில்லை என்றும் துப்பாக்கிச் சூடு தொடர்பாக தகவல் தருபவர்களுக்கு ரூ.25 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
- சிறுவனை கைது செய்த போலீசார் லூகாவாக் காவல் துறையின் வளாகத்தில் போலீஸ் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளான்.
- ஆசிரியருக்கு கழுத்து அருகே துப்பாக்கிச் சூடு காயம் ஏற்பட்டுள்ளது.
தென்கிழக்கு ஐரோப்பியாவில் உள்ள போஸ்னியா என்கிற நாட்டின் நகரமான லூகாவாக்கில் இயங்கி வரும் ஒரு தொடக்கப் பள்ளியில் பணிபுரிந்து வந்த ஆசிரியரை 13 வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் மாணவரான சிறுவன் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில், பள்ளியின் துணை முதல்வரும், ஆங்கிலப் பாட ஆசிரியராக பணிபுரிந்து வந்தவரை சிறுவன் துப்பாக்கியால் சுட்டுள்ளான். இதையடுத்து, சிறுவனை கைது செய்த போலீசார் லூகாவாக் காவல் துறையின் வளாகத்தில் போலீஸ் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளான்.
மேலும், சிறுவனிடம் பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் விசாரணை முடியும் வரை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மருத்துவமனை தரப்பில் கூறுகையில், " ஆசிரியருக்கு கழுத்து அருகே துப்பாக்கிச் சூடு காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவருடைய உடல்நிலை சீராக உள்ளது" என கூறப்பட்டுள்ளது.
- கத்திக்குத்து தாக்குதலில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
- மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களை சந்தித்தார் பிரான்ஸ் அதிபர்.
பூங்காவில் குழந்தைகள் உற்சாகமாக விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது 30 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் கையில் கத்தியுடன் பூங்காவிற்குள் நுழைந்தான்.
திடீரென அவன் அங்கிருந்த சிறுவர்கள் மற்றும் குழந்தைகளை சரமாரியாக கத்தியால் குத்த தொடங்கினான். இதில் கத்திக்குத்து விழுந்த குழந்தைகள் வலி பொறுக்க முடியாமல் அலறி துடித்தனர்.
இந்த தாக்குதலில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் 22 மாத குழந்தை, 5 வயதுக்குட்பட்ட 5 சிறுவர்கள், 2 பெரியவர்கள் அடங்குவார்கள். இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்து மர்மநபரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரை பிரானஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தனது மனைவி பிரிஜிட் உடல் நேரில் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினர்.
- அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் கவுரவை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினர்.
- நிலத்தகராறு காரணமாக தாக்குதல் நடைபெற்றுள்ளதாக தகவல்.
ராஜஸ்தான் மாநிலம் பரான் மாவட்டத்தில் டெல் ஃபேக்டரி பகுதியைச் சேர்ந்த காஸ்கிரஸின் பரான் நகரப் பிரிவுத் தலைவர் கவுரவ் சர்மா (43) தலவாரா சாலையில் வீட்டு மனை காண சென்றுக் கொண்டிருந்தார். அப்போது ராஜூ என்கிற ராஜேந்திர மீனா என்பவர் கவுரவ் சர்மாவிடம் பேசிக் கொண்டிருந்தார்.
இருவருக்கிடையே நடந்த பேச்சுவார்த்தை சண்டையாக மாறியது. அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் கவுரவை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினர். இதில் தலையில் பலத்த காயமடைந்த கவுரவ் சுருண்டு விழுந்தார்.
பின்னர், கவுரவை மீட்டு மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வரும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக நடத்திய முதற்கட்ட விசாரணையில், நிலத்தகராறு காரணமாக தாக்குதல் நடைபெற்றுள்ளதாகவும், குற்றம்சாட்டப்பட்டவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
- நிஷாவின் இடது தொடையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
- துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள சரண் மாவட்டத்தை சேர்ந்த பாடகி நிஷா உபாத்யாய். போஜ்புரி பாடகியான இவர் பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று மேடைகளில் பாடி வருகிறார்.
இந்நிலையில், பாட்னாவில் நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட நிஷா மேடையில் ஆடலுடன் பாடிக் கொண்டிருந்தார். அப்போது, அவர் மீது திடீரென துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதில், நிஷாவின் இடது தொடையில் பலத்த காயம் ஏற்பட்டு விழுந்தார்.
இதையடுத்து நிஷாவை உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அங்கு, நிஷாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவரது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக நிஷா இதுவரை எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கவில்லை என்றாலும் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
- ரூ. 4 ஆயிரம் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்து வந்தது.
- கூட்டத்தை பார்த்து பயந்த வருண், மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அலுவலகத்தினுள் சரமாரியாக சுட்டார்.
டெல்லியில் இருதரப்பினர் இடையே நடந்த பேச்சுவார்த்தையின் ஏற்பட்ட சலசலப்பு துப்பாக்கி சூட்டில் முடிந்தது. துப்பாக்கி சூட்டில் சிக்கிய நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
வழக்கறிஞர் சுஷில் குப்தா தனது தரப்பை சேர்ந்த ஜஃப்ரூல் மற்றும் சையத் முக்கிம் ராசா என்பவரை தனது அலுவலகத்திற்கு அழைத்திருந்தார். ரூ. 4 ஆயிரம் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதை பேச்சுவார்த்தையில் முடித்துக் கொள்ளும் நோக்கிலேயே முக்கிம் ரசா சுஷில் குப்தா அலுவலகத்துக்கு வந்திருந்தார்.
முக்கிம் ரசாவுடன் அன்கித், முகிம், வருண் மற்றும் குலாம் முகமது உள்ளிட்டோரும் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். பேச்சுவார்த்தையின் போது இருதரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதையறிந்து அங்கிருந்த பொது மக்கள் அலுவலக வாசலில் திரண்டனர். கூட்டத்தை பார்த்து பயந்த வருண், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அலுவலகத்தினுள் சரமாரியாக சுட்டார்.
இதில் அங்கிருந்த அனாஸ் அகமது மீது தோட்டா பாய்ந்தது. காயமுற்ற அனாஸ் அகமதுவை அங்கிருந்தவர்கள் அருகாமையில் இருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். மருத்துவமனையில் அனாஸ் அகமதுவை சோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று தெரிவித்தனர்.
துப்பாக்கி சூடு நடத்திய பின் அங்கிருந்து தப்பிக்க முயன்ற குலாமை அங்கிருந்த பொதுமக்கள் பிடித்து கடுமையாக தாக்கினர். இதோடு அங்கு நிறுத்தப்பட்டு இருந்த காரையும் பொது மக்கள் தாக்கினர். பொதுமக்களால் தாக்கப்பட்ட குலாமுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்று நினைத்து பொதுமக்கள் மூன்று பேரை தாக்கினர்.
இதையடுத்து அங்கிருந்து தப்பிச் சென்ற அன்கித் மற்றும் முகிம் ஆகியோரை போலீசார் இரண்டு மணி நேரங்களில் கண்டுபிடித்தனர். மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.