அப்ப எனக்கு பரிசு எதுவும் இல்லையா..? கவலையில் வெங்கட் பிரபு..

இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது என்சி22 படத்தை இயக்கி வருகிறார்.இவரின் பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
வெங்கட் பிரபு
வெங்கட் பிரபு
Published on

இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது இயக்கி வரும் புதிய படம் என்சி22. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார். தற்காலிகமாக 'என்சி22' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பா ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.

என்சி22

இப்படத்தின் வில்லனாக அரவிந்த் சாமி நடிக்கிறார். இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர். மேலும், இதில் சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பிரேம்ஜி - யுவன் ஷங்கர் ராஜா - வெங்கட் பிரபு

இந்நிலையில், நடிகர் பிரேம்ஜிக்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா புதிய மொபைல் போனை பரிசளித்துள்ளார். இதனை தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படத்தை பகிர்ந்து தெரிவித்துள்ள பிரேம்ஜி, " எனக்கு பரிசளித்ததற்கு நன்றி என் இசைக்குரு யுவன் ஷங்கர் ராஜா.. லவ் யூ.." என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு இயக்குனர் வெங்கட் பிரபு, 'அப்போ எனக்கு பரிசு இல்லை' என்று கவலையுடன் பதிவிட்டுள்ளார். இதற்கு யுவன் ஷங்கர் ராஜா 'உங்களுக்காக சில இசைகளை குக் செய்து வருகிறேன்' என்று பதிலளித்துள்ளார். இந்த பதிவு தற்போது ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com