search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Web Series"

    • உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த வெப் தொடர் உருவாகியுள்ளது.
    • வாஜ்பாய் தலைமையிலான இந்திய அரசு 3 பயங்கரவாதிகளை விடுதலை செய்தது.

    ஐசி 814 - The Kandahar Hijack' வெப் தொடருக்கு எதிர்ப்புக்குரல் எழுந்த நிலையில் நெட்பிளிக்ஸ் உள்ளடக்க தலைவருக்கு (CONTENT HEAD) மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது.

    உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த வெப் தொடர் உருவாகியுள்ளது. இந்த தொடரை அனுபவ் சின்ஹா இயக்கியுள்ளார். விஜய் வர்மா, நஸ்ருதீன் ஷா, அரவிந்த் சாமி, தியா மிர்சா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

    1999 டிசம்பரில், ஐசி 814 என்ற இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் காத்மாண்டுவிலிருந்து டெல்லிக்கு செல்லும் வழியில், 5 பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டது. அப்போது பயணிகளின் உயிரை காப்பாற்ற வாஜ்பாய் தலைமையிலான இந்திய அரசு 3 பயங்கரவாதிகளை விடுதலை செய்தது.

    அப்போது உளவுத்துறை தலைவராக இருந்த அஜித் தோவல் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த ஜஸ்வந்த் சிங் இருவரும் இந்த நிகழ்வில் முக்கிய பங்கு வகித்தனர்.

    இப்படத்தில் பயங்கரவாதிகளுக்கு 'சங்கர்' மற்றும் 'போலா' என்ற இந்து பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனையொட்டி நெட்ப்ளிக்ஸை தடை செய்யுங்கள் என்ற ஹேஸ்டேக் எக்ஸ் தளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

    • தமன்னா நடித்த அரண்மனை-4 படம் பெரிய வெற்றியை பெற்று ரூ.100 கோடி வசூலையும் குவித்தது.
    • லஸ்ட் ஸ்டோரீஸ்-2 படத்தின் விருந்தில் தமன்னாவிடம் காதலை கேட்டேன்.

    தமிழ், இந்தி, தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் தமன்னா. சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் தமன்னா நடித்த அரண்மனை-4 படம் பெரிய வெற்றியை பெற்று ரூ.100 கோடி வசூலையும் குவித்தது.

    தமன்னா லஸ்ட் ஸ்டோரீஸ்-2 என்ற வெப் தொடரில் நடித்த போது சக நடிகரான விஜய்வர்மாவுடன் காதல் உருவானது. இந்த தொடரில் படுக்கையறை காட்சிகளில் இருவரும் நெருக்கமாக நடித்திருந்தனர்.


    தொடர்ந்து தமன்னாவும், விஜய் வர்மாகவும் பல்வேறு இடங்களில் டேட்டிங் செய்து வந்த நிலையில் கடந்த மாதம் தங்கள் காதலை உறுதி செய்தனர். தமன்னாவுடனான காதல் பற்றி விஜய் வர்மா கூறியதாவது:-


    காமக்கதைகளுக்கு பிறகு எங்கள் உறவு தொடங்கியது. முதலில் நாங்கள் சக நடிகராக சந்தித்தோம். லஸ்ட் ஸ்டோரீஸ்-2 படத்தின் விருந்தில் தமன்னாவிடம் காதலை கேட்டேன். 2005-ம் ஆண்டு நான் ஐதராபாத்தில் இருந்து வெளியேறி மும்பை வந்தேன். தமன்னா மும்பையில் இருந்து ஐதராபாத் வந்தார். ஐதராபாத்தில் நிலை நிறுத்திய மும்பை பெண். நான் ஐதராபாத் பையன். தமன்னா தமிழ், தெலுங்கு சரளமாக பேசுகிறார் என்றார். திருமணம் குறித்து தமன்னா கூறும்போது, "திருமணம் ஒரு பெரிய பொறுப்பு. அது ஒரு விருந்து அல்ல" என கூறினார்.

    • தமிழ் மற்றும் தெலுங்கு முன்னணி நட்சத்திர கதாநாயகியாக இருப்பவர் நடிகை திரிஷா
    • தக் லைஃப் , விடா முயற்சி , கோட் ஆகிய டாப் ஹீரோ திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

    தமிழ் மற்றும் தெலுங்கு முன்னணி நட்சத்திர கதாநாயகியாக இருப்பவர் நடிகை திரிஷா. தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே கடந்த 22 வருடங்களாக தக்க வைத்துள்ளார் என்பது பெருமைக்குறியது.

    கடந்தாண்டு வெளியான லியோ மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய இரண்டு படங்களிலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார் திரிஷா, இந்த இரண்டு திரைப்படமும் மாபெரும் வெற்றியை பெற்றது.

    தற்பொழுது தக் லைஃப் , விடா முயற்சி , கோட் ஆகிய டாப் ஹீரோ திரைப்படங்களில் தற்பொழுது நடித்து வருகிறார். இந்நிலையில் திரிஷா நடித்து இருக்கும் பிருந்தா எனும் வெப் தொடர் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    திரிஷா ஓடிடி தொடரில் நடிப்பது இதுவே முதல்முறை, தொடர்ரின் டீசர் தற்பொழுது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. இத்தொடரை சூர்யா வங்களா இயக்கியுள்ளார். இது ஓடிடி தளமான சோனி லைவில் வெளியாகவுள்ளது.

    சஸ்பன்ஸ் திரில்லர் கதைக்களத்துடன் அமைந்திருக்கும் இக்கதையில் இந்திரஜித் சுகுமாரன், ஜெய பிரகாஷ், ஆமானி, ரவிந்திர விஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஷக்திகாந்த் கார்த்திக் இசை அமைத்துள்ளார். இத்தொடர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, மராத்தி மற்றும் பெங்காலி மொழிகளில் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வெப் தொடரில் விலை மாதுவாக நடித்து இருக்கிறார்.
    • சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை எதிர்கொள்ளும் பெண்ணின் பயணம் இது.

    நடிகை அஞ்சலி ஏற்கனவே திரைக்கு வந்து வெற்றி பெற்ற கேங்க்ஸ் ஆப் கோதாவரி என்ற தெலுங்கு படத்தில் விலைமாது கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இதில் அவரது நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகள் கிடைத்தன.

    தற்போது மீண்டும் பஹிஷ்கரன் என்ற வெப் தொடரில் விலை மாதுவாக நடித்து இருக்கிறார். கிராமத்தில் நடக்கும் பழிவாங்கும் கதையம்சம் கொண்ட தொடராக உருவாகி உள்ளது. இந்த தொடரை முகேஷ் பிராஜா இயக்கி உள்ளார்.

    இதுகுறித்து அஞ்சலி கூறும்போது, 'இந்த தொடரில் புஷ்பா என்ற பெண் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறேன். இது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது. அப்பாவியான விலைமாதுவாக இருந்து சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை எதிர்கொள்ளும் பெண்ணின் பயணம் இது. புஷ்பா என்றால் மர்மம். பிரச்சினைகளை எப்படி சமாளித்து அவள் முன்னேறினாள் என்ற கதையம்சத்தில் உருவாகி உள்ளது' என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 2016 ஆம் ஆண்டு மமூட்டி நடிப்பில் வெளிவந்த கசாபா திரைப்படத்தை நித்தின் ரென்ஜி பானிக்கர் இயக்கினார்.
    • நாகேந்திரன்ஸ் ஹனிமூன் என்ற வெப் தொடரை இயக்கியுள்ளார்.

    2016 ஆம் ஆண்டு மமூட்டி நடிப்பில் வெளிவந்த கசாபா திரைப்படத்தை நித்தின் ரென்ஜி பானிக்கர் இயக்கினார். இப்படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.

    அதற்கடுத்து சுரேஷ் கோபி மற்றும் ரெஞ்சி பானிக்கர் நடிப்பில் 2021 ஆம் ஆண்டு வெளியான காவல் திரைப்படத்தை இயக்கினார். இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன் ரீதியாகவும் நல்ல பாராட்டை பெற்றது.

    தற்பொழுது அடுத்ததாக நித்தின் , நாகேந்திரன்ஸ் ஹனிமூன் என்ற வெப் தொடரை இயக்கியுள்ளார். இத்தொடரில் சூரஜ் வெஞ்சாரமூடு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் கிரேஸ் ஆண்டனி, கனி கஸ்தூரி, ஷ்வேதா மேனன், அல்ஃபி பஞ்சிகரன் மற்றும் நிரஞ்சனா அனூப் ஆகியோர் நடித்துள்ளனர்.

    வெப் தொடர் டிஸ்னி பிளாஸ் ஹாட்ஸ்டாரில் வரும் ஜூலை 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலர் இன்று ஜூலை 6 வெளியானது.

    வேலை இல்லாத நாகேந்திரன் வெவ்வேறு பெயர்களில் 5 பெண்களை திருமணம் செய்கிறார். இவர் எதற்காக இப்படியெல்லாம் செய்கிறார் என்பதை டிரைலர் காட்சிகள் வெளிப்படுத்தவில்லை. முற்றிலும் ஒரு நகைச்சுவை தொடராக நித்தின் இதை இயக்கியுள்ளார்.  தொடரின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    இத்தொடர், மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மராத்தி, பெங்காலி மொழிகளில் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • முன்னணி நடிகர்-நடிகைகள் வெப் தொடர்களில் நடித்து வருகிறார்கள்.
    • வெப் தொடருக்கு ரக்தபீஜ் என்று பெயர் வைத்துள்ளனர்.

    முன்னணி நடிகர்-நடிகைகள் வெப் தொடர்களில் நடித்து வருகிறார்கள். சமந்தாவும் பேமிலிமேன் 2, சிட்டாடல்: ஹனி பன்னி ஆகிய இந்தி வெப் தொடர்களில் நடித்துள்ளார்.

    தற்போது இன்னொரு வெப் தொடரில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த தொடரில் ஆதித்ய ராய்கபூர் நாயகனாக நடிக்கிறார். ராஜ், டி.கே ஆகியோர் டைரக்டு செய்கிறார்கள். தொடருக்கு ரக்தபீஜ் என்று பெயர் வைத்துள்ளனர்.

    இந்த தொடருக்காக நடிகர்-நடிகைகள் படப்பிடிப்புக்கு முன்பே கதாபாத்திரங்களை மெருகேற்ற நடிப்பு பயிற்சி எடுக்க உள்ளனர்.

    இயக்குனர்கள் ராஜ், டி.கே ஆகியோர் தற்போது பேமிலி மேன் 3-ம் பாகத்தை எடுத்து வருகிறார்கள். அது முடிந்ததும் ஆகஸ்டு மாதம் சமந்தா, ஆதித்ய ராய் கபூர் நடிக்கும் வெப் தொடருக்கான படப்பிடிப்பு தொடங்கும்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சட்னி-சாம்பார் வெப் தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
    • அவருடன் வாணிபோஜன் இணைந்து நடித்துள்ளார்.

    தமிழ் திரை உலகில் நகைச்சுவை நடிகராக தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர் யோகிபாபு. சமீபத்தில் வரும் புதிய படங்கள் பெரும்பாலும் யோகி பாபு நகைச்சுவையுடன் திரைக்கு வருகிறது.

    ரஜினியின் ஜெயிலர் முதல் ஷாருக்கானுடன் ஜவான் வரை யோகி பாபு நடித்துள்ளார். திரை உலகில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக திகழ்ந்து வரும் யோகிபாபு வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேசனல் தயாரிப்பில் ராதாமோகன் இயக்கத்தில் உருவாகி வரும் சட்னி-சாம்பார் என்ற வெப் தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

    அவருடன் வாணிபோஜன் இணைந்து நடித்துள்ளார். மேலும் கயல் சந்திரன், நிதின் சத்யா, தீபாசங்கர், சம்யுக்தா விஸ்வநாத், சுந்தர் ராஜன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

    ஜாலியான குடும்ப பொழுதுபோக்கு தொடராக உருவாகியுள்ள இந்த தொடரின் முதல் தோற்றத்தை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் வெளியிட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 2008 ஆம் ஆண்டு கரன் அனுஷ்மான், குர்மீத் சிங் இயக்கத்தில் வெளிவந்தது மிர்சாபூர் வெப் தொடர்.
    • வெப் சீரிஸான மிர்சாபூர்' தொடரின் 3 ஆவது சீசன் வரும் ஜூலை 5-ம் தேதி வெளியாக உள்ளது.

    2008 ஆம் ஆண்டு கரன் அனுஷ்மான், குர்மீத் சிங் இயக்கத்தில் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியான பாலிவுட் வெப் தொடரான 'மிர்சாபூர்' மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இதில், பங்கஜ் திரிபாதி, அலி ஃபசல், ஸ்வேதா திரிபாதி ஷர்மா, ரசிகா துகல், விஜய் வர்மா, இஷா தல்வார், அஞ்சும் ஷர்மா, ராஜேஷ் தைலாங், ஷீபா சதா, மேக்னா மாலிக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து

    2020 ஆம் ஆண்டு வெளியான இந்த தொடரின் 2-வது சீசனும் மக்களிடையே வரவேற்பை பெற்று அடுத்த பாகத்திற்கு மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    பாலிவுட் வெப் சீரிஸான மிர்சாபூர்' தொடரின் 3 ஆவது சீசன் வரும் ஜூலை 5-ம் தேதி வெளியாகும் என அமேசான் ப்ரைம் ஓடிடி நிறுவனம் சில நாட்களுக்கு முன் அறிவித்து இருந்தது. இந்நிலையில்  டிரைலர் வரும் ஜூன் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது என்று புதிய போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த சீசன் 3 மீது ரசிகர்கள் மிகப்பெரிய ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • கலைஞர் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு எனக்கு ஆசை.
    • படமாக எடுப்பதை விட வெப் தொடராக எடுத்தால் சரியாக இருக்கும்.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜீவா. ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி வாழ்க்கை வரலாறு படத்தில் ஜெகன் மோகன் ரெட்டியாக நடித்திருக்கிறார்.

    இந்நிலையில் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் கலைஞர் நூற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சி நடந்து வருகிறது. கண்காட்சியை நடிகர் ஜீவா பார்வையிட்டார். தொடர்ந்து நடிகர் ஜீவா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கலைஞரை பற்றி சினிமாவில் நிறைய கேள்வி பட்டிருக்கிறேன். கண்காட்சியை பார்க்கும் போது சினிமாவை தாண்டி முதல்-அமைச்சராக அவர் செய்துள்ளதை கண்டு வியந்து போனேன்.

    கலைஞர் வரலாறு படமாக்கப்பட்டால் கலைஞர் கதாபாத்திரத்தில் நடிப்பீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த ஜீவா, "நிச்சயமாக அந்த படத்தில் நடிப்பது எனக்கு பெருமை. கலைஞர் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு எனக்கு ஆசை. கலைஞர் வரலாற்றை படமாக எடுப்பதை விட வெப் தொடராக எடுத்தால் சரியாக இருக்கும். அதை பா.விஜய் இயக்குவார் என நினைக்கிறேன்" என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பீக்கி பிளைன்டர்ஸ் என்ற பெயரில் கடந்த 2022 முதல் 2022 வரை 6 சீசன்களாக வெளிவந்த வெப் சீரிஸ் மாபெரும் ஹிட்டானது.
    • பிபிசியுடன் நெட்ப்ளிஸ்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ள இந்த திரைப்படத்தில் சிலியன் மர்பி மீண்டும் ஆர்தர் செல்பி அவதாரம் எடுக்க உள்ளார்.

    இங்கிலாந்தில் 1919 முதலாம் உலகப்போர் உலகப் போர் முடிந்த சமயத்தில் பீக்கி பிளைன்டர்ஸ் என்ற  கிரைம் கேங் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டு இங்கிலாந்து நிழலுலகில் ஆதிக்கம் செலுத்தியது. பிரிம்மிங்கம் நகரில் குடும்பமாக இயங்கிய இந்த கேங் இங்கிலாந்து முழுவதும் புகழ்பெற்று விளங்கியது. இவர்களின் கதையை மையமாக வைத்து பீக்கி பிளைன்டர்ஸ் என்ற பெயரில் கடந்த 2022 முதல் 2022 வரை 6 சீசன்களாக வெளிவந்த வெப் சீரிஸ் மாபெரும் ஹிட்டானது.

     

    பீக்கி பிளைன்டர்ஸின் தலைவராக விளங்கிய டாமி செல்பி கதாபாத்திரத்தில் பிரிட்டிஷ் நடிகர் சிலியின் மர்பி கதாபாத்திரத்தோடு ஒன்றும் வகையில் தத்ரூபமாக நடித்திருந்தார். பீக்கி பிளைன்டர்ஸ் வெப் சீரிஸ் உலகம் முழுவதும் தனி ரசிகர் பட்டாளத்தியே உருவாக்கி வைத்திருக்கிறது. இந்நிலையில் பீக்கி பிளைண்டர்ஸ் திரைப்படப்பாக தயாராக உள்ளதகாக பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் அறிவித்துள்ளது. பிபிசியுடன் நெட்ப்ளிஸ்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ள இந்த திரைப்படத்தில் சிலியன் மர்பி மீண்டும் ஆர்தர் செல்பி அவதாரம் எடுக்க உள்ளார்.

     சீரிஸை இயக்கிய டாம் ஹார்ப்பரும், ஸ்டீவன் கிநைட்டும் இந்த திரைப்படத்தை இயக்க உள்ளனர். 6 சீசன்களாக உள்ள கதை ஒரே படத்தில் எப்படி கூறப்பட உள்ளது என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் .

     

    இதற்கிடையில் உலகப் புகழ் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ஓப்பன்ஹைமர் திரைப்படத்தில் இரண்டாம் உலகப் போரில் ஜப்பானிய மக்கள் கொத்துக்கொத்தாக சாக காரணமான அணுகுண்டைக் கண்டுபித்த ஓப்பன்ஹைமரின் கதாபாத்திரத்தினுடைய அறச் சிக்கலை நேர்த்தியாக திரையில் வரித்துக்காட்டி சிலியன் மர்பி ஆஸ்கார் வென்றது குறிப்பிடத்தக்கது. 

     உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    • 'ஒருநாள் கூத்து' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், நிவேதா பெத்துராஜ்.
    • சமீபத்தில் நிவேதா பெத்துராஜ், போலீசாரிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோ வெளியானது.

    'ஒருநாள் கூத்து' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், நிவேதா பெத்துராஜ். 'டிக் டிக் டிக்', 'திமிரு பிடிச்சவன்', 'சங்கத்தமிழன்', 'பொன் மாணிக்கவேல்', 'பார்ட்டி' உள்பட பல படங்களில் நடித்துள்ளார். பல தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி பரபரப்பாகவும் பேசப்பட்டார்.

    சமீபத்தில் நிவேதா பெத்துராஜ், போலீசாரிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோ வெளியானது. அதில், போலீசார் நிவேதா பெத்துராஜின் காரை சோதனையிட வேண்டும் என கேட்க, அதற்கு அவர் அனுமதி மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் இடம்பெற்றிருந்தது. இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    நிவேதா பெத்துராஜ் போலீசாரிடம் மாட்டிக்கொண்டு விட்டாரா? காரை சோதனையிட ஏன் அனுமதிக்கவில்லை? காருக்குள் அப்படி என்ன வைத்திருக்கிறார்? என்றெல்லாம் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

    இந்தநிலையில், அந்த வீடியோ பற்றிய உண்மை வெளியாகி இருக்கிறது. அது 'பருவு' என்ற வெப் தொடருக்காக எடுக்கப்பட்ட வீடியோ என்பது தெரியவந்துள்ளது. இதனால் அத்தனையும் நடிப்பா? என ரசிகர்கள் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

    பருவு வெப் தொடரில் பவன் சதினேனி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். இந்த தொடரை சித்தார்த் நாயுடு எழுதி இயக்கியுள்ளார். இத்தொடர் வரும் ஜூன் 14 ஆம் தேதி Zee 5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்த தொடரை சிரஞ்சீவி மகளான சுஷ்மிதா கொனிடெலா கோல்ட் பாக்ஸ் எண்டர்டெயின்மண்ட் சார்பில் தயாரித்துள்ளார்.

    ஆணவ படுகொலையை மையமாக எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த தொடரின் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது. நிவேதா பெத்துராஜும் அவரது கணவனான பவன் சதினேனி எதிர்பாராத விதமாக ஒரு கொலையை செய்கின்றனர். கொலை செய்த நபரின் உடலை காருக்கும் மறைத்து வைத்து அதை எப்படி யாருக்கும் தெரியாமல் மறைக்க பெரும் முயற்சிகளை எடுப்பது போன்ற காட்சிகள் டிரைலரில் அமைந்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    'அங்காடித் தெரு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக தனது முத்திரையை பதித்தவர் வசந்த பாலன். அந்த படத்திற்காக தேசிய விருது பெற்ற வசந்தபாலன், சமீபத்தில் அர்ஜுன் தாஸை வைத்து இவர் இயக்கிய அநீதி திரைப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது.

    முதலாளித்துவதை தொடர்ந்து தனது படங்களின் மூலம் எதிர்த்து வரும் வசந்தபாலன் இயக்கத்தில் பரத், ஆடுகளம் கிசோர் ஆகியோர் நடிப்பில் 'தலைமைச் செயலகம்' என்ற வெப் சீரிஸ் உருவாகியுள்ளது. தனது படங்களில் தொடர்ந்து அரசியல் பேசி வரும் வசந்தபாலன், முழுக்க முழுக்க அரசியல் சார்ந்து இதை இயக்கியுள்ளதால் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த தொடர் வரும் மே 17 ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

    இந்நிலையில் இந்த வெப் சீரிஸ் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் வசந்த பாலன் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், அரசியல் படங்கள் என்றாலே முதல்வர் கெட்டவர் என்ற கோணத்தில்தான் காட்டப்படுகிறது இதை உடைத்து ஊழல் குற்றம் சுமத்தப்பட்ட ஒரு முதல்வரின் அக சிக்கல்களைப் பேச வேண்டும் என்று நினைத்து இந்த வெப் சீரீஸை இயக்கியுள்ளேன். மக்கள் மீது கொண்டிருக்கும் காதலின் பெயர் தான் நீதி, அந்த நீதியை காப்பாற்றும்போது சில தவறுகள் நடக்கலாம், அதைப்பற்றியே இந்த சீரிஸின் மூலம் பேசியுள்ளேன்.

    மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகம் பெரிய அளவில் முன்னேறியுள்ளது. தமிழகத்தில் நம்மை 50 ஆண்டுகாலமாக வழி நடத்தி வந்த பெரியாரிய, அம்பேதகரிய, மார்க்சிய கருத்துக்களால் தான் இது சாத்தியமானது. நம் பெயருக்கு பின்னால் சாதி போடாததே ஒரு அரசியல் தான், நீ என்ன சாதி என கேட்காமல் இருப்பதே அரசியல் தான், இதைப் பற்றி விரிவாகப் பேசுவதற்கான சூழலை இந்த வெப் சீரிஸ் உருவாக்கும் என்று தெரிவித்துள்ளார்.

    ×