என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "phoenix veezhan"

    • தவறு என்று தெரிந்தால் உடனடியாக மன்னிப்பு கேட்டுவிடுங்கள்.
    • விமர்சிப்போரையும் உறவுகளாக பாருங்கள்.

    முன்னணி நடிகரான விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, அனல் அரசு இயக்கத்தில் உருவான 'பீனிக்ஸ்' படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். சமீபத்தில் சென்னையில் நடந்த இந்த பட விழாவில், சூர்யா வாயில் 'சுவிங்கம்' மென்றபடி, ரசிகர்களுடன் கலந்துரையாடியது விமர்சனத்துக்குள்ளானது. 'முதல் படத்திலேயே பந்தா தேவையா...', என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டது.

    இந்தநிலையில் 'பீனிக்ஸ்' படத்தின் வெற்றியைப் படக்குழுவினர் கொண்டாடிய விழாவில் இயக்குனர் அனல் அரசு பங்கேற்று பேசும்போது, 'பீனிக்ஸ்' படம் சூர்யாவுக்காக மட்டும் எடுக்கப்பட்டது கிடையாது. சூர்யா மீது குற்றச்சாட்டு கூறுவோருக்கும், அவரை விமர்சித்து டிரோல் செய்வோருக்கும் நான் சொல்லிக்கொள்வது, 'நீங்கள் சூர்யாவின் வாழ்க்கையில் மட்டும் விளையாடவில்லை, இந்த படத்தின் மூலமாக புதிதாக சினிமாவில் எட்டிப்பார்த்துள்ள அனைவரது வாழ்க்கையிலும் விளையாடுகிறீர்கள்.

    ஒரு படத்தில் பலரது வாழ்க்கை அடங்கியிருக்கிறது என்று உணர்ந்து, யோசித்து செயல்பட்டால் நல்லது. (சூர்யாவை நோக்கி) தவறு என்று தெரிந்தால் உடனடியாக மன்னிப்பு கேட்டுவிடுங்கள். விமர்சிப்போரையும் உறவுகளாக பாருங்கள். மன்னிப்பு பல பிரச்சனைகளை தீர்த்துவிடும்' என்றார்.

    • பீனிக்ஸ் வீழான் திரைபடத்தின் டிரெய்லர், விமர்சனம், நட்சத்திரங்கள் மட்டும் OTT விவரங்கள்
    • இப்படத்தை அனல் அரசு இயக்கியுள்ளார்.

    கதைக்களம்

    சென்னை கடற்கரையோர பகுதியில் வாழ்ந்து வருகிறார் சூர்யா சேதுபதி. அதே பகுதியில் எம்.எல்.ஏ.வாக இருக்கும் சம்பத்தை சூர்யா சேதுபதி கொலை செய்கிறார். 17 வயது மட்டுமே ஆனதால் சூர்யா சேதுபதியை சிறுவர் ஜெயிலில் அடைக்கிறார்கள். அங்கு சம்பத்தின் மனைவி வரலட்சுமி சரத்குமார், தன் ஆதரவாளர்களை வைத்து சூர்யா சேதுபதியை கொல்ல முயற்சி செய்கிறார். இதிலிருந்து சூர்யா சேதுபதி தப்பித்து விடுகிறார். தொடர்ந்து அவரை கொல்ல முயற்சி நடந்து கொண்டே இருக்கிறது.

    இறுதியில் சூர்யா சேதுபதி கொலை முயற்சியில் இருந்து தப்பித்தாரா? எம்.எல்.ஏ. சம்பத்தை சூர்யா சேதுபதி கொலை செய்ய காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் சூர்யா சேதுபதி, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் வெளுத்து வாங்கி இருக்கிறார். முதல் பாதியில் வசனம் இல்லாமல் உடல் மொழியாலும், கண் பார்வையாலும் நடித்து ஸ்கோர் செய்து இருக்கிறார். இரண்டாம் பாதியில் பக்குவமான நடிப்பை கொடுத்து இருக்கிறார்.

    எம்.எல்.ஏ, சம்பத், அவரது மனைவி வரலட்சுமி சரத்குமார் இருவரும் வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார்கள். தாய் பாசத்தில் நெகிழ வைத்து இருக்கிறார் தேவதர்ஷினி. மகனுக்காக ஏங்கும் காட்சியில் கண்கலங்க வைக்கிறார். அபி நட்சத்திராவின் நடிப்பு பரிதாபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அடியாளாக வரும் ரிஷி கவனிக்க வைத்து இருக்கிறார்.

    இயக்கம்

    பழிக்கு பழி வாங்கும் கதை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் அனல் அரசு. படம் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார். ஆக்ஷன் காட்சிகள் அனைத்திலும் மாஸ் காண்பித்து இருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் ஆக்ஷன் காட்சி பிரமிக்க வைத்து இருக்கிறார்.

    இசை

    சாம்.சி.எஸ் இசையில் இந்தா வாங்கிக்கோ பாடல் டான்ஸ் ஆட வைக்கிறது. பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார்.

    ஒளிப்பதிவு

    வேல்ராஜின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.

    தயாரிப்பு

    AK Braveman Picturess நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

    • விஜய் சேதுபதியின் மகன் சூர்யா தற்பொழுது `ஃபீனிக்ஸ்' படத்தின் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.
    • சண்டை இயக்குனர் அனல் அரசு இப்படத்தை இயக்கியுள்ளார்.

    விஜய் சேதுபதியின் மகன் சூர்யா தற்பொழுது `ஃபீனிக்ஸ்' படத்தின் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.விஜய் சேதுபதியின் மகன் சூர்யா தற்பொழுது `ஃபீனிக்ஸ்' படத்தின் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.

    சண்டை இயக்குனர் அனல் அரசு இப்படத்தை இயக்கியுள்ளார். பிரேவ் மேன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் மூலம் அனல் அரசு இயக்குனராக அறிமுகமாகுகிறார்.

    படத்தில் சூர்யா பாக்சராக நடிக்க மேலும் வரலட்சுமி சரத்குமார் மற்றும் ஹரிஷ் உத்தமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் இன்று வெளியானது.

    இந்நிலையில் படத்தை பார்த்து படக்குழுவை பாராட்டியுள்ளார் நடிகர் விஜய். அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிக்கும் ஜன நாயகன் படத்திற்கு அனல் அரசு சண்டை பயிற்சி இயக்குநராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

    • சித்தார்த் அவரது 40-வது திரைப்படமாக 3 BHK திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • விஜய் சேதுபதியின் மகன் சூர்யா தற்பொழுது `ஃபீனிக்ஸ்' படத்தின் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.

    3 BHK

    சித்தார்த் அவரது 40-வது திரைப்படமாக 3 BHK திரைப்படத்தில் நடித்துள்ளார். 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக சைத்ரா நடித்துள்ளார். இப்படத்திற்கு அம்ரித் ராம்நாத் இசையமைத்துள்ளார். திரைப்படம் நாளை வெளியாகிறது.

    பறந்து போ

    கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம். இவர் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில், மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மலையாள நடிகரான அஜு வர்கீஸ் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார். திரைப்படம் நாளை வெளியாகிறது.

    ஃபீனிக்ஸ்

    விஜய் சேதுபதியின் மகன் சூர்யா தற்பொழுது `ஃபீனிக்ஸ்' படத்தின் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். சண்டை இயக்குனர் அனல் அரசு இப்படத்தை இயக்கியுள்ளார். பிரேவ் மேன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் மூலம் அனல் அரசு இயக்குனராக அறிமுகமாகுகிறார். படத்தில் சூர்யா பாக்சராக நடிக்க மேலும் வரலட்சுமி சரத்குமார் மற்றும் ஹரிஷ் உத்தமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் நாளை வெளியாகிறது.

    மேலும் ஜுராசிக் வர்ல்ட், லிஸி ஆண்டனி நடித்த குயிலி மற்றும் விஜய் கிருஷ்ணா நடித்த அனுக்கிரகன் திரைப்படம். இவை அனைத்தும் நாளை திரையரங்கிள் வெளியாக இருக்கிறது.

    • ஃபினீக்ஸ் படத்தின் மூலம் அனல் அரசு இயக்குனராக அறிமுகமாகுகிறார்.
    • ஃபினீக்ஸ் படம் வரும் ஜுலை 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    விஜய் சேதுபதியின் மகன் சூர்யா தற்பொழுது `ஃபீனிக்ஸ்' படத்தின் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.

    சண்டை இயக்குனர் அனல் அரசு இப்படத்தை இயக்கியுள்ளார். பிரேவ் மேன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் மூலம் அனல் அரசு இயக்குனராக அறிமுகமாகுகிறார்.

    படத்தில் சூர்யா பாக்சராக நடிக்க மேலும் வரலட்சுமி சரத்குமார் மற்றும் ஹரிஷ் உத்தமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இப்படம் வரும் ஜுலை 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று மாலை நடைப்பெற்றது.

    அப்போது, படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியானது. படத்தின் டிரெய்லரை இயக்குநர் அட்லீ மற்றும் நடிகர் கார்த்தி அவர்களது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளனர்.

    • விஜய் சேதுபதியின் மகன் சூர்யா தற்பொழுது `ஃபீனிக்ஸ்' படத்தின் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.
    • வரலட்சுமி சரத்குமார் மற்றும் ஹரிஷ் உத்தமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    விஜய் சேதுபதியின் மகன் சூர்யா தற்பொழுது `ஃபீனிக்ஸ்' படத்தின் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.

    சண்டை இயக்குனர் அனல் அரசு இப்படத்தை இயக்கியுள்ளார். பிரேவ் மேன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் மூலம் அனல் அரசு இயக்குனராக அறிமுகமாகுகிறார்

    படத்தில் சூர்யா பாக்சராக நடிக்க மேலும் வரலட்சுமி சரத்குமார் மற்றும் ஹரிஷ் உத்தமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இப்படம் வரும் ஜுலை 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று மாலை நடைப்பெறுகிறது. படத்தின் டிரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது. படத்தின் டிரெய்லரை இயக்குநர் அட்லீ மற்றும் நடிகர் கார்த்தி அவர்களது எக்ஸ் தளத்தில் வெளியிடவுள்ளனர்.

    • விஜய் சேதுபதியின் மகன் சூர்யா தற்பொழுது `ஃபீனிக்ஸ்' படத்தின் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.
    • சண்டை இயக்குனர் அனல் அரசு இப்படத்தை இயக்கியுள்ளார்.

    விஜய் சேதுபதியின் மகன் சூர்யா தற்பொழுது `ஃபீனிக்ஸ்' படத்தின் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.

    சண்டை இயக்குனர் அனல் அரசு இப்படத்தை இயக்கியுள்ளார். பிரேவ் மேன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் மூலம் அனல் அரசு இயக்குனராக அறிமுகமாகவுள்ளார்.

    படத்தில் சூர்யா பாக்சராக நடித்துள்ளார். வரலட்சுமி சரத்குமார் மற்றும் ஹரிஷ் உத்தமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இப்படம் ஜுலை 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் இந்தா வாங்கிக்கோ என்ற குத்து பாடலை விஜய் சேதுபதி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    • விஜய் சேதுபதியின் மகன் சூர்யா தற்பொழுது `ஃபீனிக்ஸ்' படத்தின் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.
    • சண்டை இயக்குனர் அனல் அரசு இப்படத்தை இயக்கியுள்ளார்.

    விஜய் சேதுபதியின் மகன் சூர்யா தற்பொழுது `ஃபீனிக்ஸ்' படத்தின் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். சண்டை இயக்குனர் அனல் அரசு இப்படத்தை இயக்கியுள்ளார்.

    பிரேவ் மேன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் மூலம் அனல் அரசு இயக்குனராக அறிமுகமாகவுள்ளார்.

    படத்தில் சூர்யா பாக்சராக நடித்துள்ளார். வரலட்சுமி சரத்குமார் மற்றும் ஹரிஷ் உத்தமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் ஜுலை 4 ஆம் தேதி வெளியாகிறது.


    • விஜய் சேதுபதியின் மகன் சூர்யா தற்பொழுது `ஃபீனிக்ஸ்’ படத்தின் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.
    • சண்டை இயக்குனர் அனல் அரசு இப்படத்தை இயக்கியுள்ளார்.

    விஜய் சேதுபதியின் மகன் சூர்யா தற்பொழுது `ஃபீனிக்ஸ்' படத்தின் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். சண்டை இயக்குனர் அனல் அரசு இப்படத்தை இயக்கியுள்ளார்.

    பிரேவ் மேன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் மூலம் அனல் அரசு இயக்குனராக அறிமுகமாகவுள்ளார்.

    படத்தில் சூர்யா பாக்சராக நடித்துள்ளார். வரலட்சுமி சரத்குமார் மற்றும் ஹரிஷ் உத்தமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பை நாளை மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    • பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி.
    • இவர் பல மொழிகளில் நடிக்கிறார்.

    நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நானும் ரவுடி தான் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த விஜய் சேதுபதி, விக்ரம் படத்தில் நடித்து பலரின் பாராட்டுக்களை பெற்றார். இவர் தற்போது தமிழ் மட்டுமல்லாது மலையாளம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.


    ஃபீனிக்ஸ் வீழான் போஸ்டர்

    இவரது மகன் சூர்யா கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் இவர் நடிக்கும் திரைப்படம் 'ஃபீனிக்ஸ் வீழான்'. பிரேவ் மேன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.

    விஜய் சேதுபதியின் 'நானும் ரவுடி தான்', 'சிந்துபாத்' படங்களில் சூர்யா நடித்திருந்ததாக கூறப்படுகிறது.

    • விஜய் சேதுபதியின் மகன் சூர்யா கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.
    • அப்பா விஜய் சேதுபதிக்கு மகன் சூர்யா பொன்னாடை போர்த்தி தந்தையர் தின வாழ்த்து தெரிவித்தார்.

    விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் வெளியான மகாராஜா திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

    விஜய் சேதுபதி தற்போது தமிழ் மட்டுமல்லாது மலையாளம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

    விஜய் சேதுபதியின் மகன் சூர்யா கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். இயக்குநர் அனல் அரசு இயக்கத்தில் இவர் நடிக்கும் திரைப்படம் 'ஃபீனிக்ஸ் வீழான்'. பிரேவ் மேன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.

    இந்நிலையில் இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

    பீனிக்ஸ் படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில், அப்பா விஜய் சேதுபதிக்கு மகன் சூர்யா பொன்னாடை போர்த்தி தந்தையர் தின வாழ்த்து தெரிவித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விஜய் சேதுபதியின் மகன் சூர்யா கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.
    • அனல் அரசு இயக்கத்தில் இவர் நடிக்கும் திரைப்படம் 'ஃபீனிக்ஸ் வீழான்'.

    விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

    விஜய் சேதுபதி தற்போது தமிழ் மட்டுமல்லாது மலையாளம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

    விஜய் சேதுபதியின் மகன் சூர்யா கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். சண்டை இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் இவர் நடிக்கும் திரைப்படம் 'ஃபீனிக்ஸ் வீழான்'. பிரேவ் மேன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். இப்படத்தின் மூலம் அனல் அரசு இயக்குனராக அறிமுகமாகவுள்ளார்.

    இப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படத்தில் சூர்யா பாக்சராக நடித்துள்ளார். வரலட்சுமி சரத்குமார் மற்றும் ஹரிஷ் உத்தமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    படத்தின் ரிலீஸ் தேதி தற்பொழுது படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படம் வரும் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது என அறிவித்துள்ளனர். இதே சூர்யா நடிப்பில் சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படமும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×