search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செஞ்சி அருகே  மணல் கொள்ளை குறித்து சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது தாக்குதல்
    X

    செஞ்சி அருகே மணல் கொள்ளை குறித்து சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது தாக்குதல்

    • ஊராட்சி ஒன்றிய அலுவ லகம் வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் ஏராளமான போஸ்டர்கள் ஒட்டப்பட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது.
    • ஊராட்சி மன்ற தலைவரின் ஆதரவாளர்கள் மடக்கி தாக்கியுள்ளனர்.

    விழுப்புரம்:

    செஞ்சி அருகே மீனம்பூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவரின் ஆதரவாளர்கள் மணல் கொள்ளையில் ஈடுபடுவதாகவும் ஏரியை ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்வதாகவும் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் மற்றும் செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவ லகம் வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் ஏராளமான போஸ்டர்கள் ஒட்டப்பட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அறிந்த சில பத்திரிகையாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்ற போது ஒரு சிலர் அவர்களை மறித்து தகராறு செய்துள்ளனர். இந்நிலையில் போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டதாக கூறப்படும் நபர்களை ஊராட்சி மன்ற தலைவரின் ஆதரவாளர்கள் மடக்கி தாக்கியுள்ளனர். இவை அனைத்து சம்பவங்களும் வாட்ஸ் அப்பில் பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×