என் மலர்
நீங்கள் தேடியது "நாடாளுமன்றம்"
- ராகுல்காந்திக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரும் திட்டம் எதுவும் இல்லை
- ராகுல் காந்தியை எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யவேண்டும்.
இந்தியா - அமெரிக்கா இடையே இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் செய்வது தொடர்பாக சமீபத்தில் கூட்டறிக்கை வெளியிடப்பட் டது. இதை சுட்டிக்காட்டி நாடாளுமன்ற மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி பேசினார். அப்போது அவர் பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் கடுமையாக விமர்சனம் செய்தார்.
அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் மூலம் இந்தியாவை மத்திய அரசு விற்றுவிட்ட தாக குற்றம் சாட்டினார். இந்தியாவின் நலனில் மத்திய அரசு சமரசம் செய்ததாகவும் கூறினார். இதற்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்தது. ராகுல்காந்தி தவறான தகவல்களை அளிப்பதாக பதிலடி கொடுத்தது. மேலும் அவருக்கு எதிராக மத்திய அரசு உரிமை மீறல் நோட்டீஸ் கொண்டு வரப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் ராகுல்காந்திக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர பா.ஜனதா எம்.பி. நிஷிகாந்த் துபே நோட்டீஸ் அளித்தார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
எதிர்க் கட்சி தலைவர் ராகுல்காந்திக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரும் திட்டம் எதுவும் இல்லை. கோரோஸ் அறக்கட்டளை, போர்டு அறக்கட்டளை மற்றும் சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனம் ஆகியவற்றுடன் அவர் எவ்வாறு தொடர்பு கொள்வார். தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், அமெரிக்கா போன்ற இடங்களுக்கு எவ்வாறு பயணம் செய்கிறார். ராகுல் காந்தி இந்தியாவுக்கு எதிரான சக்திகளுடன் எவ்வாறு தொடர்பு கொண்டுள்ளார் என்பதை குறிப்பிட்டு ஒரு முக்கிய தீர்மானத்தை நான் சமர்பித்துள்ளேன்.
அவரது எம்.பி. பதவியை ரத்து செய்ய வேண்டும் என்றும், வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்றும் நான் கோரியுள்ளேன்." என நிஷிகாந்த் துபே தெரிவித்துள்ளார்.
- மதுரை, கோவை மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி வழங்காதது ஏன்?
- தமிழ்நாட்டின் ரெயில் திட்டங்களுக்கு நிலங்களை கையகப்படுத்த போதிய நிதியை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை.
நாடாளுமன்ற மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர். பாலு பேசினார். அப்போது "மதுரை, கோவை மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி வழங்காதது ஏன்? தமிழ்நாட்டின் ரெயில் திட்டங்களுக்கு நிலங்களை கையகப்படுத்த போதிய நிதியை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை" என்றார்.
மேலும், ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள், விளைபொருட்களுக்கு இரட்டிப்பு விலை போன்ற பிரதமரின் வாக்குறுதி என்னவானது? என்று கேள்வி எழுப்பினார்.
- நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார்.
- தேசிய பங்குச் சந்தை, மும்பை பங்குச் சந்தையில் சிறப்பு வர்த்தகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 28-ம் தேதி தொடங்கியது. இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.
இதையொட்டி நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், பருவநிலை மாற்றத்தால் ஏற்படப்போகும் பாதிப்புகள் பற்றி சுட்டிக்காட்டப்பட்டன.
இந்நிலையில், மத்திய அரசின் 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதால், இன்றைய தினம் சிறப்பு வர்த்தக நாளாக தேசிய பங்குச்சந்தை (என்எஸ்இ), மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) அறிவித்துள்ளன. அதன்படி, இன்று காலை 9.15 மணி முதல் மாலை 3.30 மணி வரை பங்குச்சந்தைகளில் வர்த்தகம் வழக்கம்போல நடைபெறும்.
கடந்த 20 ஆண்டுகளில் முதல்முறையாக மத்திய பட்ஜெட் ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்பட உள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த மாநிலங்களுக்கு புதிய அறிவிப்புகள் இடம்பெறலாம் என கூறப்படுகிறது.
தொடர்ந்து 9-வது முறையாக மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது
- இதுவரை அரசு நிறுவனங்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது.
- மின்தேவை அதிகரிப்பே அணுசக்தி மசோதாவுக்கு காரணம்
அணுசக்தி மசோதா 2025க்கு மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது. எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தபோதிலும், குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.
அணுசக்தி துறைக்கான இணையமைச்சர் ஜிதேந்திர சிங் அவையில் மசோதாவை நேற்று தாக்கல் செய்தார். இந்த மசோதா அணுசக்தியை விரிவுபடுத்துதல், தனியார் பங்களிப்பை அனுமதித்தல் மற்றும் 2047 ஆம் ஆண்டிற்குள் 100 ஜிகாவாட் (GW) அணுசக்தி திறனை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்துறை இதுவரை அரசு நிறுவனங்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த மசோதாமூலம் தனியார் நிறுவனங்கள் அணுசக்தி துறையில் நுழைவதை அனுமதிக்கிறது.
மசோதாவை தாக்கல் செய்து பேசிய அமைச்சர்,
"இந்தியாவில் 60-79% புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பயன்படுத்துகிறோம். மின்தேவை அதிகரிப்பே அணுசக்தி மசோதாவுக்கு காரணம். மேலும் தனியார் பங்களிப்பையும், பாதுகாப்பையும் உறுதிசெய்யவே இந்த மசோதா. அணுசக்தி துறையில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்காக ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடும் செய்யப்படுகிறது." எனவும் தெரிவித்துள்ளார்.
- கம்போடியா உடனான அமைதி ஒப்பந்தத்தை ரத்துசெய்வதாக தாய்லாந்து அறிவித்தது.
- புதிய எல்லை மோதல்கள் இருநாடுகளிடையேயான பதற்றத்தை மேலும் அதிகரித்தது.
பாங்காங்:
ஆசிய நாடுகளான கம்போடியா-தாய்லாந்து இடையே 1907-ம் ஆண்டில் சர்வதேச எல்லை வகுக்கப்பட்டது. இருப்பினும் எல்லையில் அமைந்துள்ள 11-ம் நூற்றாண்டை சேர்ந்த இந்து கோவில் தங்களுக்கு சொந்தமானது எனக்கூறி இருநாடுகளும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றன
இந்த மோதல், கடந்த ஜூலையில் முற்றியது. இருதரப்பு வீரர்கள் மோதிக்கொண்டதில் 48 பேர் கொல்லப்பட்டனர். 3 லட்சம் பேர் அகதிளாகினர். 5 நாட்கள் நீடித்த இந்த போரை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தி தீர்த்து வைத்தார். அக்டோபரில் மலேசியா சென்றபோது டிரம்ப் முன்னிலையில் இருநாட்டு தலைவர்களிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
கம்போடியா புதைத்து வைத்திருந்த கண்ணிவெடியில் சிக்கி தங்கள் நாட்டு வீரர் காயமடைந்ததாகக்கூறி அமைதி ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக தாய்லாந்து நவம்பரில் அறிவித்தது. இதனை தொடர்ந்து கடந்த 8-ந்தேதி இருநாட்டு வீரர்களிடையே மீண்டும் மோதல் வெடித்தது. இதில் இருதரப்பை சேர்ந்த 8 வீரர்கள் பலியாகினர்.
புதிய எல்லை மோதல்கள் இருநாடுகளிடையேயான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், தாய்லாந்து நாடாளுமன்றத்தை அந்நாட்டு அரசு கலைத்துள்ளது. இதையடுத்து, சுமார் 45 முதல் 60 நாட்களுக்குள் பொதுத் தேர்தல் நடத்தும் தேதி அறிவிக்கப்பட உள்ளது. அதுவரை பிரதமர் அனுதின் சார்ன்விராகுல் தலைமையில் இடைக்கால அரசு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- நாய்தான் இன்றைய முக்கிய தலைப்பாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
- கடிப்பவர்கள் உள்ளேதான் இருக்கிறார்கள்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாளான நேற்று காங்கிரஸ் எம்பி ரேணுகா சவுத்ரி, நாய்க்குட்டி ஒன்றுடன் நாடாளுமன்ற வளாகத்திற்குள் வருகை புரிந்தார். இதற்கு பாஜக எம்பிக்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரேணுகா சவுத்ரி, "இது ஒரு பிரச்சனையா? அது ஒரு சின்ன உயிரினம். யாரையும் கடிக்காது. கடிப்பவர்கள் உள்ளேதான் இருக்கிறார்கள்" என தெரிவித்தார்.
கடிப்பவர்கள் உள்ளேதான் இருக்கிறார்கள் என மறைமுகமாக எதிர்க்கட்சியினரை விமர்சித்ததற்கு ரேணுகா சவுத்ரி மன்னிப்புக் கோர வேண்டும் எனவும் பாஜக தெரிவித்திருந்தது. இந்த நிலையில் ராகுல் காந்தியும் அதே பொருள்படும் கருத்தை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி,
"நாய்தான் இன்றைய முக்கிய தலைப்பாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். அந்த நாய் என்ன செய்தது? அது இங்கே வந்ததா? அதற்கு அனுமதி இல்லையா? என கேள்வி எழுப்பியவர், ஆனால் அவை உள்ளே அனுமதிக்கப்படுகின்றன என எதிர்க்கட்சிகளை குறிப்பிடுமாறு கிண்டலாக கூறினார். இதற்கு பாஜகவினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
- நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 1-ம் தேதி தொடங்குகிறது.
- மொத்தம் 19 நாட்கள் நடைபெறும் இந்தத் தொடரில் 15 அமர்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.
புதுடெல்லி:
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 1-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. மொத்தம் 19 நாட்கள் நடைபெறும் இந்தத் தொடரில் 15 அமர்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.
கடந்த கூட்டத்தொடரின்போது எஸ்.ஐ.ஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட விவகாரங்களால், நாடாளுமன்றம் முழுமையாக முடங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்தக் கூட்டத்தொடரை எவ்வித கூச்சல் குழப்பமும் இன்றி சுமுகமாக நடத்தும் நோக்கில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி கிரண் ரிஜிஜு வரும் 30ம் தேதி (நாளை) அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற மரபுப்படி நடைபெறும் இக்கூட்டத்தில் நிலுவையில் உள்ள மசோதாக்கள் மற்றும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து எதிர்க்கட்சிகளுடன் விவாதிக்கப்பட உள்ளது. பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளைக் கேட்டு அதற்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
சமீபத்தில் நடந்த பீகார் மாநிலத் தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ள நிலையில், இத்தொடரில் அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெற வாய்ப்புள்ளது.
- பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான பிரச்சினைகளை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எழுப்பினர்.
- மக்களவை கூடிய 6 நிமிடங்களில் ஒத்தி வைக்கப்பட்டது.
பாராளுமன்ற மழைக் கால கூட்டத்தொடர் கடந்த 21-ந்தேதி தொடங்கியது. முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளியால் பாராளுமன்றம் முடங்கியது. ஆபரேசன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எழுப்பி வருகிறார்கள்.
இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்ற மக்களவை கூடியது. அப்போது பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான பிரச்சினைகளை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எழுப்பினர்.
இவ்விவகாரம் குறித்து உடனடியாக விவாதிக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். சில உறுப்பினர்கள் சபையின் மையப்பகுதியில் நின்று பதாகைகளை காட்டினர்.
எதிர்க்கட்சி எம்.பி.க்களை இருக்கைகளுக்கு செல்லுமாறு சபாநாயகர் ஓம் பிர்லா கேட்டுக் கொண்டார். விதிகளின்படி பிரச்சினைகளை எழுப்ப அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும் என்று சபாநாயகர் தெரிவித்தார்.
கோஷமிடுவதும், பதாகைகளைக் காண்பிப்பதும் சபையின் கண்ணியத்திற்கு ஏற்றதல்ல. இதுபோன்ற செயல்கள் என்ன மாதிரியான செய்தியை அனுப்பும் என்பதை நீங்கள் யோசிக்க வேண்டும் என்று சபாநாயகர் கூறினார்.
ஆனால், சபாநாயகரின் கோரிக்கையை ஏற்காததால் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர். இதனால் கூச்சல்-குழப்பம் நிலவியது. இதையடுத்து சபையை பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். மக்களவை கூடிய 6 நிமிடங்களில் ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து 4-வது நாளாக பாராளுமன்ற மக்களவை முடங்கியது.
மேல்-சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் இன்று பதவியேற்று கொண்டனர். அவர்களுக்கு சபை துணைத் தலைவர் ஹரி வன்ஷ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதற்கிடையே மேல்-சபையிலும் பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பினர். அதுபற்றி விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் ஏற்கவில்லை. இதனால் எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பியதால் கூச்சல்-குழப்பம் நிலவியது. இதனால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
- இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் இன்று சந்தித்து பேசவுள்ளனர்.
- இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் தனித்தனியாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
காஷ்மீர் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்துார் குறித்து விவாதிக்க சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தை உடனே கூட்டக் கோரி ஒன்றிய அரசுக்கு இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆர்ஜேடி, திமுக, சமாஜ்வாதி, சிபிஐ(எம்), சிபிஐ மற்றும் சிபிஐ(எம்எல்)எல் போன்ற காட்சிகள் சிறப்பு கூட்டத்தொடரைக் கோரியுள்ளன.
இது தொடர்பாக இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் இன்று சந்தித்து பேசவுள்ளனர். பின்னர் அவர்கள் தனித்தனியாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
பயங்கரவாத தாக்குதல்கள், பூஞ்ச், உரி மற்றும் ரஜோரியில் பொதுமக்கள் கொல்லப்படுதல், போர் நிறுத்த அறிவிப்புகள், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் நிறுத்தத்தில் மத்தியஸ்தம் செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியது, தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் தொடர்பாக நாடு எதிர்கொள்ளும் பிரசனைகள் குறித்து விவாதிக்க கூட்டு அமர்வுக்கு ஏற்பாடு செய்யவும் கோரிக்கை வைக்கவும் எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளனர்.
- இன்று பிரதமர் மோடியை சந்தித்து இசைஞானி இளையராஜா வாழ்த்துப் பெற்றார்.
- சிம்பொனி குறித்து இளையராஜாவிடம் உரையாற்றியதாக மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இசைஞானி இளையராஜா தனது நீண்ட இசைப்பயணத்தில் சுமார் ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்துள்ளார்.
மேற்கத்திய இசை மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவரான இளையராஜா மொசார்ட் உள்ளிட்ட மேற்கத்திய இசை ஜாம்பவான்களின் சிம்பொனி இசைக் கூறுகளை தனது பாடல்களில் பயன்படுத்தி பாமர மக்களும் அவற்றை ரசிக்கும் வகையில் மெட்டுகளை அமைத்தார். அவரது இசையால் பல திரைப்படங்கள் வெற்றிப் படங்களாக மாறியுள்ளன. அவரது பாடல்கள் அனைத்தும் இன்றைய தலைமுறையையும் கவரும் வகையில் அமைந்துள்ளன.
சமீபத்தில் லண்டனில் 'வேலியண்ட்' (Valiant) சிம்பொனியை அரங்கேற்றம் செய்து இளையராஜா மற்றொரு சாதனையைப் படைத்துள்ளார்.
இந்நிலையில், இன்று பிரதமர் மோடியை சந்தித்து இசைஞானி இளையராஜா வாழ்த்துப் பெற்றார். சிம்பொனி குறித்து இளையராஜாவிடம் உரையாற்றியதாக மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனையடுத்து மாநிலங்களைவை எம்.பி.யான இளையராஜா மாநிலங்களவையில் பங்கேற்றார்.
அப்போது, சிம்பொனி அரங்கேற்றம் செய்த இளையராஜாவை பாராட்டிய மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர், "சிம்பொனியை இசையமைத்து, பதிவு செய்து, அரங்கேற்றம் செய்த முதல் இந்தியர் என்ற சாதனையை இளையராஜா படைத்துள்ளார். அவரால் ஒட்டுமொத்த நாடும் பெருமை கொள்கிறது" என்று தெரிவித்தார்.
- காலிப் பணியிடங்களை நிரப்பும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- விமானப் போக்குவரத்து மற்றும் உற்பத்தித் துறையில் 2,50,000 ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பு.
பாராளுமன்ற மாநிலங்களவையில் இன்று உறுப்பினரின் கேள்விக்கு, எழுத்துபூர்வமாக பதில் அளித்த மத்தியப் பணியாளர் நலத்துறை மந்திரி டாக்டர் ஜிதேந்திர சிங், 2011 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டுவரை மத்திய அரசுப் பணிகளில் 27% மேற்பட்ட இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பி்னர் நேரடியாக பணியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் அளித்த தகவலின்படி இந்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், காலிப்பணியிடங்களை நிரப்பும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் விமானப் போக்குவரத்து மற்றும் உற்பத்தித் துறையில், பைலட், விமான ஊழியர்கள், பொறியாளர்கள், தொழில்நுட்பவியலாளர்கள், விமான நிலைய ஊழியர்கள், சரக்குப் பிரிவு, சில்லறை விற்பனை, பாதுகாப்பு, நிர்வாகம் உள்பட சுமார் 2,50,000 பேர் நேரடி வேலை வாய்ப்பை பெற்றுள்ளதாக விமானப் போக்குவரத்துறை இணை மந்திரி வி.கே சிங் தெரிவித்துள்ளார். மக்களவையில் இன்று எழுத்துபூர்வமாக அவர் அளித்துள்ள பதிலில், விமானப் போக்குவரத்துத் துறை, 2021-22-ம் ஆண்டில் 58.5 சதவீதம் அளவுக்கு வளர்ச்சியை அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
- உதவித்தொகை வழங்குவதற்கு தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- 100 நாள் வேலைத் திட்டத்திற்கான கூலியை அதிகப்படுத்த வேண்டும்.
திருப்பூர் :
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில பொதுக்கூட்டம் திருப்பூர் ராயபுரம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஜான்சிராணி கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சட்டமன்றத்தில் நடைபெறுகிற அனைத்து உரைகளும், நிகழ்வுகளும் செய்கை மொழியுடன் ஒளிபரப்பப்படும் என்ற முதல்-அமைச்சரின் அறிவிப்பிற்கு பாராட்டுக்கள் தெரிவித்துக் கொள்கிறோம். 500 ரூபாய் உதவித்தொகை என்பதை போராடி பெற்றுள்ள நிலையில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் விண்ணப்பித்தவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கு தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
100 நாள் வேலை திட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை வேலை கேட்டு விண்ணப்பம் 6 என்ற படிவத்தை கொடுக்க வேண்டும். கடந்த பிப்ரவரி மாதத்திலேயே வேலை கேட்டு அந்தந்த மாவட்டங்களில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான ஊராட்சிகளில் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை கேட்டு வருகிற மே மாதம் 9-ந் தேதி மனு கொடுக்க உள்ளோம்.
100 நாள் வேலை திட்டத்தை அதிகப்படுத்த வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்திற்கான கூலியை அதிகப்படுத்த வேண்டும். மாற்று திறனாளிகளுக்கான உதவித்தொகையை அதிகப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 10-ந் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.






