என் மலர்
அர்ஜென்டினா
- போதைக்கும்பல் கடத்திச் சென்று சித்ரவதை செய்துள்ளது.
- அவர்களை கொலை செய்து, இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்டுள்ளது.
அர்ஜென்டினாவில் 3 பெண்களை சித்ரவதை செய்து கொலை செய்ய போதைக்கும்பல்: நடவடிக்கை எடுக்கக்கோரி வெடித்தது பேராட்டம்/ Outrage in Argentina after 3 women tortured, killed on Instagram live stream by drug gang
கடந்த 19-ந்தேதி விருந்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி பிரெண்டா டெல் காஸ்டிலோ (20), அவரது உறவினரான மோரேனா வெர்டி (20) மற்றும் லாரா குட்டிரெஸ் (15) ஆகிய 3 இளம்பெண்களை பியூனஸ் அயர்ஸ் நகரின் புறநகர்ப் பகுதியான புளோரன்சியோ வரேலாவில் உள்ள வீட்டிற்கு ஒரு கும்பல் வேனில் கடத்திச் சென்றது.
அங்கு அவர்கள் மூவரும் கொடூரமாக சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டனர். இதனை வீடியோ எடுத்து பெரு நாட்டைச் சேர்ந்த போதைப்பொருள் கும்பலின் தலைவன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பினான்.
போதைப் பொருட்களை திருடினால் இதுதான் கதி என மற்றவர்களை எச்சரிக்கும் வகையில் அவன் இதைச் செய்ததாகக் கூறப்படுகிறது. இதைதொடர்ந்து 5 நாட்களுக்குப் பிறகு 3 பெண்களின் உடல்களும் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டன. இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக 3 ஆண்கள், 2 பெண்கள் என 5 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான போதைப் பொருள் கும்பலின் தலைவனை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
இந்த நிலையில் பியூனஸ் அயர்ஸ் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் சாலைகளில் திரண்டு கொலையாளி களுக்குக் கடுமையான தண்டனை வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பதாகைகளை ஏந்தி கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பொதுமக்களுடன் சேர்ந்து பேரணியாக நாடாளுமன்றத்தை நோக்கி சென்றனர்.
படுகொலை செய்யப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், பாலின அடிப்படையிலான வன்முறையை தடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதன்காரணமாக நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவாகியுள்ளது.
- அர்ஜென்டினாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.
தென் அமெிரக்க நாடான அர்ஜென்டினா அருகே கடலில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தின் எதிரொலியால், சிலியின் மாகல்லனேஸின் கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அர்ஜென்டினாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.
சக்தி வாய்ந்த நிலநடுக்கம் என்பதால் பேரலைகள் எழுந்திருக்க வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது.
- எட்டு மணி நேரத்தில் கிட்டத்தட்ட 400 மில்லிமீட்டர்கள் மழை பெய்தது.
- பார்வையிட வந்த பாதுகாப்பு அமைச்சரை வெள்ளநீரில் இழுக்க முயன்றனர்.
அர்ஜென்டினாவில் ஒரு வருடத்திற்குத் தேவையான மழை சில மணி நேரங்களிலேயே பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அர்ஜென்டினாவின் துறைமுக நகரமான பஹியா பிளாங்கா நகரில் நேற்று முன் தினம் (வெள்ளிக்கிழமை) ஏற்பட்ட கடுமையான புயல் வெள்ளத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர்.
வெள்ளிக்கிழமை காலை தொடங்கிய மழை, எட்டு மணி நேரத்தில் கிட்டத்தட்ட 400 மில்லிமீட்டர்கள் பெய்தது. இது பஹியா பிளாங்காவில் ஒரு வருடம் முழுவதும் பெய்யும் மழையின் அளவை விட அதிகம் என்று மாகாண பாதுகாப்பு அமைச்சர் ஜேவியர் அலோன்சோ தெரிவித்தார்.
புயலைத் தொடர்ந்து பெய்ய பலத்த மழை காரணமாக மருத்துவமனை அறைகள் வெள்ளத்தில் மூழ்கின. சுற்றுப்புறங்கள் தீவுகளாக மாறின. நகரின் பெரும்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை 10 ஆக இருந்த இறப்பு எண்ணிக்கை நேற்று (சனிக்கிழமை) 13 ஆக உயர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

350,000 மக்கள்தொகை கொண்ட இந்த நகரம், தலைநகரான பியூனஸ் அயர்ஸிலிருந்து தென்மேற்கே 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. வெள்ள பாதிப்பை நேற்று பார்வையிட வந்த தேசிய பாதுகாப்பு அமைச்சர் மீது அப்பகுதி மக்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.
சிலர் அவரை வெள்ள நீரில் இழுக்க முயன்றனர். ஆனால் அவர் பத்திரமாக அங்கிருந்து வெளியேறினார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
- தலைநகர் பியூனஸ் அயர்ஸில் இருந்து சுமார் 6 மைல் தெற்கே உள்ளது.
- இரத்தத்தில் மூழ்கியது போல் இருந்தது. இதுபோன்ற ஒன்றை இதுவரை நாங்கள் பார்த்ததே இல்லை.
அர்ஜென்டினா தலைநகரான பியூனஸ் அயர்ஸின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு ஓடை நீர் ரத்த சிவப்பு நிறத்தில் மாறியுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தலைநகர் பியூனஸ் அயர்ஸில் இருந்து சுமார் 6 மைல் தெற்கே மக்கள் அதிகம் வசிக்கும் புறநகர் பகுதியில் சரண்டி என்ற நதி ஓடுகிறது.
அர்ஜென்டினாவிற்கும் உருகுவேவிற்கும் இடையிலான ஒரு முக்கிய நீர்நிலையான ரியோ டி லா பிளாட்டா நதியின் துணை நதியான இது பல கிலோமீட்டர் தூரம் பயணித்து கடைசியில் ஆற்றில் கலக்கும். பயணிக்கும் வழியில் ஏராளமான தோல் பதனிடும் தொழிற்சாலைகள் உள்ளன.
அங்கிருந்து வெளியேறும் ரசாயன கழிவுகள் இந்த ஓடையில் கலக்கிறது. இதற்கு முன்னரும் எண்ணெய் போலவும் சில நேரம் சாம்பல் அல்லது ஊதா நிறத்திலும் இந்த நீர்நிலை மாறியுள்ளது. இதுதொடர்பாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
ஓடை நிறம் மாறியது குறித்து பேசிய உள்ளுரர்வாசிகள், திடீரென சில நாட்களுக்கு முன்பு காலை இதுபோல நீரோடை நிறம் மாறியிருந்தது. அது இரத்தத்தில் மூழ்கியது போல் இருந்தது. இதுபோன்ற ஒன்றை இதுவரை நாங்கள் பார்த்ததே இல்லை என்கின்றனர்.
இந்த நீரோடையை தவிர்த்து இந்தப் பகுதியில் உள்ள ஆறுகள் பலவும் மாசுபாடுகள் நிறைந்தவை. உதாரணமாக மடான்சா-ரியாசுலோ நதிப் படுகை, லத்தீன் அமெரிக்காவில் மிகவும் மாசுபட்ட நீர்நிலைகளில் ஒன்றாக அழைக்கப்படுகிறது.
- தங்கும் விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்ததில் உயிரிழந்தார்.
- அருகில் இருந்தவர்கள் சோதித்ததில் அவர் உயிரற்று கிடந்தது உறுதியானது.
உலகளவில் பிரபலமான பாப்-இசை குழு ஒன் டைரக்ஷன். 1டி என்றும் அழைக்கப்படும் இந்த குழுவில் பாடகராக இருந்தவர் லியாம் பெய்ன். 31 வயதான லியாம் பெய்ன் அர்ஜென்டினா நாட்டின் பலெர்மோவை அடுத்த கோஸ்டா ரிக்கா தெருவில் உள்ள தங்கும் விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்ததில் உயிரிழந்தார்.
பியூநியோஸ் ஏரிஸ் எனும் ஓட்டலில் தங்கியிருந்த லியாம் பெய்ன் பால்கனியில் இருந்து கீழே விழுந்துள்ளார். இது குறித்து அர்ஜென்டினா காவல் துறை வெளியிட்ட தகவல்களில், "ஓட்டல் மேலாளர் ஏதோ சத்தம் கேட்டு பின்புறம் சென்றிருக்கிறார். அங்கு சென்ற போது, பெய்ன் சுயநினைவின்றி தரையில் விழுந்து கிடந்துள்ளார். கீழே விழுந்த லியாம் பெய்னை அருகில் இருந்தவர்கள் சோதித்ததில் அவர் உயிரற்று கிடந்தது உறுதியானது," என்று தெரிவித்தார்.
மது பழக்கம் மற்றும் தற்கொலை எண்ணங்களால் தவித்து வந்த லியாம் பெய்ன், கடந்த ஆண்டு தனது பிரச்சினையை சரி செய்து கொள்ள பயிற்சி எடுத்து வருவதாக தெரிவித்தார். இது குறித்த பதிவில் அவர், "100 நாட்கள் ஆகிவிட்டது. தற்போது நான் அருமையாக உணர்கிறேன், உண்மையில், இது நன்றாக இருக்கிறது. ரசிகர்கள் கொடுத்த ஆதரவு சிறப்பாக இருந்தது. நான் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன்," என்ற குறிப்பிட்டுள்ளார்.
- உலக அழகிப்போட்டியில் இதற்கு முன்பு வரை 18-28 வயதுடைய பெண்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்ற விதிமுறை இருந்தது
- அவரது நேர்த்தியும், நளினமும், புன்னகையும் தான் அவர் வெல்லக் காரணம் என்று போட்டியின் நடுவர்கள் கூறியுள்ளனர்
அர்ஜெண்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் நடந்த உலக அழகி போட்டியில் 60 வயதான அலெஜாண்ட்ரா மரிச ரோட்ரிகுயஸ் வென்றவராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் அதிக வயதில் அழகிப்போட்டியில் பட்டம் வென்ற பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
உலக அழகிப்போட்டியில் இதற்கு முன்பு வரை 18-28 வயதுடைய பெண்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்ற விதிமுறை இருந்தது. ஆனால், அந்த வயது வரம்பைக் கடந்தாண்டு தான் மிஸ் யுனிவர்ஸ் அமைப்பு நீக்கியது. இதன் மூலம் 18 வயதுக்கு மேற்பட்ட எந்த பெண்ணும் இந்த போட்டியில் கலந்து கொள்ள முடியும் என்ற நிலை உருவானது.
அதன்பின் டொமினிகன் குடியரசில் நடந்த மிஸ் யுனிவர்ஸ் 2024இல் 47 வயதான ஹெய்டி குரூஸ் என்பவர் வெற்றி பெற்றிருந்தார். அதன் பிறகு 60 வயதில் அலெஜாண்ட்ரா மரிச ரோட்ரிகுயஸ் வெற்றி பெற்று அதிக வயதில் உலக அழகி பட்டம் பெற்றவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அலெஜாண்ட்ரா மரிச ரோட்ரிகுயஸ், "உலக அழகிப்போட்டியில் 18 முதல் 28 வயதுடையவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என்ற விதி தளர்த்தப்பட்ட நிலையில் இது சாத்தியமாகியுள்ளது. அழகுக்கு வயது வரம்பு இல்லை. அடுத்த மாதம் அங்கு நடக்கும் மிஸ் யுனிவர்ஸ் அர்ஜெண்டினா போட்டியில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்பதே தனது இலக்கு என்று அவர் தெரிவித்தார்.
அவரது நேர்த்தியும், நளினமும், புன்னகையும் தான் அவர் வெல்லக் காரணம் என்று போட்டியின் நடுவர்கள் கூறியுள்ளனர்.
அர்ஜெண்டினாவின் பியூனஸ் அயர்ஸ் பகுதியை சேர்ந்தவர் இந்த இவர் பல ஆண்டுகளாக வழக்கறிஞராக வேலை செய்துவருகிறார். அவர் அங்கு சில காலம் பத்திரிகையாளராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கிழக்கு அர்ஜென்டினா பகுதியில் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் புயல் வீசியது
- விமானம் நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து மெதுவாக நகர தொடங்கியது
தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள நாடு அர்ஜென்டினா (Argentina). இதன் தலைநகரம் ப்யூனோஸ் அயர்ஸ் (Buenos Aires).
கடந்த சில நாட்களாக கிழக்கு அர்ஜென்டினா பகுதியில் கடும் புயல் வீசி வருகிறது. மணிக்கு சுமார் 150 கிலோமீட்டர் வேக புயலால் அங்கு உயிரிழப்பு 14-ஐ கடந்துள்ளது. பல இடங்களில் கட்டிட சேதங்களும், மின்சார தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்புயல், அங்குள்ள ஏரோபார்க் நியூபெரி (Aeroparque Jorge Newbery) விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு விமானத்தையும் தாக்கியது. இத்தாக்குதலில் அந்த விமானம் காற்றின் அதிவேகத்தால் நகர தொடங்கி, நிறுத்தப்பட்டிருந்த திசைக்கு எதிராக மெதுவாக நகர்ந்து சென்றது.
அப்போது அங்கு விமானத்தில் பயணிகள் ஏறவும் இறங்கவும் பயன்படுத்தப்படும் படிக்கட்டு, சரக்கு கொண்டு செல்லும் ஒரு வாகனம் உட்பட பலவற்றில் அந்த விமானம் மோதியது. இதில் விமானத்திற்கு ஓரளவு சேதம் ஏற்பட்டது.
ஆனால், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் இல்லை. விமானத்தில் ஏற்பட்டுள்ள பழுதுகளை நீக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
- அர்ஜென்டினாவில் மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது.
- புயல் பாதிப்பால் சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
அர்ஜென்டினாவின் துறைமுக நகரமான பஹியா பிளாங்காவில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த புயலால் அங்குள்ள விளையாட்டுக் கழகத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நகரத்தில் மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதன் எதிரொலியால், சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
பாஹியா பிளாங்காவைத் தாக்கிய கனமழை மற்றும் காற்று, ஸ்கேட்டிங் போட்டி நடைபெறும் மைதானத்தின் மேற்கூரையை அடித்து தள்ளியது.
மேலும், இடிபாடுகளில் சிக்கிய மக்களை தீயணைப்பு வீரர்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- ஏராளமான பொதுமக்கள் சாலையின் இருபுறங்களிலும் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
- நாட்டை மறு கட்டமைப்பு செய்யப்போவதாக அறிவித்தார்.
அர்ஜென்டினா நாட்டில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற ஜேவியர் மிலே புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் தொலைக்காட்சி விவாதத்தில் நெறியாளராக பணியாற்றிய போது அரசியல்வாதிகளிடம் எழுப்பிய கடுமையான கேள்விகளால் பொதுமக்கள் மத்தியில் பிரபலமானார். இதன் மூலம் அவர் தேர்தலில் வெற்றி பெற்று புதிய அதிபராகி இருக்கிறார். இவர் பதவி ஏற்க சென்ற போது ஏராளமான பொதுமக்கள் சாலையின் இருபுறங்களிலும் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு கொடுத்தனர். ஹபியர் பிலேவுக்கு வளர்ப்பு பிராணிகள் மீது அதிக பாசம் உண்டு.
பதவி ஏற்க சென்ற போது வாகனத்தை நிறுத்தி ரோட்டோரம் நின்று கொண்டிருந்த தனது ஆதரவாளர் ஒருவரின் வளர்ப்பு நாயை கொஞ்சி மகிழ்ந்தார். இதைத்தொடர்ந்து ஜேவியர் மிலே அர்ஜென்டினா நாட்டின் புதிய அதிபராக பதவி ஏற்றுக்கொண்டார். அப்போது அவர் நாட்டை மறு கட்டமைப்பு செய்யப்போவதாக அறிவித்தார்.
- அறுவை சிகிச்சை காரணமாக அவருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது.
- உடல்நிலை தொடர்ந்து மோசமாகி வந்ததால் உயிர்காக்கும் கருவிகள் மூலம் சிகிச்சை பெற்றார்.
பியூனஸ் அயர்ஸ்:
அர்ஜென்டினாவை சேர்ந்த பிரபல நடிகை சில்வினா லூனா. மாடல் அழகியான இவர் தொலைக்காட்சிகளிலும் தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார்.
இவர் கடந்த 2011-ம் ஆண்டு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார். இதற்கிடையே இந்த அறுவை சிகிச்சை காரணமாக அவருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது. அவர் ஆஸ்பத்திரியில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார்.
வாரத்திற்கு 3 முறை டயாலிசிஸ் சிகிச்சை மேற் கொண்டார். ஆனால் அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமாகி வந்ததால் உயிர்காக்கும் கருவிகள் மூலம் சிகிச்சை பெற்றார்.
இந்நிலையில் நடிகை சில்வினா லூனா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர். சில்வினா லூனா, பிளாஸ் டிக் சர்ஜரிக்காக ஒப்பனை அறுவை சிகிச்சை நிபுணர் அனிபால்லோ டோக்சி என்பவரை அணுகியுள்ளார்.
அறுவை சிகிச்சையின் போது சில்வினாவுக்கு அர்ஜென்டினா அரசால் தடை செய்யப்பட்ட மருந்தை செலுத்தியதாகவும் இதனால் அவர் பாதிப்பு அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அனிபால் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டு உள்ளார்.
- இன்ஸ்டாகிராமில் வீடியோக்கள் வெளியிட்டு லட்சக்கணக்கில் சம்பாத்தித்து வந்தார்.
- எனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு யார் பொறுப்பு என இதன் மூலம் தெரிவித்து விட்டேன்
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரைச் சேர்ந்தவர் ஃபெர்னாண்டோ பெரஸ் அல்கபா (வயது 41). அமெரிக்காவின் மியாமியில் சில காலம் தங்கியிருந்த இவர், பின்னர் ஸ்பெயினில் செட்டில் ஆனார். இவர் கிரிப்டோ கரன்சி குறித்த தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லுநராக இன்ஸ்டாகிராமில் வீடியோக்கள் வெளியிட்டு லட்சக்கணக்கில் சம்பாத்தித்து வந்தார்.
தனக்கு கிடைக்கும் வருமானங்களை கொண்டு அவர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அவரது ஆடம்பர வாழ்க்கையை வெளிப்படுத்தும் வகையில் அவ்வப்போது வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்தார். இன்ஸ்டாகிராமில் அவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின் தொடர்கின்றனர்.
இந்நிலையில், அர்ஜென்டினாவிற்கு சென்ற அல்கபா, ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு தங்கியிருந்தார். ஜூலை 19 அன்று அந்த வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் திரும்பி வரவில்லை. இதனால் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. அவர் காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டடு, அவரை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரத்தின் இன்ஜெனிரோ பட்ஜ் எனும் இடத்தில் உள்ள ஒரு ஓடைக்கு அருகே மைதானத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் அனாதையாக கிடந்த ஒரு சிகப்பு சூட்கேஸ் பெட்டியை கண்டனர்.
இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் அப்பெட்டியை பார்த்தபோது கண்டதுண்டமாக வெட்டப்பட்ட ஒரு உடல் இருந்தது.
அந்த உடலில் இருந்த பச்சை குத்தப்பட்டிருந்த அடையாளங்களை கொண்டு இது அல்கபாவின் உடல் என கண்டுபிடித்தனர். பிரேத பரிசோதனையில் அல்கபா துப்பாக்கியால் சுடப்பட்ட பின், அவர் உடலை துண்டு துண்டாக வெட்டியிருப்பது தெரிய வந்துள்ளது.
கிரிப்டோ கரன்சியின் தற்போதைய வீழ்ச்சியினால் அல்கபா பொருளாதார சிக்கல்களை சந்தித்து வந்ததாக அவரின் சகோதரர் ரொடால்ஃபோ தெரிவித்தார்.
அல்கபா எழுதியிருக்கும் கடைசி குறிப்பு ஒன்றில், "கிரிப்டோ முதலீடுகளில் நான் கணிசமாக பணம் இழந்துள்ளேன். அர்ஜென்டினாவில் உள்ள வன்முறை கும்பலான பர்ரா ப்ராவா குழுவினரிடமிருந்து கடன் வாங்கியுள்ளேன். எனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு யார் பொறுப்பு என இதன் மூலம் தெரிவித்து விட்டேன்" என தெரிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தேகத்தின்பேரில் ஒருவரை கைது செய்துள்ளனர்.
- நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின.
- நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
பியூனஸ் அயர்ஸ்:
அர்ஜென்டினாவில் இன்று காலை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவானது. இன்று காலை 8.35 மணிக்கு பூமிக்கு அடியில் 169 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. பொதுமக்கள் அலறியடித்து வீட்டை விட்டு வெளியே வந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கம் சிலி நாட்டிலும் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.






