என் மலர்
சினிமா செய்திகள்

3BHK & Paranthu po: மக்களை கவர்ந்த படம் எது ? வசூல் விவரம்
- ஜூலை 4 ஆம் தேதி சித்தார்த் நடிப்பில் 3 BHK திரைப்படமும், ராம் இயக்கிய பறந்து போ திரைப்படம் வெளியானது.
- 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார்
ஜூலை 4 ஆம் தேதி சித்தார்த் நடிப்பில் 3 BHK திரைப்படமும், ராம் இயக்கிய பறந்து போ திரைப்படம் வெளியானது. இந்த இரண்டு திரைப்படமும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஒரு நடுத்தர குடும்பம் அவர்களது கனவு இல்லத்தை வாங்க எப்படி கஷ்டப்படுகிறார்கள என்பதை உண்மைக்கு மிக நெருக்கமாக பதிவு செய்துள்ளது 3 BHK திரைப்படம்.
மறுப்பக்கம் தந்தை மற்றும் மகனுக்கு இடையே உள்ள உறவு முறையை மிக அழகாகவும், நகைச்சுவையாகவும் , பிள்ளை வளர்ப்பை பற்றி பறந்து போ திரைப்படம் பேசியுள்ளது.
முதல் இரண்டு நாட்கள் இரண்டு படங்களுமே நல்ல வசூல் செய்தது ஆனால் இன்று மூன்றவது நாளில் வசூலில் சிறிய தொய்வு ஏற்பட்டுள்ளது. 3 BHK திரைப்படம் இதுவரை 2.89 கோடியும் பறந்து போ திரைப்படம் 1.46 கோடி ரூபாயும் வசூலித்துள்ளது. பறந்து போ திரைப்படத்தை விட 3 BHK படத்தின் வசூல் அதிகமாக இருக்கிறது. இன்னும் வரும் வாரங்களில் இரு திரைப்படங்களும் அதிக வசூலிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.