என் மலர்
நீங்கள் தேடியது "Rahul Gandhi"
- ராகுல் காந்தி தன்னுடைய சொந்த மக்களவை தொகுதியில் நீண்ட நேரம் செலவழிப்பதில்லை.
- திடீரென வியட்நாம் மீது அதிக பாசம் வைப்பதற்கான காரணம் என்ன?
காங்கிரஸ் கட்சி எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி அவரது தொகுதியை விட, வியட்நாமில் அதிக நேரம் செலவிட்டுள்ளார். வியட்நாம் மீதான அசாதாரண பாசம் குறித்து விளக்க வேண்டும் என பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான ரவி சங்கர் பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது:-
ராகுல் காந்தியை எங்கே? அவர் வியட்நாம் சென்றுள்ளதாக கேள்விப்படுகிறேன். அவர் தன்னுடைய சொந்த மக்களவை தொகுதியில் நீண்ட நேரம் செலவழிப்பதில்லை. திடீரென வியட்நாம் மீது அதிக பாசம் வைப்பதற்கான காரணம் என்ன?
வியட்நாம் மீதான அசாதாரண பாசம் குறித்து ராகுல் காந்தி விளக்க வேண்டியது அவசியம். அவர் அங்கே அடிக்கடி செல்வது மிகவும் வினோதமானது. ராகுல் காந்தி மக்களவை எதிர்க்கட்சி தலைவர். அவர் இந்தியாவில் இருக்க வேண்டும்.
இவ்வாறு ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
பாஜக ஐடி துறை தலைவர் அமித் மாள்வியா எக்ஸ் பக்கத்தில் "எதிர்க்கட்சித் தலைவர் என்ற முக்கிய பதவியை ராகுல் காந்தி வகிக்கிறார். மேலும் அவர் மேற்கொண்ட ஏராளமான ரகசிய வெளிநாட்டுப் பயணங்கள், குறிப்பாக நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும்போது தேசியப் பாதுகாப்பு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகின்றன." எனத் தெரிவித்துள்ளார்.
- கட்சியில் இணையாமல் ஜனநாயகத்தை காப்பாற்ற விரும்பும் மக்கள் எங்களுடன் கைகோர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
- காங்கிரஸ் கட்சி வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கைகள் எடுத்துள்ளது.
காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பிறகு மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:-
இது எனக்கு உணர்ச்சிகரமான தருமணமாகும். தொழிலாளியின் மகனாக, சாதாரண தொழிலாளியான என்னை கட்சியின் தலைவராக்கியதற்காக காங்கிரஸ் கட்சியினருக்கு நன்றியை கூறி கொள்கிறேன்.
நாடு தற்போது பொய் மற்றும் வஞ்சக அரசியலை பார்க்கிறது. பொய் அரசியலுக்கு எதிராக போராடுவோம். கட்சியில் இணையாமல் ஜனநாயகத்தை காப்பாற்ற விரும்பும் மக்கள் எங்களுடன் கைகோர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
காங்கிரசால் நிறுவப்பட்ட ஜனநாயக அமைப்பை மாற்ற இன்று முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் காங்கிரசின் சித்தாந்தம் இந்திய அரசியல் அமைப்பின் அடிப்படையில் உள்ளது. இது கடினமான நேரம் என்பது எனக்கு தெரியும்.
உள்கட்சி ஜனநாயகம் கொண்ட ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமே. தேர்தல் அதை நிரூபித்தது.
ராகுல்காந்தி பாத யாத்திரை சிறப்பானது. இது நாட்டுக்கு புதிய சக்தியை கொடுக்கிறது. காங்கிரஸ் கட்சி வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கைகள் எடுத்துள்ளது. ராகுல்காந்தி மக்களிடம் நேடியாக பேசுகிறார். பிளவுபடாத இந்தியாவை விரும்பும் மக்களை அவர் திரட்டுகிறார்.
இவ்வாறு கார்கே பேசினார்.
- மோடிக்கு எதிரான சவால் மிகப் பெரியது என்று நான் உணர்கிறேன்.
- மல்லிகார்ஜூன கார்கே பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட அசோக் கெலாட் பேட்டி.
டெல்லியில் காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

ராகுல் காந்தி மீண்டும் காங்கிரஸ் தலைவராக வர வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம், ஏனெனில் அவர் மட்டுமே பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு சவால் விட முடியும். அன்பு, பாசம் கலந்த அரசியல் இருக்க வேண்டும், வெறுப்பு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற செய்தியை ராகுல்காந்தியின் யாத்திரை நாட்டுக்கு தெரிவித்துள்ளது. விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பிரச்னைகளையும் அவர் எழுப்பியுள்ளார்.
சோனியாகாந்தி குடும்பம் அல்லாத கட்சித் தலைவர் இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்ட பிறகு கார்கே பொறுப்பேற்றார். சவால் மிகப் பெரியது என்று நான் உணர்கிறேன். சோனியாகாந்தி என்ன முடிவு எடுத்தாலும் அது மதிக்கப்படும் மற்றும் அவரது கரங்கள் பலப்படுத்தப்படும் என்பதை நாங்கள் அனைவரும் உறுதி செய்வோம். நாடு பெரிய சவால்களை எதிர்கொள்ளும் நேரத்தில் காங்கிரஸுக்கு இது ஒரு புதிய தொடக்கம். சோனியாகாந்தி அரசியலுக்கு வந்த போது அவருக்கு எதிராக இருந்தவர்கள் அவரது அபிமானிகளாக மாறினார்கள்.
இன்று காங்கிரஸ் தலைவர் பதவியை சோனியா காந்தி ராஜினாமா செய்தது அனைத்து காங்கிரஸ்காரர்களுக்கும் ஒரு உணர்ச்சிகரமான தருணம். சோனியா காந்தியின் வழிகாட்டுதல் கட்சிக்கு விலைமதிப்பற்றது. 2004 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில், பாஜகவை தோற்கடித்து மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை காங்கிரஸ் அமைத்தது. சோனியா பிரதமர் பதவியையும் துறந்து, காங்கிரஸை ஒரு குடும்பம் போல் நடத்தினார். இந்த தியாகம், பாசம் மற்றும் சொந்தம் ஆகியவற்றின் காரணமாக, அவரது தலைமையின் கீழ் கட்சி ஒன்றுபட்டது மற்றும் பல கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஐக்கிய முற்போக்கு கூட்டணியை உருவாக்கியது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- ராகுல் காந்தி தெலுங்கானா மாநிலத்தில் ஒற்றுமை யாத்திரை பயணம் மேற்கொண்டு வருகிறார்.
- தீபாவளிக்கு 3 நாள் விடுமுறைக்குப் பிறகு, நேற்று மீண்டும் யாத்திரை தொடங்கியது.
ஐதராபாத்:
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெலுங்கானா மாநிலத்தில் ஒற்றுமை யாத்திரை பயணம் மேற்கொண்டு வருகிறார். தீபாவளிக்கு 3 நாள் விடுமுறைக்குப் பிறகு, நேற்று மக்தல் சட்டமன்றத் தொகுதியின் குடேபெல்லூரில் இருந்து யாத்திரை மீண்டும் தொடங்கியது. குடேபெல்லூரில் இருந்து நாராயண்பேட்டை மாவட்டம் யெலிகண்ட்லா வரை 26.7 கிலோ மீட்டர் தூரம் ராகுல் காந்தி நடந்தார்.
அப்போது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தெலுங்கானா காங்கிரஸ் செயல் தலைவரான முகமது அசாருதீன் ராகுல் காந்தியைச் சந்தித்து அவருடன் கைகோர்த்து நடை பயணத்தை மேற்கொண்டார். அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:
மாநிலத்திலும் மத்தியிலும் டி.ஆர்.எஸ். (ராஷ்டிர சமிதி கட்சி) மற்றும் பா.ஜ.க. இணைந்து செயல்படுகிறது. டி.ஆர்.எஸ். மற்றும் பா.ஜ.க. அரசுகளின் கொள்கைகளால் வேலையின்மை மற்றும் பணவீக்கம் அதிகரித்துள்ளது.
டெல்லியில் டி.ஆர்.எஸ். பா.ஜ.க.வுக்கு உதவுகிறது, மேலும் மாநிலத்தில் டி.ஆர்.எஸ்.ஸுக்கு பா.ஜ.க. ஆதரவளிக்கிறது. இந்த 2 கட்சிகளும் ஜனநாயகத்திற்கு எதிரானவை.
டி.ஆர்.எஸ் மற்றும் பா.ஜ.க ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். தெலுங்கானா மக்கள் எம்எல்ஏக்கள் விலைக்கு வாங்க பேரம் பேசப்படும் நிகழ்வை புரிந்து கொள்ள வேண்டும்
பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்திய அனைத்து மசோதாக்களையும் டிஆர்எஸ் முழுமையாக ஆதரித்தது.
சட்டப்பேரவையில் காங்கிரஸ் கொண்டு வந்த தீர்மானத்தை டிஆர்எஸ் ஆதரிக்கவில்லை. நாட்டிலேயே மிகவும் ஊழல் நிறைந்த மாநிலம் டிஆர்எஸ் தலைமையிலான தெலுங்கானாதான்.
ஆட்சியைக் கவிழ்க்க இரு கட்சிகளும் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதால், டிஆர்எஸ் மற்றும் பா.ஜ.க. ஒன்றுக்கொன்று வேறுபட்டதல்ல என தெரிவித்தார்.
- தெலுங்கானா முதலமைச்சர் ஏழைகளின் நிலத்தைப் பறிப்பதில் மும்முரமாக இருக்கிறார்.
- மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்தவுடன் ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிப்போம்.
மகபூப் நகர்:
காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அவரது பாத யாத்திரை தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களை கடந்து தற்போது தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. மகபூப்நகர் மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி கூறியுள்ளதாவது:
கடந்த 35 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் வேலையில்லாதவர்கள் உள்ளனர். அதே வேளையில் உலக அளவில் அதிக பணக்காரர்களை கொண்ட நாடாகவும் இந்தியா உள்ளது. இங்கே முதலமைச்சரும் (சந்திரசேகர் ராவ்) அங்கே பிரதமரும் (மோடி) பணக்காரர்களுக்கு முழு ஆதரவாக உள்ளனர்.
தெலுங்கானாவில் ஒரு விவசாயி எவ்வளவு கடினமாக உழைத்தாலும், உரிய வருமானத்தை பெற முடியவில்லை. ஒருபுறம் விவசாயிகளுக்கு எதிராக கறுப்புச் சட்டங்களை மோடி இயற்றிய, மறுபுறம் தெலுங்கானாவில் உங்கள் முதலமைச்சர் ஏழைகளின் நிலத்தைப் பறிப்பதில் மும்முரமாக இருக்கிறார். ஜிஎஸ்டி விதித்ததால் லட்சக்கணக்கான நெசவாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். டிஆர்எஸ் அரசு நெசவாளர்களுக்கு உதவவில்லை.
எங்கள் ஆட்சி வந்தவுடன் தெலுங்கானா நெசவாளர்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிப்போம் என்று உறுதியளிக்கிறேன். நாட்டில் வெறுப்பையும் வன்முறையையும் பா.ஜ.க பரப்புகிறது. யாரையும் வெறுக்காமல் எனது நடைபயணம் நதி போல் நடந்து வருகிறது. இதுதான் உண்மையான இந்தியா. இதுதான் நமது வரலாறு. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- காங்கிரஸ் கட்சிக்கு பொதுமக்களுடனான தொடர்பு பலவீனமாக இருக்கிறது.
- மக்களுடன் தொடர்பு ஏற்படுத்த பாதயாத்திரை நல்ல முதல்படியாக இருக்கும்.
ஐதராபாத் :
தெலுங்கானாவில் பாதயாத்திரையில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, அங்குள்ள கொத்தூர் என்ற இடத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
குஜராத்தில் காங்கிரசுக்கு திடமான அடித்தளம் உள்ளது. அங்கு பா.ஜனதாவுக்கு எதிராக அதிருப்தி அலை பலமாக இருக்கிறது. ஆம் ஆத்மியை பற்றி ஊடகங்கள், ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கி விட்டன. ஆனால் அக்கட்சி காற்றில்தான் இருக்கிறதே தவிர, களத்தில் இல்லை.
எனவே, குஜராத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அங்கு நான் பிரசாரம் செய்வது பற்றி மல்லிகார்ஜுன கார்கே முடிவு செய்வார். தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் ஊழல், அணுகுமுறை ஆகியவை எங்களுக்கு ஏற்புடையது அல்ல. ஆகவே, அக்கட்சியுடன் கூட்டணி கிடையாது.
காங்கிரஸ் கட்சிக்கு பொதுமக்களுடனான தொடர்பு பலவீனமாக இருக்கிறது. மக்களுடன் தொடர்பு ஏற்படுத்த பாதயாத்திரை நல்ல முதல்படியாக இருக்கும். ஆனால் இது மந்திரக்கோல் அல்ல. குஜராத் தொங்கு பால விபத்தை நான் அரசியலாக்க விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- சந்திரசேகரராவின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிக்கும், மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே மறைமுக தொடர்பு உள்ளது.
- இருவரும் பல்வேறு பிரச்சினைகளில் இணைந்தே செயல்படுகிறார்கள்.
ஐதராபாத்:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாரத் யாத்திரை மேற்கொண்டுள்ளார்.
கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த பாதயாத்திரை கேரளா, கர்நாடகா வழியாக இப்போது தெலுங்கானா மாநிலத்தில் நடந்து வருகிறது.
ஐதராபாத்தில் நடைபயணம் மேற்கொண்டுள்ள அவர் நேற்று அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
சந்திரசேகரராவின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிக்கும், மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே மறைமுக தொடர்பு உள்ளது. இருவரும் பல்வேறு பிரச்சினைகளில் இணைந்தே செயல்படுகிறார்கள்.
பாராளுமன்றத்தில் பாரதிய ஜனதா கொண்டு வரும் மசோதாக்களை ஆதரிப்பதில் இருந்தே இரு கட்சிகளுக்குமான ஒற்றுமையை அறிந்து கொள்ளலாம்.
பிரதமர் மோடிக்கும், தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவுக்கும் இடையே நேரடி டெலிபோன் தொடர்பு உள்ளது. பிரதமர் அங்கிருந்து முதல்-மந்திரிக்கு உத்தரவு பிறப்பிப்பார். உடனே அவர் அதனை இங்கு நிறைவேற்றுவார்.
பாராளுமன்றத்தில் பாரதிய ஜனதா கொண்டு வந்த விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை சந்திரசேகர ராவ் ஆதரித்ததில் இருந்தே இதை தெரிந்து கொள்ளலாம்.
பாராளுமன்றத்தில் பாரதிய ஜனதாவுக்கு எதிராக எதிர்கட்சிகள் பிரச்சினையை கிளப்பும் போது, அதனை திசை திருப்பும் முயற்சிகளில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஈடுபடும். அவர்கள் உடனே வேறு பிரச்சினையை கிளப்பி சபையின் கவனத்தை திருப்பும் முயற்சிகளில் ஈடுபடுவார்கள்.
இந்தியாவில் டெல்லி தான் மாசுபட்டநகரம் என்று எண்ணியிருந்தேன். இப்போதுதான் அதைவிட மோசமான நகரம் ஐதராபாத் என்பதை தெரிந்து கொண்டேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
- ராகுல் காந்தியின் பாதயாத்திரை ஒட்டுமொத்த அரசியல் சூழலையே மாற்றியமைக்கும்.
- ராகுல் காந்தி தொடங்கியுள்ள பாதயாத்திரை தெலுங்கானாவில் தற்போது நடந்து வருகிறது.
ஐதராபாத்
இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடங்கியுள்ள பாதயாத்திரை தெலுங்கானாவில் தற்போது நடந்து வருகிறது. இதில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் அவருடன் நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த செப்டம்பர் 7-ந் தேதி தொடங்கிய இந்த பாதயாத்திரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களை கடந்து சென்ற வாரம் தெலுங்கானாவில் நுழைந்துள்ளது.
யாத்திரையின் 56-வது நாளான நேற்று ஐதராபாத் நகரின் பாலநாகர் தேசிய நெடுஞ்சாலையில் இந்த யாத்திரை தொடர்ந்தது. ஹபீஸ்பேட்டில் காலை இடைவேளையும், முதாங்கியில் மாலை இடைவேளையும் விடப்பட்டது.
பாதயாத்திரை சென்றவர்கள் கவுலம்பேட்டில் இரவில் ஓய்வெடுத்தனர்.
முன்னதாக இந்த பாதயாத்திரையில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பங்கேற்கும் யாத்ரீகர்களை, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று போவன்பள்ளியில் சந்தித்து உரையாடினார்.
பின்னர் இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறியிருந்ததாவது:-
இந்திய ஒற்றுமை பயணத்தில் ஈடுபட்டுள்ள யாத்ரீகர்களை ஐதராபாத்தின் போவன்பள்ளியில் சந்தித்து பேசினேன். ராகுல் காந்தியுடன் 3,500 கி.மீ. நடந்து செல்லும் அவர்கள் நமது கட்சி தொண்டர்களுக்கு உத்வேகம் அளிக்கின்றனர்.
இந்திய ஒற்றுமை பயணம் ஒரு மவுன புரட்சியை ஏற்படுத்துகிறது. இது ஒட்டுமொத்த அரசியல் சூழலையே மாற்றியமைக்கும்.
இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
- பொய் சொல்லி பொதுமக்களை தவறாக வழி நடத்துகிறது காங்கிரஸ்.
- இமாச்சலப் பிரதேசத்தில் அனைத்துத் துறை வளர்ச்சியையும் பாஜக உறுதி செய்துள்ளது.
அமிர்பூர்:
வரும் 12ந் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறும் இமாச்சல் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையல் அம்மாநிலத்தின் அமிர்பூர் நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக்சிங் தாக்கூர் கூறியுள்ளதாவது:
நாட்டிற்கு எதிராக கோஷம் எழுப்பிய சின்ன, சின்ன கும்பலுடன் ராகுல் காந்தி பாத யாத்திரை நடத்துகிறார். அதனால்தான் அவரது பாத யாத்திரையில் பிரியங்கா காந்தி பங்கேற்கவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் இமாச்சல பிரதேசத்தில் இரட்டை எஞ்சின் அரசு செயல்படுத்தி உள்ள பல நலத் திட்டங்களால் மீண்டும் இஙகு பாஜக ஆட்சிக்கு வரும்.
இமாச்சலப் பிரதேசத்தின் நலனுக்காக காங்கிரஸ் ஒருபோதும் உழைக்கவில்லை. இந்த மாநிலத்தின் அனைத்துத் துறை வளர்ச்சியையும் பாஜக உறுதி செய்துள்ளது. பாஜக வளர்ச்சியை நம்புகிறது, அதே நேரத்தில் காங்கிரஸ் பொய் சொல்லி பொதுமக்களை தவறாக வழிநடத்துகிறது. பிரதமர்மோடி தலைமையின் மீது மக்கள் மீண்டும் நம்பிக்கை வைத்து, இரட்டை எஞ்சி அரசை அமைக்க உதவுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயண யாத்திரை நாளை இரவு மகாராஷ்டிராவிற்குள் நுழைகிறது.
- பாஜகவிடம் இருந்து குஜராத் மக்களை காப்பாற்றுவோம் என்கிறார் ராகுல் காந்தி.
கன்னியாகுமரியில் இருந்து செப்டம்பர் 7-ந் தேதி தொடங்கிய காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயண பாத யாத்திரை, தெலுங்கானா மாநிலத்தை தாண்டி நாளை இரவு 9 மணி அளவில் மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட் மாவட்டத்தில் உள்ள தெக்லூரை அடைகிறது. அந்த மாநிலத்தில் மட்டும் 14 நாள் இந்த பாத யாத்திரை நடைபெறுகிறது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா படோல், அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பதே பாத யாத்திரையின் நோக்கம் என்றார். கடந்த எட்டு ஆண்டுகளில், நாடு ஊழல், பயம் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டைப் பாதிக்கும் பிரச்சினைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராகுல் காந்தி இடையே நேருக்கு நேர் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் பங்கேற்பார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த நிலையில், ராகுல்காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பாஜகவின் இரட்டை என்ஜின் என்ற வஞ்சகத்தில் இருந்து குஜராத் மக்களை காப்பாற்றுவோம் என்று தெரிவித்துள்ளார். மாற்றத்திற்கான திருவிழாவை குஜராத்தில் கொண்டாடுவோம். ரூ.500க்கு சமையல் எரிவாயு சிலிண்டர், 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு, ரூ.3 லட்சம் வரையிலான விவசாயக்கடன்கள் தள்ளுபடி போன்ற காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் குஜராத் சென்ற பிரதமர் மோடி தனது ஊரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.
- பா.ஜ.க.வின் இரட்டை என்ஜின் என்ற வஞ்சகத்தில் இருந்து குஜராத் மக்களை காப்பாற்றுவோம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1 மற்றும் 5-ம் தேதிகள் என இரு கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. குஜராத் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அங்கு ஆளும் பா.ஜ.க. மற்றும் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் குஜராத்துக்கு சென்ற பிரதமர் மோடி தனது சொந்த ஊரில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.
ஆம் ஆத்மி கட்சி ஆதலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், பா.ஜ.க.வின் இரட்டை என்ஜின் என்ற வஞ்சகத்தில் இருந்து குஜராத் மக்களை காப்பாற்றுவோம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பா.ஜ.க.வின் இரட்டை என்ஜின் என்ற வஞ்சகத்தில் இருந்து உங்களை காப்பாற்றுவோம். மாற்றத்திற்கான திருவிழாவை குஜராத்தில் கொண்டாடுவோம். எரிவாயு சிலிண்டர் விலை ரூ.500, 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள், ரூ. 3 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி போன்ற காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என பதிவிட்டுள்ளார்
- வருகிற 20-ந்தேதி வரை ராகுல் காந்தி மகாராஷ்டிராவில் பாத யாத்திரை மேற்கொள்கிறார்.
- 14 நாட்கள் யாத்திரையில் ராகுல் காந்தி 15 சட்டசபை தொகுதி, 6 பாராளுமன்ற தொகுதிகளுக்கு செல்கிறார்.
மும்பை:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை (பாரத் ஜோடா யாத்ரா) மேற்கொள்ள முடிவு செய்தார்.
அதன்படி ராகுல்காந்தியின் பாதயாத்திரை கடந்த செப்டம்பர் மாதம் 7-ந்தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடாகா, ஆந்திரா மாநிலங்களில் பாதயாத்திரை மேற்கொண்ட பிறகு அவர் தெலுங்கானாவுக்கு சென்றார்.
தெலுங்கானா மாநிலத்தில் ராகுல் காந்தியின் பாத யாத்திரை கடந்த 24-ந்தேதி தொடங்கியது. இன்றுடன் அங்கு அவரது யாத்திரை நிறைவு பெறுகிறது.
ராகுல் காந்தியின் பாத யாத்திரை தெலுங்கானாவில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்துக்கு இன்று இரவு நுழைகிறது. அவரது 61-வது நாள் பாதயாத்திரை தெலுங்கானாவில் இன்று நடந்தது.
ராகுல் காந்தியின் பாத யாத்திரை இன்று இரவு 7 மணிக்கு மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட் மாவட்டம் தொகுதியில் நுழைகிறது. இரவில் அவரது பாத யாத்திரை வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. மகாராஷ்டிராவில் நாளை காலை 8.30 மணியில் இருந்து ராகுல் காந்தி பாதயாத்திரை தொடங்குகிறது.
வருகிற 20-ந்தேதி வரை அவர் மகாராஷ்டிராவில் பாத யாத்திரை மேற்கொள்கிறார். 14 நாட்கள் யாத்திரையில் அவர் 15 சட்டசபை தொகுதி, 6 பாராளுமன்ற தொகுதிகளுக்கு செல்கிறார். 5 மாவட்டங்களில் அவர் 382 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை செல்ல உள்ளார்.
மகாராஷ்டிரா பாத யாத்திரையின் போது ராகுல் காந்தி 2 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். முதல் பொதுக்கூட்டம் வருகிற 10-ந்தேதி நான்டெட் மாவட்டத்திலும், 2-வது பொதுக்கூட்டம் 18-ந்தேதி புல்தானா மாவட்டம் சென்காவ் பகுதியிலும் நடக்கிறது.
ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் பங்கேற்க தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட பல கட்சி தலைவர்களுக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்து உள்ளது.
மகாராஷ்டிராவில் முடிந்த பிறகு ராகுல் காந்தியின் பாத யாத்திரை மத்திய பிரதேச மாநிலத்துக்கு 20-ந்தேதி செல்கிறது.