search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Krish"

  • பிரேம்ஜியும் நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பல திறமைகளை கொண்டு திரையுலகில் இயங்கி வருகிறார்.
  • வெங்கட்பிரபு எக்ஸ் தளத்தில் பிரேம்ஜியின் திருமணம் குறித்த தகவலை சில நாட்களுக்கு முன் வெளியிட்டார்.

  தமிழ் சினிமாவின் பன்முக திறமையாளர்களில் ஒருவரான கங்கை அமரனுக்கு வெங்கட் பிரபு, பிரேம்ஜி என இரு மகன்கள் உள்ளனர். இவர்களில் வெங்கட் பிரபுவுக்கு திருமணமாகி விட்ட நிலையில் அவர் சினிமாவில் பிரபலமான இயக்குநராக வலம் வருகிறார்.

  அதேசமயம் பிரேம்ஜியும் நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பல திறமைகளை கொண்டு திரையுலகில் இயங்கி வருகிறார். 45 வயதாகும் பிரேம்ஜி நீண்ட நாட்களாக திருமணம் செய்துக் கொள்ளாமல் இருந்தார்.

  இந்நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் அவரது அண்ணனான வெங்கட்பிரபு எக்ஸ் தளத்தில் பிரேம்ஜியின் திருமணம் குறித்த தகவலை சில நாட்களுக்கு முன் வெளியிட்டார்.

  பிரேம்ஜிக்கு இன்று  ஆம் தேதி திருத்தணி முருகன் கோவிலில் மிக நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் கல்யாணம் நடந்து முடித்தது. இந்த திருமண நிகழ்ச்சியில் கங்கை அமரன், வெங்கட் பிரபு, நடிகர் ஜெய், வைபவ், பாடகர் கிருஷ் போன்றவர் கலந்துக் கொண்டனர். பிரேம்ஜி மணப்பெண்ணான இந்துவிற்கு தாலி கட்டிவிட்டு கன்னத்தில் முத்தம் கொடுத்தார். இந்த வீடியோ காட்சி தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

  உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


  • கடந்தாண்டு இயக்குனர் மகேஷ் பாபு இயக்கத்தில் உருவாகியுள்ள 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' திரைப்படத்தில் அனுஷ்கா நடித்தார்
  • மலையாளத்தில் ஜெயசூர்யா நடிப்பில் ரூ.90 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள இப்படத்தில் கதாநாயகியாக அனுஷ்கா நடிக்கவுள்ளார்

  தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் அனுஷ்கா. பல படங்களில் தன்னுடைய கம்பீரமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை ஏற்றி அதை குறைக்க முடியாமல் சிரமப்பட்டார். அதனால் பட வாய்ப்புகளும் குறைந்தன. பாகுபலி 2 படத்துக்கு பிறகு சிலகாலம் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

  இதனையடுத்து கடந்தாண்டு இயக்குநர் மகேஷ் பாபு இயக்கத்தில் உருவாகியுள்ள 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' திரைப்படத்தில் அனுஷ்கா நடித்தார். அப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

  இதனையடுத்து மலையாளத்தில் ஜெயசூர்யா நடிப்பில் ரூ.90 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள படத்தில் கதாநாயகியாக அனுஷ்கா நடிக்கவுள்ளார். இதுவரை தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் நடித்து வந்த அனுஷ்கா, இப்படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகி இருக்கிறார்.

  இந்நிலையில் தற்போது இயக்குநர் கிரிஷ் இயக்கத்தில் காதி என்கிற படத்தில் அனுஷ்கா நடிக்கிறார். இப்படத்தில் விக்ரம் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

  இப்படத்தை ஃபர்ஸ்ட் பிரேம் என்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தில் ஒடிடி உரிமையை அமேசான் நிறுவனம் வாங்கியுள்ளது.

  உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

  • மலையாள திரைஉலகில் மிகப் பெரிய வசூல் செய்த படத்தின் பட்டியலில் 5-வது இடம் பெற்றது
  • உலக அளவில் 'பாக்ஸ் ஆபீஸ்' கலெக்ஷன் ரூ.100 கோடிக்கும் மேல் தாண்டியது

  மலையாள மொழியில் தயாராகி வெளியான படம் 'பிரேமலு'.இந்த படத்தை பிரபல இயக்குனர் கிரிஷ் இயக்கி உள்ளார். விஷ்ணுவிஜய் இசையமைத்து உள்ளார்.இந்த படத்தில் மமிதா பைஜூ, நஸ்லேன் நடித்து உள்ளனர்.

  இந்த படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. உலக அளவில் 'பாக்ஸ் ஆபீஸ்' கலெக்ஷன் ரூ.100 கோடிக்கும் மேல் தாண்டியது. மலையாள திரைஉலகில் மிகப் பெரிய வசூல் செய்த படத்தின் பட்டியலில் 5-வது இடம் பெற்றது.

  இந்த படத்தை ஓடிடி தளமான டிஸ்னி ப்ளஸ்,ஹாட் ஸ்டார், வாங்கியது. பெரும் வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து இந்த படம் தெலுங்கு மொழியில் 'டப்பிங்' செய்து வெளியிடப்பட்டது.

  இந்நிலையில் தமிழ் மொழியிலும் இப்படத்தை 'டப்பிங்' செய்து வெளியிடலாம் என்று முடிவு செய்யப்பட்டது. தற்போது வருகிற 15- ந்தேதி அன்று தமிழில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

  இதையொட்டி தமிழ் ரசிகர்கள் ஏராளமானோர் இணையதளத்தில் மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர்

  • தற்போது ’கிரிஷ் லைவ் இன் துபாய்’ என்ற இசை சுற்றுலாவில் பாடி வருகிறார்.
  • நடிகர் விஜய் கையெழுதிட்ட அவரின் ஃபோனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்

  பின்னணி பாடகரான கிரிஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பாடகர்களில் ஒருவர். நடிகை சங்கீதாவின் கணவன் ஆவார்.

  தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான படங்களான வேட்டையாடு விளையாடு, உன்னாலே உன்னாலே, வேட்டைகாரன், வாரணம் ஆயிரம், என்றென்றும் புன்னகை, அயன் போன்ற படங்களில் பல ஹிட்டான பாடல்களை பாடியுள்ளார்.

  தற்போது 'கிரிஷ் லைவ் இன் துபாய்' என்ற இசை சுற்றுலாவில் பாடி வருகிறார்.தற்போது 'கிரிஷ் லைவ் இன் துபாய்' என்ற இசை சுற்றுலாவில் பாடி வருகிறார்.இந்நிலையில் அவரது எக்ஸ் பக்கத்தில் நடிகர் விஜய் கையெழுதிட்ட அவரின் ஃபோனின் புகைப்படத்தை வெளியிட்டு அத்துடன் 'லவ் யூ அண்ணா' #GOAT என பதிவிட்டுள்ளார்.

  கிரிஷ் இயக்கத்தில் நந்தா - ஈடன் குரைக்கோஸ் நடிப்பில் வெளியாகி இருக்கும் ழகரம் படத்தின் விமர்சனம். #Zhagaram #ZhagaramReview #Nandha #EdenKuriakosse
  தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் நந்தாவும், நாயகி ஈடன் குரைக்கோசும் காதலிக்கிறார்கள். கருத்து வேறுபாட்டால் சிலகாலம் இவர்கள் பிரிந்து இருக்க, தொல்பொள் ஆராய்ச்சியாளரான நந்தாவின் தாத்தா இறந்துவிடுகிறார். 

  இந்த நிலையில், நந்தாவை சந்திக்க வரும் பெரியவர், நந்தாவிடம் அவரது தாத்தாவின் இறப்பு இயற்கையானதில்லை என்றும், மர்ம கும்பல் ஒன்று அவரது தாத்தாவை கொன்றுவிட்டதாகவும் கூறுகிறார். நந்தாவின் தாத்தா தனது தொல்பொருள் ஆராய்ச்சியில் புதையல் இருக்கும் இடத்தை அவர் கண்டுபிடித்துவிட்டதாக கூறுகிறார். மேலும் அந்த இடத்திற்கு செல்வதற்கு தேவையான தடயங்கள், வழித்தடங்கள் அவருக்கு மட்டும் தெரியும் என்றும் கூறுகிறார்.  இதற்கிடையே நந்தாவின் அப்பா, அவரது தாத்தா பரிசாக கொடுத்ததாக ஒரு பொருளை கொடுக்கிறார். அதனை பிரித்துப் பார்க்கும் போது அதில் ஒரு பகடைக்காய் சில குறியீடுகளுடன் இருக்கிறது. அதை வைத்து என்ன செய்வதென்று புரியாத நந்தா, தனது நண்பர்களின் துணையோடு அது பற்றிய தகவல்களை சேகரிக்கிறார். மேலும் அந்த புதையல் இருக்கும் இடத்தையும் தேடி வருகிறார்.

  இந்த நிலையில், அந்த புதையலை தங்களிடம் கொடுக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் நந்தாவின் குடும்பத்தை கொன்றுவிடுவதாகவும் மர்ம கும்பல் ஒன்று மிரட்டுகிறது.  கடைசியில், நந்தா புதையல் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தாரா? தனது குடும்பத்தை காப்பாற்றினாரா? தனது காதலியுடன் இணைந்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே மர்மம் நிறைந்த மீதிக்கதை.

  நந்தா தனது தாத்தா விட்ட பணியை தொடர வேண்டிய ஒரு கதாபாத்திரத்தில் அலட்டல் இல்லாமல் நடித்துவிட்டு சென்றிருக்கிறார். ஈடன் குரைக்கோஸ் அழகு பதுமையாக வந்து செல்கிறார். விஷ்ணு பரத், மீனேஷ் கிருஷ்ணா, சந்திர மோகன், சுபாஷ் கண்ணன் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.  உணவு தரக்கூடிய பொருள் தான் உலகத்திலேயே பெரிய பொக்கிஷம் என்ற கருவை மையமாக வைத்து இந்த படத்தை இயக்கியருக்கிறார் கிரிஷ். அத்துடன் தமிழர்களின் தொன்மை, தமிழ் மொழியின் பெருமையை படத்தில் காட்டியிருக்கிறார்கள். குறைந்த பட்ஜெட்டில் பாராட்டும்படியாக உருவாக்க்கியிருக்கிறார்கள்.

  தரண்குமாரின் பின்னணி இசை படத்திற்கு பலம். பரத்வாஜ், ஜோ, பிரின்ஸ்தாஸ் ஒளிப்பதிவும் அருமை.

  மொத்தத்தில் `ழகரம்' உணவின் முக்கியத்துவம். #Zhagaram #ZhagaramReview #Nandha #EdenKuriakosse

  பிதாமகன், தனம், உயிர் உள்ளிட்ட பல படங்களை நடித்து பிரபலமான சங்கீதா மீது, அவரது தாய் பானுமதி புகார் கூறியுள்ளார். #Sangeetha
  பிதாமகன், தனம், உயிர், காளை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சங்கீதா. பாடகர் கிரிசை திருமணம் செய்து கொண்டுள்ளார். சங்கீதா மீது அவரது தாய் பானுமதி ‘வயதான என்னை வெளியேற்றிவிட்டு நான் வசித்து வரும் வீட்டை அபகரிக்க முயல்கிறார்’ என தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

  புகார் குறித்து விளக்கம் அளிக்க நேரில் ஆஜராகுமாறு சங்கீதாவுக்கு ஆணையம் சம்மன் அனுப்பியது. இரு நாட்களுக்கு முன் கணவர் கிரிசுடன் ஆணையத்தில் ஆஜரானார். சங்கீதாவின் அம்மா பானுமதியின் புகார் குறித்து போலீசார் கூறியதாவது:-

  ‘எம்.ஜி.ஆரை வைத்து பத்து படங்களுக்கும் மேல் தயாரித்த கே.ஆர்.பாலனின் மகள் தான் பானுமதி. இவர் சென்னை வளசரவாக்கத்தில் இப்போது குடியிருக்கின்ற வீடு தன் மாமனார் வீட்டு வழியில் வந்த சொத்து. அந்த வீட்டில் இப்போது பானுமதி தரை தளத்திலும் சங்கீதா மாடியிலும் குடியிருக்கிறார்கள்.  அந்த வீடு இப்போது சங்கீதா பெயரில் இருக்கிறது. அந்த வீட்டை தன் அண்ணன், தம்பி அபகரித்துவிடுவார்கள் என்று சங்கீதாவுக்கு சந்தேகம். அதற்கு தன் அம்மாவும் துணை போய்விடுவார் என்று பயப்படுகிறார். பானுமதிக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது. சமீபத்தில் தான் அவரது ஒரு மகன் இறந்தார். இந்த சூழலில் வீட்டைவிட்டு வெளியேறச் சொன்னால் அவர் எங்கேபோவார்? அதனால்தான் மகளிர் ஆணையத்தில் புகார் தந்திருக்கிறார்’.

  இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

  பானுமதி தரப்பில் புகார் குறித்து கேட்டதற்கு புகாரில் எல்லாவற்றையும் சொல்லிவிட்டோம். நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது. அப்படி நல்லது நடக்கவில்லை என்றால் அந்த சமயத்தில் விரிவாக பேசலாம் என்றனர்.

  ஆணையத்தில் ஆஜரானது குறித்து சங்கீதாவிடம் கேட்டதற்கு. ‘‘சினிமா தொடர்பான வி‌ஷயம் என்றால் பேசலாம். இது என் தனிப்பட்ட வி‌ஷயம். இதைப்பற்றி நான் எதுவும் பேச விரும்பவில்லை’ என்றார்.
  சமூக வலைத்தளத்தில் தற்போது டிரெண்டாகி வரும் 10 இயர் சேலஞ்ச், சினிமா நட்சத்திரங்களை வெகுவாக கவர்ந்துள்ளது. #10YearChallenge
  சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது சேலஞ்ச் என்ற பெயரில் பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள் கலந்துக் கொண்டு ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார்கள். ஐஸ் பக்கெட் சேலஞ்ச், தோசை சேலஞ்ச், சமீபத்தில் கிகி சேலஞ்ச் என்று சமூக வலைத்தளத்தில் பிரபலமானது.

  தற்போது 10 இயர் சேலஞ்ச் ஒன்று டிரெண்டாகி வருகிறது. பத்து வருடத்திற்கு முன்பு உள்ள புகைப்படத்தையும், தற்போது இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு பகிர்ந்து வருகிறார்கள். மேலும், தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கும் இந்த சேலஞ்ச்-யை செய்ய சொல்லி பகிர்ந்து வருகிறார்கள்.  இந்த சேலஞ்ச் சினிமா பிரபலங்களையும் கவர்ந்துள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபு, நடிகர்கள் கயல் சந்திரன், பிரேம்ஜி, காமெடி நடிகர் சதீஷ், பாடகர் கிரிஷ் உள்ளிட்ட பலர் இதையேற்று தங்களுடைய புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்கள்.
  விஷ்ணு விஷாலின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கிய நிலையில், இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகரின் மகள் ஷிவானி நடிக்க இருக்கிறார். #VishnuVishal #Shivani
  கதாநாயகன் படத்திற்கு பிறகு விஷ்ணு விஷால் நடிப்பில் அடுத்ததாக `சிலுக்குவார்பட்டி சிங்கம்', `ராட்சசன்', `ஜெகஜாலக் கில்லாடி' உள்ளிட்ட படங்கள் உருவாகி இருக்கின்றன. இதில் ராட்சசன் படம் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

  இந்த நிலையில், விஷ்ணு விஷால் நடிக்கும் அடுத்த படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று துவங்கியிருக்கிறது. வெங்கடேஷ் என்ற புதுமுக இயக்குநர் இயக்கும் இந்த படத்தில் விஷ்ணு விஷால் ஜோடியாக ஷிவானி நடிக்கிறார். இவர் பிரபல நடிகர் டாக்டர்.ராஜசேகரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஷிவானி இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். பிரபு, சரண்யா பொன்வண்ணன், முனிஸ்காந்த், சிங்கம் புலி, பிரவீன், நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
  இந்த படத்தை விஷ்ணு விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் மூலம் தயாரிக்கிறார். இந்த படத்தின் மூலம் பிரபல பாடகர் கிரிஷ் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். வேல்ராஜ் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். 

  இந்த படத்தின் படப்பிடிப்பை தனது பெற்றோரின் திருமண நாளில் துவங்குவதில் மகிழ்ச்சி என்று விஷ்ணு விஷால் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 
  ×