என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "poster"

    அறிமுக இயக்குனர் விகர்னன் அசோக் இயக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் கவின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த லிப்ட், டாடா, ஸ்டார் உள்ளிட்ட படங்கள் நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது. சமீபத்தில் வெளியான கிஸ் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

    கிஸ் படத்தை தொடர்ந்து, கவின் அறிமுக இயக்குனர் விகர்னன் அசோக் இயக்கும் மாஸ்க் என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கவினுடன் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

    தெலுங்கு நடிகையான ருஹானி சர்மா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களை தவிர, சார்லி, பாலா சரவணன், விஜே அர்ச்சனா, சந்தோஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனமும், பிளாக் மெட்ராஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    மாஸ்க் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மாஸ்க் படம் வரும் நவம்பர் 21-ம் தேதி உலகளவில் வெளியாகவுள்ள நிலையில், படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டரில்," இன்னும் 7 நாட்களில்.. மாஸ்க்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

     

    இப்படத்தின் போஸ்டரில் தெய்வீக சடங்குகள் மற்றும் ரத்தத்தில் நனைந்த வாள் இடம்பெற்றுள்ளன.

    சுதிகாளி சுதீரின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குனர் பிரசன்ன குமார் கோட்டா இயக்கியுள்ள இந்தப் படத்தை வஜ்ர வராஹி சினிமாஸ் சார்பில் சிவா செர்ரி மற்றும் ரவிகிரண் ஆகியோர் தயாரிக்கின்றனர்.

    "ஹெய்லெசோ" என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம், சுதீர் ஹீரோவாக நடிக்கும் ஐந்தாவது படம் ஆகும்.

    படத் தலைப்பு மற்றும் முதல் பார்வை போஸ்டரை ஒரு பிரமாண்டமான வெளியீட்டு நிகழ்வில் தயாரிப்பாளர்கள் வெளியிட்டனர்.

    கிராமிய வடிவமைப்பு மற்றும் புராணக் காட்சிகளுடன் கூடிய இந்த போஸ்டரில் தெய்வீக சடங்குகள் மற்றும் ரத்தத்தில் நனைந்த வாள் இடம்பெற்றுள்ளன.

    இந்த படத்தின் தலைப்பான "ஹெய்லெசோ" விவசாய சமூகங்களில் பயன்படுத்தப்படும் ஒரு பேச்சுவழக்கில் இருந்து எடுக்கப்பட்டது. இது படத்திற்கு ஒரு பூர்வீக சுவையை அளிக்கிறது.

    "கோர்ட்" படத்தில் நடித்த சிவாஜி, இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். நடாஷா சிங், நக்ஷா சரண் மற்றும் அக்ஷரா கவுடா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

    மேலும், மொட்டை ராஜேந்திரன், கெட்அப் ஸ்ரீனு மற்றும் பெவரா துஹிதா சரண்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

    படத்தில் இளம் தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு உள்ளது. அனுதீப் தேவ் இசையமைத்துள்ளார். சுஜாதா சித்தார்த் ஒளிப்பதிவு செய்கிறார். "ஹெய்லெசோ" தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக திரைக்கு வருகிறது.

    • அமெரிக்க அதிபர் டிரம்ப் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
    • இதன்படி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசினார்.

    வாஷிங்டன்:

    உக்ரைன், ரஷியா இடையிலான போரானது மூன்று ஆண்டுகளைக் கடந்துள்ளது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வரும் மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.

    அமெரிக்க அதிபர் டிரம்ப் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன்படி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் டிரம்ப் பேசினார்.

    இதையடுத்து, அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஆங்கரேஜ் நகரில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷிய அதிபர் புதின் நேரில் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தச் சந்திப்பில் உக்ரைன் அமைதி ஒப்பந்தம் பற்றி இருவரும் ஆலோசனை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே, அமெரிக்காவில் அலாஸ்காவின் ஆங்கரேஜ் பகுதிக்கு, அதிபர் டிரம்பும், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும் தனித்தனியாக விமானத்தில் வந்து சேர்ந்தனர். அங்கு புதினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஷிய அதிபர் புதினை, டிரம்ப் கைகுலுக்கி வரவேற்றார். இதன்பின், இரு நாட்டு தலைவர்களும் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர்.

    முன்னதாக, அலாஸ்காவின் ஆங்கரேஜ் பகுதியின் பல்வேறு இடங்களிலும் உக்ரைன் நாட்டுக்கு ஆதரவான போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. அதில், ரஷியா இனி இருக்காது என்றும், உக்ரைனுக்கு உறுதுணையாக இருப்போம் என்றும் காணப்பட்டது. இந்தப் போஸ்டரால் அலாஸ்காவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • போக்குவரத்து காவல் துறை சார்பில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் என தகவல் வெளியானது.
    • இந்த போஸ்டர்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

    அந்த போஸ்டர்களில், பாலியல் வன்கொடுமையைத் தவிர்க்க, பெண்கள் 'நள்ளிரவு விருந்துகளில் பங்கேற்கக்கூடாது, இருள் சூழ்ந்த மற்றும் தனியான இடங்களுக்கு நண்பருடன் செல்லக்கூடாது, வீட்டிலேயே இருக்கவும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும், இது போக்குவரத்து காவல் துறை சார்பில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் என தகவல் வெளியானது.

    ஆனால், தங்கள் அனுமதியின்றி சுவரொட்டிகளை தன்னார்வ அமைப்பினர் ஒட்டியுள்ளதாக காவல் துறையினர் விளக்கம் அளித்துள்ளது.

    அகமதாபாத்தில் ஒட்டப்பட்டிருக்கும் இந்த போஸ்டர்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • இந்த படம் இந்தியாவில் நடைபெற்ற பல உண்மையான வாழ்க்கை நிகழ்வுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.
    • சாதாரண வாழ்க்கை தருணங்களே எவ்வாறு வாழ்க்கையை மாற்றும் முக்கியமான திருப்புமுனைகளாக மாறுகிறது

    "Game of Change" என்பது 5 ஆம் நூற்றாண்டிலிருந்து 12ஆம் நூற்றாண்டு வரை பரவி இருந்த நாளந்தா பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பின்னணியில் அமைந்துள்ள, ஆற்றல்மிக்க மற்றும் ஊக்கமூட்டும் திரைப்படம்.

    இந்த படம் இந்தியாவில் நடைபெற்ற பல உண்மையான வாழ்க்கை நிகழ்வுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. வரலாறு, மனித உணர்வுகள் மற்றும் தனிப்பட்ட மாற்றங்களை கையாளும் இந்த திரைப்படம், ஆழமான கதைகளின் தொகுப்பாக வெளிப்படுகிறது.

    சித்தார்த் ராஜ்சேகர் மற்றும் மீனா சாப்ரியா ஆகியோரது Siddharth Rajasekhar Productions நிறுவனத்தின் தயாரிப்பில், புகழ்பெற்ற மலையாள இயக்குநர் சிதின் இப்படத்தை இயக்கியுள்ளார். தேசிய மற்றும் சர்வதேச நட்சத்திரங்களின் கலவையுடன், இப்படம் உலகளாவிய மனப்பான்மையோடு உருவாகியுள்ளது.

    இந்த திரைப்படத்தின் சிறப்பு என்னவென்றால், சாதாரண வாழ்க்கை தருணங்களே எவ்வாறு வாழ்க்கையை மாற்றும் முக்கியமான திருப்புமுனைகளாக மாறுகிறது என்பதைக் காண்பிப்பதே. ஒவ்வொரு கதையும் உள்ளார்ந்த ஆற்றல், மாற்றம் மற்றும் மனித உற்சாகத்தை பிரதிபலிக்கிறது.

    ப்ளேர் சிங்கர் மற்றும் சுரேந்திர ஜெயசேகர் உள்ளிட்ட பிரபலங்களின் கதைகள், வளர்ச்சி, நம்பிக்கை மற்றும் மாற்றத்தின் செயல்முறையை உணர்த்துகின்றன.

    இது ஒரு சர்வதேச முயற்சி என்பதால், ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 6 முக்கிய மொழிகளில் வெளியாக உள்ளது. இது உலகளாவிய பார்வையாளர்களை சென்றடையும் வகையில் அமைந்துள்ளது.

    • படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது.
    • திரைப்படத்தின் அளவை 3 மணி 2 நிமிடங்களாக குறைத்துள்ளனர்.

    சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் "குபேரா" என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். "குபேரா" திரைப்படம் தனுஷின் 51-வது திரைப்படமாகும்.

    ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகியுள்ளது.

    படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.

    படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. படத்தின் நேரளவு 3 மணி நேரம் 15 நிமிடங்களாக முடிவு செய்யப்பட்ட நிலையில், பின்னர் திரைப்படத்தின் அளவை 3 மணி 2 நிமிடங்களாக குறைத்துள்ளனர்.

    குபேரா படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    திரைப்படம் வரும் ஜூன் மாதம் 20-ந்தேதி வெளியாகிறது. அதன்படி, திரைப்படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

     

    • அ.தி.மு.க. கூட்டணி வேண்டாம் என குறிப்பிடப்பட்டு உள்ளது.
    • சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம் என அதில் கூறப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க-பா.ஜனதா இடையே மீண்டும் கூட்டணி ஏற்படும் என்ற கருத்து நிலவி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் மத்திய மந்திரி அமித்ஷாவை, அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியது கூட்டணி அமைவதற்கான சூழலை உறுதிப்படுத்தியதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.

    இந்த சூழ்நிலையில் தமிழக பா.ஜ.க. தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்படுவார் என்றும், புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் பேச்சு அடிப்படுகிறது.

    இதனால் அண்ணாமலையே மீண்டும் தமிழக பா.ஜ.க. தலைவராக தொடர வேண்டும் என தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டி தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில் தஞ்சை தெற்கு மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் பா.ஜ.க. கட்சியினர் போஸ்டர் ஒட்டி உள்ளனர். அதில், இந்தியாவுக்கு நரேந்திரமோடி, தமிழ்நாட்டுக்கு அண்ணாமலை என அதில் அச்சிடப்பட்டு உள்ளது.

    அந்த போஸ்டரில் வேண்டும், வேண்டும் அண்ணாமலை வேண்டும். வேண்டாம், வேண்டாம் அ.தி.மு.க. கூட்டணி வேண்டாம் என குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலையே நீடிக்க வலியுறுத்தி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம் என அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நள்ளிரவில் பரபரப்பான போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது.
    • கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையம், முக்கிய கடை வீதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

    ஈரோடு:

    சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமலாக்கத்துறையினர் திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது சோதனையில் ரூ.1000 கோடி வரை ஊழல் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகின.

    இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் ஈரோடு மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நள்ளிரவில் பரபரப்பான போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது.

    அந்தப் போஸ்டரில் ஆயிரம் ரூபாய் கொடுப்பதுபோல் கொடுத்து ஆயிரம் கோடி அமுக்கிய அந்த தியாகி யார்? பாட்டிலுக்கு 10 ரூபாய், விற்பனையில் ஆயிரம் கோடி ஊழல், உரிமம் பெறாத பார் மூலம் 40 ஆயிரம் கோடி ஊழல் போன்ற வாசகத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன.

    கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையம், முக்கிய கடை வீதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இதேபோல் பவானி, பெருந்துறை, கவுந்தப்பாடி, சென்னிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒட்டப்பட்டு இருந்தது. இதனைப் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

    • ரஜினிகாந்தை அரசியலுக்கு இழுக்கும் வகையில் ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.
    • மதுரை மண்ணின் மைந்தர்கள் வித்தியாசமாக யோசிக்க கூடியவர்கள்.

    மதுரை:

    தமிழ் திரை உலகில் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருகிறார். அவரது பிறந்தநாள் சில நாட்களில் வருகிறது. இதையொட்டி ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

    மதுரையில் வித்தியாசமாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில், "கோடிகளை குவிக்க விளம்பரத்தில் கூட நடிக்காதவன் நீ, தேடி வந்த உயர் பதவிகளை விரும்பாதவன் நீ, இதுவே தமிழகத்தை நீ ஆள தகுதி என 7 கோடி மக்களின் தீர்ப்பு ஆயிரம் அதிசயம் அமைந்தது உன் ஜாதகம்" என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த வாசகங்கள் ரஜினிகாந்தை அரசியலுக்கு அழைப்பது போல உள்ளது.

    மதுரை மண்ணின் மைந்தர்கள் வித்தியாசமாக யோசிக்க கூடியவர்கள், போஸ்டர்கள் மூலம் பரபரப்பை ஏற்படுத்துபவர்கள். அந்த வகையில் இந்த போஸ்டர்களும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நெல்லை மாநகர் பகுதிகளில் அனுமதியின்றி சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை அப்புறப்படுத்த நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி உத்தரவிட்டார்.
    • சுகாதார ஆய்வாளர் இளங்கோ தலைமையில் நெல்லை மாநகராட்சி பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.

    நெல்லை:

    தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் திட்டத்தை செயல்படுத்தும் விதமாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ஒவ்வொரு மாதமும் 2 மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் தீவிர தூய்மை பணிகளை மேற்கொள்ள நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.அதன்படி பணிகள் நடைபெற்று வருகிறது.

    நெல்லை மாநகர் பகுதிகளில் அனுமதியின்றி சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை அப்புறப்படுத்த நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி உத்தரவிட்டார். அதன்படி நெல்லை, டவுன், வண்ணார்பேட்டை, பாளை பகுதிகளில் ஒட்டப்பட்டி ருந்த போஸ்டர்கள் அகற்றப்பட்டது.

    சுகாதார ஆய்வாளர் இளங்கோ தலைமையில் நெல்லை மாநகராட்சி பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.

    • ஊராட்சி ஒன்றிய அலுவ லகம் வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் ஏராளமான போஸ்டர்கள் ஒட்டப்பட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது.
    • ஊராட்சி மன்ற தலைவரின் ஆதரவாளர்கள் மடக்கி தாக்கியுள்ளனர்.

    விழுப்புரம்:

    செஞ்சி அருகே மீனம்பூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவரின் ஆதரவாளர்கள் மணல் கொள்ளையில் ஈடுபடுவதாகவும் ஏரியை ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்வதாகவும் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் மற்றும் செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவ லகம் வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் ஏராளமான போஸ்டர்கள் ஒட்டப்பட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அறிந்த சில பத்திரிகையாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்ற போது ஒரு சிலர் அவர்களை மறித்து தகராறு செய்துள்ளனர். இந்நிலையில் போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டதாக கூறப்படும் நபர்களை ஊராட்சி மன்ற தலைவரின் ஆதரவாளர்கள் மடக்கி தாக்கியுள்ளனர். இவை அனைத்து சம்பவங்களும் வாட்ஸ் அப்பில் பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • திண்டுக்கல் நகரில் பரபரப்பு வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
    • பிரபாகரன் மக்கள் முன் தோன்றி தமிழ் ஈழத்திற்கான தீர்வுகளை அறிவிப்பார் என வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.

    திண்டுக்கல்:

    விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிேராடு இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்தார். அவர் விரைவில் பொது வெளியில் தோன்றுவார் எனவும் பரபரப்பான செய்தியை வெளியிட்டார்.

    ஆனால் இலங்கை அரசு இதனை திட்டவட்டமாக மறுத்தது. 9 ஆண்டுகளுக்கு முன்பே பிரபாகரன் சுட்டு கொலை செய்யப்பட்ட தாகவும், இதற்கு போதிய ஆதாரங்கள் இருப்பதாக வும் தெரிவித்தனர். இந்நிலையில் திண்டுக்கல் நகரில் தமிழர்தேசிய முன்னணி சார்பில் பரபரப்பு வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

    விடுதலை போராட்ட களத்தில் இருக்கும் வரையில் இந்தியாவிற்கு எதிரான நாடுகள் எதையும் இலங்கையில் கால் பதிக்கவிடவில்லை என்பதை இந்தியா சிந்திக்க வேண்டும். சர்வதேச அரசியல் சூழலையும் இலங்கை அரசியல் சூழலையும் கருத்தில் கொண்டு தமிழ்ஈழ தேசிய தலைவர் பிரபாகரன் மக்கள் முன் தோன்றி தமிழ் ஈழத்திற்கான தீர்வுகளை அறிவிப்பார். எனவே உலகத்தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பேராதரவு தரவேண்டும். பழ.நெடுமாறன் வழிகாட்டுதலின்படி அவருக்கு துணை நிற்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

    கடந்த சில தினங்களாக பரபரப்பை கூட்டி பின் மெல்ல நகர்ந்த இப்பிரச்சினை மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி யுள்ளது.

    ×