என் மலர்
உலகம்

ராணுவம் துப்பாக்கி சூடு- எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்
- துப்பாக்கிச் சூடு குறித்து ராணுவம் இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை.
- ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது.
எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளது. ஜம்மு-காஷ்மீரின் குப்வாராவில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே நவ்காம் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கு பதிலடியாக உடனே இந்திய ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் இது போர் நிறுத்த மீறலாகாது என்றும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் துப்பாக்கிச் சூடு குறித்து ராணுவம் இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை.
காஷ்மீரின் பகல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தானுக்குள் ஊடுருவி பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசியது.
இதையடுத்து எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கியால் சுட்டும், குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இதற்கு தக்க பதிலடியை இந்திய ராணுவம் கொடுத்தது. பின்னர் இரு நாட்டு ராணுவங்கள் இடையே சண்டை மூண்டது.
4 நாள் மோதலுக்கு பிறகு போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதற்கிடையே ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது.






