என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யுவன் ஷங்கர் ராஜா"

    • இன்னும் பெயரிடப்படாத இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
    • அதிக பொருட்செலவில் உருவாகும் இப்படம் ஒரு மைல் கல்லாக இருக்கும்.

    'கன்னி மாடம்', 'சார்' ஆகிய பாராட்டுகளை குவித்த வெற்றி படங்களை தொடர்ந்து போஸ் வெங்கட் தற்போது கே ஆர் ஜி மூவிஸ் கண்ணன் ரவி தயாரிப்பில் எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் வி. மதியழகன் இணை தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

    கடந்த 35 ஆண்டுகளாக துபாயில் முன்னணி தொழிலதிபராக திகழும் கண்ணன் ரவி தனது கே ஆர் ஜி மூவிஸ் நிறுவனத்தின் ஏழாவது படைப்பாக இப்படம் உருவாகிறது.

    இன்னும் பெயரிடப்படாத இந்த 'புரொடக்ஷன் நம்பர் 7' படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். முன்னணி நடிகர் நடிகைகளும், முதன்மையான தொழில்நுட்ப கலைஞர்களும் இப்படத்திற்காக இணைந்துள்ளனர்.

    திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் போஸ் வெங்கட், "விளையாட்டை மையமாகக் கொண்ட இந்த படம் காதல், குடும்பம், சமூகம் என்று பல்வேறு முக்கிய அம்சங்களை குறித்து சுவாரசியமாக பேசும். அதிக பொருட்செலவில் உருவாகும் இப்படம் ஒரு மைல் கல்லாக இருக்கும். யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைவது மிகுந்த மகிழ்ச்சி. இதை விரைவில் திரைக்கு கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன," என்று கூறினார்.

    கே ஆர் ஜி மூவிஸ் கண்ணன் ரவி தயாரிப்பில் எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் வி. மதியழகன் இணை தயாரிப்பில் போஸ் வெங்கட் இயக்கும் திரைப்படத்தின் பெயர், நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ஜீவா, அனுயா, சந்தானம் மற்றும் ஊர்வசி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது சிவா மனசுல சக்தி திரைப்படம்.

    கடந்த 2009 ஆம் ஆண்டு எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா, அனுயா, சந்தானம் மற்றும் ஊர்வசி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது சிவா மனசுல சக்தி திரைப்படம். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார். திரைப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் பெரிய ஹிட்டானது. மேலும் திரைப்படமும் ப்ளாக்ப்ஸ்டர் திரைப்படமாக உருவானது.

    படத்தில் இடம் பெற்ற காமெடி காட்சிகள் இன்றும் பலரின் மனதில் இருக்கும். மச்சி ஒரு க்வாட்டர் சொல்லேன், தெரியல மச்சி, அவ போய் 6 மாசம் ஆகுது போன்ற வசனங்கள் இன்றும் ட்ரெண்டிங்கில் உள்ளது.

    அப்படத்திற்கு பிறகு ஜீவாவும் ராஜேஷும் இணைந்து பணியாற்றவில்லை. இந்நிலையில் இந்த மெகா வெற்றி கூட்டணி 16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஒன்றாக இணைகின்றனர். ஜீவா நடிப்பில் ராஜேஷ் இயக்கும் இப்படத்திற்கு யுவன்  இசையமைக்கிறார். இப்படத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை யுவன் பிறந்தநாளை முன்னிட்டு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மனதை திருடி விட்டாய் திரைப்படம் 2001 ஆம் ஆண்டு வெளி வந்தது.
    • வடிவேலு, பிரபு தேவாவின் காம்போ மக்கள் மனதை அதிகம் கவர்ந்தது.

    மனதை திருடி விட்டாய் திரைப்படம் 2001 ஆம் ஆண்டு வெளி வந்தது. இதில் நடிகர் பிரபு தேவா,வடிவேலு,விவேக்,கவுசல்யா போன்ற பலர் நடித்து இருந்தனர்.யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். இப்படத்தில் வரும் அனைத்து நகைச்சுவை காட்சிகளும் ஹிட்டானது.

    விவேக்,வடிவேலு, பிரபு தேவாவின் காம்போ மக்கள் மனதை அதிகம் கவர்ந்தது. அதில் வரும் சிங் இன் தி ரெயின். வொய் ப்ளட் சேம் ப்ளட், வடிவேலு ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் வாங்கும் நகைச்சுவை காட்சிகள் மிகவும் பிரபலம். இன்று வரை நாம் அனைவராலும் பார்த்து ரசிக்கப் பட்ட காட்சிகள் அவை. இன்றும் அவை இன்ஸ்டாகிராமில் மீம் டெம்ப்லேட்டுகளாக உலாவிக் கொண்டுதான் இருக்கிறது.

    மனதை திருடிவிட்டாய் படத்திற்கு அடுத்து பிரபு தேவாவும், வடிவேலும் இணைந்து படம் நடிக்கவில்லை.

    இவர்கள் இருவரும் சேர்ந்து மீண்டும் படம் நடிக்க மாட்டார்களா என்று ஏக்கம் ரசிகர்களுக்கு இப்போதும் உண்டு.

    இந்நிலையில், 23 ஆண்டு கழித்து பிரபு தேவாவும், வடிவேலும் சேர்ந்து நடிக்கின்றனர். இப்படத்தை சாம் ரொட்ரிகஸ் இயக்குகிறார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். இந்நிலையில் படத்தின் பூஜை விழா இன்று துபாயில் நடைப்பெற்றது.

    • தமிழில் 1,500-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு வரிகள் எழுதியுள்ளார்.
    • யுவன் ஷங்கர் ராஜா மற்றும் நா. முத்துக்குமார் தான். இவர்கள் இணைந்து 400-க்கும் மேற்பட்ட பாடல்களை உருவாக்கினர்.

    தமிழ் திரையுலகின் எளிமையும் ஆழமும் கலந்த பாடல்களை பரிசளித்த கவிஞர், பாடலாசிரியர் நா. முத்துக்குமார்  அவரின் மறைவு நாளில் ரசிகர்களாலும், திரைப்பட உலகினராலும் நினைவுகூறப்படுகிறார்.

    பெரும் ஞானம் கொண்ட உணர்வுகளை, மிக எளிய தமிழ்ச் சொற்களில் பாடலாக வடிப்பது. 2001-ஆம் ஆண்டு சீமான் இயக்கிய *வீர நடை* திரைப்படம் வழியாக பாடலாசிரியராக அறிமுகமானார். அதற்கு முன், இயக்குநர் பாலுமகேந்திரா-வின் உதவி இயக்குநராக நான்கு ஆண்டுகள் பணியாற்றியிருந்தார். அங்கே தான் இயக்குநர்களான வெற்றிமாறன் மற்றும் ராம் ஆகியோருடன் வாழ்நாள் நட்பு உருவானது.

    திரையுலகில் தனது பயணத்தில், தமிழில் 1,500-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு வரிகள் எழுதியுள்ளார்.

    யுவன் – முத்துக்குமார் காம்போ

    தமிழ் சினிமாவின் எவர்கிரீன* ஹிட் பாடல்களை வழங்கிய கூட்டணி என்றால், அது யுவன் ஷங்கர் ராஜா மற்றும் நா. முத்துக்குமார் தான். இவர்கள் இணைந்து 400-க்கும் மேற்பட்ட பாடல்களை உருவாக்கினர். நந்தா திரைப்படத்தில் முதன்முறையாக யுவன் இசைக்கு முத்துக்குமார் பாடல் எழுதினார்.

    'ஒரு நாளில்', 'என் காதல் சொல்ல', 'நினைத்து நினைத்து பார்த்தேன்', 'தேவதையை கண்டேன்', 'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'பறவையே எங்கு இருக்கிறாய்' போன்ற பல ஹிட் பாடல்களின் பின்னணியில் முத்துக்குமாரின் வரிகள் உள்ளன. கடைசியாக, யுவன் இசையில் *தரமணி* படத்திற்கு பாடல்கள் எழுதினார்.

    இயக்குநர் **செல்வராகவன்** இயக்கிய *காதல் கொண்டேன்*, *7ஜி ரெயின்போ காலனி*, *புதுப்பேட்டை* படங்களில் உள்ள ஒவ்வொரு பாடலும் பெரும் வெற்றி பெற்றது.

    இயக்குநர் ராம் இயக்கிய அனைத்து படங்களுக்கும் முத்துக்குமார் பாடல் எழுதியுள்ளார். குறிப்பாக *கற்றது தமிழ்* மற்றும் *தங்க மீன்கள்* பாடல்கள் இன்றும் மக்களிடையே வாழ்கின்றன.

    மறைவுக்குப் பின் மரியாதை

    2016-ஆம் ஆண்டு, வெறும் 41 வயதில், மஞ்சள்காமாலை நோயால் நா. முத்துக்குமார் காலமானார். அவரது இழப்பை தமிழ் திரையுலகம் இன்னும் மறக்கவில்லை; அவர் விட்டுச் சென்ற இடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை.

    அவரின் வரிகள் துவண்டுபோனவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் சக்தி கொண்டவை. தனிமையில் வாடுவோருக்கு தோழனாக இருந்து, அவர்களின் மனங்களை நிம்மதிப்படுத்துகின்றன.

    • தமிழ் திரையுலகில் ஒரு ஆகச்சிறந்த பாடலாசிரியர் மற்றும் கவிஞராக இருந்தவர் நா. முத்துகுமார்.
    • சீமான் இயக்கிய வீர நடை என்ற திரைப்படத்தில் முதன்முதலாக பாடலாசிரியராக களமிறங்கினார்

    தமிழ் திரையுலகில் ஒரு ஆகச்சிறந்த பாடலாசிரியர் மற்றும் கவிஞராக இருந்தவர் நா. முத்துகுமார். இவர் பெரும் ஞானம் உடைய கவிதைகளை மிகவும் எளிமையான தமிழ் சொற்களில் பாடலாக எழுதும் திறம் பெற்றவர்.

    சீமான் இயக்கிய வீர நடை என்ற திரைப்படத்தில் முதன்முதலாக பாடலாசிரியராக களமிறங்கினார்.பாடலாசிரியர் ஆவதற்கு முன் இயக்குநர் பாலு மகேந்திராவிடம் நான்கு ஆண்டுகள் உதவி இயக்குநராக பணியாற்றினார். அங்குதான் இயக்குநர்களான வெற்றிமாறன் மற்றும் ராம் அவர்களின் நட்பு இவருக்கு கிடைத்தது. அதனை தொடர்ந்து பல திரைப்படங்களுக்கு பாடலாசிரியராக இருந்துள்ளார். தமிழில் 1500-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு வரிகள் எழுதியுள்ளார்.

     

    குறிப்பாக யுவன் ஷங்கர் ராஜா மற்றும் நா முத்துகுமார் காம்போவில் வெளியான பாடல்கள் எவர்கிரீன் ஹிட்ஸ் என்றுதான் சொல்லவேண்டும். இந்த கூட்டணியில் மட்டும் 400-க்கும் மேற்பட்ட பாடல்கள் உருவாகியுள்ளது. நந்தா படத்தில் முதன்முறையாக முத்துகுமார் யுவன் இசைக்கு பாடல் வரிகளை எழுதினார்.

     

    யுவன் இசையில் உருவான ஒரு நாளில், என் காதல் சொல்ல, , நினைத்து நினைத்து பார்த்தேன், தேவதையை கண்டேன், ஒரு கல் ஒரு கண்ணாடி, பறவையே எங்கு இருக்கிறாய் போன்ற பல வெற்றி பாடல்களுக்கு நா.முத்துகுமார் வரிகளை எழுதியுள்ளார். கடைசியாக யுவன் இசையில் தரமணி படத்திற்கு பாடல்களை எழுதினார்.

     

    செல்வராகவன் இயக்கத்தில் யுவன் இசையமைத்த காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி மற்றும் புதுப்பேட்டை படங்களில் நா.முத்துகுமார் வரிகளில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட்டானது.

    இயக்குநர் ராம் இயக்கிய அனைத்து திரைப்படங்களுக்கும் நா. முத்துகுமார் பாடல் எழுதியுள்ளார்.

     

    குறிப்பாக இன்றும் கற்றது தமிழ், தங்க மீன்கள் பாடல்கள் வலம் வந்துக்கொண்டுதான் இருக்கிறது. இன்று நா. முத்துகுமாரின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரை நினைவு கூர்ந்து அவரது பாடல் வரிகளை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

    எதிர்பாராத விதமாக 2016 ஆம் ஆண்டில் மஞ்சள்காமாலை நோயினால் முத்துகுமார் காலமானார். தமிழ் திரையுலகில் அவர் விட்டுச்சென்ற இடத்தை இன்னும் யாராலும் நிரப்பமுடியவில்லை.

     

    கவிஞர் நா.முத்துக்குமாரின் 50வது பிறந்தநாளையொட்டி, வரும் ஜூலை 19ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் ‛ஆனந்த யாழை' என்ற தலைப்பில் மாபெரும் இசைக்கச்சேரி நடக்க உள்ளது. அதில் முத்துக்குமாருடன் பணியாற்றிய யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ், ஹாரிஸ் ஜெயராஜ், சந்தோஷ் நாராயணன், தமன், விஜய்ஆண்டனி, கார்த்திக்ராஜா, நிவாஸ் கே பிரசன்னா உள்ளிட்ட பல இசைமைப்பாளர்கள் இசை விருந்து கொடுக்கிறார்கள். தமிழ் சினிமா சரித்திரத்தில் இப்படி பல இசையமைப்பாளர்கள் ஒன்றிணைவது இதுவே முதன்முறையாகும்.

    நா.முத்துகுமார் மக்களை விட்டு பிரிந்தாலும், அவருடைய வரிகள் இன்னும் மக்களை வழிநடத்தி கொண்டிருக்கிறது. பல துவண்டுப்போன மனிதர்களுக்கு ஒரு உத்வேகத்தை அளிக்கிறது தனிமையில் வாடும் மனிதர்களுக்கு சக தோழனாய் அவர் பயணித்துக் கொண்டிருக்கிறார்..

    • பறந்து போ படத்தில் மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ளார்
    • மலையாள நடிகரான அஜு வர்கீஸ் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.

    கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம். இவர் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    இதில், மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மலையாள நடிகரான அஜு வர்கீஸ் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.

    இப்படத்திற்கு, சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். யுவன் பின்னணி இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் பாடலான சன்ஃப்ளவர் மற்றும் டேடி ரொம்ப பாவம் பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில் படத்தின் அடுத்த பாடலான கஷ்டம் வந்தா பாடல் வரும் ஜூன் 24 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்பாடலை யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • `டார்க்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் போஸ்டரை சில மாதங்களுக்கு முன் வெளியிட்டுள்ளது.
    • இப்படத்தின் மூலம் அஜய் கார்த்தி கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

    தயாரிப்பு நிறுவனமான எம்ஜி ஸ்டூடியோஸ் அவர்கள் தயாரிக்கும் முதல் படமான `டார்க்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் போஸ்டரை சில மாதங்களுக்கு முன் வெளியிட்டுள்ளது.

    இப்படத்தின் மூலம் அஜய் கார்த்தி கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தை கல்யாண் கே ஜெகன் இயக்கியுள்ளார். இப்படத்தின் கதையை டாடா பட இயக்குனர் கணேஷ் கே பாபு எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

    இப்படம் ஒரு ஹாரர் கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. படத்தின் முதல் பாடலான ஒரு ஸ்டெப் வச்சா பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார் அஞ்சனா முருகன். இந்நிலையில் படத்தின் இரண்டாம் பாடலான இருளென்பது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை கணேஷ் கே பாபு வரிகளில் யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளார். விரைவில் திரைப்படம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    படத்தின் தொழில்நுட்ப குழு பின் வருமாறு

    ஒளிப்பதிவு - ரவி சக்தி

    படத்தொகுப்பு - கதிரேஷ் அழகேசன்

    இசை - மனு ரமேசன்

    கலை - ஷன்முகராஜா

    ஆடை வடிவமைப்பு - காயத்ரி

    ஸ்டண்ட் - நைஃப் நரேன்

    • தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.
    • இவர் தற்போது பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

    ஐக்கிய அமீரகம் இந்தியாவின் திரைத்துறையைச் சேர்ந்த பலருக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்து வருகின்றனர். அதன்படி, பாலிவுட் நடிகர்கள் சஞ்சய் தத், ஷாருக்கான், துஷார் கபூர், ஊர்வசி ரவுதலா உட்பட பலர் இந்த விசாவை பெற்றுள்ளனர்.


    யுவன் ஷங்கர் ராஜா

    இதைத்தொடர்ந்து, தென்னிந்தியாவைச் சேர்ந்த மம்மூட்டி, மோகன்லால், பிருத்விராஜ், துல்கர் சல்மான், பார்த்திபன், மீரா ஜாஸ்மின், த்ரிஷா, அமலாபால், லட்சுமி ராய், காஜல் அகர்வால், பிரணிதா, ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி, மீனா, வெங்கட் பிரபு, சரத்குமார் உட்பட பலருக்கு இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.


    யுவன் ஷங்கர் ராஜா

    சமீபத்தில் கமல்ஹாசன், பாவனா மற்றும் விக்ரம் ஆகியோர் இந்த விசாவை பெற்றிருந்தனர். இந்நிலையில், தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜாவிற்கு ஐக்கிய அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது. இவருக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    • பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் 'லவ் டுடே' திரைப்படம் சமீபத்தில் வெளியானது.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் தற்போது இயக்கி நடித்த படம் 'லவ் டுடே'. இப்படத்தை ஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது. பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்த இப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

     

    லவ் டுடே

    லவ் டுடே

    யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்த இந்த படம் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் இடம்பெற்ற என்னை விட்டு பாடல் பலரின் கவனத்தை ஈர்த்து ஹிட் அடித்தது. இந்த பாடலை பாடகர் சித் ஸ்ரீராம் பாடியிருந்தார்.

    பிரதீப் ரங்கநாதன் - யுவன் ஷங்கர் ராஜா

    பிரதீப் ரங்கநாதன் - யுவன் ஷங்கர் ராஜா

     

    இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற என்னை விட்டு பாடலை யுவன் ஷங்கர் ராஜா குரலில் இயக்குனர் பிரதீப் வெளியிட்டிருக்கிறார். அதில், நான் உங்களுக்கு உறுதியளித்தபடி, லவ் டுடே படத்தின் என்னை விட்டு பாடல் யுவன் குரலில் இதோ. எனக்கு மிகவும் பிடித்த ஒன்று என்று பதிவிட்டுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது என்சி22 படத்தை இயக்கி வருகிறார்.
    • இவரின் பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது இயக்கி வரும் புதிய படம் என்சி22. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார். தற்காலிகமாக 'என்சி22' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பா ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.


    என்சி22

    இப்படத்தின் வில்லனாக அரவிந்த் சாமி நடிக்கிறார். இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர். மேலும், இதில் சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    பிரேம்ஜி - யுவன் ஷங்கர் ராஜா - வெங்கட் பிரபு

    இந்நிலையில், நடிகர் பிரேம்ஜிக்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா புதிய மொபைல் போனை பரிசளித்துள்ளார். இதனை தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படத்தை பகிர்ந்து தெரிவித்துள்ள பிரேம்ஜி, " எனக்கு பரிசளித்ததற்கு நன்றி என் இசைக்குரு யுவன் ஷங்கர் ராஜா.. லவ் யூ.." என்று பதிவிட்டுள்ளார்.

    இதற்கு இயக்குனர் வெங்கட் பிரபு, 'அப்போ எனக்கு பரிசு இல்லை' என்று கவலையுடன் பதிவிட்டுள்ளார். இதற்கு யுவன் ஷங்கர் ராஜா 'உங்களுக்காக சில இசைகளை குக் செய்து வருகிறேன்' என்று பதிலளித்துள்ளார். இந்த பதிவு தற்போது ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.



    • இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘தங்கலான்’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான பா.இரஞ்சித் தற்போது விக்ரம் நடிப்பில் 'தங்கலான்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இவர் நீலம் பண்பாட்டு மையம் என்ற அமைப்பின் மூலம் கடந்த இரண்டு வருடங்களாக 'மார்கழியின் மக்களிசை' எனும் இசை விழாவை நடத்தி வருகிறார்.


    யுவன் ஷங்கர் ராஜா - பா.இரஞ்சித்

    இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா விரைவில் பா.இரஞ்சித்துடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து விரைவில் பா.இரஞ்சித் - யுவன் கூட்டணி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    யுவன் ஷங்கர் ராஜா தற்போது 'ஏழு கடல் ஏழு மலை', 'கஸ்டடி' உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் பா.இரஞ்சித் தற்போது 'தங்கலான்' திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
    • இவர் நடத்தும் 'மார்கழியின் மக்களிசை' நிகழ்ச்சியில் யுவன் ஷங்கர் ராஜா கலந்து கொண்டார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான பா.இரஞ்சித் தற்போது விக்ரம் நடிப்பில் 'தங்கலான்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இவர் நீலம் பண்பாட்டு மையம் என்ற அமைப்பின் மூலம் கடந்த இரண்டு வருடங்களாக 'மார்கழியின் மக்களிசை' எனும் இசை விழாவை நடத்தி வருகிறார்.


    யுவன் ஷங்கர் ராஜா - பா.இரஞ்சித்

    இந்நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கலந்து கொண்டார். இதில், பேசிய இயக்குனர் பா.இரஞ்சித் கூறியதாவது, "இளைய ராஜா எனக்கு உணர்வு. நமக்கு உடம்பில் கிள்ளினால் வலிப்பது போன்று தான் இளையராஜா எனக்கு. அவது பாடல்களை கேட்கும் பொழுது மிகவும் எமோஷனலாக இருக்கும்.


    யுவன் ஷங்கர் ராஜா - பா.இரஞ்சித்

    அது போன்று தான் நான் யுவன் ஷங்கர் ராஜாவை பார்க்கிறேன். இவரது இசை பல நேரங்களில் என்னை ஊக்குவித்துள்ளது. என்னோட வலியை இசையோடு கலந்து அதிலிருந்து வெளியே வந்திருக்கிறேன். இந்த மேடையில் யுவன் ஷங்கர் ராஜா வந்து நிற்பது மிகவும் பெருமையாக இருக்கிறது" என்று கூறினார்.

    ×