என் மலர்
நீங்கள் தேடியது "கால்பந்து போட்டி"
- பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டிநடைபெற்றது.
- இப்போட்டியை காண மாணவர்களும் பெற்றோரும் குவிந்திருந்தனர்.
அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள பள்ளியில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மிசிசிபி மாகாணத்தில் உள்ளூர் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டிநடைபெற்றது. இப்போட்டியை காண மாணவர்களும் பெற்றோரும் குவிந்திருந்தனர். கால்பந்து போட்டியின் முடிவில் மர்ம நபர் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில் 12 பேர் காயமடைந்தனர். அதில் 4 பேரின் நிலைமை சுவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என போலீசார் அச்சம். மைதானத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
- இறுதி போட்டியில் பாரிஸ் செயிண்ட் (PSG) - செல்சி (Chelsea FC) அணிகள் மோதின.
- பாரிஸ் செயிண்ட் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது செல்சி அணி
FIFA கிளப் அணிகளுக்கான 21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. 32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.
நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் பாரிஸ் செயிண்ட் (PSG) - செல்சி (Chelsea FC) அணிகள் மோதின.
இறுதிப் போட்டியில் பாரிஸ் செயிண்ட் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி செல்சி அணி பிபா க்ளப் உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது.
- நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் அணி ரியல் மாட்ரிட்டை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
- வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் பாரிஸ் செயிண்ட் மற்றும் செல்சி அணிகள் மோதுகின்றன.
கிளப் அணிகளுக்கான 21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. 32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது.
நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் அணி ரியல் மாட்ரிட்டை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இதனை தொடர்ந்து வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் பாரிஸ் செயிண்ட் மற்றும் செல்சி அணிகள் மோதுகின்றன.
- பிரேசில் லெஜண்ட்ஸ் அணியும் இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணியும் மோதிய கால்பந்து போட்டி சென்னையில் நேற்று நடைபெற்றதைக் காண மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
- பிள்ளைகளே, நன்கு படியுங்கள், தைரியமாக விளையாடுங்கள், நியாயமான முறையில் வெல்லுங்கள்.
சென்னை:
சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடந்த காட்சி கால்பந்து போட்டியில் பிரேசில் ஜாம்பவான்கள்-ஆல் ஸ்டார் இந்தியா அணிகள் மோதின. இதில் பிரேசிலின் ஜாம்பவான்களான ரொனால்டினோ, ரிவால்டோ, எட்மில்சன், காபு உள்ளிட்டோர் பங்கேற்று விளையாடினார்கள். இந்த போட்டி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
பிரேசில் லெஜண்ட்ஸ் அணியும் இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணியும் மோதிய கால்பந்து போட்டி சென்னையில் நேற்று நடைபெற்றதைக் காண மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ்நாடு பெருமிதத்தோடு நேற்று இரவு ஆர்ப்பரித்துள்ளது. ஒரு விளையாட்டுப் போட்டி என்பதைத் தாண்டி, நினைவில் கொள்ளத்தக்க, அடுத்து பல தலைமுறையினரிடம் கனவுகளை ஊக்குவிக்கும் தருணமாக இப்போட்டி அமைந்திருந்தது. பிள்ளைகளே, நன்கு படியுங்கள், தைரியமாக விளையாடுங்கள், நியாயமான முறையில் வெல்லுங்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தமிழக பள்ளிக்கல்வி துறை சார்பில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி நடந்தது.
- மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வசந்தி தொடங்கி வைத்தார்.
ராமநாதபுரம்
தமிழக பள்ளிக்கல்வி துறை சார்பில் ராமநாதபுரம் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி ராமநாதபுரத்தில் நடந்தது. மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வசந்தி தொடங்கி வைத்தார். 14, 17, 19 வயது ஆண்கள் பிரிவில் பெரியபட்டணம் அரசு மேல்நிலைப் பள்ளி, ராமநாதபுரம் நேஷனல் அகாடமி மெட்ரிக் பள்ளி, பனைக்குளம் பகுர்தீன் அரசு மேல்நிலைப்பள்ளி அணிகள், 14, 17 வயது பெண்கள் பிரிவில் வேளானூர் அரசு உயர்நிலைப்பள்ளி, 19 வயது பெண்கள் பிரிவில் ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளி அணிகள் முதலிடம் பிடித்தன.
இந்த அணிகள் நாமக்கலில் டிசம்பர் 5 முதல் 10-ந்தேதி வரை நடைபெற உள்ள மாநில போட்டியில் கலந்து கொள்கின்றன. 19 வயது பிரிவு ஆடவர் பிரிவில் மாநில போட்டிக்கு தகுதி பெற்ற பனைக்குளம் பகுர் தீன் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களை ஜமாஅத் தலைவர்கள் ஜெய்னுல் அஸ்லாம் (மேற்கு), ஹம்சத் அலி (கிழக்கு) மற்றும் நிர்வாகிகள், தலைமை ஆசிரியர் ரவி, உதவி தலைமை ஆசிரியர் பாலசுப்ரமணியம், உடற்கல்வி ஆசிரியர் சந்திரசேகரன் ஆகியோர் பாராட்டினர்.
- ராயபுரம் ராபின்சன் மைதானத்தில் பெரிய திரையில் கால்பந்து போட்டியை பார்க்க ஏற்பாடு.
- தீக்காயம் அடைந்த 2 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி.
ராயபுரம்:
கத்தாரில் நேற்று நடைபெற்ற உலககோப்பை கால்பந்து இறுதி போட்டியை ரசிகர்கள் பெரிய திரையில் காணும் வகையில் சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள ராபின்சன் விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இது தொடர்பாக சமூக வலைதளங்களிலும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து கால்பந்து இறுதி போட்டியை ரசிக்க நேற்று இரவு சென்னையின் பல்வேறு பகுதியில் இருந்து ரசிகர்கள் அந்த மைதானத்திற்கு வந்திருந்தனர். இதனால் மைதானம் முழுவதும் ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு இருந்தனர்.
அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்சி முதல் கோல் அடித்த போது உற்சாகம் அடைந்த ரசிகர்கள் சிலர் பட்டாசு வெடித்தனர். அப்போது ராக்கெட் பட்டாசு ஒன்று கூட்டத்திற்குள் புகுந்து பறந்து சென்று வெடித்தது.
இதனால் அந்த கூட்டத்தில் இருந்த கேரளாவை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள் ராகேஷ் மற்றும் ரகுனேஷ் உடலில் தீப்பற்றியது. இதனால் கூட்டத்திலும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு காணப்பட்டது. உடனடியாக அங்கிருந்த சிலர் தீயில் கருகிய மாணவர்கள் 2 பேரையும் மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதில் மாணவர் ரகுனேசுக்கு முகம், தாடை, தோள் பட்டை, கையிலும், ராகேசுக்கு முதுகிலும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் தொடர்ந்து பெரிய திரையில் கால்பந்து போட்டி ஒளிபரப்பப்பட்டது. ரசிகர்கள் உற்சாகத்துடன் அதை பார்த்து ரசித்து சென்றனர்.
- ஒடிசா அணி 11 ஆட்டத்தில் 6 வெற்றி, 4 தோல்வி, ஒரு டிராவுடன் 19 புள்ளிகள் பெற்று 6வது இடத்தில் உள்ளது.
- மும்பை அணி 11 ஆட்டத்தில் 8 வெற்றி, 3 டிராவுடன் 27 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது.
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நடந்து வருகிறது. இதில் நாளை நடக்கும் லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி- ஒடிசா எப்.சி. அணிகள் மோதுகின்றன.
இப்போட்டி புவனேஸ்வரில் நாளை இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. மும்பை அணி 11 ஆட்டத்தில் 8 வெற்றி, 3 டிராவுடன் 27 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது.
அந்த அணி 9வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மும்பை அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறும். ஒடிசா அணி 11 ஆட்டத்தில் 6 வெற்றி, 4 தோல்வி, ஒரு டிராவுடன் 19 புள்ளிகள் பெற்று 6வது இடத்தில் உள்ளது. அந்த அணி உள்ளூரில் விளையாடுவதால் வெற்றிக்கு போராடும்.
- திருப்பூர் அணி 1-0 என்கிற கோல்கள் கணக்கில் புதுக்கோட்டை அணியையும் வென்று அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
- தேசிய மூத்தோர் கால்பந்து ஒருங்கிணைப்பாளர்கள் பெண்டா நாகராஜ், நஞ்சன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
அரவேணு,
கோத்தகிரி காந்தி மைதானத்தில் ராவ்பகதூர் ஆரிகவுடர் நினைவுக் கோப்பைக்கான மாநில அளவிலான மூத்தோர் கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் கேரளா, சென்னை, புதுக்கோட்டை, திண்டுக்கல், கோவை, திருப்பூர், வியாசர்பாடி மற்றும் நீலகிரி ஆகிய 8 அணிகள் பங்கேற்று விளையாடியது.
இன்று நடைபெற்ற காலிறுதிப் போட்டிகளில் கேரள அணி சென்னை அணியை 5-0 என்ற கோல்கள் கணக்கிலும், திண்டுக்கல் அணி, கோவை அணியை 1-0 என்கிற கோல்கள் கணக்கிலும், நீலகிரி அணி 4-0 என்ற கோல்கள் கணக்கில் சென்னை வியாசர்பாடி அணியையும், திருப்பூர் அணி 1-0 என்கிற கோல்கள் கணக்கில் புதுக்கோட்டை அணியையும் வென்று அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
நாளை காலை நடைபெறவுள்ள முதல் அரையிறுதிப் போட்டியில் கேரளா மற்றும் திண்டுக்கல் அணிகளும், 2வது அரையிறுதிப் போட்டி யில் நீலகிரி மற்றும் திருப்பூர் அணிகளும் விளையாடுகின்றன. இதில் வெற்றிபெறும் அணிகளுக்கிடையேயான இறுதிப் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா நாளை மாலை நடைபெறுகிறது.
இந்த போட்டிகளை தேசிய கால்பந்து நடுவர் பால கிருஷ்ணன் தலைமையில் தேசிய மூத்தோர் கால்பந்து ஒருங்கிணைப்பாளர்கள் பெண்டா நாகராஜ், நஞ்சன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
- ஆட்டத்தில் மெஸ்சி 26-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
- மெஸ்சி 841 போட்டிகளில் 702 கோல்களை அடித்துள்ளார்.
பாரீஸ்:
உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர் லியோனல் மெஸ்சி. அர்ஜெண்டினா கேப்டனான அவர் தற்போது பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரீஸ் செய்ன்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி) கிளப்புக்காக விளையாடி வருகிறார்.
பிரான்சு கால்பந்து 'லீக்' போட்டியில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் பி.எஸ்.ஜி-நைஸ் அணிகள் மோதின. இதில் பி.எஸ்.ஜி. 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் மெஸ்சி 26-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
இதன்மூலம் ஐரோப்பிய கிளப் கால்பந்து போட்டியில் அதிக கோல் அடித்தவர் என்ற சாதனையை மெஸ்சி பிடித்தார். அவர் ரொனால்டோவை முந்தி புதிய சாதனை புரிந்தார்.
மெஸ்சி 841 போட்டிகளில் 702 கோல்களை அடித்துள்ளார். கிறிஸ்டியானா ரொனால்டோ 949 போட்டிகளில் 701 கோல்கள் அடித்துள்ளார். ரொனால்டோவை விட குறைவான போட்டிகளில் விளையாடி மெஸ்சி அதிக கோல்களை அடித்துள்ளார்.
- காரைக்குடி அருகே சிறுவர் கால்பந்து போட்டியை ப.சிதம்பரம் தொடங்கி வைத்தார் .
- பரிசளிப்பு விழாவில் கோட்டையூர் பேரூராட்சி தலைவர் கே.எஸ்.கார்த்திக் சோலை கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கோட்டையூர் வேலங்குடி புளூஸ் கால்பந்து கழகம் சார்பில் 13 மற்றும் 15 வயதுக்குட்பட்டோருக்கான மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி நடந்தது. இதில் தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, சென்னை உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து அணிகள் கலந்து கொண்டன. 13 வயதுக்குட்பட்டோர் பிரிவில் காரைக்குடி ஆரோகிக் அகாடமி முதலிடத்தையும், ஒரத்தநாடு ஒய்.பி.ஆர். அகாடமி 2-ம் இடத்தையும், கோட்டையூர் முத்தையா அழகப்பா பள்ளி3-ம் இடத்தையும் வென்றன. 15 வயதுக்குட்பட்டோர் பிரிவில் காரைக்குடி காட்டுத்தலைவாசல் அப்பாஸ் மெமோரியல் அணி முதலிடத்தையும், சென்னை அணி 2-ம் இடத்தையும், ஒய்.பி.ஆர். அணி 3-ம் இடத்தையும் வென்றன.
போட்டிகளை முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், மாங்குடி எம்.எல்.ஏ., சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளரும், சிவகங்கை மாவட்ட கால்பந்து கழக தலைவருமான கே.ஆர்.ஆனந்த் மற்றும் பலர் தொடங்கி வைத்தனர். பரிசளிப்பு விழாவில் கோட்டையூர் பேரூராட்சி தலைவர் கே.எஸ்.கார்த்திக் சோலை கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.
- தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக அந்த ரசிகர் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
- ரசிகர் இறந்ததையடுத்து கால்பந்து கிளப் சார்பில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்பட்டது.
அர்ஜென்டினாவில் நேற்று ரிவர் பிளேட், டெப்சேனா ஒய் ஜஸ்டிகா அணிகளுக்கிடையிலான கால்பந்து போட்டி பியூனஸ் அயர்சில் உள்ள ஸ்டேடியத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. போட்டியைக் காண ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.
அப்போது மைதானத்தின் கேலரியில் அமர்ந்திருந்த 53 வயது மதிக்கத்தக்க ரசிகர் ஒருவர், கீழே விழுந்துவிட்டார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கு மருத்துவக் குழுவினர் விரைந்தனர். ஆனால் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக அந்த ரசிகர் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் காரணமாக, முதலில் மருத்துவ எமர்ஜென்சி என கூறி போட்டி 14 நிமிடங்களுக்கு போட்டி நிறுத்தப்பட்டது. பின்னர் போட்டி தொடங்கியது. அதன்பின்னர் ரசிகர் இறந்தது தொடர்பாக நடுவர் அறிவித்ததும், போட்டி மேலும் 27 நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்டது.
மேலும் ஒருநாள் முழுவதும் துக்கம் அனுசரிக்கப்பட்டதுடன், மைதானம் 24 மணி நேரம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது.
- பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது.
- கடந்த 2019ம் ஆண்டு பிரான்ஸில் நடந்த உலகக்கோப்பை போட்டியின் டிக்கெட் விற்பனையை விட அதிகம்.
9-வது பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டி வரும் ஜூலை 20ம் தேதி முதல் ஆகஸ்டு 20ம் தேதி வரை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறுகிறது. 32 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஏற்கனவே தொடங்கிய நிலையில், இதுவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனையாகி புதிய சாதனை படைத்துள்ளது.
இது, கடந்த 2019ம் ஆண்டு பிரான்ஸில் நடந்த உலகக்கோப்பை பெண்கள் கால்பந்து போட்டியின் மொத்த டிக்கெட் விற்பனையைவிட இது அதிகமாகும்.






