என் மலர்
தாய்லாந்து
- ராஜமாதா சிரிகிட் உடைய பிறந்தநாள் அந்நாட்டில் அன்னையர் தினமாக கொண்டாடப்பட்டு பொது விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
- தனது 18 வயதில் மன்னர் பூமிபால்-ஐ அவர் சிரிகிட் திருமணம் செய்து கொண்டார்.
தாய்லாந்தின் தற்போதைய மன்னர் வஜிராலங்கார்னின் தாயாரான ராஜமாதா சிரிகிட் (Queen Mother Sirikit) உடல்நலக்குறைவால் காலனமார். அவருக்கு வயது 93.
ராஜமாதா சிரிகிட், தாய்லாந்தை மிக நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னரான பூமிபால் அதுல்யதேஜின் மனைவியாவார்.
அக்டோபர் 17 ஆம் தேதி முதல் இரத்தத் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 9.14 மணியளவில் பாங்காக்கில் உள்ள சுலாலோங்கார்ன் மருத்துவமனையில் காலமானார் என்று இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அவரது உடல், இறுதிச் சடங்கு வரை பாங்காக்கில் உள்ள கிராண்ட் பேலஸில் வைக்கப்பட உள்ளது.
1932 ஆகஸ்ட் 12 பிறந்த ராஜமாதா சிரிகிட் உடைய பிறந்தநாள் அந்நாட்டில் அன்னையர் தினமாக கொண்டாடப்பட்டு பொது விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
தனது 18 வயதில் மன்னர் பூமிபால்-ஐ அவர் சிரிகிட் திருமணம் செய்து கொண்டார். கடந்த 2016 இல் பூமிபால் காலமான பின் இவர்களது மகன் வஜிராலங்கார்ன் மன்னராக முடிசூடினார்.

2012 முதல் சிரிகிட் பொதுவெளியில் அதிகம் தோன்றாமல் இருந்து வந்தார். தாய்லாந்தில் கிராமப்புற மேம்பாடு பெண்களின் கைவினை தொழில்களுக்கு உதவுதல், சுற்றுசூழல் குறித்த விழிப்புணர்வு மற்றும் பல்வேறுநலத்திட்ட பணிகளை சிரிகிட் மேற்கொண்டு வந்தார்.
- கம்போடியா தலைவருடன் பேசிய போன் உரையாடல் கசிந்து பிரச்சினை ஏற்பட்டது.
- ராஜினாமா செய்ய வேண்டும் என பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார்.
தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே எல்லைப் பிரச்சினை நீடித்து வருகின்றது. தாய்லாந்து பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா கம்போடியாவின் முன்னாள் பிரதமர் ஹன் சென்னுடன் தொலைபேசியில் உரையாடியிருக்கிறார். அப்போது தாய்லாந்து ராணுவ தளபதியை விமர்சிக்கும் வகையில் பிரதமர் ஷினவத்ரா பேசியுள்ளார்.
இது தொடர்பான உரையாடல்கள் கசிந்து அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும் பிரதமர் ஷினவத்ராவுக்கு எதிராக அதிருப்தி எழுந்தது. மே 28ஆம் தேதி கம்போடியாவுடனான எல்லைப் பிரச்சினையை கையாண்ட விதம், தொலைபேசி உரையாடல் எதிரொலியாக எதிர்ப்பலை கிளப்பியது.
இதன் காரணமாக பிரதமர் பேதொங்தார்ன் ஷினவத்ரா ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது. இதனை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தலைநகர் பாங்காங்கில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து அரசியலமைப்பு நீதிமன்றம் அவரை சஸ்பெண்ட் செய்தது. இதனைத்தொடர்ந்து தாய்லாந்து மன்னர் புதிய அமைச்சரவை அமைக்க ஒப்புதல் வழங்கினார்.
இந்த நிலையில் ஷினவத்ரா பிரதமர் பதவியில் நீக்கிய அரசியலமைப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவரது குடும்பத்தை சேர்ந்த 6 பேர் ராணுவம் அல்லது நீதித்துறையால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர் மிகப்பெரிய கோடீஸ்வரர் ஆவார்.
ஷினவத்ரா பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால், தாய்லாந்தில் தேர்தல் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மே 28ம் தேதி இருநாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. இதில் கம்போடியா ராணுவ வீரர்கள் தாக்கப்பட்டனர். இது ஜூலை 24ஆம் தேதி தாய்லாந்து- கம்போடியா ராணுவ வீரர்கள் எல்லையில பயங்கரமாக மோதலுக்கு வழி வகுத்தது. இந்த சண்டை ஐந்து நாட்கள் நீடித்தன. எல்லைப் பகுதியில் இருந்து ஒரு லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டன. பின்னர் இருநாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டனர்.
தனது மீதான குற்றச்சாட்டு குறித்து ஷினவத்ரா "பிரச்சினைகளைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும், ஆயுத மோதலைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும், வீரர்கள் எந்த இழப்பையும் சந்திக்கக்கூடாது என்பதற்காக என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி மட்டுமே நான் யோசித்தேன்.
நான் மற்ற தலைவரிடம் சொல்லுவது, எதிர்மறையான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்றால், அதை ஏற்றுக்கொள்ள முடியாதது" எனத் தெரிவித்திருந்தார்.
- வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வெளியாகி பல லட்சம் பேரின் பார்வைகளை ஈர்த்தது.
- கடந்த ஆண்டு ஒரு பள்ளி மாணவன் தண்ணீர் குடித்த நிலையில் அசையாமல் நின்ற காட்சி வீடியோவில் பரவியது.
தேசிய கீதம் இசைக்கப்படும்போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்துவது பண்பாடு.
தாய்லாந்தில் காலை 8 மணிக்கும், மாலை 6 மணிக்கும் தேசிய கீதம் இசைக்கப்படும். அதன்படி ஒரு பள்ளியில் காலை 8 மணிக்கு தேசியகீதம் இசைக்கப்பட்டபோது பள்ளியின் கீழ்தளத்தில் நடந்து கொண்டிருந்த மாணவன், நடந்தபடியே சிலைபோல அசையாமல் நின்றான்.
படத்தில் பார்க்கும்போது அது ஓவியம்போல தெரிந்தாலும், வீடியோவாக காணும்போதுதான் மேல் தளத்தில் மற்ற மாணவர்கள் நிற்பதும், கீழ் தளத்தில் அந்த மாணவர் தனியே நடக்கும் சிலையாக தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்துவதும் வினோத காட்சியாக பதிவாகி உள்ளதை உணர முடியும். இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வெளியாகி பல லட்சம் பேரின் பார்வைகளை ஈர்த்தது.
கடந்த ஆண்டு ஒரு பள்ளி மாணவன் தண்ணீர் குடித்த நிலையில் அசையாமல் நின்ற காட்சி வீடியோவில் பரவியது குறிப்பிடத்தக்கது.
- பிரபலமான ஓர் டோர் கோர் (Or Tor Kor) சந்தையில் நடந்தது.
- துப்பாக்கி வைத்திருந்த ஒருவர் வாகன நிறுத்துமிடத்தின் வழியாக ஓடும் காட்சியும் வெளியாகி உள்ளது.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள பிரபலமான ஓர் டோர் கோர் (Or Tor Kor) சந்தையில் திங்கள்கிழமை நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டனர்.
காவல்துறையின் கூற்றுப்படி, அடையாளம் தெரியாத ஒருவர் சந்தையில் நான்கு பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் ஒரு பெண் உட்பட 5 பேரைச் சுட்டுக் கொன்றார். பின்னர் அவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சந்தையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில், துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதும் மக்கள் தப்பியோடும் காட்சிகள் பதிவாகியுள்ளன. மேலும், துப்பாக்கி வைத்திருந்த ஒருவர் வாகன நிறுத்துமிடத்தின் வழியாக ஓடும் காட்சியும் வெளியாகி உள்ளது.
இந்த சம்பவத்தின் நோக்கம் குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது. இது தனிப்பட்ட தகராறு காரணமாக நடந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையேயான தற்போதைய எல்லை மோதல்களுடன் இதற்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- தாய்லாந்து-கம்போடியா இடையே போர் நிறுத்தம் தொடர்பாக மலேசியாவில் இன்று முக்கிய பேச்சுவார்த்தை.
- தாக்குதல்களை உடனடியாக நிறுத்திக்கொள்ள தாய்லாந்து- கம்போடியா நாடுகள் சம்மதம்.
தாய்லாந்து- கம்போடியா இடையே எல்லைப்பிரச்சினை காரணமாக திடீர் மோதல் வெடித்தது. இரு நாட்டு படைகளும் மாறி மாறி தாக்கி கொண்டதில் 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிர் இழந்தனர்.
எல்லைப்பகுதியில் வசித்து வந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வெளியேறினார்கள். இந்த போரை முடிவுக்கு கொண்டு வர மலேசியா மத்தியஸ்தம் செய்து வந்தது.
மேலும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பும் இதில் தலையிட்டு இரு நாட்டு தலைவர்களுடன் தொலை பேசியில்நீண்ட நேரம் பேசினார்.
இந்த நிலையில் தாய்லாந்து-கம்போடியா இடையே போர் நிறுத்தம் தொடர்பாக மலேசியாவில் இன்று முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சவார்த்தையில் தாய்லாந்தின் தற்காலிக பிரதமர் பும்தம் வெச்சயா அந்நாட்டு குழுவுக்கு தலைமை தாங்கினார்.
கம்போடியா பிரதமர் ஹூன் மானெட் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றார்.
இந்த பேச்சுவார்த்தையில் போர் நிறுத்தம் தொடர்பாக சுமூக உடன்பாடு ஏற்பட்டு இரு நாடுகள் இடையே அமைதி திரும்பலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி, எல்லை தொடர்பாக தாய்லாந்து- கம்போடியா இடையில் நீடித்த போர் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
தாக்குதல்களை உடனடியாக நிறுத்திக்கொள்ள தாய்லாந்து- கம்போடியா நாடுகள் சம்மதம் தெரிவித்துள்ளன.
மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் முன்னிலையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஒரு தொண்டு நிறுவனம் தவீசக்கை மருத்துவமனையில் சேர்க்க முயன்றது.
- போலீசார் அவரது அறையில் 100 பீர் பாட்டில்களைக் கண்டுபிடித்தனர்.
மனைவி விவாகரத்து செய்ததால் மிகவும் வருத்தமடைந்த ஒருவர், ஒரு மாதமாக எதையும் சாப்பிடாமல், பீர் மட்டுமே குடித்து உயிரிழந்தார். இந்த துயர சம்பவம் தாய்லாந்தில் நடந்தது.
44 வயதான தவீசக் தனது மனைவியால் விவாகரத்து செய்யப்பட்டார். அவர்களுக்கு பதினாறு வயது மகன் இருந்தான். மகனை தவீசக்கிடம் விட்டுவிட்டு அப்பெண் வெளியேறினார்.
மனைவி தன்னை விட்டுச் சென்றதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான தவீசக், சாப்பிடுவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டார். நாள் முழுவதும் பீர் குடித்துக்கொண்டிருந்தார்.
இதனால் அவரது உறுப்புகள் செயலிழந்து, அவரது உடல்நிலை மோசமடைந்தது. ஒரு தொண்டு நிறுவனம் தவீசக்கை மருத்துவமனையில் சேர்க்க முயன்றது.
இருப்பினும், தொண்டு நிறுவனங்கள் அவரது வீட்டை அடைவதற்குள் தவீசக் இறந்துவிட்டார். போலீசார் அவரது அறையில் 100 பீர் பாட்டில்களைக் கண்டுபிடித்தனர்.
அதிகப்படியான மது அருந்தியதால் அவர் இறந்ததாக போலீசார் முதற்கட்ட தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
- இரு நாடுகளுக்கும் இடையில் பல தசாப்தங்களாக மோதல் இருந்து வருகிறது.
- கம்போடியா இன்று ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்தியது.
தாய்லாந்து- கம்போடியா இடையே எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று கம்போடியா ராக்கெட்டுகள், பீரங்கி குண்டுகள் மூலம் தாய்லாந்து மீது பயங்கர தாக்குதல் நடத்தியது. இதனால் கோபம் அடைந்த தாய்லாந்து F-16 போர் விமானங்கள் மூலம் கம்போடியா ராணுவத்தை குறிவைத்து குண்டுமழை பொழிந்தது.
தாய்லாந்து, கம்போடியா நாட்டின் எல்லைகள் லாவோஸ் நாட்டின் எல்லையுடன் பிணைந்துள்ளது. இந்த பகுதிக்கு எமரால்டு முக்கோணம் என்று பெயர். இந்த இடத்தில் ஏராளமான பழமையான கோவில்கள் உள்ளது. இந்த எல்லை தொடர்பாக பல தசாப்தங்களாக மோதல் இருந்து வருகிறது. 15 வருடத்திற்கு முன்னதாக பயங்கரமான ராணுவ மோதல் ஏற்பட்டது, கடந்த மே மாதம் துப்பாக்கிச்சூட்டில் கம்போடியா ராணுவ வீரர் உயிரிழந்தார்.
இன்று கம்போடியா ராக்கெட்டுகள், பீரங்கி குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதனால் தாய்லாந்து F-16 போர் விமானம் மூலம் குண்டு மழை பொழிந்தது.
உபோன் ரட்சதானி மாகாணத்தில் 6 போர் விமானங்கள் குவிக்கப்பட்டு கம்போடியா ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குல் நடத்தியது.
- பாங்காக்கில் துறவிகள் மடத்தின் தலைவர் திடீரென துறவறத்தை விட்டு வெளியேறினார்.
- ஒன்பது துறவிகளிடம் சுமார் 385 மில்லியன் பாட் (ரூ.100 கோடி) அவர் பெற்றுள்ளார்.
தாய்லாந்தில், புத்த மத துறவிகளுடன் பாலியல் உறவு வைத்து, அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பயன்படுத்தி மிரட்டி பணம் பறித்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம், பாங்காக்கில் துறவிகள் மடத்தின் தலைவர் திடீரென துறவறத்தை விட்டு வெளியேறியபோது காவல்துறை சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தியது.
`மிஸ் கோல்ஃப்' (Ms Golf) என்று அடையாளம் காணப்பட்ட அந்த பெண், கடந்த ஆண்டு அந்த துறவியுடன் உறவு வைத்து, பின்னர் அவரது குழந்தையை சுமப்பத்தாக கூறி 70 லட்சம் பாட்டுக்கு மேல் குழந்தை ஆதரவு தொகை கோரியது தெரியவந்தது. இதேபோல் ஒன்பது துறவிகளிடம் சுமார் 385 மில்லியன் பாட் (ரூ.100 கோடி) அவர் பெற்றுள்ளார்.
Ms Golf வீட்டை சோதனை செய்தபோது, 80,000க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கைப்பற்றப்பட்டன. இவை அனைத்து துறவிகளை மிரட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டவை என காவல்துறை தெரிவித்துள்ளது.
- கம்போடியா தலைவருடன் பேசிய போன் உரையாடல் கசிந்து பிரச்சினை ஏற்பட்டது.
- ராஜினாமா செய்ய வேண்டும் என பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் நீதிமன்றம் உத்தரவு.
தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே எல்லைப் பிரச்சினை நீடித்து வருகின்றது. பிரதமர் பேதொங்தார்ன் ஷினவத்ரா கம்போடியாவின் முன்னாள் பிரதமர் ஹன் சென்னுடன் தொலைபேசியில் உரையாடியிருக்கிறார். அப்போது தாய்லாந்து ராணுவ தளபதியை விமர்சிக்கும் வகையில் பிரதமர் ஷினவத்ரா பேசியுள்ளார்.
இது தொடர்பான உரையாடல்கள் கசிந்து அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. மேலும் பிரதமர் ஷினவத்ராவுக்கு எதிராக அதிருப்தி எழுந்துள்ளது. மே 28ஆம் தேதி கம்போடியாவுடனான எல்லைப் பிரச்சினையை கையாண்ட விதம், தற்போதைய தொலைபேசி உரையாடல் எதிரொலியாக பிரதமருக்கு எதிர்ப்பலை எழுந்துள்ளது.
இதன் காரணமாக பிரதமர் பேதொங்தார்ன் ஷினவத்ரா ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது. இதனை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தலைநகர் பாங்காங்கில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.
இந்த நிலையில் அரசியலமைப்பு நீதிமன்றம் அவரை சஸ்பெண்ட் செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து தாய்லாந்து மன்னர் புதிய அமைச்சரவை அமைக்க ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக ஷினவத்ரா கூறுகையில் "பிரச்சினைகளைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும், ஆயுத மோதலைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும், வீரர்கள் எந்த இழப்பையும் சந்திக்கக்கூடாது என்பதற்காக என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி மட்டுமே நான் யோசித்தேன்.
நான் மற்ற தலைவரிடம் சொல்லுவது, எதிர்மறையான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்றால், அதை ஏற்றுக்கொள்ள முடியாதது" எனத் தெரிவித்துள்ளார்.
- தாய்லாந்தின் ஃபூகெட் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.
- விமானத்திலிருந்து பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து ஏர் டெல்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இன்று காலை 9.30 மணிக்கு தாய்லாந்தின் ஃபூகெட் விமான நிலையத்திலிருந்து டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு ஏர் இந்தியா ஏஏ 379 விமானம் 156 பயணிகளுடன் புறப்பட்டது.
இந்நிலையில் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக அவசரமாக தரையிறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக ஃபூகெட் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். விமானத்திலிருந்து பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பூனையை போலீசார் கண்டுபிடித்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.
- அந்த பூனை போலீசாரை தனது நகத்தால் கீறியது.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் பூனை ஒன்று காணாமல் போனதாக அதன் உரிமையாளர்கள் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் நுப் டாங் என்ற அந்த பூனையை போலீசார் கண்டுபிடித்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். பின்னர் அந்த பூனையுடன் போலீசார் கொஞ்சி விளையாடினர். அப்போது அந்த பூனை போலீசாரை தனது நகத்தால் கீறியது. இதனையடுத்து நடைபெற்ற சம்பவங்கள் தான் வினோதமானது.
அதாவது மீட்பு பணியில் ஈடுபட்ட தங்களை தாக்கியதாக கூறி அந்த பூனை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே பூனையின் உரிமையாளர்கள் போலீஸ் நிலையம் சென்றனர். அவர்களிடம் பூனையை ஒப்படைக்கும் முன்னர் போலியாக ஒரு எப்.ஐ.ஆர். பதிந்து பூனையை கைது செய்வதுபோல் நடித்தனர்.
குற்றவாளியின் இடத்தில் பூனையும், அதற்கு ஜாமின் பெறுவது போல் உரிமையாளர்களும் நிறுத்தி வைக்கப்பட்டனர். இதனை புகைப்படம் எடுத்த போலீசார் சமூகவலைதளத்தில் பதிவிட அது வைரலாகி லட்சக்கணக்கானோரின் விருப்பங்களை பெற்றுள்ளது.
- அறையின் வெளிப்புறத்தில் உள்ள ஒரு பள்ளத்தில் இருந்து 2, 3 பாம்புகள் வெளியே வந்ததையும் கண்டு பீதி அடைந்தார்.
- பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறன்றனர்.
விடுமுறையை உற்சாமாக கழிக்க ஹோட்டலுக்கு சென்ற நபருக்கு ஏற்பட்ட அனுபவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தாய்லாந்தில் ஓட்டல் அறையில் தங்கி இருக்கும் நபர் காலை விடிந்ததும் சூரிய வெளிச்சத்தை காண அறையின் ஜன்னலை திறந்து பார்த்த போது அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் செல்போனில் அதனை வீடியோவாக பதிவு செய்தார். ஒரு பெரிய பாம்பு ஒன்று அங்கு ஊர்ந்து செல்வதை கண்டார். மேலும் அறையின் வெளிப்புறத்தில் உள்ள ஒரு பள்ளத்தில் இருந்து 2, 3 பாம்புகள் வெளியே வந்ததையும் கண்டு பீதி அடைந்தார்.
இதுதொடர்பான வீடியோவை அவர், 'தாய்லாந்தை விட்டு வெளியேற வேண்டிய நேரம் இது' என்ற தலைப்பில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, என் கைகள் நடுங்குகின்றன. நான் இப்போதுதான் விழித்தெழுந்து ஹோட்டல் திரைச்சீலைகளைத் திறந்தேன், இதோ பாருங்க, கதவுக்கு வெளியே ஒரு பெரிய பாம்பு இருக்கு, அந்தப் புதருக்குள் இன்னொன்று... அங்கே இன்னொன்று இருக்கு... இனி ஒருபோதும் வெளியே செல்ல மாட்டேன் என்று அவர் கூறினார்.
இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறன்றனர். முதலில் அந்த பாம்பு ராஜநாக இனத்தை சேர்ந்தது என்பதை உறுதி பட கூறிய பயனர்கள், அறை கழிப்பறை மற்றும் படுக்கையறையில் வேறு ஏதாவது இருக்கிறதா? என்று பாருங்கள் என்றும், அமைதியாக இருங்கள், ராஜ நாகப்பாம்புகளைத் தொந்தரவு செய்யாமல் இருந்தால் அவை ஒன்றும் செய்யாது என்றும் அறிவுறுத்தினர்.






