என் மலர்
சினிமா செய்திகள்

நாளை வெள்ளித்திரையில் வெளியாகும் திரைப்படங்கள்!
- சித்தார்த் அவரது 40-வது திரைப்படமாக 3 BHK திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- விஜய் சேதுபதியின் மகன் சூர்யா தற்பொழுது `ஃபீனிக்ஸ்' படத்தின் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.
3 BHK
சித்தார்த் அவரது 40-வது திரைப்படமாக 3 BHK திரைப்படத்தில் நடித்துள்ளார். 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக சைத்ரா நடித்துள்ளார். இப்படத்திற்கு அம்ரித் ராம்நாத் இசையமைத்துள்ளார். திரைப்படம் நாளை வெளியாகிறது.
பறந்து போ
கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம். இவர் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில், மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மலையாள நடிகரான அஜு வர்கீஸ் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார். திரைப்படம் நாளை வெளியாகிறது.
ஃபீனிக்ஸ்
விஜய் சேதுபதியின் மகன் சூர்யா தற்பொழுது `ஃபீனிக்ஸ்' படத்தின் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். சண்டை இயக்குனர் அனல் அரசு இப்படத்தை இயக்கியுள்ளார். பிரேவ் மேன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் மூலம் அனல் அரசு இயக்குனராக அறிமுகமாகுகிறார். படத்தில் சூர்யா பாக்சராக நடிக்க மேலும் வரலட்சுமி சரத்குமார் மற்றும் ஹரிஷ் உத்தமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் நாளை வெளியாகிறது.
மேலும் ஜுராசிக் வர்ல்ட், லிஸி ஆண்டனி நடித்த குயிலி மற்றும் விஜய் கிருஷ்ணா நடித்த அனுக்கிரகன் திரைப்படம். இவை அனைத்தும் நாளை திரையரங்கிள் வெளியாக இருக்கிறது.






