என் மலர்
நீங்கள் தேடியது "Indian Army"
- பாகிஸ்தான், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை பாதுகாப்புப்படையினர் அழித்தனர்.
- பயங்கரவாதிகள் வாழ்ந்த இடங்களை மட்டுமே குறிவைத்தோம்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த மே மாதம் பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது.
பாகிஸ்தான், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை பாதுகாப்புப்படையினர் அழித்தனர். இந்த நிலையில் ஆபரேஷன் சிந்தூர் 2.0 நடவடிக்கைக்கு தயார் என்று ராணுவ தளபதி உபேந்திர திவேதி பாகிஸ்தானை எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது;-
பாகிஸ்தான் ஏதேனும் கோழைத்தனமான செயலுக்கு முயன்றால் வலுவான பதிலடியை எதிர்கொள்ள நேரிடும். ஆயுதப்படைகள் சிந்தூர் 2.0 நடவடிக்கைக்கு முழுமையாக தயாராக இருக்கிறது.
பயங்கரவாதிகள் வாழ்ந்த இடங்களை மட்டுமே குறிவைத்தோம். பொதுமக்கள் பகுதிகள் அல்லது ராணுவ நிலைகளை தாக்கவில்லை.
நாங்கள் விரும்பியதை அடைந்தோம், நாங்கள் அவர்களைப் போன்றவர்கள் அல்ல என்பதை பாகிஸ்தானுக்குப் புரிய வைத்தோம். நாங்கள் தர்மயுத்தத்தை பின்பற்றுபவர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அயினி தளத்தில் 2002 முதல் இந்தியா செயல்பட்டு வந்தது.
- 2022ல் இந்த ஒப்பந்தத்தை நீட்டிக்க தஜிகிஸ்தான் மறுத்துவிட்டதாக தகவல் வெளியானது.
இந்தியாவின் ஒரே தனித்துவமான வெளிநாட்டு விமான தளமாக விளங்கிய தஜிகிஸ்தானில் உள்ள அயினி விமான தளத்தை விட்டு இந்திய ராணுவம் வெளியேறியது.
மத்திய ஆசியாவின் மூலோபாய மூக்கியத்துவம் வாய்ந்த பகுதியான அயினி தளத்தில் 2002 முதல் இந்தியா செயல்பட்டு வந்த நிலையில், 2022ல் ஒப்பந்தத்தை நீட்டிக்க தஜிகிஸ்தான் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனா மற்றும் ரஷ்யாவின் அழுத்தம் காரணமாக இந்தியா உடனான இருதரப்பு ஒப்பந்தத்தை நீட்டிக்க தஜிகிஸ்தான் மறுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.
தஜிகிஸ்தானின் இந்த முடிவு புவிசார் அரசியலில் இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
- அக்டோபர் 30ம் தேதி தொடங்கிய இந்த கூட்டு ராணுவப் பயிற்சி நவ.10 வரை நடைபெறுகிறது.
- குஜராத்தின் கட்ச் பகுதியில் இந்த கூட்டு பயிற்சி நடைபெற்று வருகிறது.
இந்தியாவின் முப்படைகளும் சேர்ந்து நடத்தும் 'திரிசூல்' ராணுவப் பயிற்சி மேற்கொண்டு வருகிறது.
பாகிஸ்தான் எல்லையோரம் உள்ள குஜராத், ராஜஸ்தான் பகுதிகளில் அக்டோபர் 30ம் தேதி தொடங்கிய இந்த கூட்டு ராணுவப் பயிற்சி நவ.10 வரை நடைபெறுகிறது.
குறிப்பாக குஜராத்தின் கட்ச் பகுதியில் இந்த கூட்டு பயிற்சி நடைபெற்று வருகிறது. குஜராத்தின் ரான் ஆஃப் கட்சுக்கும் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திற்கும் இடையில் உள்ள 96 கி.மீ. நீளமுள்ள சதுப்பு நிலப் பகுதி சர் க்ரீக் (Sir Creek) ஆகும். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் மோதல் ஏற்படும் முக்கிய இடமாக இப்பகுதி உள்ளது. ஆதலால் இந்தியாவின் இந்த கூட்டு பயிற்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்நிலையில், முப்படைகளும் சேர்ந்து நடத்தும் 'திரிசூல்' ராணுவப் பயிற்சி காட்சிகளை இந்திய ராணுவம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
- விழா பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி முன்னிலையில் டெல்லியில் நடைபெற்றது.
- நீரஜ் சோப்ராவை கவுரவிக்கும் வகையில் இந்த அங்கீகாரம் வழங்கப்படுகிறது.
இந்திய ராணுவத்தில் பல துறைகளில் உயரிய விருதுகளை பெற்றவர்கள் கவுரவிக்கப்படுகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு தாதாசாகேப் விருது பெற்ற மலையுல உலகின் சூப்பர் ஸ்டாரும் பிராந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னலுமான மோகன்லால், ராணுவத் தளபதியை சந்தித்து பாராட்டு பெற்றார்.
இந்த நிலையில், ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு இந்திய ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கப்பட்டது. இந்த விழா பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி முன்னிலையில் டெல்லியில் நடைபெற்றது.
தடகளத்தில் நீரஜ் சோப்ராவின் சாதனைகளையும், மில்லியன் கணக்கான இளம் இந்தியர்களை ஊக்குவிப்பதற்கான அவரது பங்களிப்பையும் கவுரவிக்கும் வகையில் இந்த அங்கீகாரம் வழங்கப்படுகிறது. நாட்டிற்கு பெருமை சேர்த்ததற்காக ஆயுதப் படைகளில் கவுரவப் பதவிகளைப் பெற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட விளையாட்டு வீரர்களின் குழுவில் அவர் இணைந்துள்ளார்.
- ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
- தேசத்தைக் கட்டியெழுப்புவதில் இந்திய இராணுவம் முன்னணியில் இருக்க வேண்டும்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் நகரில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இதில் அப்பாவி மக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து, மே 7-ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
அதன்பின் இரு நாடுகளின் ராணுவ உயர்மட்ட அதிகாரிகள் சந்தித்துப் பேசினர். இதனால் மே 10-ம் தேதி இருதரப்பு மோதல் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் 2.0 நடவடிக்கைக்கு தீவிரமாக தயாராகி வருகிறோம் என்று இந்திய ராணுவத் தளபதி உபேந்திர திவேதி பேசியுள்ளார்.
தீபாவளி பண்டிகையை ஒட்டி பாகிஸ்தான் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பித்தோர்கர் மாவட்டத்தில் ராணுவ வீரர்களிடம் பேசிய உபேந்திர திவேதி, "தேசத்தைக் கட்டியெழுப்புவதில் இந்திய இராணுவம் முன்னணியில் இருக்க வேண்டும். தேசத்தைக் கட்டியெழுப்புவதில் நாம் முதல் தூணாக மாறி பொதுமக்களுடன் நெருக்கமாகப் பணியாற்ற வேண்டும்.
ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும், அதன் நோக்கம் அடையப்படும் வரை நடவடிக்கை தொடரும். இந்திய இராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர் 2.0' நடவடிக்கைக்கு தீவிரமாக தயாராகி வருகிறது" என்று தெரிவித்தார்.
- துப்பாக்கிச் சூடு குறித்து ராணுவம் இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை.
- ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது.
எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளது. ஜம்மு-காஷ்மீரின் குப்வாராவில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே நவ்காம் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கு பதிலடியாக உடனே இந்திய ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் இது போர் நிறுத்த மீறலாகாது என்றும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் துப்பாக்கிச் சூடு குறித்து ராணுவம் இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை.
காஷ்மீரின் பகல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தானுக்குள் ஊடுருவி பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசியது.
இதையடுத்து எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கியால் சுட்டும், குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இதற்கு தக்க பதிலடியை இந்திய ராணுவம் கொடுத்தது. பின்னர் இரு நாட்டு ராணுவங்கள் இடையே சண்டை மூண்டது.
4 நாள் மோதலுக்கு பிறகு போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதற்கிடையே ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது.
- ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தின் தூள் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத் துறைக்கு தகவல் கிடைத்தது.
- தேடுதல் வேட்டையின்போது பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகிறது.
ஜம்மு:
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளை வேட்டை யாடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஆதரவு பெற்று காஷ்மீரில் ரகசியமாக செயல்படும் பயங்கரவாதிகளை ஒடுக்கும் வகையில் கடந்த 1-ந்தேதி முதல் ஆபரேஷன் அசல் என்ற அதிரடி நடவடிக்கையை பாதுகாப்பு படை தொடங்கியுள்ளது. அதன்படி பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டு வருகிறார்கள். குல்காம் மாவட்டத்தில் நேற்று நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இந்த நிலையில் காஷ்மீரில் இன்று பாதுகாப்பு படை வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது.
ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தின் மலைப் பகுதியான தூள் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத் துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், அந்தப் பகுதியை பாதுகாப்புப் படையினர் இன்று காலை சுற்றிவளைத்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பாதுகாப்புப் படையினரை நோக்கி அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். அதற்கு பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். அங்கு 2 பயங்கரவாதிகள் இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
துப்பாக்கி சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது குறித்து இந்திய ராணுவத்தின் எக்ஸ் தளப் பதிவில், "பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் தேடுதல் வேட்டையின்போது பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகிறது" என்று குறிப்பிட்டு உள்ளது.
- பிரளய் ஏவுகணை என்பது ஒரு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணை ஆகும்.
- பாரத் டைனமிக்ஸ், பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து இந்த ஏவுகணை தயாரிக்கப்பட்டது.
புவனேஷ்வர்:
இந்திய ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் பணியில் டி.ஆர்.டி ஓ. எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு ஈடுபட்டு வருகிறது.
இந்த ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைககளைப் பரிசோதனை செய்யும் பணிகளும் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ஒடிசா கடற்கரையில் உள்ள அப்துல் கலாம் தீவில் இருந்து, பிரளய் ஏவுகணை இன்று சோதித்துப் பார்க்கப்பட்டது.
பிரளய் ஏவுகணை என்பது ஒரு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணை ஆகும். இது, இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையின் செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது. 150 முதல் 500 கிமீ தூரம் வரை சென்று இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது.
இந்த பிரளய் ஏவுகணை முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. பாரத் டைனமிக்ஸ் மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இந்த ஏவுகணை தயாரிக்கப்பட்டுள்ளது.
- ராணுவம் குறித்து அவதூறாக பேசியதாக லக்னோ கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
- இந்த வழக்கில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கு ஜாமின் வழங்கியது.
லக்னோ:
இந்தியா-சீனா இடையே மோதல் நிலவிவந்த காலகட்டத்தில், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதி சூழ்நிலையை மத்திய அரசு முறையாக கையாளவில்லை என கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டார்.
இந்திய ஆயுதப்படையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் ராகுல் காந்தி கருத்து தெரிவித்ததாக எல்லைப் பாதுகாப்புப் படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற உதய்சங்கர் ஸ்ரீ வஸ்தவா என்பவர் லக்னோ கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இதனை எதிர்த்து அவர் அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் சம்மனை ரத்துசெய்ய ஐகோர்ட மறுத்துவிட்டது.
இந்நிலையில், லக்னோ கோர்ட்டில் இன்று ராகுல் காந்தி நேரில் ஆஜரானார். அப்போது ராகுல் காந்திக்கு ஜாமின் வழங்கி மாவட்ட நீதிமன்ற கூடுதல் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
- அவசரகால ஆயுதக் கொள்முதல் திட்டத்தின் கீழ் இந்த பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கப்படுகின்றன.
- , கவச வாகனங்கள் மற்றும் துப்பாக்கிகளில் பொருத்தக்கூடிய நைட் விஷன் அமைப்புகளும் வாங்கப்படும்.
ராணுவத் திறன்களை மேம்படுத்துவதற்காக ரூ.2,000 கோடி மதிப்பிலான ஆயுதக் கொள்முதல் ஒப்பந்தத்திற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
அவசரகால ஆயுதக் கொள்முதல் திட்டத்தின் கீழ் இந்த பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கப்படுகின்றன.
நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு ரூ.1,981.90 கோடிக்கு இந்த ஆயுதங்கள் வாங்கப்படும்.
பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்காக இந்த பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கப்படுவதாக தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
13 ஒப்பந்தங்கள் மூலம் ட்ரோன் பாதுகாப்பு அமைப்புகள், குறைந்த எடை கொண்ட ரேடார்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள் மற்றும் குறுகிய தூர வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் தயாராகி வருகிறது.
ஏவுகணைகள், ரிமோட் கண்ட்ரோல் செய்யப்பட்ட கண்காணிப்பு ட்ரோன்கள், சிறிய ட்ரோன்கள், குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள், குண்டு துளைக்காத தலைக்கவசங்கள், கவச வாகனங்கள் மற்றும் துப்பாக்கிகளில் பொருத்தக்கூடிய நைட் விஷன் அமைப்புகளும் வாங்கப்படும்.
முன்னதாக, ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு ஆயுதக் கிடங்கு அதிகரிக்கப்படும் என்று தகவல்கள் வெளிவந்தன.
இந்தியா-பாகிஸ்தான் மோதலின் போது, ஜம்மு-காஷ்மீர் மற்றும் எல்லைப் பகுதியில் உள்ள பல இடங்களில் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது. இந்திய ராணுவம் அவற்றை அழித்தாலும் இவ்வகை தாக்குதல்கள் புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
- பின்னணி பாடகர் சங்கர் மகாதேவன் இந்திய முப்படையினரின் புகழை பாட உள்ளார்.
- பஹல்காம் தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இசை நிகழ்ச்சி இருக்கும்.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 22-ந்தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் 'பிளே-ஆப்' சுற்று முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.
இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மல்லுக்கட்டுகின்றன.
இந்நிலையில், ஐ.பி.எல். இறுதிப்போட் டிக்கு முன்பு மாலை 6 மணிக்கு நிறைவு விழா நடைபெறுகிது.
இதில், பின்னணி பாடகர் சங்கர் மகாதேவன் இந்திய முப்படையினரின் புகழை பாட உள்ளார். ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையில் இடம் பெற்றிருந்த ராணுவ வீரர்களை கவுரவப்படுத்தும் விதமாகவும், பஹல்காம் தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் இசை நிகழ்ச்சி இருக்கும் என்று கூறப்படுகிறது.
- பயங்கரவாதிகள் நடத்திய பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்
- பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய ராணுவத்தின் நடமாட்டம் தொடர்பான முக்கிய தகவல்களை பாகிஸ்தானில் உளவு அமைப்புக்கு பகிர்ந்தாக பஞ்சாபை சேர்ந்த ககன்தீப் சிங் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளிடம் அவர் தகவல்களை பகிர்ந்து கொண்ட மொபைல் போனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் ராணுவத்தின் முக்கிய தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி பணம் பெற்றதாக போலீசார் தெரிவித்தனர்.






