என் மலர்
நீங்கள் தேடியது "நா முத்துகுமார்"
- தமிழில் 1,500-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு வரிகள் எழுதியுள்ளார்.
- யுவன் ஷங்கர் ராஜா மற்றும் நா. முத்துக்குமார் தான். இவர்கள் இணைந்து 400-க்கும் மேற்பட்ட பாடல்களை உருவாக்கினர்.
தமிழ் திரையுலகின் எளிமையும் ஆழமும் கலந்த பாடல்களை பரிசளித்த கவிஞர், பாடலாசிரியர் நா. முத்துக்குமார் அவரின் மறைவு நாளில் ரசிகர்களாலும், திரைப்பட உலகினராலும் நினைவுகூறப்படுகிறார்.
பெரும் ஞானம் கொண்ட உணர்வுகளை, மிக எளிய தமிழ்ச் சொற்களில் பாடலாக வடிப்பது. 2001-ஆம் ஆண்டு சீமான் இயக்கிய *வீர நடை* திரைப்படம் வழியாக பாடலாசிரியராக அறிமுகமானார். அதற்கு முன், இயக்குநர் பாலுமகேந்திரா-வின் உதவி இயக்குநராக நான்கு ஆண்டுகள் பணியாற்றியிருந்தார். அங்கே தான் இயக்குநர்களான வெற்றிமாறன் மற்றும் ராம் ஆகியோருடன் வாழ்நாள் நட்பு உருவானது.
திரையுலகில் தனது பயணத்தில், தமிழில் 1,500-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு வரிகள் எழுதியுள்ளார்.
யுவன் – முத்துக்குமார் காம்போ
தமிழ் சினிமாவின் எவர்கிரீன* ஹிட் பாடல்களை வழங்கிய கூட்டணி என்றால், அது யுவன் ஷங்கர் ராஜா மற்றும் நா. முத்துக்குமார் தான். இவர்கள் இணைந்து 400-க்கும் மேற்பட்ட பாடல்களை உருவாக்கினர். நந்தா திரைப்படத்தில் முதன்முறையாக யுவன் இசைக்கு முத்துக்குமார் பாடல் எழுதினார்.
'ஒரு நாளில்', 'என் காதல் சொல்ல', 'நினைத்து நினைத்து பார்த்தேன்', 'தேவதையை கண்டேன்', 'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'பறவையே எங்கு இருக்கிறாய்' போன்ற பல ஹிட் பாடல்களின் பின்னணியில் முத்துக்குமாரின் வரிகள் உள்ளன. கடைசியாக, யுவன் இசையில் *தரமணி* படத்திற்கு பாடல்கள் எழுதினார்.
இயக்குநர் **செல்வராகவன்** இயக்கிய *காதல் கொண்டேன்*, *7ஜி ரெயின்போ காலனி*, *புதுப்பேட்டை* படங்களில் உள்ள ஒவ்வொரு பாடலும் பெரும் வெற்றி பெற்றது.
இயக்குநர் ராம் இயக்கிய அனைத்து படங்களுக்கும் முத்துக்குமார் பாடல் எழுதியுள்ளார். குறிப்பாக *கற்றது தமிழ்* மற்றும் *தங்க மீன்கள்* பாடல்கள் இன்றும் மக்களிடையே வாழ்கின்றன.
மறைவுக்குப் பின் மரியாதை
2016-ஆம் ஆண்டு, வெறும் 41 வயதில், மஞ்சள்காமாலை நோயால் நா. முத்துக்குமார் காலமானார். அவரது இழப்பை தமிழ் திரையுலகம் இன்னும் மறக்கவில்லை; அவர் விட்டுச் சென்ற இடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை.
அவரின் வரிகள் துவண்டுபோனவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் சக்தி கொண்டவை. தனிமையில் வாடுவோருக்கு தோழனாக இருந்து, அவர்களின் மனங்களை நிம்மதிப்படுத்துகின்றன.
- தமிழ் திரையுலகில் ஒரு ஆகச்சிறந்த பாடலாசிரியர் மற்றும் கவிஞராக இருந்தவர் நா. முத்துகுமார்.
- நேற்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் ‛ஆனந்த யாழை' என்ற தலைப்பில் மாபெரும் இசைக்கச்சேரி நடந்தது.
தமிழ் திரையுலகில் ஒரு ஆகச்சிறந்த பாடலாசிரியர் மற்றும் கவிஞராக இருந்தவர் நா. முத்துகுமார். இவர் பெரும் ஞானம் உடைய கவிதைகளை மிகவும் எளிமையான தமிழ் சொற்களில் பாடலாக எழுதும் திறம் பெற்றவர்.
அண்மையில் இவரது 50-வது பிறந்தநாள் வந்தது. கவிஞர் நா.முத்துக்குமாரின் 50வது பிறந்தநாளையொட்டி, நேற்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் ‛ஆனந்த யாழை' என்ற தலைப்பில் மாபெரும் இசைக்கச்சேரி நடந்தது. அதில் முத்துக்குமாருடன் பணியாற்றிய யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ், ஹாரிஸ் ஜெயராஜ், சந்தோஷ் நாராயணன், தமன், விஜய்ஆண்டனி, கார்த்திக்ராஜா, நிவாஸ் கே பிரசன்னா, சிவகார்த்திகேயன், முத்துக்குமாருடன் பணியாற்றிய இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் உள்ளிட்ட பல இசைமைப்பாளர்கள் கலந்துக்கொண்டனர்.
அதில் சிவகார்த்திகேயன் பேசியதாவது " நான் முதன் முதலில் நெல்சன் அண்ணா படத்தில் பாடல் எழுதிய போது அதற்கான சம்பளத்தை நான் நா. முத்துகுமார் சாருடைய குடும்பத்திற்கு கொடுத்தேன். இது நான் செய்த உதவி அல்ல, நான் செய்ய வேண்டிய கடமை. இன்றும் நான் பாடல் எழுத போகும்போது அவருடைய 2 பாடல்கள் கேட்டுவிட்டு தான் எழுத செல்வேன். இன்று பல நல்ல பாடலாசிரியர்கள் இருந்தாலும் முத்துகுமார் சாரை போல் எழுத ஆளில்லை" என கூறினார்.
- “என் ‘தூர்’ கவிதையை ஒரு விழாவில் எழுத்தாளர் சுஜாதா வாசிக்க என் மேல் மஞ்சள் வெளிச்சம் விழுந்தது.
- அன்று நா. முத்துகுமார் மேல் விழுந்த அந்த மஞ்சள் வெளிச்சம், மஞ்சள் காமாலையாக மாறி அவரது உயிரைக் குடிக்கும் என யார் கண்டார்கள்?
யாரும் எதிர்பார்க்காத ஒரு காரியத்தை அந்த மேடையில் செய்தார் சுஜாதா!
அது ஒரு விழா மேடை.
மிகப் பெரும் கூட்டம்.
பேசிக்கொண்டே இருந்த சுஜாதா, பேச்சின் நடுவே திடீர் என்று இப்படிச் சொன்னார்:
"இப்போது இங்கே நான் ஒரு இளைஞர் எழுதிய கவிதையை வாசிக்கப் போகிறேன்.
கவிதையின் தலைப்பு "தூர்."
இப்படிச் சொல்லிவிட்டு கவிதை வரிகளை சுஜாதா வாசிக்க வாசிக்க, கூடி இருந்த கூட்டம் அசையாமல் அமர்ந்து அமைதியோடு கவிதை வரிகளை ரசித்துக் கொண்டிருந்தது.
சுஜாதா வாசித்த அந்த கவிதை:
"வேப்பம் பூ மிதக்கும்
எங்கள் வீட்டு கிணற்றில்
தூர் வாரும் உற்சவம்
வருடத்துக்கு ஒரு முறை
விசேஷமாக நடக்கும்.
ஆழ் நீருக்குள்
அப்பா முங்க முங்க
அதிசயங்கள் மேலே வரும்...
கொட்டாங்குச்சி, கோலி, கரண்டி,
துருப்பிடித்தக் கட்டையோடு
உள் விழுந்த ராட்டினம்,
வேலைக்காரி திருடியதாய்
சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர்...
எடுப்போம் நிறையவே
'சேறுடா சேறுடா' வென
அம்மா அதட்டுவாள்
என்றாலும்
சந்தோஷம் கலைக்க
யாருக்கு மனம் வரும்?
படை வென்ற வீரனாய்
தலைநீர் சொட்டச் சொட்ட
அப்பா மேலே வருவார்.
இன்று வரை அம்மா
கதவுக்குப் பின்னிருந்துதான்
அப்பாவோடு பேசுகிறாள்.
கடைசி வரை அப்பாவும்
மறந்தே போனார்
மனசுக்குள் தூர் எடுக்க."
சுஜாதா கடைசி வரிகளை வாசித்து முடிக்கவும் பலத்த கை தட்டல்.
அந்தக் கைதட்டல்களுக்கு இடையே சுஜாதா சொன்னார் இப்படி : "இந்த அற்புதமான கவிதையை எழுதியவர் பெயர் நா. முத்துகுமார்."
மீண்டும் கை தட்டல்.
கூட்டத்தில் இருந்த ஒரு இளைஞரைச் சுற்றி சிறு சலசலப்பு ஏற்பட,
சுஜாதா கேட்டார்: "அந்த முத்துகுமார் இந்தக் கூட்டத்தில் இருக்கிறாரா, என்ன?"
ஆம்.
நா.முத்துகுமார் அந்தக் கூட்டத்தில்தான் இருந்தார்.
கூட்டத்திலிருந்து முத்துகுமார் கைதூக்க, உடனே அவரை மேடைக்கு வரவழைத்து எல்லோருக்கும் அவரை அறிமுகப்படுத்தி ஏராளமாகப் பாராட்டியிருக்கிறார் சுஜாதா.
அதுபற்றி நா.முத்துகுமார்:
"என் 'தூர்' கவிதையை ஒரு விழாவில் எழுத்தாளர் சுஜாதா வாசிக்க என் மேல் மஞ்சள் வெளிச்சம் விழுந்தது. நண்பர்கள் பாடல் எழுத அழைத்தார்கள்.
விளையாட்டாக எழுதத் தொடங்கி அதிக பாடல்கள் எழுதும் பாடலாசிரியர் என்கிற நிலை வரை ஓடிக்கொண்டு இருக்கிறேன்."
அன்று நா. முத்துகுமார் மேல் விழுந்த அந்த மஞ்சள் வெளிச்சம், மஞ்சள் காமாலையாக மாறி அவரது உயிரைக் குடிக்கும் என யார் கண்டார்கள்?
ஆனால் முத்துகுமார் பற்றி சொல்லும்போது இந்த வார்த்தைகளை எதற்காக சுஜாதா சொன்னார் என்று எத்தனையோ முறை யோசித்தும் புரியவே இல்லை எனக்கு!
சுஜாதா சொன்னது:
"நா.முத்துக்குமாரை சினிமா விழுங்கி விடாமல் இருக்க ஸ்ரீரங்கநாதரைப் பிரார்த்திக்கிறேன்.''
ஏன் அப்படிச் சொன்னார் சுஜாதா?
எவ்வளவோ சிந்தித்தும் புரியவில்லை எனக்கு!
-ஜான் துரை ஆசிர் செல்லையா






