search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manisha Koirala"

    • நடிகை மனிஷா கொய்ராலா தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
    • இவர் புற்றுநோய் பாதிப்பில் சிக்கி வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெற்று அதில் இருந்து மீண்டார்.

    நடிகை மனிஷா கொய்ராலா தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் பம்பாய், கமல்ஹாசனின் இந்தியன், அர்ஜுனின் முதல்வன், ரஜினியின் பாபா உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஏராளமான இந்தி படங்களிலும் நடித்து புகழ் பெற்றார். மனிஷா கொய்ராலா 2010-ஆம் ஆண்டு சாம்ராட் தேகல் என்பவரை மணந்து 2 வருடத்தில் விவாகரத்து செய்தார். பின்னர் புற்றுநோய் பாதிப்பில் சிக்கி வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெற்று அதில் இருந்து மீண்டார்.


    இந்நிலையில் தனக்கு இருந்த மதுப்பழக்கம் குறித்து மனிஷா கொய்ராலா பேசியுள்ளார். அவர் "நான் விவாகரத்து பெற்றதும் கடுமையான மன அழுத்தத்தை எதிர்கொண்டேன். மதுப்பழக்கத்துக்கு அடிமையானேன். அதன் பிறகு வாழ்க்கையே தலைகீழாக மாறிவிட்டது. மதுப்பழக்கம் காரணமாக எனது மதிப்பு மிக்க வாழ்க்கையை இழந்தேன். மது அருந்துவது பிரச்சினைக்கு தீர்வு ஆகாது. மது எந்த பிரச்சினையில் இருந்தும் நம்மை வெளியேற்றாது. மேலும் பிரச்சினைகளில் மூழ்கடிக்கவே செய்யும். இதனை புரிந்து கொண்டு நடக்க வேண்டும்'' என்று பேசினார்.

    • தமிழில் இந்தியன், முதல்வன் போன்ற படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் மனிஷா கொய்ராலா.
    • இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாகவும் வலம் வந்தார்.

    நடிகை மனிஷா கொய்ராலா தமிழில் பம்பாய், இந்தியன், முதல்வன் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஏராளமான இந்தி படங்களிலும் நடித்து புகழ் பெற்றார். 2010-ல் சாம்ராட் தேகல் என்பவரை மணந்து 2 வருடத்தில் விவாகரத்து செய்தார். பின்னர் புற்றுநோய் பாதிப்பில் சிக்கி வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெற்று அதில் இருந்து மீண்டார்.

    மனிஷா கொய்ராலா

    மனிஷா கொய்ராலா

     

    மனிஷா கொய்ராலா தற்போது படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். அவர் மணிரத்னம் படமான பம்பாய் படத்தில் நடித்தது பற்றி சமீபத்தில் பேசியிருக்கிறார். இந்த அனுபவம் பற்றி அவர் கூறியிருப்பதாவது, எனக்கு பம்பாய் வாய்ப்பு கிடைத்தபோது, ​​நான் என்னுடைய 20 வயதில் அம்மாவாக நடித்ததால் அதை செய்ய வேண்டாம் என்று மக்கள் என்னிடம் சொன்னார்கள்.

     

    அடுத்த 10 ஆண்டுகளில் எனக்கு பாட்டி வேடங்கள் கிடைக்கும் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால் மணிரத்னம் படத்தை மறுப்பது முட்டாள்தனமாக இருக்கும் என்பதையும் சொன்னார்கள். இந்தப் படம்தான் எனக்கு மிகப்பெரிய பெயரை பெற்று தந்தது என்று கூறியிருக்கிறார்.

    இந்தியன், முதல்வன் படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை மனிஷா கொய்ராலா, இந்த பயணம் கடினமானது என்று சமூக வலைத் தளத்தில் பதிவு செய்து இருக்கிறார்.
    தமிழில் இந்தியன், முதல்வன் போன்ற படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் மனிஷா கொய்ராலா. இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். கடந்த 2012ஆம் ஆண்டு கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனிஷா கொய்ராலா, சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த நோயிலிருந்து குணமடைந்தார்.  

    இந்நிலையில் தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, தான் புற்றுநோய்க்கான சிகிச்சையில் இருந்தபோது எடுக்கப்பட்ட சில படங்களை நடிகை மனிஷா கொய்ராலா பகிர்ந்துகொண்டுள்ளார்.

    மனிஷா கொய்ராலா

    மேலும் அவர் தனது சமூக வலைத் தள பக்கத்தில், 'இந்த தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தில், புற்றுநோயின் கடினமான பயணத்தை கடந்து செல்லும் அனைவருக்கும் நான் வாழ்த்துகூற விரும்புகிறேன். இந்த பயணம் கடினமானது என்று எனக்குத் தெரியும், ஆனால் நீங்கள் அதை விட கடினமானவர். அதற்கு துணிந்தவர்களுக்கு எனது மரியாதையை செலுத்தவும், அதை வென்றவர்களுடன் கொண்டாடவும் விரும்புகிறேன். இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை நாம் பரப்ப வேண்டும் மற்றும் நம்பிக்கை நிறைந்த அனைத்து கதைகளையும் மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டும். நாம் நமக்கும் உலகிற்கும் கருணை காட்டுவோம். அனைவரின் ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்வுக்காகவும் நான் பிரார்த்தனை செய்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.
    எனது மோசமான வாழ்க்கை முறையால் எளிதில் நோயால் பாதிக்கப்பட்டேன் என்று நடிகை மனிஷா கொய்ராலா கூறியுள்ளார். #ManishaKoirala
    மனிஷா கொய்ராலா 1990களில் தமிழ், இந்தித் திரையுலகை கலக்கியவர். மணிரத்னத்தின் `பம்பாய்’, ‌ஷங்கரின் `இந்தியன்’ படங்கள் மனிஷாவுக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தன. நிறைய இந்திப் படங்களில் நடித்தார். பாலிவுட்டின் முன்னணி கதாநாயகியாக வலம்வந்த மனிஷா, சில ஆண்டுகளுக்கு முன்பு கர்ப்பப்பை புற்று நோயால் பாதிக்கப்பட்டார்.

    அதன்பின், முழு நம்பிக்கையுடன் புற்றுநோயுடன் போராடி மீண்டு வந்துள்ளார். தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்ததை ‘ஹீல்டு’ என்ற சுயசரிதைப் புத்தகமாக எழுதியுள்ளார். அதில், ‘கேன்சர் என் வாழ்வில் நிறைய தைரியங்களை கொடுத்துள்ளது. என்னுடைய மோசமான வாழ்க்கை முறையால் எளிதில் நோயால் பாதிக்கப்பட்டேன்.

    நான் பல இருட்டான நாள்களையும், தனியான இரவுகளையும் கடந்திருக்கிறேன். அதிலிருந்து எப்படி மீண்டு வந்தேன் என்பதை நினைத்துப் பார்க்கும்போது, எனக்கே மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. என் காலடியில்தான் உலகமே இருப்பதாகக் கருதினேன். இடைவிடாத தொடர் படப்பிடிப்புகளால் 1999ஆம் ஆண்டு உடல் அளவிலும் மனதளவிலும் அதிகம் பாதிக்கப்பட்டேன்.



    அதிலிருந்து மீள்வதற்கு மது மட்டுமே எனக்கு சிறந்த வழியாக இருந்தது. என் நண்பர்கள் நிறைய அறிவுரை கூறியும் நான் அதைக் கேட்கவில்லை. கேன்சர் என் வாழ்வில் ஒரு பரிசாக வந்ததாகவே நான் நினைக்கிறேன். என் சிந்தனை கூர்மையானது, என் மனம் தெளிவானது, என் கண்ணோட்டம் மாறியது. முன்பெல்லாம் அதிகம் கோபமாக, பதற்றமாகவே இருப்பேன். ஆனால் அதிலிருந்து மீண்டு, தற்போது முற்றிலும் அமைதியாக உள்ளேன்” என்று அந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டு உள்ளார். #ManishaKoirala
    பாகுபலி இரண்டு பாகங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதை அடுத்து சிவகாமி, கட்டப்பா கதாபாத்திரங்களின் முன்கதையை இணைய தொடராக பிரமாண்டமாக இயக்கும் முயற்சியில் ராஜமவுலி இறங்கியுள்ளார். #Baahubali3 #Rajamouli
    பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களுக்கும் உலக அளவில் வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, ராஜமவுலி இயக்கும் அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஜுனியர் என்.டி.ஆரையும் ராம்சரணையும் இணைத்து ஒரு படம் இயக்க உள்ளார்.

    அதற்கு முன்பு தற்போது அவர் பாகுபலி படத்தில் இடம்பெற்ற சிவகாமி, கட்டப்பா கதாபாத்திரங்களின் முன்கதையை இணைய தொடராக பிரமாண்டமாக இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

    கடந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆனந்த் நீலகண்டன் எழுதிய ‘தி ரைஸ் ஆஃப் சிவகாமி’ புத்தகம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்தப் புத்தகத்தை தழுவி ராஜமவுலி மூன்று பாகங்களாக தொடரை இயக்க உள்ளார்.



    நெட் பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ள இந்தத் தொடருக்கு, ஒரு எபிசோடு தயாரிக்க 20 மில்லியன் டாலர்கள் வரை செலவாகும். லக்னோவில் நடைபெற்றுவரும் இதன் படப்பிடிப்பில் சஞ்சய் தத், மனிஷா கொய்ராலா இணைந்து நடித்து வருகின்றனர். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஜோடி இணைந்து நடிக்கிறார்கள். #Baahubali3 #Rajamouli

    ×