என் மலர்
நீங்கள் தேடியது "ஓடிடி"
- தமிழ்நாடு - ஆந்திரப் பிரதேச எல்லைப் பகுதிகளில் நடைபெற்ற அச்சுறுத்தும் சம்பவங்களை மையமாகக் கொண்டது.
- 20-க்கும் மேற்பட்ட வெப் சீரிஸ்களும், ஆங்கிலம், இந்தி திரைப்படங்களும் ஓ.டி.டி.தளத்தில் வெளியாக உள்ளன.
திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.
தடயம்
நவீன் குமார் பழனிவேல் இயக்கத்தில் அஜய் கிருஷ்ணா தயாரிப்பில் சமுத்திர கனி நடிப்பில் உருவாகி உள்ள தொடர் 'தடயம்'. இந்த தொடரில் நடிகை ஷிவதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 'தடயம்' தொடர் 1999-ம் ஆண்டில் தமிழ்நாடு - ஆந்திரப் பிரதேச எல்லைப் பகுதிகளில் நடைபெற்ற அச்சுறுத்தும் சம்பவங்களை மையமாகக் கொண்டது. நிஜ வாழ்க்கையில் நடந்த பயங்கரமான தொடர் கொலைகளை மீண்டும் நினைவூட்டி பார்வையாளர்களுக்கு திகிலூட்டும் ஒரு புதிய அனுபவத்தை தர உள்ளது. இந்த நிலையில், 'தடயம்' தொடரை நாளை முதல் ஜீ5 ஓ.டி.டி. தளத்தில் கண்டு மகிழலாம்.
ஹனி (Honey)
தெலுங்குப்படமான 'ஹனி' (Honey) தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகிறது. சைக்கலாஜிக்கல் திரில்லிங்கான இப்படத்தில் நவீன் சந்திரா, திவ்யா பிள்ளை ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மதனப்பள்ளியில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் நாளை சன் நெக்ஸ்ட் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகிறது.
HouseMaid
ஃப்ரீடா மெக்ஃபேடனின் பிரபலமான நாவலை அடிப்படையாகக் கொண்ட திரில்லரான படம் 'தி ஹவுஸ்மெய்ட்'. பால் ஃபீக் இயக்கியுள்ள இந்தப் படத்தில் பிரபல நடிகைகளான சிட்னி ஸ்வீனி மற்றும் அமண்டா செஃப்ரிட் ஆகியோர் நடித்துள்ளார். ஒரு வீட்டில் பணிப்பெண்ணாக வேலைக்கு சேரும் இளம்பெண் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் நாளை முதல் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் கண்டு மகிழலாம்.
இதனிடையே 20-க்கும் மேற்பட்ட வெப் சீரிஸ்களும், ஆங்கிலம், இந்தி திரைப்படங்களும் ஓ.டி.டி.தளத்தில் வெளியாக உள்ளன.
- கடந்த சில மாதங்களாகவே மத்திய அரசு சிறிய அளவிலான ஓ.டி.டி. தளங்களைக் கண்காணித்து வருகிறது.
- மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் விதிகளுக்கு எதிராக இந்தத் தளங்கள் செயல்பட்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவின் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000-ன் கீழ், ஆபாசமான தகவல்களை மின்னணு முறையில் பரப்புவது தணடனைக்குரிய குற்றமாகும். கடந்த சில மாதங்களாகவே மத்திய அரசு இத்தகைய சிறிய அளவிலான ஓ.டி.டி. தளங்களைக் கண்காணித்து வருகிறது.
இந்த நிலையில் ஆபாசமான காட்சிகளை ஒளிபரப்பியதாகக் கூறி, 5 ஓ.டி.டி. தளங்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தடை விதித்துள்ளது. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் விதிகளுக்கு எதிராக இந்தத் தளங்கள் செயல்பட்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக, சந்தாதாரர்களை கவர்வதற்காக அநாகரீகமான மற்றும் வக்கிரமான காட்சிகளைத் தொடர்ந்து ஒளிபரப்பி வந்ததாக எழுந்த புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
- இப்படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது.
- நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ளார்.
திருமலை புரொடக்ஷன் சார்பில் கா.கருப்புசாமி தயாரிப்பில் சுகவனம் எழுதி இயக்கிய படம் 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்'. இப்படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது.
கொங்கு வட்டார பின்னணியில் எடுக்கப்பட்ட இப்படத்தில் 'பரோட்டா' முருகேசன், கார்த்திகேசன், முருகன், விஜயன், சேனாபதி, சித்ரா, கவுசிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜெ.டி.விமல் ஒளிப்பதிவு செய்துள்ளார். நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்' படம் திரையரங்குகளில் வெளியாகி கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு பிறகு நாளை ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது. நாளை முதல் சன் நெக்ஸ்ட் ஓ.டி.டி. தளத்தில் கண்டு களிக்கலாம்.
- நடிகை ஷிவதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
- தொடர் கொலைகளை மீண்டும் நினைவூட்டி பார்வையாளர்களுக்கு திகிலூட்டும் ஒரு புதிய அனுபவத்தை தர உள்ளது.
தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளுக்கும், சமூகப் பார்வை கொண்ட நடிப்புக்கும் பெயர் பெற்றவர் சமுத்திரகனி. இவர் இயக்கி நடித்த 'விநோதய சித்தம்' படம் ஓ.டி.டி. தளமான ஜீ5-ல் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து தற்போது நவீன் குமார் பழனிவேல் இயக்கத்தில் அஜய் கிருஷ்ணா தயாரிப்பில் சமுத்திர கனி நடிப்பில் உருவாகி உள்ள தொடர் 'தடயம்'. இந்த தொடரில் நடிகை ஷிவதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
'தடயம்' தொடர் 1999-ம் ஆண்டில் தமிழ்நாடு - ஆந்திரப் பிரதேச எல்லைப் பகுதிகளில் நடைபெற்ற அச்சுறுத்தும் சம்பவங்களை மையமாகக் கொண்டது. நிஜ வாழ்க்கையில் நடந்த பயங்கரமான தொடர் கொலைகளை மீண்டும் நினைவூட்டி பார்வையாளர்களுக்கு திகிலூட்டும் ஒரு புதிய அனுபவத்தை தர உள்ளது.
இந்த நிலையில், 'தடயம்' தொடரின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. கூர்மையான புத்திசாலித்தானம் கொண்ட காவல் அதிகாரியான சமுத்திரகனி, குற்றவாளிகளையும், கொலைகளுக்கு பின்னால் இருக்கும் காரணங்களையும் கண்டறிகிறார். அதிரடி க்ரைம் த்ரில்லராக உருவாகி உள்ள திகில் நிறைந்த 'தடயம்' தொடரை வருகிற 27-ந்தேதி முதல் ஜீ5 ஓ.டி.டி. தளத்தில் கண்டு மகிழலாம்.
- கடந்த மாதம் 15-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வசூல் குவித்தது.
- வெப் சீரிஸ்களும், ஆங்கிலம், இந்தி திரைப்படங்களும் ஓ.டி.டி.தளத்தில் வெளியாக உள்ளது.
திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.
மன சங்கர வர பிரசாத் காரு (Mana Shankara Vara Prasad Garu)
அனில் ரவிபுடி எழுதி இயக்கிய தெலுங்கு அதிரடி நகைச்சுவைத் திரைப்படம் 'மன சங்கர வர பிரசாத் காரு'. இப்படத்தில் சிரஞ்சீவி, வெங்கடேஷ், நயன்தாரா மற்றும் கேத்தரின் தெரசா ஆகியோர் நடித்துள்ளனர். ஈகோவால் பிரிந்துள்ள கணவன்- மனைவி தொடர்பாக குடும்ப பின்னணியில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் நாளை (பிப்.11) முதல் ஜீ5 ஓ.டி.டி. தளத்தில் பார்க்கலாம்.
கோஹ்ரா சீசன் 2 (Kohrra Season 2)
கோஹ்ரா சீசன் 2 என்பது சுதிப் சர்மா, குஞ்சித் சோப்ரா, டிகி சிசோடியா ஆகியோரால் உருவாக்கப்பட்டு ரன்தீப் ஜா இயக்கிய நெட்ஃபிளிக்ஸில் ஒரு கிரைம் திரில்லர் போலீஸ் தொடர் ஆகும். இத்தொடர் நாளை (பிப்.11) முதல் நெட் ஃபிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகிறது.
Baby Girl
வருண் வர்மா இயக்கத்தில் நிவின் பாலி, அபிமன்யு ஷம்மி திலகன் உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான படம் Baby Girl. நிவின் பாலி வேலை பார்க்கும் மருத்துவமனையில் பிறந்து 3 நாட்களே ஆன குழந்தை காணாமல் போகிறது. குழந்தையை காணாமல் போன விவகாரத்தில் நிவின் பாலி சிக்கிக்கொள்கிறார். அவர் து அதிலிருந்து எப்படி தப்பித்தார்? குழந்தை மீட்கப்பட்டதா? என்பதா படத்தின் கதைக்கரு. இப்படம் கடந்த மாதம் வெளியான நிலையில், நாளை மறுநாள் (பிப்.12) முதல் சோனி லைவ் ஓ.டி.டி. தளத்தில் கண்டு மகிழலாம்.
தலைவர் தம்பி தலைமையில்...
நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் நடிகர் ஜீவாவின் 45 ஆவது படம் 'தலைவர் தம்பி தலைமையில்'. இப்படம் கடந்த மாதம் 15-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வசூல் குவித்தது. இந்த நிலையில், அரசியல் கலந்த நகைச்சுவை படமான 'தலைவர் தம்பி தலைமையில்' படம் நாளை மறுநாள் (பிப்.11) முதல் நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது.
பிரிடேட்டர்: பேட்லேண்ட்ஸ் (Predator Badlands)
பிரிடேட்டர் தொடரின் ஏழாவது பாகமான பிரிடேட்டர்: பேட்லேண்ட்ஸ், எல்லே ஃபான்னிங் மற்றும் டிமிட்ரியஸ் ஸ்கஸ்டர்-கோலோஅமடாங்கி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டான் டிராக்டன்பெர்க் இயக்கிய இந்தப் படம், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியானது. கிட்டத்தட்ட 3 மாதங்களுக்குப் பிறகு, பிரிடேட்டர்: பேட்லேண்ட்ஸ் ஜியோஹாட்ஸ்டார் ஓ.டி.டி. தளத்தில் நாளை மறுநாள் (பிப்.12) முதல் வெளியாகிறது.
தி கன்ஜூரிங்: லாஸ்ட் ரைட்ஸ் (The Conjuring Last Rites)
தி கன்ஜூரிங்: லாஸ்ட் ரைட்ஸ் என்பது மைக்கேல் சாவ்ஸ் இயக்கிய ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட திகில் படமாகும். மேலும் இயன் கோல்ட்பர்க், ரிச்சர்ட் நெய்ங் மற்றும் டேவிட் லெஸ்லி ஜான்சன்-மெக்கோல்ட்ரிக் ஆகியோரால் எழுதப்பட்டது. இந்தப் படம் தி கன்ஜூரிங் திரைப்படத் தொடரின் ஒன்பதாவது பாகமாகும். மேலும் இது ஸ்மர்ல் பேய் வழக்கின் நிஜ வாழ்க்கை விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டது. இதனை தொடர்ந்து ஜியோஹாட்ஸ்டார் ஓ.டி.டி. தளத்தில் வருகிற வெள்ளிக்கிழமை (பிப்.13) முதல் வெளியாகிறது.
இதனிடையே 20-க்கும் மேற்பட்ட வெப் சீரிஸ்களும், ஆங்கிலம், இந்தி திரைப்படங்களும் ஓ.டி.டி.தளத்தில் வெளியாக உள்ளன.
- பராசக்தி விமர்சன ரீதியாகவும், வசூல்ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
- வெப் சீரிஸ்களும், ஆங்கிலம், இந்தி திரைப்படங்களும் ஓ.டி.டி.தளத்தில் வெளியாக உள்ளன.
திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.
நாரி நாரி நடும முராரி:
ஷர்வானந்தின் புதிய காதல் நகைச்சுவைத் திரைப்படம் 'நாரி நாரி நடும முராரி'. பொங்கலையொட்டி கடந்த மாதம் 14-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. திரையரங்குகளில் வெளியான மூன்று வாரங்களுக்குப் பிறகு, ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது. அதன்படி, நாளை முதல் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ப்ரைம் வீடியோவில் கண்டு மகிழலாம்.
அன்ஃபாமிலியர்:
புதிய ஜெர்மன் தொடர் 'அன்ஃபாமிலியர்' நாளை மறுநாள் முதல் நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது. இத்தொடரில், சுசான் வுல்ஃப், ஃபெலிக்ஸ் க்ராமர், சாமுவேல் ஃபின்சி, ஆண்ட்ரியாஸ் பீட்ச்மேன், ஹென்றி ஹிப்சன், மஜாபோன்ஸ், செய்னெப்சலே, ஜெனிஜா ரிகோவா, நடாலியாபெலிட்ஸ்கி, ஆரோன் அல்டராஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கொம்பு சீவி:
இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் மறைந்த விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் கடந்த டிசம்பவர் மாதம் வெளியான படம் 'கொம்புசீவி'. இப்படத்தில் சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுகபாரதி, பா. விஜய், சினேகன் மற்றும் சூப்பர் சுப்பு ஆகியோரின் பாடல் வரிகளுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை பால சுப்ரமணியன் ஒளிப்பதிவு மேற்கொண்டார். 1996 வாக்கில் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வைகை அணை பகுதியில் நடந்த கதைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் வருகிற 6-ந்தேதி டெண்ட்கோட்டா ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது.
தி ராஜா சாப்:
மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவான படம் 'தி ராஜா சாப்'. பிரபாஸுடன் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், மற்றும் ரிதி குமார் முன்னணி பெண் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தில் சஞ்சய் தத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். மிகவும் பிரம்மாண்டமாக ஹாரர் காட்சிகள் படத்தில் இடம் பெற்றுள்ளது. மேலும் பிரபாஸ் மிகவும் ஜாலியாக நகைச்சுவைத்தனத்துடன் நடித்துள்ளார். பான் இந்தியன் படமாக இந்தி, தமிழ், தெலுங்கும், மலையாளம், கன்னடம் என அனைத்து மொழியிலும் கடந்த மாதம் 9-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. இதனை தொடர்ந்து இப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், வருகிற 6-ந்தேதி முதல் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி. தளத்தில் கண்டு களிக்கலாம்.
நீலகண்டா:
கிராமப்புறத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் 'நீலகண்டா'. இப்படம் கடந்த 2-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 6-ந்தேதி முதல் சன் நெக்ஸ்ட் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது.
பராசக்தி:
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் நடிப்பில், பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரியில் வெளியான படம் பராசக்தி. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருந்த இப்படத்தை டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்திருந்தார். பேசில் ஜோசப், ராணா டக்குபதி, சேத்தன் போன்றோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மொழி திணிப்பை அடிப்படையாக கொண்டு உருவான இப்படம் விமர்சனரீதியாகவும், வசூல்ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ரூ.100 கோடிக்கும் மேல் வசூலானது. இந்நிலையில் பராசக்தி படம் வரும் 7-ந்தேதி ஜீ5 ஓ.டி.டி. தளத்தில் வெளியாகிறது.
இதனிடையே 20-க்கும் மேற்பட்ட வெப் சீரிஸ்களும், ஆங்கிலம், இந்தி திரைப்படங்களும் ஓ.டி.டி.தளத்தில் வெளியாக உள்ளன.
இந்தியில் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்ஷய் கண்ணா, சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியான படம் துறந்தார் 'துரந்தர்'
இத்திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.1350 கோடிக்கும் மேல் வசூலித்து மேஹா ஹிட் ஆனது.
மூன்றரை மணி நேரம் நீளம் கொண்ட இந்த படம் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பதற்றத்தை மையமாகக் கொண்டு, இந்திய உளவுத்துறை மேற்கொள்ளும் ரகசிய மிஷன் குறித்த விறுவிறுப்பான கதையாகும்.
இந்நிலையில் திரையரங்குகளில் வெளியாகி இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், இன்று (ஜனவரி 30) முதல் இந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் இத்திரைப்படம் நெட்பிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கிறது.
திரையரங்குகளில் இப்படத்தைப் பார்க்கத் தவறிய ரசிகர்கள் இப்போது ஓடிடியில் கண்டு ரசிக்கலாம்.
- குறைந்த பட்ஜெட்டில் உருவாகி ரூ.80 கோடி வசூல் செய்தது.
- படம் நாளைமுதல் Sony LIV ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
சமீப காலங்களாகவே வித்தியாசமாக கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார் நடிகர் மம்மூட்டி. அந்த வகையில், அறிமுக இயக்குநர் ஜித்தின் கே ஜோஸ் இயக்கத்தில் மம்மூட்டி, விநாயகன், காயத்ரி அர்ஜூன், ரஜிஷா விஜயன், ஸ்ருதி ராமசந்திரன், மாளவிகா மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'களம்காவல்'.
இந்தப் படம் கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. வில்லனாக மம்மூட்டி நடித்திருப்ப இப்படம், குறைந்த பட்ஜெட்டில் உருவாகி ரூ.80 கோடி வசூல் செய்தது. இந்நிலையில் இப்படத்தின் ஓ.டி.டி. ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் நாளைமுதல் Sony LIV ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
- 130க்கும் மேற்பட்ட Anime தொடர்களை Crunchyroll வழங்கி வருகிறது
- பிரபல Anime ஓடிடி தளமான Crunchyroll, இந்தியாவில் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்தவுள்ளது
Anime தொடர்களை இந்தியாவில் பலரும் ரசித்து பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரபல Anime ஓடிடி தளமான Crunchyroll, இந்தியாவில் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்த கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்லை தனது விளம்பரத் தூதராக நியமித்துள்ளது.
ஏற்கனவே இந்தியாவில் ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 130க்கும் மேற்பட்ட Anime தொடர்களை Crunchyroll வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
- பல OTT பிளாட்ஃபார்ம்கள் பல்வேறு வகையான வெப் தொடர்களை வழங்கி, ரசிகர்களை கட்டிப்போட்டன.
- பல ஜானர்களில் வெளியான வெப் தொடர்கள் சுவாரசியமான கதைகளால் பிரபலமடைந்தன.
2025 ஆம் ஆண்டு தமிழ் சினிமா உலகில் ஓடிடி தளங்களின் ஆதிக்கம் மேலும் வலுப்பெற்றது. அமேசான் பிரைம், ஜியோ ஹாட்ஸ்டார், நெட்ஃப்ளிக்ஸ், ஆஹா, சோனி லிவ் போன்ற பிளாட்ஃபார்ம்கள் பல்வேறு வகையான வெப் தொடர்களை வழங்கி, ரசிகர்களை கட்டிப்போட்டன.
கிரைம் திரில்லர், ரொமான்டிக் டிராமா, காமெடி, ஸ்போர்ட்ஸ் என பல ஜானர்களில் வெளியான தொடர்கள், சிறந்த நடிப்பு மற்றும் சுவாரசியமான கதைகளால் பிரபலமடைந்தன.
இந்த ரீவைண்டில், 2025இன் டாப் 10 தமிழ் ஓடிடி வெப் தொடர்களைப் பார்ப்போம். இவை ரசிகர்களின் பாராட்டுகளையும், விமர்சகர்களின் புகழையும் பெற்றவை.
இந்த லிஸ்டில் சூழல் 2, ஆபிஸ், ஓம் காளி ஜெய் காளி, மதுரை பையனும் சென்னை பொண்ணும், ஹார்ட் பீட், நடு சென்டர், வேடுவன், குற்றம் புரிந்தவன், போலீஸ் போலீஸ், குட் வைஃப் ஆகியவை அடங்கும்.
இவை அனைத்தும் உணர்ச்சி, சஸ்பென்ஸ், ஹ்யூமர் கலந்து ரசிகர்களை ஈர்த்தன. வாருங்கள், ஒவ்வொன்றையும் விரிவாகப் பார்ப்போம்!

1. சூழல்: தி வோர்டெக்ஸ் சீசன் 2:
2022 ஆம் ஆண்டு வெளியான சூழல் வெப் தொடர் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து அத்தொடரின் இரண்டாவது சீசன் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது.
அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான இந்த தொடர், மர்மமான ஊரில் நிகழும் கிரைம், உணர்ச்சி மோதல்களை விவரிக்கிறது. இப்படத்தின் கதை, ரகசியங்கள், சஸ்பென்ஸ் கலந்து ரசிகர்களை பதட்டத்தில் ஆழ்த்தியது. கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆர். பார்த்திபன் போன்றோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினர். இந்த தொடர் ஓடிடி பிரியர்களை அதிகம் ஈர்த்தது.

2. ஓம் காளி ஜெய் காளி:
விமல், புகழ், கஞ்சா கருப்பு, பவானி ரெட்டி நடிப்பில், ஜெகநாத் இயக்கத்தில் ஓம் காளி ஜெய் காளி வெப் தொடர் வெளியானது.
ஜியோ ஹாட்ஸ்டாரில் மார்ச் 28ஆம் தேதி வெளியான இந்த தொடர், ரிவெஞ்ச் திரில்லர் ஜானரில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
3. ஆபிஸ்:
ஹாட்ஸ்டாரின் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் தொடராக ஆபிஸ் வெளியானது. குரு லக்ஷ்மன், கவிதா பாரதி, ஷிவா அரவிந்த் உட்பட பல சின்னத்திரை பிரபலங்கள் இந்த தொடரில் நடித்துள்ளனர். பிராங்க்ஸ்டர் ராகுல் இயக்கத்தில் வெளியான இந்த தொடர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

4. மதுரை பையனும் சென்னை பொண்ணும்:
ஆஹாவில் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியான இந்த தொடர், வேறுபட்ட உலகங்களில் இருந்து வரும் இருவரின் லவ் ஸ்டோரியை ஹார்ட்வார்மிங்காக சொல்கிறது.
கன்னா ரவி, ஏஞ்சலின், குரேஷி நடிப்பில், விக்னேஷ் பழனிவேல் இயக்கத்தில் வெளியான இத்தொடர் நல்ல வரவேற்பை பெற்றது.
5. ஹார்ட் பீட் சீசன் 2:
ஜியோ ஹாட்ஸ்டாரில் மே 22ஆம் தேதி ஹார்ட் பீட் சீசன் 2 வெளியானது. தீபா பாலு, அனுமோல், சாருகேஷ், அமித் பார்கவ், யோகலக்ஷ்மி நடிப்பில், தீபக் சுந்தர்ராஜன் மற்றும் அப்துல் கபீஸ் உருவாக்கத்தில் வெளியான இந்த தொடர் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.

6. நடு சென்டர்:
ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியான இந்த தொடர், ஸ்கூல் பாஸ்கெட்பால் டீம் உருவாக்கும் போராட்டத்தை சித்தரிக்கிறது. டீன் ஏஜ் பள்ளி மாணவர்களுக்கிடையே நடக்கும் கதைக்களம் ஓடிடியில் சினிமா ரசிகர்களை அதிகம் ஈர்த்தது.

7. வேடுவன்:
வேடுவன் வெப் தொடர் ஜீ5இல் வெளியானது. கண்ணா ரவி, ஜீவா ரவி, ரேகா நாயர் நடிப்பில் வெளிவந்த ஆக்ஷன் வெப் தொடர் வெளியானது. கிரைம், சைக்காலஜிக்கல் தொடராக வெளியான வேடுவன் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

8. குற்றம் புரிந்தவன்:
சோனி லிவ்வில் வெளியான குற்றம் புரிந்தவன் தொடர், சிறு ஊரில் சிறுமி காணாமல் போன பின்பு நடக்கும் ரகசியங்களை அவிழ்க்கும் கதையாகும். பசுபதி, விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டென்ஸ் நாரேடிவ், ட்விஸ்ட்கள், சஸ்பென்ஸ்ஃபுல், சைக்காலஜிக்கல் என கிரைம் ரசிகர்களுக்கு விருந்தாக இந்த தொடர் அமைந்தது.

9. போலீஸ் போலீஸ்:
ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியான போலீஸ் போலீஸ் வெப் தொடர், போலீஸ் அதிகாரிகளின் வாழ்க்கை , கிரைம், கரப்ஷன். இன்வெஸ்டிகேஷன், ஹை-ஸ்டேக்ஸ் ஆக்ஷன் தொடராக அமைந்தது. இத்தொடர் ஓடிடி பிரியர்களால் அதிகம் லைக் செய்யப்பட்டு வருகிறது.

10. குட் வைஃப்:
பிரியாமணி நடிப்பில் வெளியான வெப் தொடர் 'குட் வைஃப்'. திரில்லர் கோர்ட் டிராமா கதைக்களத்தில் வெளிவந்த இந்த வெப் தொடரின் முதல் சீசன் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
முடிவுரை:
இந்த ஆண்டு, தமிழ் வெப் தொடர்களில் கிரைம் திரில்லர்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்தினாலும், ரொமான்ஸ், காமெடி, ஸ்போர்ட்ஸ் என அனைத்தும் ரசிகர்களை ஈர்த்தன. 2025 தமிழ் ஓடிடி உலகின் பொன்னான ஆண்டு. அடுத்த ஆண்டு என்ன கொண்டு வரும்? காத்திருப்போம்!
- கீர்த்தி சுரேஷ் கதை நாயகியாக நடித்து வெளியான படம் 'ரிவால்வர் ரீட்டா'.
- கடந்த மாதம் வெளியான இப்படம் ரசிகர்களிடையே போதுமான வரவேற்பை பெறவில்லை.
திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.
மிடில் கிளாஸ்
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் முனிஷ்காந்த், விஜயலட்சுமி நடிப்பில் வெளியான படம் 'மிடில் கிளாஸ்'. திருமணமான குடும்பத் தலைவன் என்னென்ன சிக்கல்களையும் பிரச்சனைகளையும் சந்திக்கிறார் என்பதை நகைச்சுவையில் சொல்லப்பட்டு உள்ளது. இப்படம் நாளை முதல் ஜீ5 ஓ.டி.டி. தளத்தில் கண்டுகளிக்கலாம்.
ரஜினி கேங்
'பிஸ்தா' திரைப்படம், 'உப்பு புளி காரம்', 'கனா காணும் காலங்கள்' போன்ற வெப் தொடர்களை இயக்கிய எம்.ரமேஷ் பாரதி இயக்கியுள்ள படம், 'ரஜினி கேங்'. ரஜினி கிஷன் தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக திவிகா நடித்துள்ளார். மேலும், முனீஷ்காந்த், மொட்டை ராஜேந்திரன், கல்கி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதனை தொடர்ந்த இப்படம் நாளை முதல் ப்ரைம் வீடியோ மற்றும் சிம்பிளி சௌத் ஓ.டி.டி. தளங்களில் கண்டு களிக்கலாம்.
ஆந்திரா கிங் தாலூகா
ராம் பொதினேனி, பாக்யஸ்ரீ போர்ஸ், யுபேந்திரா ஆகியோர் நடிப்பில் வெளியான தெலுங்கு சினிமா. 2002-ல் நடக்கும் கதை. கல்லூரி மாணவரான நாயகன், தெலுங்கு சினிமா நட்சத்திரமான சூர்யாவின் ரசிகர் என்ற மனநிலையை தாண்டி அவரை மானசீக குருவாக ஏற்கிறார். இந்தநிலையில் சூர்யாவின் 9 படங்கள் தொடர்ந்து தோல்வியடைகிறது. இதனால் அவருடைய செல்வாக்கு சரியதொடங்கி 10-வது படத்தை தயாரிக்க படத்தயாரிப்பாளர்கள் இல்லாதநிலை ஏற்படுகிறது. அப்போது நாயகன் தன்னுடைய நட்சத்திரத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட கூடாது என்றநோக்கில் மேற்கொள்ளும் முடிவே இதன் கதை. நெட்பிளிக்சில் வருகிற 25-ந்தேதி வெளியாகிற இதனை தமிழில் காணலாம்.
ரிவால்வர் ரீட்டா
கீர்த்தி சுரேஷ் கதை நாயகியாக நடித்து வெளியான படம் 'ரிவால்வர் ரீட்டா'. இப்படத்தை தி ரூட், தி ஃபேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. சரஸ்வதி சபதம் படத்தை இயக்கிய ஜே.கே. சந்துரு இப்படத்தை எழுதி இயக்கி இருந்தார். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த மாதம் வெளியான இப்படம் ரசிகர்களிடையே போதுமான வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில், 'ரிவால்வர் ரீட்டா' வருகிற 26-ந்தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நெட் ஃபிளிக்ஸ் ஓ.டி.டி.தளத்தில் கண்டு களிக்கலாம்.
ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சீசன் 5 பாகம் 2
உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் மிகவும் விரும்பிப்பார்க்கப்படும் வெப் தொடர்களில் ஒன்று 'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்'. இதன் முதல் சீசன் கடந்த 2016-ம் ஆண்டு நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியானது. இந்த தொடர் உலகளவில் பார்வையாளர்களின் இதயங்களை வென்றதைத்தொடர்ந்து, அடுத்தடுத்த சீசன்கள் வெளியாகின. இதுவரை 4 முழு சீசன்கள் வெளியாகி உள்ளன. கடந்த நவம்பர் மாதம் டான் டிராட்சன்பெர்க் இயக்கிய 5-வது சீசனின் முதல் 4 எபிசோட்டுகள் வெளியாகி வரவேற்பை பெற்றன. அதனை தொடர்ந்து வருகிற 26-ந்தேதி முதல் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் நெட் ஃபிளிக்ஸ் தளத்தில் கண்டு மகிழலாம்.
இதனிடையே 20-க்கும் மேற்பட்ட வெப் சீரிஸ்களும், ஆங்கிலம், இந்தி திரைப்படங்களும் ஓ.டி.டி.தளத்தில் வெளியாக உள்ளது.
- திரையரங்குகளில் வெளியாகி 11 மாதங்களுக்கு பிறகு தற்போது ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது.
- ஆங்கிலம், இந்தி திரைப்படங்களும் ஓ.டி.டி.தளத்தில் வெளியாக உள்ளது.
திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.
உன் பார்வையில் (Un Paarvayil)
மலையாள நடிகை பார்வதி நாயர் நடித்துள்ள படம் 'உன் பார்வையில்'. இப்படம் நேரடியாக வருகிற வெள்ளிக்கிழமை சன் நெக்ஸ்ட் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகிறது. இப்படத்தில் பார்வையற்ற பெண்ணாக அழுத்தமான உணர்ச்சிகரமான கதாபாத்திரத்தில் பார்வதி நாயர் நடித்துள்ளார். கணவர், இரட்டை சகோதரியின் மர்ம மரணங்களைத் தொடர்ந்து, உண்மையை தேடும் அவரது தேடல், ரகசியங்களும் திருப்பங்களும் நிறைந்த த்ரில்லர் நிறைந்த படமாக ரசிகர்களுக்கு அமைய உள்ளது.
பிரேமண்டே (Premante)
நடிகை ஆனந்தி நடித்தள்ள படம் 'பிரேமண்டே'. நவநீத ஸ்ரீராம் இயக்குநராக அறிமுகமாகி இருக்கும் இந்த படத்தில் தெலுங்கு ஹீரோ பிரியதர்ஷி புலிகொண்டா கதாநாயகனாக நடித்திருக்கிறார். ஜான்வி நரங் மற்றும் புஸ்கூர் ராம் மோகன் ராவ் ஆகியோர் தயாரித்த இந்த காதல் - நகைச்சுவை படம் கடந்த மாதம் 21-ந்தேதி வெளியானது. திரையரங்குகளில் கலையான விமர்சனங்களை பெற்ற இப்படம் வருகிற வெள்ளிக்கிழமை முதல் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது.
டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் (Dominic And The Ladies Purse)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி நடிப்பில் வெளியான படம் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் '. மம்முட்டி , கோகுல் சுரேஷ், சுஷ்மிதா பட், விஜி வெங்கடேஷ், சித்திக், வினீத், விஜய் பாபு, மீனாட்சி உன்னிகிருஷ்ணன், ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படம் திரையரங்குகளில் வெளியாகி 11 மாதங்களுக்கு பிறகு தற்போது ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது. அதன்படி இப்படத்தை ஜீ5 தளத்தில் வருகிற 19-ந்தேதி முதல் கண்டு களிக்கலாம்.
ஃபார்மா (Pharma)
பி.ஆர். அருண் இயக்கத்தில் நிவின் பாலி , ரஜித் கபூர், நரேன், வீணா நந்தகுமார், ஸ்ருதி ராமச்சந்திரன், முத்துமணி, அலேக் கபூர் ஆகியோர் நடிப்பில் வெளியாக உள்ள சிரீஸ் 'பார்மா'. ஒரு மருத்துவ விற்பனைப் பிரதிநிதி, தான் விற்கும் மருந்து நோயாளிகளுக்கு தீங்கு விளைவிப்பதை கண்டறிந்து, கார்ப்பரேட் சக்திகளுக்கு எதிராகப் போராடும் கதை. இதனை வருகிற வெள்ளிக்கிழமை ஜியோஹாட் ஸ்டாரில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் கண்டு ரசிக்கலாம்.
மிஸஸ் தேஷ்பாண்டே (Mrs Deshpande)
ஒரு தாய்- மகனுக்கு இடையேயான உறவை சொல்லும் 'மிஸஸ் தேஷ்பாண்டே' வருகிற வெள்ளிக்கிழமை முதல் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஜியோஹாட் ஸ்டாரில் வெளியாகிறது.
இதனிடையே 20-க்கும் மேற்பட்ட வெப் சீரிஸ்களும், ஆங்கிலம், இந்தி திரைப்படங்களும் ஓ.டி.டி.தளத்தில் வெளியாக உள்ளது.






