என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பறந்து போ"

    • இயக்குனர் ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள படம் பறந்து போ.
    • நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா நடித்துள்ள படம் ஓஹோ எந்தன் பேபி.

    திரையரங்குகளுக்கு நிகராக, ஓடிடி தளங்கள் ஒவ்வொரு வாரமும் புதிய திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு பெரும் விருந்தளித்து வருகின்றன. அந்த வகையில், இந்த வாரமும் தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளில் விறுவிறுப்பான த்ரில்லர் முதல் மனதை வருடும் குடும்பக் கதை வரை பல திரைப்படங்கள் வெளியாகின்றன. அவற்றில் சில முக்கியப் படங்களைப் பற்றிய விரிவான தகவல்களை இங்கே காணலாம்.

    "பறந்து போ"

    இயக்குனர் ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள படம் பறந்து போ. இந்த படம் பிடிவாதமான பள்ளி சிறுவனும் பணத்தின் மீது அதிக மோகம் கொண்ட அவனது தந்தையும் நகர வாழ்க்கையிலிருந்து விலகி மேற்கொள்ளும் பயணம் குறித்த 'ரோட் டிராமா'வாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் கடந்த 5ந் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது.

    "ஓஹோ எந்தன் பேபி"

    நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா நடித்துள்ள படம் ஓஹோ எந்தன் பேபி. கிருஷ்ணகுமார் இயக்கியுள்ள இந்த படத்தில் பாலிவுட் நடிகை மிதிலா பால்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் நாளை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இது ஒரு ராம்-காம் கதைக்களத்தில் உருவான திரைப்படமாகும்.

    "மாமன்"

    பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ள படம் மாமன். இதில் ஐஸ்வர்யா லட்சுமி ,சுவாசிகா, ராஜ்கிரண், பால சரவணன், பாபா பாஸ்கர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. திரைப்படம் திரையரங்கிள் மக்களால் கொண்டாடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது. நீண்ட நாட்கள் திரைப்படம் ஓடிடியில் வெளியாகாமல் இருந்த நிலையில் இப்படம் நாளை ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

    "யாதும் அறியான்"

    யாதும் அறியான் என்பது எம். கோபி எழுதி இயக்கிய திரில்லர் படமாகும். இந்த படத்தில் தம்பி ராமையா மற்றும் அப்பு குட்டி , தினேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் நாளை ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

    "மாயசபா"

    ஆதி பினிசெட்டி மற்றும் சைதன்யா ராவ் நடித்துள்ள படம் மாயசபா. இந்த படத்தை தேவ கட்டா இயக்கியுள்ளார். உளவியல் அரசியல் திரில்லர் கதையில் உருவாகியுள்ள இதில் சாய் குமார், நாசர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் இன்று சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

    "வெட்னஸ்டே சீசன் 2"

    பிரபல இயக்குனர் டிம் பர்டன் இயக்கி காமெடி கலந்த திரில்லர் தொடர் வெனஸ்டே. தற்போது இந்த தொடரின் 2வது சீசன் வெளியாகி உள்ளது. இதில், வெட்னஸ்டேவாக ஜென்னா ஒர்டேகா நடித்துள்ளார். வெட்னஸ்டே சீசனின் முதல் 4 எபிசோட் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமாகி வருகிறது.

    "பத்மாசுலு"

    பத்மாசுலு என்பது ஷங்கர் செகுரி இயக்கிய தெலுங்கு நகைச்சுவை நாடகத் திரைப்படமாகும். இப்படத்தில் கவிதா ஸ்ரீரங்கம், தீக்ஷா கோடேஷ்வர் உள்ளிட்டோர் நடித்துள்ளார். இப்படம் நாளை ஈடிவி வின் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

    நடிகர்

    மலையாள நடிகர் டொவினோ தாமஸ் நடித்த 2024 வெளியீட்டு திரைப்படம் 'நடிகர்', திரையரங்குகளில் ரசிகர்கள் மெதுவாக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இத்திரைப்படம் நாளை சைனா ப்ளே ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இப்படத்தில் பாவனா, சௌபின் சாஹிர், திவ்யா பிள்ளார், பாலு வர்கீஸ் மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    • காதல் திருமணம் செய்த தம்பதியினர் நகர வாழ்க்கையை சமாளிக்க வேண்டிய சூழல்.
    • துறுதுறு மகனின் விருப்பங்களை பூர்த்தி செய்ய முடியாமல் எந்திரமய வாழ்க்கைக்காக ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்.

    சிவா, ஆண்டனி கிரேஸ், அஞ்சலி, மிதுன் ரியான் ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் 'பறந்து போ'. கற்றது தமிழ், தரமணி ஆகிய புரட்சிகரமான படைப்புகளை இயக்கியவர் ராம். தங்க மீன்கள் மூலமாக அப்பா-மகள் உறவு, பேரன்பு மூலமாக மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தை-அப்பா உறவு ஆகியவற்றை காட்சிப்படுத்தி நெகிழ வைத்தவர்.

    தற்போது இந்த படத்தின் மூலமாக அப்பா-மகன் உறவு குறித்து பேசியுள்ளார். சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் நாயகன்-நாயகி தனது மகனுடன் வாழ்ந்து வருகிறார்கள். காதல் திருமணம் செய்த தம்பதியினர் நகர வாழ்க்கையை சமாளிக்க வேண்டிய சூழல். துறுதுறு மகனின் விருப்பங்களை பூர்த்தி செய்ய முடியாமல் எந்திரமய வாழ்க்கைக்காக ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். இதனால் பெற்றோர் மீது மகன் வெறுப்படைய நாயகன் எடுக்கும் முடிவுகள் தொடர்பான படம். யுவன் சங்கர் ராஜா இசையில் வெற்றிப் பெற்ற இந்த படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் இன்று வெளியானது.


    • ஜூலை 4 ஆம் தேதி சித்தார்த் நடிப்பில் 3 BHK திரைப்படமும், ராம் இயக்கிய பறந்து போ திரைப்படம் வெளியானது.
    • 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார்

    ஜூலை 4 ஆம் தேதி சித்தார்த் நடிப்பில் 3 BHK திரைப்படமும், ராம் இயக்கிய பறந்து போ திரைப்படம் வெளியானது. இந்த இரண்டு திரைப்படமும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஒரு நடுத்தர குடும்பம் அவர்களது கனவு இல்லத்தை வாங்க எப்படி கஷ்டப்படுகிறார்கள என்பதை உண்மைக்கு மிக நெருக்கமாக பதிவு செய்துள்ளது 3 BHK திரைப்படம்.

    மறுப்பக்கம் தந்தை மற்றும் மகனுக்கு இடையே உள்ள உறவு முறையை மிக அழகாகவும், நகைச்சுவையாகவும் , பிள்ளை வளர்ப்பை பற்றி பறந்து போ திரைப்படம் பேசியுள்ளது.

    முதல் இரண்டு நாட்கள் இரண்டு படங்களுமே நல்ல வசூல் செய்தது ஆனால் இன்று மூன்றவது நாளில் வசூலில் சிறிய தொய்வு ஏற்பட்டுள்ளது. 3 BHK திரைப்படம் இதுவரை 2.89 கோடியும் பறந்து போ திரைப்படம் 1.46 கோடி ரூபாயும் வசூலித்துள்ளது. பறந்து போ திரைப்படத்தை விட 3 BHK படத்தின் வசூல் அதிகமாக இருக்கிறது. இன்னும் வரும் வாரங்களில் இரு திரைப்படங்களும் அதிக வசூலிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    • இயக்குனர் ராம் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
    • திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம். இவர் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இதில், மிர்ச்சி சிவா, அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இந்நிலையில், பறந்து போ படம் குறித்து இயக்குனர் அட்லீ பாராட்டி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் " பறந்து போ திரைப்படம் மிகவும் நெருக்கமாக இருந்தது. ஒரு அப்பாவிற்கும் மகனுக்குமான உறவை மிக அழகாக காண்பித்து இருந்தனர். படத்தில் இடம் பெற்ற பாடல்கள் நன்றாக இருந்தது. சிவா மற்றும் அஞ்சலி கதாப்பாத்திரம் மிகவும் பிடித்து இருந்தது. கண்டிப்பாக இது அனைத்து மக்களுக்கும் பிடிக்கும். ராம் அண்ணாக்கு வாழ்த்துக்கள்" என கூறியுள்ளார்.

    • கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம்.
    • திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம். இவர் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இதில், மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ளார்.

    இந்நிலையில், பறந்து போ படம் குறித்து இயக்குனர் மற்றும் நடிகருமான சசிகுமார் படத்தை பாராட்டியுள்ளார்.

    அதில் அவர் " அப்பா மகனுக்கு இடையே உள்ள உறவை மிகவும் அழகாக பிரதிபலிக்கும் விதமாக திரைப்படம் உருவாகியுள்ளது. சிவா மற்ற படங்களை விட இப்படத்தில் வித்தியாசமாக தெரிகிறார். மக்கள் அனைவரும் திரையரங்கில் சிரிச்சிகிட்டே இருந்தாங்க. சில காட்சிகள் மிகவும் எமோஷனலாக இருந்தது. அனைவரும் பறந்து போ திரைப்படத்தை திரையரங்கில் வந்து பார்த்து கொண்டாட வேண்டும். ராம் சாருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்" என கூறியுள்ளார்.

    • ராம் 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
    • 'பறந்து போ' படத்தில் மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ளார்.

    கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம். இவர் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில், மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ளார்.

    பறந்து போ படம் வெளியாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இந்நிலையில், பறந்து போ படம் குறித்து இயக்குனர் வெற்றி மாறன் பாராட்டி வீடியோ வெளியிட்டுள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    ஒரு அப்பாவாக இந்த படம் என்னை ரொம்ப யோசிக்க வைத்தது. தமிழில் ராமுடைய படங்கள் எப்போதுமே ஸ்பெஷலான படங்கள். அதில், பறந்து போ திரைப்படம் ரொம்ப ஸ்பெஷலானது.

    ராமுடைய படங்கள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். எனக்கு இந்த படம் ரொம்ப அதிகமாகவே தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த படத்தின் தந்தையின் சிந்தனை முறையில் என்னையும் கொண்டு சென்றுவிட்டார்.

    நடிகர் சிவா சிரமமின்றி தந்தை கதாப்பாத்திரத்தை மிக அழகாக நடித்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியும் நெருக்கத்தில் இருக்கு. படத்தில் பல இடங்களில் இப்படி இருந்திருக்கலாமே, அப்படி இருந்திருக்கலாமே என்று சிந்திக்க வைத்திருக்கிறது.

    படம் பார்த்து வந்ததில் இருந்து என்னுடைய குழந்தைகள் பற்றி நான் அதிகம் சிந்தித்துக் கொண்டே இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சித்தார்த் அவரது 40-வது திரைப்படமாக 3 BHK திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • பறந்து போ படத்தில் மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ளார்.

    இன்று வெளியான திரைப்படங்களில் பெரும் எதிர்ப்பார்ப்புடன் இருக்கும் திரைப்படம் 3 BHK மற்றும் பறந்து போ ஆகும்.

    3 BHK

    சித்தார்த் அவரது 40-வது திரைப்படமாக 3 BHK திரைப்படத்தில் நடித்துள்ளார். 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக சைத்ரா நடித்துள்ளார். இப்படத்திற்கு அம்ரித் ராம்நாத் இசையமைத்துள்ளார்.

    பறந்து போ

    கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம். இவர் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில், மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மலையாள நடிகரான அஜு வர்கீஸ் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.

    இந்நிலையில் இந்த இரண்டு திரைப்படங்களையும் பாராட்டி நடிகர் சூரி அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் "இன்று வெளியாகும் இந்த இரண்டு அற்புதமான திரைப்படங்கள் ஒவ்வொரு குடும்பத்தின் இதயத்தையும் தொடும்! ❤️??

    பறந்து போ : அப்பா-மகன் இடையேயான ஆழமான பாசப்பிணைப்பையும், உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் ஒரு நெகிழ்ச்சியான பயணத்தையும் உயிரோட்டமாக சித்தரிக்கும்.

    3BHK : ஒரு குடும்பத்தின் கனவு இல்லத்தை அடையும் உணர்ச்சிகரமான பயணத்தை அழகாக விவரிக்கும்.

    இந்த இரு படங்களும் காதல், மகிழ்ச்சி மற்றும் வாழ்வின் உண்மையான தருணங்களால் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும்.

    இயக்குநர் ராம் சார் அவர்களின் ஆழமான உணர்வுகளைத் தூண்டும், கலைநயமிக்க, தனித்துவமான பார்வை தனது படத்திற்கு உயிரூட்டி, இதயங்களை ஆழமாகத் தொடும் மறக்க முடியாத அனுபவத்தை வழங்கும்.

    அதேபோல், இயக்குநர் ஸ்ரீகணேஷ் அவர்களின் புதுமையான, நேர்த்தியான படைப்பாற்றல் தனது படத்திற்கு உயிர் கொடுத்து, மனதை மயக்கும், நெகிழ்ச்சியான அனுபவத்தை அளிக்கும். முழு குழுவிற்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்! " என பதிவிட்டுள்ளார்.

    • சித்தார்த் அவரது 40-வது திரைப்படமாக 3 BHK திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • விஜய் சேதுபதியின் மகன் சூர்யா தற்பொழுது `ஃபீனிக்ஸ்' படத்தின் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.

    3 BHK

    சித்தார்த் அவரது 40-வது திரைப்படமாக 3 BHK திரைப்படத்தில் நடித்துள்ளார். 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக சைத்ரா நடித்துள்ளார். இப்படத்திற்கு அம்ரித் ராம்நாத் இசையமைத்துள்ளார். திரைப்படம் நாளை வெளியாகிறது.

    பறந்து போ

    கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம். இவர் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில், மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மலையாள நடிகரான அஜு வர்கீஸ் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார். திரைப்படம் நாளை வெளியாகிறது.

    ஃபீனிக்ஸ்

    விஜய் சேதுபதியின் மகன் சூர்யா தற்பொழுது `ஃபீனிக்ஸ்' படத்தின் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். சண்டை இயக்குனர் அனல் அரசு இப்படத்தை இயக்கியுள்ளார். பிரேவ் மேன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் மூலம் அனல் அரசு இயக்குனராக அறிமுகமாகுகிறார். படத்தில் சூர்யா பாக்சராக நடிக்க மேலும் வரலட்சுமி சரத்குமார் மற்றும் ஹரிஷ் உத்தமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் நாளை வெளியாகிறது.

    மேலும் ஜுராசிக் வர்ல்ட், லிஸி ஆண்டனி நடித்த குயிலி மற்றும் விஜய் கிருஷ்ணா நடித்த அனுக்கிரகன் திரைப்படம். இவை அனைத்தும் நாளை திரையரங்கிள் வெளியாக இருக்கிறது.

    • இதில், மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ளார்.
    • படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம். இவர் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில், மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ளார்.

    மேலும், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மலையாள நடிகரான அஜு வர்கீஸ் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.

    இப்படத்திற்கு, யுவன் பின்னணி இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாகிறது.படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில் படத்திற்கு தணிக்கை குழு யு சான்றிதழை வழங்கியுள்ளது.

    • மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ளார்.
    • இப்படத்திற்கு யுவன் பின்னணி இசையமைத்துள்ளார்.

    கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம். இவர் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில், மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ளார்.

    மேலும், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மலையாள நடிகரான அஜுவர்கீஸ் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.

    இப்படத்திற்கு, யுவன் பின்னணி இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாகிறது.படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில் திரைப்படம் ரோட்டர்டேம் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அப்போது பார்வையாளர்களின் ரியாக்ஷன் மற்றும் அவர்களது விமர்சனத்தை வீடியோவாக படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் திரைப்படம் மிகவும் நகைச்சுவையாக இருந்தது, நடிப்பு அருமையாக இருந்தது, அந்த சிறுவனின் நடிப்பு ரசிக்கும்படியாக அமைந்துள்ளது. என கூறியுள்ளனர்.

    • பறந்து போ படத்தில் மிர்ச்சி சிவா, அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி உள்பட பலர் நடித்துள்ளனர்.
    • வருகிற ஜூலை 4-ந் தேதி படம் திரைக்கு வருகிறது.

    பறந்து போ படத்தில் மிர்ச்சி சிவா, அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி உள்பட பலர் நடித்துள்ளனர். வருகிற ஜூலை 4-ந் தேதி படம் திரைக்கு வருகிறது.

    சுதந்திரத்தை விரும்பும் குழந்தை தனது பெற்றோரையும் சுதந்திரத்தை நோக்கி அழைத்து செல்லும் கதைகளத்துடன் உருவாகியுள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று மாலை நடந்தது. விழாவில் சுமார் 30 இயக்குனர்கள் ஒன்று போல் திரண்டு படத்தை வாழ்த்தி பேசினர். விழாவில் பங்கேற்ற அனைவரையும் சூரியகாந்தி பூ கொடுத்து படக்குழுவினர் வரவேற்றனர்.

    இயக்குனர் விக்ரமன், பாலா, வெற்றிமாறன், சுரேஷ் காமாட்சி, நித்திலன், புஸ்கர் காயத்ரி, பாண்டியராஜ், ஏ.எல்.விஜய், பாலாஜி சக்திவேல், யூகி சேது, கஸ்துரி ராஜா, சசி, அழகம் பெருமாள், மீரா கதிரவன், அஸ்வத் மாரிமுத்து, மந்திரமூர்த்தி, ரவிக்குமார், கணேஷ் கே, மைக்கேல் ராஜா, சுரேஷ் மாரி, ரஞ்சித் ஜெயக்கொடி, ஜெயகுமார், விஷால், ராம்குமார், அபிஷன், அருண் ராஜா காமராஜ், இயன் பாரி உள்பட 30-க்கும் மேற்பட்ட இயக்குனர்கள் ஒன்றாக விழாவில் அணிவகுத்து வாழ்த்தினர்.

    • பறந்து போ படத்திற்கு யுவன் பின்னணி இசையமைத்துள்ளார்.
    • பறந்து போ வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாகிறது.

    கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம். இவர் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில், மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ளார்.

    மேலும், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மலையாள நடிகரான அஜுவர்கீஸ் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.

    இப்படத்திற்கு, யுவன் பின்னணி இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாகிறது.

    இந்த படத்தின் 2 பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்த பாடலான `கஷ்டம் வந்தா' பாடல் சமீபத்தில் வெளியானது. இந்த பாடலை யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளார்.

    பறந்து போ படத்தில் ஆடியோ மற்றும் டிரெயிலர் இன்று வெளியிடப்படுவதாக படக்குழு அறிவித்தது.

    இந்நிலையில், பறந்து போ படத்தின் டிரெயிலர் தற்போது வெளியாகியுள்ளது.

    ×