ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் `பறந்து போ' படத்திற்கு ஆடியன்ஸ் கொடுத்த ரியாக்ஷன்

மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ளார்.இப்படத்திற்கு யுவன் பின்னணி இசையமைத்துள்ளார்.
ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் `பறந்து போ' படத்திற்கு ஆடியன்ஸ் கொடுத்த ரியாக்ஷன்
Published on

கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம். இவர் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில், மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ளார்.

மேலும், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மலையாள நடிகரான அஜுவர்கீஸ் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.

இப்படத்திற்கு, யுவன் பின்னணி இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாகிறது.படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் திரைப்படம் ரோட்டர்டேம் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அப்போது பார்வையாளர்களின் ரியாக்ஷன் மற்றும் அவர்களது விமர்சனத்தை வீடியோவாக படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் திரைப்படம் மிகவும் நகைச்சுவையாக இருந்தது, நடிப்பு அருமையாக இருந்தது, அந்த சிறுவனின் நடிப்பு ரசிக்கும்படியாக அமைந்துள்ளது. என கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com