என் மலர்
நீங்கள் தேடியது "பள்ளி"
- சிட்-அப்கள் செய்து முடித்த சிறிது நேரத்திலேயே கீழ் முதுகில் கடுமையான வலி ஏற்பட்டது.
- குழந்தையால் எழுந்திருக்க முடியவில்லை என்றும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள வசாய் தாலுகாவில் பள்ளிக்கு தாமதமாக வந்ததற்காக தண்டனையாக 100 முறை சிட்-அப் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதால் 13 வயது சிறுமி உயிரிழந்தார்.
கடந்த வாரம், ஸ்ரீ ஹனுமந்த் வித்யா மந்திர் உயர்நிலைப் பள்ளியின் மாணவி அன்ஷிகா கவுட்-க்கு, பள்ளிப் பையுடன் 100 முறை சிட்-அப்கள் செய்து முடித்த சிறிது நேரத்திலேயே கீழ் முதுகில் கடுமையான வலி ஏற்பட்டது.
மாலை வீடு திரும்பியபோது சிறுமியின் உடல்நிலை மோசமடைந்த நிலையில் பெற்றோர்கள் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
நிலைமை மேலும் மோசமடைந்து சிறுமி மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஒரு வாரமாக சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் பலனளிக்காமல் நேற்று முன் தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.
தண்டனைக்குப் பிறகு, தங்கள் மகளின் கழுத்து மற்றும் முதுகில் கடுமையான வலி ஏற்பட்டதாகவும், குழந்தையால் எழுந்திருக்க முடியவில்லை என்றும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக விபத்து மரணம் என வழக்குப் பதிவு செய்த காவல்துறை, பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின் மேற்கொண்டு விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
அன்ஷிகாவின் மரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக வட்டார கல்வி அதிகாரி பாண்டுரங் கலங்கே தெரிவித்தார்.
- பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டிநடைபெற்றது.
- இப்போட்டியை காண மாணவர்களும் பெற்றோரும் குவிந்திருந்தனர்.
அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள பள்ளியில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மிசிசிபி மாகாணத்தில் உள்ளூர் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டிநடைபெற்றது. இப்போட்டியை காண மாணவர்களும் பெற்றோரும் குவிந்திருந்தனர். கால்பந்து போட்டியின் முடிவில் மர்ம நபர் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில் 12 பேர் காயமடைந்தனர். அதில் 4 பேரின் நிலைமை சுவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என போலீசார் அச்சம். மைதானத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
- பொதுவாக விஜயதசமி நாளில் தனியார் பள்ளிகளில் மட்டுமே தங்கள் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் அதிகம் வருவார்கள்.
- ஆனால் சமீப காலமாக அரசு செயல்படுத்தும் திட்டங்களால் அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் அம்மைநாயக்கனூர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 5-ம் ஆண்டாக மாணவர் சேர்க்கை 100 சதவீதம் அடைந்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் வருகிற அக்டோபர் 2-ம் தேதி விஜயதசமி நாளில் மாணவர் சேர்க்கைக்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் செய்து வருகின்றனர்.
கல்வியில் சிறந்த தமிழ்நாடு என அனைத்து தரப்பு மக்களும் போற்றி புகழும் வேளையில் அரசு கொண்டு வந்துள்ள பல்வேறு திட்டங்களால் மாணவர்கள் எவ்வாறு பயனடைந்து வருகின்றனர் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக அம்மையநாயக்கனூர் அரசு தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகள் கூமாபட்டி ரீல்ஸ் ஸ்டைலில் பெற்றோர்களுக்கு வித்தியாசமான அழைப்பு விடுத்துள்ளனர்.
அதில் ஏ.....ங்க..... இங்க பாருங்க..... அரசு பள்ளிங்க நம் தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்களால் நாங்கள் பயனடைந்து வருகிறோம். தினந்தோறும் தரமான காலை உணவு வழங்கப்படுகிறது பாருங்க....
எங்க பள்ளியில் எவ்வளவு பெரிய டி.வி. இருக்கு பாருங்க.....
எங்க பள்ளியில் கழிப்பறை வசதி எப்படி இருக்கு பாருங்க.....
எங்க பள்ளியில் வகுப்பறை எல்லாம் வேற லெவலில் இருக்கு பாருங்க....
என பள்ளியில் செயல்படுத்தப்பட்டுள்ள அரசின் திட்டங்களை மாணவ-மாணவிகள் தங்கள் மழலை கலந்த மொழியில் நகைச்சுவை உணர்வுடன் கைகளை காட்டி வெளிப்படுத்தும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பொதுவாக விஜயதசமி நாளில் தனியார் பள்ளிகளில் மட்டுமே தங்கள் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் அதிகம் வருவார்கள். ஆனால் சமீப காலமாக அரசு செயல்படுத்தும் திட்டங்களால் அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கிராமபுரத்தில் உள்ள பெற்றோர்களை ஈர்க்கும் வகையில் தலைமை ஆசிரியர் மேற்கொண்டுள்ள இந்த விழிப்புணர்வு பிரசாரம் அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
- முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்கள் பள்ளி, கல்லூரி வளாகத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
- வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
புதுடெல்லி:
டெல்லியில் உள்ள 2 பள்ளிகள் மற்றும் துவாராகாவில் உள்ள ஒரு கல்லூரிக்கு இன்று காலையில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் ஒன்று வந்தது.
இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்கள் பள்ளி, கல்லூரி வளாகத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. போலீசார் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு தடயவியல் நிபுணர்களுடன் மிரட்டல் வந்த பள்ளி கல்லூரிக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். மின்னஞ்சல் அனுப்பியவர் யார், எங்கிருந்து மின்னஞ்சல் அனுப்புப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதமும் இதேபோல் டெல்லியில் உள்ள பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- விஷ நீரை குடித்த 11 பள்ளி மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
- முஸ்லிம் தலைமை ஆசிரியரை வேறு பள்ளிக்கு மாற்ற இந்த கொடும் செயலை இந்துத்துவ கும்பல் செய்துள்ளது.
கர்நாடகா மாநில பெலகாவி மாவட்டம் ஹுல்லிகட்டி கிராமத்தில் செயல்பட்டு வந்த கன்னட அரசு பள்ளியில் உள்ள தண்ணீர் தொட்டியில் மர்ம நபர்கள் பூச்சிக்கொல்லி மருந்து கலந்துள்ளனர். இந்த விஷ நீரை குடித்த 11 பள்ளி மாணவர்கள் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நல்வாய்ப்பாக இந்த சம்பவத்தில் யாரும் உயிரிழக்கவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் 3 பேரை கைது செய்தனர். அதில், இந்து வலதுசாரி அமைப்பான ஸ்ரீராம் சேனா அமைப்பின் அப்பகுதி தலைவரும் அடக்கம்.
கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், "சம்பந்தப்பட்ட பள்ளியில் முஸ்லிம் தலைமை ஆசிரியர் பணியாற்றி வருவதாகவும் அவர் மீது பழி சுமத்தி வேறு பள்ளிக்கு மாற்றுவதற்காக தான் பள்ளி தண்ணீர் தொட்டியில் விஷம் கலந்ததாக" தெரிவித்தனர்.
முஸ்லிம் தலைமை ஆசிரியர் மீதான மத வெறுப்பால் பள்ளி தண்ணீர் தொட்டியில் இந்து வலதுசாரி கும்பல் விஷம் கலந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு கண்டித்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "மத அடிப்படைவாதமும் வகுப்புவாத வெறுப்பும் கொடூரமான செயல்களுக்கு வழிவகுக்கும், மேலும் அப்பாவி குழந்தைகள் படுகொலை செய்யப்படுவதற்கு வழிவகுத்திருக்கக்கூடிய இந்த சம்பவம் அதற்கு ஒரு சான்றாகும்" என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்
- பயிற்சிக்கு புறப்பட்ட போர் விமானம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
- பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள கல்லூரி மற்றும் பள்ளி வளாகத்தில் நேற்று வங்கதேச விமானப்படை பயிற்சி விமானம் விழுந்து விபத்துக்குள்ளத்தில் 19 பேர் உயிரிழந்தனர்.
வங்காளதேசத்தில் உள்ள குர்மிடோலா என்ற இடத்தில் உள்ள விமான படை தளத்தில் இருந்து பயிற்சிக்கு புறப்பட்ட போர் விமானம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தலைநகர் டாக்காவின் உத்தரா பகுதியில் உள்ள பள்ளி கட்டிடம் மீது விழுந்து நொறுங்கியது.
இதில் மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட 20 பேர் உயிரிழந்தனர். 170-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில் சிகிக்சை பலனின்றி 7 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27-ஆக உயர்ந்தது. விபத்திற்கான காரணத்தை கண்டறிய வங்காளதேச விமானப்படை, உயர்மட்ட விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக இன்று துக்க தினமாக அரசு அறிவித்துள்ளது.
- ஜூம்பா நடனப் பயிற்சிக்கு மத அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன
- மாணவர்களின் உடல் மற்றும் மன நலனை கருத்தில்கொண்டு இந்த புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு ஜூம்பா நடனப் பயிற்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களின் உடல் மற்றும் மன நலனை கருத்தில்கொண்டு அம்மாநில அரசு இந்த புதிய முயற்சியை எடுத்துள்ளது.
அரசின் இந்த முயற்சிக்கு இதற்கு மத அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில், மாணவர்கள் பள்ளி சீருடையிலேயே இந்த நடனப் பயிற்சியை மேற்கொள்வதாக கல்வி அமைச்சர் சிவன்குட்டி விளக்கம் அளித்துள்ளார்.
- ஆஸ்திரியாவின் கிராஸ் நகரில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது.
- இந்தச் சம்பவத்தில் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.
வியன்னா:
ஆஸ்திரியாவின் கிராஸ் நகரில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் இன்று துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. இந்தச் சம்பவத்தில் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் அதன்பின் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.
இதுதொடர்பாக, அந்நாட்டு உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், தகவலறிந்து காலை 10 மணிக்கு (உள்ளூர் நேரம்) சிறப்புப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர். பள்ளியிலிருந்து மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக தெரிவித்தனர். பலியானோர் விவரங்கள் பற்றிய தகவல் வெளியாகவில்லை.
300,000 க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் கிராஸ் நகரம், ஆஸ்திரியாவின் இரண்டாவது பெரிய நகரம் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதல் 2 வாரங்களுக்கு மாணவர்கள் புத்தகங்கள் கொண்டு செல்ல தேவையில்லை.
- முதல் 2 வாரங்கள் சமூக பிரச்சனைகள் தொடர்பான விழிப்புணர்வு வகுப்புகள் நடைபெறும்
கேரளாவில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும்போது, முதல் 2 வாரங்களுக்கு மாணவர்கள் புத்தகங்கள் கொண்டு செல்ல தேவையில்லை என்று கேரள அரசு அறிவித்துள்ளது.
பள்ளிகள் திறந்து முதல் 2 வாரங்கள் சமூக பிரச்சனைகள் தொடர்பான விழிப்புணர்வு வகுப்புகள் நடைபெறும் என கேரள அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பேசிய கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி, போதைப்பொருள் துஷ்பிரயோகம், பொது சொத்துக்களை அழித்தல் மற்றும் உணர்ச்சி கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பல தலைப்புகளில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் பள்ளிகளில் நடைபெறும் என்று தெரிவித்தார்.
- பிரின்சிபல் அவரின் தொலைபேசியை பிடுங்கி தரையில் வீசி உடைத்தார்.
- சுற்றியிருந்த மற்றவர்கள் தங்கள் மொபைல் போன்களில் சண்டையை படம் பிடித்துக் கொண்டு நின்றனர்.
மத்தியப் பிரதேசத்தில் பள்ளி பிரின்சிபலும் நூலகரும் ஒருவருக்கொருவர் தலைமுடியைப் பிடித்துக் கொண்டு சண்டையிடும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
மத்தியப் பிரதேசத்தின் கார்கோன் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பள்ளி முதல்வருக்கும் அதே பள்ளியில் பணிபுரியும் நூலகருக்கும் இடையே ஏதோ ஒரு பிரச்சினை தொடர்பாக கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்தச் சூழலில், நூலகர் தனது மொபைல் போனில் வாக்குவாதத்தைப் படம்பிடிக்கத் தொடங்கினார். இதைக் கவனித்த முதல்வர் கோபமடைந்தார். பிரின்சிபல் அவரின் தொலைபேசியை பிடுங்கி தரையில் வீசி உடைத்தார். இது நூலகரை கோபப்படுத்தியது. அவரும் தலைமை ஆசிரியரைத் தாக்கினார். இருவரும் ஒருவரையொருவர் தலைமுடியைப் பிடித்துக் கொண்டு கடுமையாகத் தாக்கிக் கொண்டனர்.
ஒன்று சிலர் அவர்களைத் தடுக்க முயன்ற போதிலும், சுற்றியிருந்த மற்றவர்கள் தங்கள் மொபைல் போன்களில் சண்டையை படம் பிடித்துக் கொண்டு நின்றனர். சிறிது நேரத்திற்குப் பிறகு, பள்ளியில் பணிபுரியும் மற்றொரு பெண் தலையிட்டு அவர்கள் இருவரையும் பிரித்தார்.
இந்த வீடியோ வைரலான நிலையில் அவர்கள் இருவரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- வருத்தத்துடன் வீடு திரும்பிய மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
- நான் வயலில் வேலை செய்து கொண்டிருந்தேன்.
உத்தரப் பிரதேசத்தில் கட்டணம் செலுத்தாததால் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட விரக்தியில் 9 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள கமலா ஷரன் யாதவ் இன்டர் பள்ளியில் பயின்று வந்த 9 ஆம் வகுப்பு மாணவி ரியா பிரஜாபதி (17 வயது) நேற்று தேர்வு எழுத சென்றுள்ளார்.
பள்ளிக் கட்டணத்தில் ரூ.800 நிலுவைத் தொகையை செலுத்தாததால் அவரை தேர்வு எழுத அனுமதிக்காமல் பள்ளி நிர்வாகத்தினர், கட்டணம் செலுத்தாததற்காக அவரை அவமானப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வருத்தத்துடன் வீடு திரும்பிய மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தற்கொலை செய்த சிறுமியின் தாய் பேசுகையில், "பள்ளி மேலாளர் சந்தோஷ் குமார் யாதவ், அதிகாரி தீபக் சரோஜ் மற்றும் முதல்வர் ராஜ்குமார் யாதவ் மற்றும் பலர் அவளை எல்லோர் முன்னிலையிலும் அவமானப்படுத்தியுள்ளனர். அவளை தேர்வு எழுத விடவில்லை.
அவர்களின் நடத்தையால் வருத்தமடைந்த என் மகள் வீட்டிற்கு திரும்பி வந்து தன் அறைக்குச் சென்றாள். நான் வயலில் வேலை செய்து கொண்டிருந்தேன்.
நான் வீடு திரும்பியபோது, என் மகள் தூக்கில் தொங்குவதை கண்டேன்" என்று தெரிந்தார். பள்ளி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக பள்ளி நிர்வாகத்தினர் மீது தற்கொலைக்குத் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050]
- திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பனியன் நிறுவனங்கள் உள்ளன.
- தீபாவளி பண்டிகை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு கடந்த வாரம் சென்றனர்.
திருப்பூர் :
தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு தொழிலாளர்கள் சென்றதால், அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகள் வருகை குறைவாக இருந்தது.
திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பனியன் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் லட்சக்கணக்கான வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்த தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு கடந்த வாரம் சென்றனர். இதன் காரணமாக திருப்பூர் மாநகரம் தொழிலாளர்கள் இன்றி காணப்படுகிறது. மேலும், வெளி மாவட்டங்களை சேர்ந்த பலர் திருப்பூரில் ஹோட்டல்கள் நடத்திய வருகிறார்கள். தற்போது அவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதால், திருப்பூர் பகுதிகளில் உள்ள பெரும்பாலான ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன.
இதுபோல் வெளி மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் பலர் திருப்பூர் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்த தொழிலாளர்கள் திருப்பூருக்கு திரும்பாத நிலையில் அவர்கள் குழந்தைகள் பல பள்ளிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக திருப்பூர் மாநகரில் உள்ள பல பள்ளிகளில் மாணவ மாணவிகளின் வருகை குறைந்தது. பள்ளி வகுப்பறைகள் பலவும், மாணவ- மாணவிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.






