என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாகுபலி"

    • சிறப்புத் தோற்றத்தில் வனிதா விஜயகுமார் நடித்துள்ளார்.
    • சரண் இயக்கத்தில் நடிகர் அஜித், பூஜா நடிப்பில் 2004-இல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் ‘அட்டகாசம்’.

    தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள புதுப்படங்கள் மற்றும் மக்களின் மனதில் நீங்கா இடம்பெற்ற படங்கள் ரீ-ரிலீஸ் என நாளை வெளியாக படங்கள் குறித்து பார்ப்போம்...

    1. ஆர்யன்

    குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ராட்சசன், கட்டா குஸ்தி, லால் சலாம் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் விஷ்ணு விஷால். இவர் தற்போது 'ஆர்யன்' படத்தில் நடித்துள்ளார். பிரவின் இயக்கத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சௌத்திரி, சாய் ரோனக், தாரக் பொன்னப்பா, மாலதி பார்வதி, அவினாஷ், அபிஷேக், ஜோசப் ஜார்ஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் விஷ்ணு விஷால் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

    2. ஆண் பாவம் பொல்லாதது

    2023-ஆம் ஆண்டு அறிமுக இயக்குநரான ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் இணைந்து நடித்த ''ஜோ'' திரைப்படம் வெளியாகி மக்களிடையே விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகும் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து ''ஜோ'' பட ஜோடி அடுத்து மீண்டும் ஒன்றாக இணைந்து நடித்துள்ள படம் 'ஆண் பாவம் பொல்லாதது'. இப்படத்தை அறிமுக இயக்குநரான கலையரசன் தங்கவேல் இயக்கியுள்ளார். இச்சமுதாயத்தில் ஆண்கள் படும் கஷ்டத்தை பற்றி பேசும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 'ஆண்பாவம் பொல்லாதது' படம் நாளை முதல் திரையரங்குகளில் காணலாம்.

    3. தடை அதை உடை

    காந்திமதி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் அறிவழகன் முருகேசன் தயாரித்துள்ள படம் 'தடை அதை உடை'. இந்த படத்தில் அங்காடித்தெரு படத்தின் மூலம் நடிகரான மகேஷ், குணா பாபு, பாரிவள்ளல், திருவாரூர் கணேஷ், மஹாதீர் முகமது ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர். இவர்களுடன் நாகராஜ், டெல்டா சரவணன், ஆம்பல் சதீஷ், எம்.கே.ராதாகிருஷ்ணன், வேல்முருகன், காத்து கருப்பு கலை, பாக்கியம் கவுதமி, சுபா, சூரியப்ரதாபன் ஆகியோரும் நடித்திருக்கின்றனர். இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

    4. தேசிய தலைவர்

    சுதந்திர போராட்ட வீரர் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கையில் நடந்த சில முக்கிய சம்பவங்களை கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம் 'தேசிய தலைவர்'. எஸ்.எஸ்.ஆர்.சத்யா தயாரிப்பில், அரவிந்த்ராஜ் இப்படத்தை இயக்கி உள்ளார். ஜெ.எம் பஷீர் முத்துராமலிங்க தேவராக நடித்துள்ளார். இப்படத்தை நாளை முதல் திரையரங்குகளில் காணலாம்.

    5. ராம் அப்துல்லா ஆண்டனி

    சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ்பெற்றவர் பூவையார். இவர் தற்போது இயக்குனர் ஜெயவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ராம் அப்துல்லா ஆண்டனி' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அன்னை வேளாங்கன்னி ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தில் அஜய் அர்னால்ட் , அர்ஜுன், வேல ராமமூர்த்தி, தலைவாசல் விஜய், சாய் தீனா என பலர் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் வனிதா விஜயகுமார் நடித்துள்ளார். இப்படம் தவறான பாதையில் செல்லும் பள்ளி மாணவர்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. நாளை முதல் திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது.

    6. 'காந்தாரா சாப்டர்1' ஆங்கில வெர்ஷன்

    2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் 'காந்தாரா'. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்தது. இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவான 'காந்தாரா சாப்டர்1' கடந்த 2-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. பலதரப்பு மக்களால் ரசிக்கப்படும் 'காந்தாரா சாப்டர்1' படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இப்படத்தின் ஆங்கில வெர்ஷன் நாளை முதல் வெளியாக உள்ளது.

    7. மெசஞ்சர்

    ரமேஷ் இயக்கியுள்ள படம் 'மெசஞ்சர்'. காதல் தோல்வியில் தன் உயிரை மாய்த்துக் கொள்ள நினைக்கும் கதாநாயகனை ஒரு முகநூல் செய்தி தடுக்கிறது. அதன் பின் என்ன நடக்கிறது என்பதை கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம் நாளை முதல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

    8. பரிசு

    சமூகத்தின் அனைத்து இடையூறுகளையும் தடைகளையும் புறக்கணிப்புகளையும் நிராகரிப்புகளையும் கடந்து ஒரு பெண் நினைத்தால் சாதிக்க முடியும், எடுத்த காரியத்தில் வெற்றி பெற முடியும் என்று சொல்கிற கதை தான் 'பரிசு'. சின்னச் சின்ன சலனங்களுக்கும் பருவக்கவர்ச்சிகளுக்கும் இடம் தராமல் லட்சியத்தை நோக்கிச் சென்று அடையும் ஒரு பெண்ணின் கதை. இப்படம் நாளை முதல் திரையரங்குகளில் காணலாம்.

    9 பாகுபலி

    ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, நாசர், ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் என ஒரு ரசிகர்கள் பட்டாளமே நடித்த பிரமாண்ட படம் 'பாகுபலி'. இப்படத்தின் இரு பாகங்களும் ஒரே படமாக வெளியாவதே `Baahubali: The Epic' இப்படம் நாளை முதல் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது.

    10. அட்டகாசம்

    சரண் இயக்கத்தில் நடிகர் அஜித், பூஜா நடிப்பில் 2004-இல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் 'அட்டகாசம்'. இந்த படத்தில் அஜித் இரண்டு கேரக்டர்களில் நடித்திருந்தார். இந்தப் படத்தை விஜய்ம் சினி கம்பைன்ஸ் தயாரித்திருந்தது. இந்தப் படத்தை நாளை முதல் திரையரங்குகளில் மீண்டும் வெளியாக உள்ளது. 

    • ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன் மற்றும் செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
    • ஆர்யன் படத்தின் தெலுங்கு வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக விஷ்ணு விஷால் அறிவித்துள்ளார்.

    'வெண்ணிலா கபடிகுழு', 'நீர்ப்பறவை', 'முண்டாசுப்பட்டி', 'ராட்சசன்', 'கட்டா குஸ்தி' போன்ற படங்களின் மூலம் பிரபலமானவர் விஷ்ணு விஷால். இவர் கடைசியாக ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய 'லால் சலாம்' திரைப்படத்தில் நடித்து இருந்தார்.

    இதனை தொடர்ந்து தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஆர்யன்'. இப்படத்தை அறிமுக இயக்குனரான பிரவீன் இயக்கியுள்ளார்.

    இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன் மற்றும் செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் விஷ்ணு விஷாலின் சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

    ஜிப்ரான் இசையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் சமீபத்தில் வெளியானது. மேலும் படத்தின் டிரெய்லரும் அண்மையில் வெளியாகி கவனம் பெற்றது.

    இப்படம் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் அக்டோபர் மாதம் 31-ந்தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் ஆர்யன் படத்தின் தெலுங்கு வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக விஷ்ணு விஷால் அறிவித்துள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பபில், ஆகஸ்ட் 31 அன்று பாகுபலி தி எபிக் மற்றும் ரவி தேஜாவின் மாஸ் ஜாதாரா படங்கள் வெளியாக உள்ளதால் ஆர்யன் படம் தெலுங்கில் மட்டும் நவம்பர் 7 ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

    ராஜமௌலி இயக்கிய பாகுபலி 1 மற்றும் 2 ஆம் பாகங்கள் ஒரே திரைப்படமாக இணைக்கப்பட்டு அக்டோபர் 31 அன்று வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.   

    • பாகுபலி: தி எபிக் அக்டோபர் 31-ஆம் தேதி பல மொழிகளில் வெளியாக உள்ளது.
    • இப்படத்தை படக்குழு ஐ மேக்ஸ் தொழில் நுட்பத்தில் வெளியிடுகின்றனர்.

    பிரபாஸ் நடிப்பில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களும் மாபெரும் வெற்றியை பெற்றன. இந்த படத்தில் பிரபாஸ், ராணா தகுபதி, அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர், சத்யராஜ் உள்ளிட்டோர் பலர் நடித்துள்ளனர்.

    இந்நிலையில், பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு பாகத்தையும் ஒன்றாக்கி சில காட்சிகளை நீக்கி ஒரே பாகமாக பாகுபலி: தி எபிக் என்று புதிய பதிப்பாக 2025 அக்டோபர் 31-ஆம் தேதி பல மொழிகளில் வெளியாக உள்ளது.

    இப்படத்தை ரசிகர்களுக்கு கூடுதல் கொண்டாட்டம் மற்றும் திரை அனுபவத்தை தருவதற்காக படத்தை படக்குழு ஐ மேக்ஸ் தொழில் நுட்பத்தில் வெளியிடுகின்றனர்.

    மேலும், பாகுபலி: தி எபிக் திரைப்படம் டால்பி சினிமாவில் டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மாஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ளது என்று படக்குழு அறிவித்துள்ளது.

    • பிரபாஸ் ரசிகர்கள் பாகுபலி பிராஞ்சைஸின் புதிய ரிலீசை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
    • புதிய பதிப்பு 2025 அக்டோபர் 31-ஆம் தேதி பல மொழிகளில் வெளியாக உள்ளது.

    இன்டர்நேஷனல் சென்சேஷன் எஸ்.எஸ்.ராஜமெளலி, மகேஷ் பாபுவின் பிறந்தநாளில் வெளியிட்ட SSMB29-ன் "ப்ரீ-லுக்" போஸ்டர் மூலம் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தார். அதிலிருந்து தொடர்ந்து, முழு லுக் எப்படி இருக்கும் என்ற யூகங்களும் பேச்சுகளும் ரசிகர்கள் மத்தியில் சூடுபிடித்து வருகின்றன. படக்குழுவினர், முழு லுக் நவம்பர் 2025-ல் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

    இதற்கிடையில், பிரபாஸ் ரசிகர்கள் பாகுபலி பிராஞ்சைஸின் புதிய ரிலீசை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். "Baahubali: The Epic" என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய பதிப்பில், கூடுதல் காட்சிகள், நீளமான ரன்டைம், சில சர்ப்ரைஸ்களும் இருப்பதாக பேசப்படுகிறது.

    இந்த பாகுபலி:தி எபிக் வெர்ஷனில் பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு பாகத்தையும் ஒன்றாக்கி சில காட்சிகளை நீக்கி ஒரே பாகமாக வெளியிட இருக்கின்றனர்.

    இப்படத்தை ரசிகர்களுக்கு கூடுதல் கொண்டாட்டம் மற்றும் திரை அனுபவத்டஹி தருவதற்காக படத்தை படக்குழு ஐ மேக்ஸ் தொழில் நுட்பத்தில் வெளியிடுகின்றனர்.

    இந்த படத்தில் பிரபாஸ், ராணா தகுபதி, அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர், சத்யராஜ் உள்ளிட்டோர் பலர் நடித்துள்ளனர். புதிய பதிப்பு 2025 அக்டோபர் 31-ஆம் தேதி பல மொழிகளில் வெளியாக உள்ளது.

    • மகேஷ் பாபுவின் பிறந்தநாளில் வெளியிட்ட SSMB29-ன் “ப்ரீ-லுக்” போஸ்டர் மூலம் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது.
    • இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்,

    இன்டர்நேஷனல் சென்சேஷன் எஸ்.எஸ்.ராஜமெளலி, மகேஷ் பாபுவின் பிறந்தநாளில் வெளியிட்ட SSMB29-ன் "ப்ரீ-லுக்" போஸ்டர் மூலம் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தார். அதிலிருந்து தொடர்ந்து, முழு லுக் எப்படி இருக்கும் என்ற யூகங்களும் பேச்சுகளும் ரசிகர்கள் மத்தியில் சூடுபிடித்து வருகின்றன. படக்குழுவினர், முழு லுக் நவம்பர் 2025-ல் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

    இதற்கிடையில், பிரபாஸ் ரசிகர்கள் பாகுபலி பிராஞ்சைஸின் புதிய ரிலீசை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். "Baahubali: The Epic" என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய பதிப்பில், கூடுதல் காட்சிகள், நீளமான ரன்டைம், சில சர்ப்ரைஸ்களும் இருப்பதாக பேசப்படுகிறது.

    இந்த பாகுபலி:தி எபிக் வெர்ஷனில் பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு பாகத்தையும் ஒன்றாக்கி சில காட்சிகளை நீக்கி ஒரே பாகமாக வெளியிட இருக்கின்றனர்.

    சமீபத்திய தகவலின்படி, Baahubali: The Epic-ன் டீசர், 2025 ஆகஸ்ட் 14 முதல் வெளியாகும் War 2 மற்றும் Coolie படங்களுடன் திரையரங்குகளில் திரையிடப்படலாம் என கூறப்படுகிறது.

    இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்,

    இந்த படத்தில் பிரபாஸ், ராணா தகுபதி, அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர், சத்யராஜ் உள்ளிட்டோர் பலர் நடித்துள்ளனர். புதிய பதிப்பு 2025 அக்டோபர் 31-ஆம் தேதி பல மொழிகளில் வெளியாக உள்ளது. 

    • பாகுபலி திரைப்படம் உலகளவில் 1800 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.
    • பாகுபலி திரைப்படம் வெளியாகி 10 வருடங்கள் முடிவடைந்துள்ளது.

    2015 ஆம் ஆண்டு எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா தகுபதி, அனுஷ்கா, நாசர், சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன் மற்றும் பலர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் பாகுபலி. இப்படத்தின் இசையை எம்.எம் கீரவானி மேற்கொண்டார். இப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற நிலையில், பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

    பாகுபலி திரைப்படம் உலகளவில் 1800 கோடிக்கும் மேல் வசூலித்து இந்திய சினிமாவை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றது.

    இந்நிலையில் திரைப்படம் வெளியாகி 10 வருடங்கள் முடிவடைந்துள்ளது. இதையொட்டி 'பாகுபலி' 2 பாகங்களை ஒரே படமாக 'பாகுபலி - The Epic' என்ற பெயரில் வரும் அக். 31ம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படும் என அப்படங்களின் இயக்குநர் ராஜமவுளி அறிவித்துள்ளார்.

    • 2015 ஆம் ஆண்டு எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கத்தில் வெளியானது பாகுபலி திரைப்படம்.
    • பாகுபலி திரைப்படம் உலகளவில் 1800 கோடிக்கும் மேல் வசூலித்தது.

    2015 ஆம் ஆண்டு எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா தகுபதி, அனுஷ்கா, நாசர், சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன் மற்றும் பலர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது பாகுபலி திரைப்படம். இப்படத்தின் இசையை எம்.எம் கீரவானி மேற்கொண்டார். திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. இப்படம் இரு பாகங்களாக வெளியிடப்பட்டது. இரண்டாம் பாகம் 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

    பாகுபலி திரைப்படம் உலகளவில் 1800 கோடிக்கும் மேல் வசூலித்து இந்திய சினிமாவை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றது.

    இந்நிலையில் திரைப்படம் வெளியாகி 10 வருடங்கள் முடிவடைந்துள்ளது. இதனால் படத்தை ரீரிலீஸ் செய்யுமாறு நெட்டிசன்கள் படக்குழுவிடம் இணையத்தில் சில மாதங்களாக கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர்.

     

    இதற்கு தற்பொழுது பதில் கூறும் வகையில் படக்குழு பாகுபலி பாகம் 1 திரைப்படத்தை இந்த வருடம் அக்டோபர் மாதம் மீண்டும் வெளிவிடுவதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தில் இருக்கின்றனர். இப்படம் ரீரிலீஸ்-லும் மாபெரும் வெற்றியை பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    • இப்படத்தின் இசையை எம்.எம் கீரவானி மேற்கொண்டார்.
    • இரண்டாம் பாகம் 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

    2015 ஆம் ஆண்டு எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா தகுபதி, அனுஷ்கா, நாசர், சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன் மற்றும் பலர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது பாகுபலி திரைப்படம். இப்படத்தின் இசையை எம்.எம் கீரவானி மேற்கொண்டார். திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. இப்படம் இரு பாகங்களாக வெளியிடப்பட்டது. இரண்டாம் பாகம் 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

    பாகுபலி திரைப்படம் உலகளவில் 1800 கோடிக்கும் மேல் வசூலித்து இந்திய சினிமாவை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றது.

    இந்நிலையில் திரைப்படம் வெளியாகி 10 வருடங்கள் முடிவடைந்துள்ளது. இதனால் படத்தை ரீரிலீஸ் செய்யுமாறு நெட்டிசன்கள் படக்குழுவிடம் இணையத்தில் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். நெட்டிசனின் கோரிக்கை ஒன்றுக்கு படக்குழு பதிலளித்துள்ளது. அதில் இந்த வருடம் பாகுபலி திரைப்படத்தை இந்தாண்டு ரீரிலீஸ் செய்யனுமா? என கேள்வி எழுப்பியுள்ளது. இதனால் இந்தாண்டு ஜூன் மாதம் திரைப்படம் மீண்டும் ரிலீசாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • யானையை கண்காணிக்க பைரவா, வளவன் என்ற 2 மோப்பநாயக்கள் வரவழைக்கப்பட்டன.
    • யானை தொடர்ந்து இடம்பெயர்ந்து கொண்டே இருக்கிறது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம், ஓடந்துறை, தாசம்பாளையம், சமயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளாக பாகுபலி என மக்களால் செல்லமாக அழைக்கப்படும் ஒற்றைக் காட்டு யானை சுற்றி திரிகிறது.

    இந்த யானை அதிகாலையில் வனத்தை விட்டு வெளியேறி சமயபுரத்தில் சாலையை கடந்து அருகே உள்ள தாசம்பாளையம், கிட்டாம்பாளையம், குரும்பனூர் பகுதிகளில் நுழைந்து பயிர்களை சேதம் செய்கிறது. பின்னர் மாலையில் மீண்டும் வனத்திற்கு சென்று விடுகிறது.

    இந்த நிலையில் பாகுபலி யானை அவுட்டுக்காயினை கடித்து வாயில் காயத்துடன் சுற்றி திரிவதாக வன ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    இச்சம்பவம் குறித்து அறிந்த மேட்டுப்பாளையம் வனத்துறையினர் நேற்று காலை முதல் மாலை வரை ஒரு குழுவிற்கு 6 பேர் வீதம் 2 குழுக்களை அமைத்த பாகுபலி யானையை தீவிரமாக கண்காணித்தனர்.

    ஆனால் யானை வனத்துறையினரின் கண்களில் சிக்காமல் தொடர்ந்து போக்கு காட்டி வருகிறது.இதனையடுத்து வனத்துறையினர் தொடர்ந்து அதனை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் சட்டவிரோதகுற்ற செயல்கள் ஏதும் நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்க கோவை சாடிவயலில் இருந்து பைரவா, வளவன் என்ற 2 மோப்பநாயக்கள் வரவழைக்கப்பட்டன.

    இன்று 2-வது நாளாக வனத்துறையினர் மோப்ப நாய் உதவியுடன் பாகுபலி யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனத்துறையினர் கூறும்போது,

    வன ஆர்வலர்கள் கூறு வது போல் பாகுபலி யானை அவுட்டு காயினை கடித்திருந்தால் தசைப்பகுதி கிழிந்திருக்கும். அதன் நடமாட்டம் குறைந்திருக்கும். ஆனால் தற்போது யானை சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது.

    இந்த காயம் இரு யானைகளுக்கு இடையேயான மோதலில் ஏற்பட்ட காயம். யானை தொடர்ந்து இடம்பெயர்ந்து கொண்டே இருப்பதால் அதற்குரிய சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது. எனினும் யானையினை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • ஊருக்குள் வந்த பாகுபலி யானை பாக்கு மரங்களை உடைத்து விழுங்கியது.
    • வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாகுபலியை மீண்டும் காட்டுக்குள் விரட்டியடித்தனர்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து அடிக்கடி வெளியே வந்த ஒற்றை ஆண் காட்டுயானை சமயபுரம், நெல்லித்துரை, குரும்பனூர், தாசம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி வந்தது.நீண்ட தந்தங்கள், மிகப்பெரிய உருவத்துடன் காட்சியளித்த அந்த யானைக்கு உள்ளூர் மக்கள் பாகுபலி என்று பெயரிட்டு அழைத்து வந்தனர்.

    இது பெரும்பாலும் இரவு நேரத்தில் வனத்தை விட்டு வெளியே வந்து கிராமங்களுக்கு அருகில் உள்ள விவசாய தோட்டத்தில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்துவது வழக்கம்.

    இந்த நிலையில் பாகுபலி யானைக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாயில் காயம் ஏற்பட்டது. எனவே அதற்கு சிகிச்சை அளிப்பது என கால்நடை மருத்துவ குழுவினர் முடிவு செய்தனர். இதற்காக அந்த யானையை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. ஆனாலும் பாகுபலி சிக்கவில்லை.

    இதற்கிடையே யானைக்கு வாயில் இருந்த காயம் தானாகவே சரியாகி விட்டது. எனவே பாகுபலி யானையை பிடிக்க வேண்டாம் என மருத்துவ குழுவினர் அறிக்கை அளித்தனர்.

    இதனை தொடர்ந்து காட்டுயானை பாகுபலி வழக்கமான வலசை பாதையில் இருந்து விலகி அடர் வனத்திற்குள் சென்று விட்டது. அதன்பிறகு அந்த யானையை ஊருக்குள் பார்க்க முடியவில்லை. எனவே அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்த நிலையில் பாகுபலி யானை 2 மாதங்களுக்கு பிறகு இன்று அதிகாலை கல்லார் பகுதியில் உள்ள பாக்கு தோப்புக்கு வந்தது. அங்கு இருந்த பாக்கு மரங்களை உடைத்து விழுங்கியது.

    இதனை தற்செயலாக பார்த்த விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின்பேரில் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாகுபலியை மீண்டும் காட்டுக்குள் விரட்டியடித்தனர்.

    சுமார் 2 மாத இடைவெளிக்கு பிறகு பாகுபலி யானையின் நடமாட்டம் மீண்டும் உறுதி செய்யப்பட்டு உள்ளதால், அதனை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    • கடந்தாண்டு இயக்குனர் மகேஷ் பாபு இயக்கத்தில் உருவாகியுள்ள 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' திரைப்படத்தில் அனுஷ்கா நடித்தார்
    • மலையாளத்தில் ஜெயசூர்யா நடிப்பில் ரூ.90 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள இப்படத்தில் கதாநாயகியாக அனுஷ்கா நடிக்கவுள்ளார்

    தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் அனுஷ்கா. பல படங்களில் தன்னுடைய கம்பீரமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை ஏற்றி அதை குறைக்க முடியாமல் சிரமப்பட்டார். அதனால் பட வாய்ப்புகளும் குறைந்தன. பாகுபலி 2 படத்துக்கு பிறகு சிலகாலம் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

    இதனையடுத்து கடந்தாண்டு இயக்குநர் மகேஷ் பாபு இயக்கத்தில் உருவாகியுள்ள 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' திரைப்படத்தில் அனுஷ்கா நடித்தார். அப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

    இதனையடுத்து மலையாளத்தில் ஜெயசூர்யா நடிப்பில் ரூ.90 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள படத்தில் கதாநாயகியாக அனுஷ்கா நடிக்கவுள்ளார். இதுவரை தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் நடித்து வந்த அனுஷ்கா, இப்படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகி இருக்கிறார்.

    இந்நிலையில் தற்போது இயக்குநர் கிரிஷ் இயக்கத்தில் காதி என்கிற படத்தில் அனுஷ்கா நடிக்கிறார். இப்படத்தில் விக்ரம் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

    இப்படத்தை ஃபர்ஸ்ட் பிரேம் என்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தில் ஒடிடி உரிமையை அமேசான் நிறுவனம் வாங்கியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • எபிக், ஆக்‌ஷன் மற்றும் ஃபேண்டசி கதைக்களத்தில் படம் இயக்குவதில் திறம் பெற்றவர் ராஜமௌலி
    • ராஜமௌலி இதில் குழந்தைப் போன்று முக பாவனைக் கொடுத்து மிக அழகாக ஆடியுள்ளார்.

    இந்திய சினிமாவை அடுத்தக்கட்டதிற்கு எடுத்துச் சென்ற பெருமை இயக்குனர் ராஜமௌலிக்கு உண்டு. எபிக், ஆக்ஷன் மற்றும் ஃபேண்டசி கதைக்களத்தில் படம் இயக்குவதில் திறம் பெற்றவர் ராஜமௌலி. 2009 ஆம் ஆண்டு வெளியான 'மாவீரன்' அதைத் தொடர்ந்து 'நான் ஈ' படத்தை இயக்கினார்.

    'பாகுபலி' மற்றும் 'ஆர் ஆர் ஆர்' திரைப்படம் இவருக்கு மிகப் பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. இந்நிலையில் ராஜமௌலி அவரின் மனைவி ரமாவுடன் நடனமாடும் வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

    அதில் தெலுங்கு பாடலான 'அந்தமைன்னா பிரேமரனி' பாட்டிற்கு நடனமாடியுள்ளனர். அவர்களின் குடும்ப திருமண நிகழ்ச்சியில் நடனமாடுவதற்கு பயிற்சி செய்த வீடியோவாகும் இது. ராஜமௌலி இதில் குழந்தைப் போன்று முக பாவனைக் கொடுத்து மிக அழகாக ஆடியுள்ளார். 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    ×