மக்கள் `பறந்து போ' படத்தை கொண்டாடுவதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது - சசிகுமார்

கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம். திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மக்கள் `பறந்து போ' படத்தை  கொண்டாடுவதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது - சசிகுமார்
Published on

கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம். இவர் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதில், மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ளார்.

இந்நிலையில், பறந்து போ படம் குறித்து இயக்குனர் மற்றும் நடிகருமான சசிகுமார் படத்தை பாராட்டியுள்ளார்.

அதில் அவர் " அப்பா மகனுக்கு இடையே உள்ள உறவை மிகவும் அழகாக பிரதிபலிக்கும் விதமாக திரைப்படம் உருவாகியுள்ளது. சிவா மற்ற படங்களை விட இப்படத்தில் வித்தியாசமாக தெரிகிறார். மக்கள் அனைவரும் திரையரங்கில் சிரிச்சிகிட்டே இருந்தாங்க. சில காட்சிகள் மிகவும் எமோஷனலாக இருந்தது. அனைவரும் பறந்து போ திரைப்படத்தை திரையரங்கில் வந்து பார்த்து கொண்டாட வேண்டும். ராம் சாருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்" என கூறியுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com