என் மலர்
நீங்கள் தேடியது "ராம்"
- தமிழ் திரையுலகில் ஒரு ஆகச்சிறந்த பாடலாசிரியர் மற்றும் கவிஞராக இருந்தவர் நா. முத்துகுமார்.
- சீமான் இயக்கிய வீர நடை என்ற திரைப்படத்தில் முதன்முதலாக பாடலாசிரியராக களமிறங்கினார்
தமிழ் திரையுலகில் ஒரு ஆகச்சிறந்த பாடலாசிரியர் மற்றும் கவிஞராக இருந்தவர் நா. முத்துகுமார். இவர் பெரும் ஞானம் உடைய கவிதைகளை மிகவும் எளிமையான தமிழ் சொற்களில் பாடலாக எழுதும் திறம் பெற்றவர்.
சீமான் இயக்கிய வீர நடை என்ற திரைப்படத்தில் முதன்முதலாக பாடலாசிரியராக களமிறங்கினார்.பாடலாசிரியர் ஆவதற்கு முன் இயக்குநர் பாலு மகேந்திராவிடம் நான்கு ஆண்டுகள் உதவி இயக்குநராக பணியாற்றினார். அங்குதான் இயக்குநர்களான வெற்றிமாறன் மற்றும் ராம் அவர்களின் நட்பு இவருக்கு கிடைத்தது. அதனை தொடர்ந்து பல திரைப்படங்களுக்கு பாடலாசிரியராக இருந்துள்ளார். தமிழில் 1500-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு வரிகள் எழுதியுள்ளார்.

குறிப்பாக யுவன் ஷங்கர் ராஜா மற்றும் நா முத்துகுமார் காம்போவில் வெளியான பாடல்கள் எவர்கிரீன் ஹிட்ஸ் என்றுதான் சொல்லவேண்டும். இந்த கூட்டணியில் மட்டும் 400-க்கும் மேற்பட்ட பாடல்கள் உருவாகியுள்ளது. நந்தா படத்தில் முதன்முறையாக முத்துகுமார் யுவன் இசைக்கு பாடல் வரிகளை எழுதினார்.

யுவன் இசையில் உருவான ஒரு நாளில், என் காதல் சொல்ல, , நினைத்து நினைத்து பார்த்தேன், தேவதையை கண்டேன், ஒரு கல் ஒரு கண்ணாடி, பறவையே எங்கு இருக்கிறாய் போன்ற பல வெற்றி பாடல்களுக்கு நா.முத்துகுமார் வரிகளை எழுதியுள்ளார். கடைசியாக யுவன் இசையில் தரமணி படத்திற்கு பாடல்களை எழுதினார்.

செல்வராகவன் இயக்கத்தில் யுவன் இசையமைத்த காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி மற்றும் புதுப்பேட்டை படங்களில் நா.முத்துகுமார் வரிகளில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட்டானது.
இயக்குநர் ராம் இயக்கிய அனைத்து திரைப்படங்களுக்கும் நா. முத்துகுமார் பாடல் எழுதியுள்ளார்.

குறிப்பாக இன்றும் கற்றது தமிழ், தங்க மீன்கள் பாடல்கள் வலம் வந்துக்கொண்டுதான் இருக்கிறது. இன்று நா. முத்துகுமாரின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரை நினைவு கூர்ந்து அவரது பாடல் வரிகளை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
எதிர்பாராத விதமாக 2016 ஆம் ஆண்டில் மஞ்சள்காமாலை நோயினால் முத்துகுமார் காலமானார். தமிழ் திரையுலகில் அவர் விட்டுச்சென்ற இடத்தை இன்னும் யாராலும் நிரப்பமுடியவில்லை.

கவிஞர் நா.முத்துக்குமாரின் 50வது பிறந்தநாளையொட்டி, வரும் ஜூலை 19ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் ‛ஆனந்த யாழை' என்ற தலைப்பில் மாபெரும் இசைக்கச்சேரி நடக்க உள்ளது. அதில் முத்துக்குமாருடன் பணியாற்றிய யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ், ஹாரிஸ் ஜெயராஜ், சந்தோஷ் நாராயணன், தமன், விஜய்ஆண்டனி, கார்த்திக்ராஜா, நிவாஸ் கே பிரசன்னா உள்ளிட்ட பல இசைமைப்பாளர்கள் இசை விருந்து கொடுக்கிறார்கள். தமிழ் சினிமா சரித்திரத்தில் இப்படி பல இசையமைப்பாளர்கள் ஒன்றிணைவது இதுவே முதன்முறையாகும்.
நா.முத்துகுமார் மக்களை விட்டு பிரிந்தாலும், அவருடைய வரிகள் இன்னும் மக்களை வழிநடத்தி கொண்டிருக்கிறது. பல துவண்டுப்போன மனிதர்களுக்கு ஒரு உத்வேகத்தை அளிக்கிறது தனிமையில் வாடும் மனிதர்களுக்கு சக தோழனாய் அவர் பயணித்துக் கொண்டிருக்கிறார்..
- ஜூலை 4 ஆம் தேதி சித்தார்த் நடிப்பில் 3 BHK திரைப்படமும், ராம் இயக்கிய பறந்து போ திரைப்படம் வெளியானது.
- 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார்
ஜூலை 4 ஆம் தேதி சித்தார்த் நடிப்பில் 3 BHK திரைப்படமும், ராம் இயக்கிய பறந்து போ திரைப்படம் வெளியானது. இந்த இரண்டு திரைப்படமும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஒரு நடுத்தர குடும்பம் அவர்களது கனவு இல்லத்தை வாங்க எப்படி கஷ்டப்படுகிறார்கள என்பதை உண்மைக்கு மிக நெருக்கமாக பதிவு செய்துள்ளது 3 BHK திரைப்படம்.
மறுப்பக்கம் தந்தை மற்றும் மகனுக்கு இடையே உள்ள உறவு முறையை மிக அழகாகவும், நகைச்சுவையாகவும் , பிள்ளை வளர்ப்பை பற்றி பறந்து போ திரைப்படம் பேசியுள்ளது.
முதல் இரண்டு நாட்கள் இரண்டு படங்களுமே நல்ல வசூல் செய்தது ஆனால் இன்று மூன்றவது நாளில் வசூலில் சிறிய தொய்வு ஏற்பட்டுள்ளது. 3 BHK திரைப்படம் இதுவரை 2.89 கோடியும் பறந்து போ திரைப்படம் 1.46 கோடி ரூபாயும் வசூலித்துள்ளது. பறந்து போ திரைப்படத்தை விட 3 BHK படத்தின் வசூல் அதிகமாக இருக்கிறது. இன்னும் வரும் வாரங்களில் இரு திரைப்படங்களும் அதிக வசூலிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- இயக்குனர் ராம் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
- திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம். இவர் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதில், மிர்ச்சி சிவா, அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், பறந்து போ படம் குறித்து இயக்குனர் அட்லீ பாராட்டி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் " பறந்து போ திரைப்படம் மிகவும் நெருக்கமாக இருந்தது. ஒரு அப்பாவிற்கும் மகனுக்குமான உறவை மிக அழகாக காண்பித்து இருந்தனர். படத்தில் இடம் பெற்ற பாடல்கள் நன்றாக இருந்தது. சிவா மற்றும் அஞ்சலி கதாப்பாத்திரம் மிகவும் பிடித்து இருந்தது. கண்டிப்பாக இது அனைத்து மக்களுக்கும் பிடிக்கும். ராம் அண்ணாக்கு வாழ்த்துக்கள்" என கூறியுள்ளார்.
- கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம்.
- திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம். இவர் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதில், மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ளார்.
இந்நிலையில், பறந்து போ படம் குறித்து இயக்குனர் மற்றும் நடிகருமான சசிகுமார் படத்தை பாராட்டியுள்ளார்.
அதில் அவர் " அப்பா மகனுக்கு இடையே உள்ள உறவை மிகவும் அழகாக பிரதிபலிக்கும் விதமாக திரைப்படம் உருவாகியுள்ளது. சிவா மற்ற படங்களை விட இப்படத்தில் வித்தியாசமாக தெரிகிறார். மக்கள் அனைவரும் திரையரங்கில் சிரிச்சிகிட்டே இருந்தாங்க. சில காட்சிகள் மிகவும் எமோஷனலாக இருந்தது. அனைவரும் பறந்து போ திரைப்படத்தை திரையரங்கில் வந்து பார்த்து கொண்டாட வேண்டும். ராம் சாருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்" என கூறியுள்ளார்.
- ராம் 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
- 'பறந்து போ' படத்தில் மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ளார்.
கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம். இவர் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில், மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ளார்.
பறந்து போ படம் வெளியாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், பறந்து போ படம் குறித்து இயக்குனர் வெற்றி மாறன் பாராட்டி வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
ஒரு அப்பாவாக இந்த படம் என்னை ரொம்ப யோசிக்க வைத்தது. தமிழில் ராமுடைய படங்கள் எப்போதுமே ஸ்பெஷலான படங்கள். அதில், பறந்து போ திரைப்படம் ரொம்ப ஸ்பெஷலானது.
ராமுடைய படங்கள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். எனக்கு இந்த படம் ரொம்ப அதிகமாகவே தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த படத்தின் தந்தையின் சிந்தனை முறையில் என்னையும் கொண்டு சென்றுவிட்டார்.
நடிகர் சிவா சிரமமின்றி தந்தை கதாப்பாத்திரத்தை மிக அழகாக நடித்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியும் நெருக்கத்தில் இருக்கு. படத்தில் பல இடங்களில் இப்படி இருந்திருக்கலாமே, அப்படி இருந்திருக்கலாமே என்று சிந்திக்க வைத்திருக்கிறது.
படம் பார்த்து வந்ததில் இருந்து என்னுடைய குழந்தைகள் பற்றி நான் அதிகம் சிந்தித்துக் கொண்டே இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இதில், மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ளார்.
- படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம். இவர் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில், மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ளார்.
மேலும், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மலையாள நடிகரான அஜு வர்கீஸ் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.
இப்படத்திற்கு, யுவன் பின்னணி இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாகிறது.படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் படத்திற்கு தணிக்கை குழு யு சான்றிதழை வழங்கியுள்ளது.
- பறந்து போ படத்தில் மிர்ச்சி சிவா, அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி உள்பட பலர் நடித்துள்ளனர்.
- வருகிற ஜூலை 4-ந் தேதி படம் திரைக்கு வருகிறது.
பறந்து போ படத்தில் மிர்ச்சி சிவா, அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி உள்பட பலர் நடித்துள்ளனர். வருகிற ஜூலை 4-ந் தேதி படம் திரைக்கு வருகிறது.
சுதந்திரத்தை விரும்பும் குழந்தை தனது பெற்றோரையும் சுதந்திரத்தை நோக்கி அழைத்து செல்லும் கதைகளத்துடன் உருவாகியுள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று மாலை நடந்தது. விழாவில் சுமார் 30 இயக்குனர்கள் ஒன்று போல் திரண்டு படத்தை வாழ்த்தி பேசினர். விழாவில் பங்கேற்ற அனைவரையும் சூரியகாந்தி பூ கொடுத்து படக்குழுவினர் வரவேற்றனர்.
இயக்குனர் விக்ரமன், பாலா, வெற்றிமாறன், சுரேஷ் காமாட்சி, நித்திலன், புஸ்கர் காயத்ரி, பாண்டியராஜ், ஏ.எல்.விஜய், பாலாஜி சக்திவேல், யூகி சேது, கஸ்துரி ராஜா, சசி, அழகம் பெருமாள், மீரா கதிரவன், அஸ்வத் மாரிமுத்து, மந்திரமூர்த்தி, ரவிக்குமார், கணேஷ் கே, மைக்கேல் ராஜா, சுரேஷ் மாரி, ரஞ்சித் ஜெயக்கொடி, ஜெயகுமார், விஷால், ராம்குமார், அபிஷன், அருண் ராஜா காமராஜ், இயன் பாரி உள்பட 30-க்கும் மேற்பட்ட இயக்குனர்கள் ஒன்றாக விழாவில் அணிவகுத்து வாழ்த்தினர்.
- 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்குனர் ராம் இயக்கியுள்ளார்.
- இதில், மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ளார்.
கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம். இவர் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில், மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ளார்.
மேலும், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மலையாள நடிகரான அஜு வர்கீஸ் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.
இப்படத்திற்கு, யுவன் பின்னணி இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் 2 பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்த பாடலான `கஷ்டம் வந்தா' பாடல் இன்று வெளியாகி உள்ளது. இந்த பாடலை யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளார்.
- இயக்குனர் ராம் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
- படத்தின் பாடலான சன்ஃப்ளவர் மற்றும் டேடி ரொம்ப பாவம் பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம். இவர் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இதில், மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மலையாள நடிகரான அஜு வர்கீஸ் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.
இப்படத்திற்கு, சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். யுவன் பின்னணி இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் பாடலான சன்ஃப்ளவர் மற்றும் டேடி ரொம்ப பாவம் பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் படத்தின் அடுத்த பாடலான `கஷ்டம் வந்தா' பாடலை யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளார். இப்பாடல் இன்று மாலை 6 மணிக்கும் படக்குழு வெளியிடவுள்ளது.
- ராம் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
- மலையாள நடிகரான அஜு வர்கீஸ் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.
கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம். இவர் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இதில், மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மலையாள நடிகரான அஜு வர்கீஸ் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.
இப்படத்திற்கு, சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். யுவன் பின்னணி இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் முதல் பாடலான சன்ஃப்ளவர் கடந்த மாதம் வெளியானது. டீசர் கடந்த 4 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் நடிகரான சித்தார்த் "டாடி ரொம்ப பாவம்" என்ற பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது.
- பறந்து போ படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். யுவன் பின்னணி இசையமைத்துள்ளார்.
- பறந்து போ படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாகிறது.
கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம். இவர் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இதில், மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு, சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். யுவன் பின்னணி இசையமைத்துள்ளார்.
இப்படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில், பறந்து போ படத்தில் இடம்பெற்றுள்ள சன் ஃபிளவர் என்கிற பாடல் வெளியாகும் தேதி குறித்து படக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, வரும் மே 23ம் தேதி சன் பிளவர் என்கிற முதல் சிங்கிள் பாடல் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். யுவன் பின்னணி இசையமைத்துள்ளார்.
- பறந்து போ வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாகிறது.
கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம்.
இவர் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இதில், மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு, சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். யுவன் பின்னணி இசையமைத்துள்ளார்.
இப்படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில், பறந்து போ படத்தில் இடம்பெற்றுள்ள சன் ஃபிளவர் என்கிற பாடல் வெளியாகும் தேதி குறித்து படக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, வரும் மே 23ம் தேதி சன் பிளவர் என்கிற முதல் சிங்கிள் பாடல் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.