என் மலர்
நீங்கள் தேடியது "நிலநடுக்கம்"
- சீனாவில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டது.
- இந்த நிலநடுக்கம் 6.2 ரிக்டர் அளவில் பதிவானது.
பீஜிங்:
சீனாவில் இன்று உள்ளூர் நேரப்படி மதியம் 1.17 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் 6.2 ரிக்டர் அளவில் பதிவானது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தை 2 மில்லியன் மக்கள் உணர்ந்தனர்.
சீனாவின் கிர்கிஸ்தான்-ஜின்ஜியாங் எல்லைக்கு அருகிலுள்ள அக்கி மாவட்டத்திற்கு அருகில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.
- 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
- முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வங்காள விரிகுடாவில் இன்று காலை 7.26 மணிக்கு 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் மக்களிடையே சுனாமி போன்ற மற்றுமொரு இயற்கை பேரழிவு ஏற்படுமோ என்கிற அச்சஉணர்வு உண்டாகி உள்ளது.
இதனை தொடர்ந்து நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- 90 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
- நிலநடுக்கத்தால் பீதி அடைந்த பொதுமக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
ஆப்கானிஸ்தான் பைசாபாத் அருகே இன்று காலை 7.36 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானது. 90 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் பீதி அடைந்த பொதுமக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர். மேலும் பொருட்சேதம் மற்றும் உயிர் சேதம் பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
- நிலநடுக்கத்தால் வீடுகள் பயங்கரமாக குலுங்கின.
- சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.4 ரிக்டர் அளவில் பதிவானது. 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ஆச்சே மாகாணத்தில் மையம் கொண்டிருந்தது.
நிலநடுக்கத்தால் வீடுகள் பயங்கரமாக குலுங்கின. இதனால் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
- வங்கதேசத்தில் நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
- இந்த நிலநடுக்கம் 5.7 ரிக்டர் அளவுகோலில் பதிவானது.
டாக்கா:
இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 10.38 மணிக்கு அந்நாட்டின் தலைநகர் டாக்காவை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால் மக்கள் வீடுகள், அலுவலகங்களை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.
இந்நிலையில், நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. டாக்காவில் 4 பேரும், நர்சிங்டி பகுதியில் 5 பேரும், நாராயண்கஞ்ச் பகுதியில் ஒருவரும் பலியாகினர். மேலும் 100-க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
- வங்கதேசம்- அயர்லாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி டாக்காவில் நடந்து வருகிறது.
- 3-வது நாள் ஆட்டமான இன்று அயர்லாந்து பேட்டிங் செய்த போது நிலநடுக்கம் உணரப்பட்டது.
வங்க தேசத்தில் இன்று காலை 10 மணியளவில் நர்சிங்டி அருகே 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தலைநகர் டாக்காவில் இருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் உள்ள நர்சிங்டி மாவட்டத்தின் கோரஷால் பகுதியில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன் தாக்கம் வங்கதேசம் - அயர்லாந்து அணிகள் மோதிய டெஸ்ட் போட்டியில் எதிரொலித்தது. இதனால் ஆட்டம் 3 நிமிடம் தடைபட்டது. அனைத்து வீரர்களுகளும் தரையில் அமர்ந்து கொண்டனர். அதன்பிறகு ஆட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இந்த போட்டியை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் சிலர் மைதானத்தை விட்டு வெளியேறினர்.
அயர்லாந்து அணி 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதலில் நடந்த டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் வெற்றி பெற்றது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி டாக்காவில் நடந்து வருகிறது.
முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணி முதல் இன்னிங்சில் 476 ரன்கள் குவித்தது. இதனையடுத்து முதல் இன்னிங்சில் விளையாடிய அயர்லாந்து அணி 265 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வங்கதேசம் தொடர்ந்து 2-வது இன்னிங்சில் விளையாடி வருகிறது.
- வங்கதேச நிலநடுக்கத்தில் ஆறுபேர் உயிரிழப்பு.
- அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
வங்கதேசத்தில் இன்று காலை 10 மணியளவில் நர்சிங்டி அருகே 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தலைநகர் டாக்காவில் இருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் உள்ள நர்சிங்டி மாவட்டத்தின் கோரஷால் பகுதியில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்துள்ளது. இதில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காலை 10:08 மணிக்கு, நர்சிங்டியிலிருந்து தென்மேற்கே 13 கி.மீ தொலைவில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதன் தாக்கம் கொல்கத்தா, மேற்குவங்கம், அசாமின் குவஹாத்தி போன்ற பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. இந்த நில அதிர்வால் மக்கள் அச்சமடைந்து வீடுகளிலிருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். முன்னதாக, இன்று பாகிஸ்தானில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்திருந்தது. நிலநடுக்கத்தின் மையம் 135 கி.மீ ஆழத்தில் அமைந்திருந்தது. அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
மேலும் இந்திய மற்றும் யூரேசிய டெக்டோனிக் தகடுகளின் மோதல் காரணமாக வடக்கு மற்றும் தென்கிழக்கு வங்கதேசம் பூகம்ப பாதிப்பு மண்டலங்களாக அறியப்பட்டாலும், இன்று நிலநடுக்கம் ஏற்பட்ட மத்திய பகுதியில் நிலநடுக்கங்கள் ஏற்பட குறைவான வாய்ப்புகளே இருக்கும் பகுதி என USGS தெரிவித்துள்ளது.
- மின்சாரம் துண்டிக்கப்பட்டு புல்லட் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
- ஜப்பான் பிரதமர் சானே தகைச்சி எச்சரித்துள்ளார்.
ஜப்பான் நாட்டின் வடகிழக்கில் உள்ள பசிபிக் பெருங்கடலில் 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி மாலை 5:03 மணிக்கு, சான்ரிகு கடற்கரைக்கு அருகில் கடலில் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு புல்லட் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் பிரதமர் சானே தகைச்சி தனது எக்ஸ் பக்கத்தில் "சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, எனவே தயவுசெய்து கடற்கரையிலிருந்து உடனடியாக பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுங்கள். எதிர்பார்த்ததை விட பெரிய சுனாமி ஏற்படக்கூடும்" என்று அவர் பொதுமக்களை எச்சரித்தார்.
- கம்சாட்காவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின.
- ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
ரஷியாவில் உள்ள கம்சாட்காவில் அடுத்தடுத்து இரண்டு முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கம்சாட்காவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவுகோல் 6.3,6.1 ஆக பதிவாகி உள்ளது.
கம்சாட்காவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனால் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
மேலும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் குறித்து உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.
- நிலநடுக்கத்தால் மஸார்-இ-ஷெரிஃப் உள்ளிட்ட பகுதிகளில் மிகவும் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
- சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்ததாக தகவல் வெளியான நிலையில், உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அச்சப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் நள்ளிரவு 1.59 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.3 ரிக்டர் அளவிலான நிலடுக்கத்தால் 4 பேர் உயிரிழந்ததாகவும் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
மஸார்-இ-ஷெரிஃப் நகரத்துக்கு 28 கி.மீ.க்கு அடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டது. மேலும், நள்ளிரவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மஸார்-இ-ஷெரிஃப் உள்ளிட்ட பகுதிகளில் மிகவும் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே, சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்ததாக தகவல் வெளியான நிலையில், உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அச்சப்படுகிறது.
ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பாகிஸ்தானில் நேற்று இரவு நிலநடுக்கம் பதிவானது.
- இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் நேற்று இரவு 8.52 மணிக்கு 3.8 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவானது என தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன. இதனால் மக்கள் பீதியடைந்தனர். அதேவேளை, இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே, நேற்று அதிகாலை பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் முல்தான் நகரை மையமாகக் கொண்டு 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
- ஆப்கானிஸ்தான்- தஜிகிஸ்தான் எல்லை அருகே நிலநடுக்கம்.
- முதற்கட்ட தகவலில் உயிரிச்சேதம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இன்று மாலை 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானின் கந்துட் மாகாணத்தில் இருந்து தென்கிழக்கே 46 கி.மீ. தொலைவில், 10 கி.மீ, ஆளத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தாக அறவிக்கப்பட்டுள்ளது.
கந்துட் மாகாணம் ஆப்கானிஸ்தான்- தஜிகிஸ்தான் எல்லை அருகே அமைந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் காயம், உயிரிழப்பு அல்லது சொத்துகள் சேதம் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் 2,200 பேர் உயிரிழந்துள்ளதால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கடந்த மாதம் 4ஆம் தேதி 6.2 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்து. தொடர்ந்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டு அதிக சேதத்தை ஏற்படுத்தியது.






