என் மலர்
நீங்கள் தேடியது "Japan earthquake"
- மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
- நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.
ஜப்பானின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள ஹோக்கைடோ, அமோரி, இவாட் ஆகிய மாகாணங்களில் கடந்த 8-ந்தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் சுனாமி அலைகளும் தாக்கின.
இந்த நிலையில் ஜப்பானின் வடகிழக்கில் இன்று மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பானின் தீவான ஹோன்ஷு வின் வடக்கே உள்ள அமோரி மாகாணத்தின் கிழக்கு கடற்கரையில் நிலநடுக்கம் உண்டானது.
இது ரிக்டர் அளவில் 6.7-ஆக பதிவானது 20 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இதனால் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பசிபிக் கடற்கரையான ஹொக்கைடோ, அமோரி, இவாட் மற்றும் மியாகி மாகாணங்களில் 3.2 அடி வரை சுனாமி அலைகள் ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.
அடுத்தடுத்து ஏற்பட்டு உள்ள நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருவதாக அந்நாட்டு பிரதமர் சனே டகாய்ச்சி தெரிவித்துள்ளார்.
- பாகுபலி: தி எபிக் திரைப்படம் வரும் 12-ம் தேதி ஜப்பான் நாட்டில் வெளியாகவுள்ளது.
- வரலாற்று கதைக்களத்துடன் உருவான இப்படங்களுக்கு உலகளவில் தனி ரசிகர் பட்டாளமும் உண்டு.
புதுடெல்லி:
நடிகர் பிரபாஸ் நாயகனாக நடித்து டைரக்டர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகிய 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' ஆகிய திரைப்படங்கள் கோடிகளில் வசூல் செய்து மாபெரும் வெற்றி பெற்றன. இத்துடன், வரலாற்று கதைக்களத்துடன் உருவான இந்தப் படங்களுக்கு உலகளவில் தனி ரசிகர் பட்டாளமும் உண்டு.
இதையடுத்து, இவ்விரண்டு திரைப்படங்களையும் இணைத்து 'பாகுபலி: தி எபிக்' எனும் முழு நீளப் படத்தை படக்குழுவினர் வெளியிட்டனர். 'பாகுபலி: தி எபிக்' படம் வெற்றி பெற்ற நிலையில், இத்திரைப்படம் வரும் 12-ம் தேதி ஜப்பான் நாட்டில் வெளியாகவுள்ளது.
ஜப்பான் நாட்டில் திரையிடப்பட்ட 'பாகுபலி: தி எபிக்' படத்தின் சிறப்பு காட்சியில் கலந்துகொண்ட நடிகர் பிரபாஸ் ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்துள்ளார். தொடர்ந்து அவர் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.
இதற்கிடையே, ஜப்பானில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஜப்பானில் இருக்கும் பிரபாசின் நிலைமை குறித்து ரசிகர்கள் கவலை அடைந்தனர்.
இந்நிலையில், நடிகர் பிரபாஸ் தான் டோக்கியோவில் இல்லை என்றும் பாதுகாப்புடன் இருப்பதாக என்னிடம் தெரிவித்தார் என இயக்குனர் மாருதி தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் பிரபாசின் ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.
- இந்த நிலநடுக்கம் 20 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது.
- குஷிரோ, ஷிபெச்சா, ஹொன்ஷு ஆகிய நகரங்களில் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது.
இன்று (மே 31) பிற்பகல் ஜப்பானின் வடக்கே அமைத்துள்ள ஹொக்கைடோவில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 20 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தின் மையம் ஹொக்கைடோவின் கிழக்கு கடற்கரையில் இருந்ததாகவும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நில அதிர்வு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது. குஷிரோ, ஷிபெச்சா, ஹொன்ஷு ஆகிய நகரங்களில் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது.
நிலநடுக்கம் பல பகுதிகளில் வலுவான அதிர்வுகளை ஏற்படுத்தியதாகக் குறிப்பிடுகின்றன, ஆனால் இதுவரை யாருக்கும் காயமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.
- நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளிகளாக பதிவானதாக நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
- நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
டோக்கியோ:
ஜப்பானில் ஹாக்கிடோ என்ற பகுதியில் இன்று அதிகாலை திடீர் நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 6 புள்ளிகளாக பதிவானதாக நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். ஆனால் இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருட்சேதமோ எதுவும் ஏற்படவில்லை.
- தீவில் சிறிதும் பெரிதுமாக 56 தீவுகளை உள்ளடக்கி உள்ளது.
- நிலநடுக்கம் கடலுக்கு கீழ்10 கி,மீ மற்றும் 40 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவானது.
ஜப்பான் மற்றும் ரஷியா இடையே உள்ள குரில் தீவில் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த தீவு ஜப்பானிய தீவான ஹொக்கைடோவின் வடக்கு பசிபிக் பெருங்கடலில் இருந்து ஓகோட்ஸ்க் கடலை பிரிக்கும் ரஷியாவின் கம்சட்கா தீபகற்பத்தின் தெற்கு முனை வரை நீண்டு உள்ளது.
இத்தீவில் சிறிதும் பெரிதுமாக 56 தீவுகளை உள்ளடக்கி உள்ளது. இந்த நிலையில் குரில் தீவில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் மீண்டும் 5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உண்டானது. நிலநடுக்கம் கடலுக்கு கீழ்10 கி,மீ மற்றும் 40 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவானது. ஆனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
- நிலநடுக்கம் எதிரொலியால் 10 அடி வரை சுனாமி அலை தாக்க வாய்ப்பு.
- ஹொக்கைடோவில் இருந்து கியூஷூ பகுதி வரை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
2024ம் ஆண்டின் முதல் நாளிலேயே ஜப்பானின் மேற்கு பகுதியில் 7.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு, 50 முறை நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.
ஜப்பானில் இதற்கு முன் 2011ல் 7.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமியால் சுமார் 20 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
இதுபோன்ற அசம்பாவிதங்களை தடுக்க அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
நிலநடுக்கம் எதிரொலியால் 10 அடி வரை சுனாமி அலை தாக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இதனால், ஹொக்கைடோவில் இருந்து கியூஷூ பகுதி வரை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் வெளியிடப்பட்ட உயர்மட்ட சுனாமி எச்சரிக்கையை அந்நாட்டு அரசு கைவிட்டது.
இருப்பினும், பள்ளமான பகுதிகளில் உள்ள மக்களை உயரமான பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ரிக்டர் அளவில் 7.6 பதிவானதால் கட்டடங்கள் குலுங்கின. தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
- பெரும்பாலனவை ரிக்டர் அளவில் 3-க்கும் அதிகமாக பதிவாகியுள்ளன.
ஜப்பானில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.6 பதிவானதால் கட்டடங்கள் குலுங்கின. சாலைகள் பிளந்து கடும் சேதம் அடைந்தன. மிகப்பெரிய நிலநடுக்கம் என்பதால் உயர்மட்ட சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் அது திரும்பப் பெறப்பட்டது.
இருந்த போதிலும் நேற்றைய புத்தாண்டு தினத்தில் இருந்து இன்று வரை அதிர்ந்து கொண்டே இருந்ததாக ஜப்பான் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மொத்தம் 155 முறை நில அதிர்வு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.
இதில் பெரும்பாலன நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவில் 3-க்கும் அதிகமாக பதிவாகியுள்ளன. இந்த நிலநடுக்கம் காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்னும் ஓரிரு நாட்களில் பயங்கர நிலநடுக்கும் ஏற்பட வாய்ப்புள்ளதால் கடற்கரையோர பகுதிகளில் கவனமாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், நிலநடுக்கம் குறித்து செல்போனில் எச்சரிக்கை மணி ஒலித்ததால் மக்கள் சுதாரித்துக் கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு சென்றதால் உயிரிழப்பு பெரிய அளவில் இல்லை.
இருந்த போதிலும் தற்போது வரை உயிரிழப்பு 30 ஆக உயர்ந்துள்ளது. பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. உயிரிழப்பும் அதிகம். சேதமும் அதிகரிப்பு என ஜப்பான் பிரதமர் தெரிவித்துள்ளார்.
- சுனாமி அலைகளால் ஊருக்குள் கடல் நீர் புகுந்தது.
- நிலப்பரப்பு மேற்கு நோக்கி நகர்ந்து இருக்கிறது.
ஆங்கில புத்தாண்டு தினத்தில் மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தும் வகையில் மிக கடுமையான நிலநடுக்கம் ஜப்பானை ஒருவழியாக்கியது. ஜப்பானில் ஜனவரி 1-ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 7.5 ஆக பதிவானது. இதன் காரணமாக அந்நாட்டில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் சுனாமி அலைகளால் ஊருக்குள் கடல் நீர் புகுந்தது.
இந்த நிலையில், ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அந்நாட்டின் நிலப்பரப்பு மேற்கு நோக்கி 130 செ.மீ. வரை நகர்ந்து இருக்கிறது. மேலும் பல்வேறு பகுதிகளில் நிலப்பரப்பு ஒரு மீட்டருக்கும் அதிகமாக நகர்ந்து இருக்கிறது. இது பற்றிய தகவல்கள் அந்நாட்டில் உள்ள அதிநவீன ஜி.பி.எஸ். ஸ்டேஷன்கள் மூலம் சேகரிக்கப்பட்டுள்ளன.

மேலும் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 62 ஆக அதிகரித்து இருக்கிறது. மேலும் 300-க்கும் அதிகமானோருக்கு காயங்களும், 20 பேருக்கு பலத்த காயங்களும் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுவரை நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 31 ஆயிரத்து 800 பேர் முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள், அவசகர கால பணிகள் மற்றும் அடுத்து மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் ஃபுமியோ கிசிடா தலைமையிலான அரசு முக்கிய ஆலோசனை நடத்தவிருக்கிறது. ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- நிலநடுக்கமானது ஹாங்சோவின் மேற்கு கடற்கரை அருகே 46 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
- சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
ஜப்பானின் ஹாங்சோ பகுதியில் மீண்டும் பலமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பிற்பகல் 2.29 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகி உள்ளது.
இந்த நிலநடுக்கமானது ஹாங்சோவின் மேற்கு கடற்கரை அருகே 46 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
ஆனால் இதுவரை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
- சில இடங்களில் வீடுகளை விட்டு வெளியே வந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
- ஜப்பானின் மேற்கு கடலோர பகுதிகளில் இந்த நிலநடுக்கம் பதிவானது.
டோக்கியோ:
ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.4 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர். சில இடங்களில் வீடுகளை விட்டு வெளியே வந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
ஜப்பானின் மேற்கு கடலோர பகுதிகளில் இந்த நிலநடுக்கம் பதிவானது. நிலநடுக்கத்தை தொடர்ந்து தற்போது வரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. கடந்த ஜனவரி மாதம் இந்த பிராந்தியத்தில் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தது. அந்த பாதிப்பில் இருந்தே இன்னும் முழுமையாக மீளாத நிலையில், தற்போது மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜப்பானின் தெற்கு கடற்கரை பகுதியான கியுஷா தீவில் இன்று காலை உள்ளூர் நேரப்படி, 8.48 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
மியாசகியை மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் சுனாமி ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் பகுதியில் ஜப்பான் அமைந்துள்ளதால், அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். உலகில் ஏற்படும் நிலநடுக்கங்களில் 20 சதவீத நிலநடுக்கங்கள் ஜப்பானில் நிகழ்கின்றன. #Earthquake






