என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "attack"
- தெற்கு காசாவில் உள்ள கான்யூனுசின் கிழக்கு பகுதிகளில் சரமாரியாக குண்டுகள் வீசப்பட்டன.
- காசாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் நோய், மரணம் மற்றும் அழிவு ஆகியவற்றை எதிர்கொண்டு இருப்பதாக ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.
காசா:
இஸ்ரேல்-காசாவின் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் கடந்த அக்டோபர் 7-ந்தேதி தொடங்கியது. இதில் காசா மீது இஸ்ரேல் மும்முனை தாக்குதல் நடத்தியதில் 14,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலால் காசாவில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரை மட்டாகின. இதற்கிடையே ஹமாஸ் அமைப்பினரிடம் இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவாார்த்தை மூலம் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
கடந்த 24-ந்தேதி தொடங்கிய போர் நிறுத்தம் 7 நாட்கள் நீடித்தது. இதில் 83 இஸ்ரேல் பிணைக் கைதிகள், 24 வெளிநாட்டினரை ஹமாஸ் விடுத்தது. அதே போல் இஸ்ரேல் சிறைகளில் இருந்து 240 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் அரசு விடுதலை செய்தது.
போர் நிறுத்தம் நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது. போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிக்க கத்தார் நாடு முயற்சித்தது. ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை.
இதையடுத்து காசா மீது இஸ்ரேல் தனது போர் தாக்குதலை மீண்டும் தீவிரப்படுத்தியது. தெற்கு காசாவில் இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுகளை வீசின.
அதே போல காசாவின் மற்ற பகுதிகளிலும் தாக்குதல் நடத்தப்பட்டன. குண்டு வீச்சால் பல இடங்களில் கடும் புகை எழும்பின. காசா மீது இஸ்ரேல் விடிய, விடிய தாக்குதல் நடத்தியது. தெற்கு காசாவில் உள்ள கான்யூனுசின் கிழக்கு பகுதிகளில் சரமாரியாக குண்டுகள் வீசப்பட்டன.
போர் நிறுத்தத்துக்கு பிறகு முதல் நாள் தாக்குதலில் 180 பாலஸ்தீனியர்கள் பலியானார்கள்.
இது தொடர்பாக காசாவின் சுகாதார அமைச்சகம் கூறும்போது, நேற்று காலை இஸ்ரேல் தனது தாக்குதலை மீண்டும் தொடங்கிய 2 மணி நேரத்தில் 180-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். 589 பேர் காயம் அடைந்துள்ளனர்.
காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் இன்னும் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் காசா மக்கள் உயிரை கையில் பிடித்தப்படி தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.
காசாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் நோய், மரணம் மற்றும் அழிவு ஆகியவற்றை எதிர்கொண்டு இருப்பதாக ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.
இதற்கிடையே ஹமாஸ் அமைப்பினரிடம் 126 இஸ்ரேலியர்கள், தாய்லாந்தை சேர்ந்த 8 பேர், நோபளம், தான்சானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளை சேர்ந்த தலா ஒருவர் என 137 பேர் பிணைக் கைதிகளாக இன்னும் உள்ளனர் என்று இஸ்ரேல் தெரிவித்து உள்ளது.
- பாதிக்கப்பட்ட நபரின் முதுகில் கீறல்களும், முகத்தில் மற்ற காயங்களும் உள்ளன.
- இது வகுப்புவாத காரணங்களைக் காட்டிலும் பணத்துக்கான தாக்குதலாகவே தெரிகிறது.
கர்நாடக மாநிலம், கொப்பல் மாவட்டத்தில் இஸ்லாமிய நபர் மீது மர்ம நபர்கள் நடத்திய தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் ஹூசென்சாப் என்பவர், காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
அப்போது அவர், கடந்த 25ம் தேதி ஹொசப்பேட்டை நகரிலிருந்து கங்காவதி நகருக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் குற்றம் சாட்டப்பட்ட இருவரும் தன்னைத் தாக்கியதாகவும், பிறகு அந்த நபர்கள் தன்னிடம் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு, உடைந்த பீர் பாட்டிலின் துண்டுகளால் தனது தாடியை வெட்ட முயன்றதாகவும், தனது தாடியை தீ வைத்து எரித்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், என்னை விட்டுவிடும்படி கெஞ்சினேன். ஆனால், அவர்கள் தன்னை ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லும்படி வற்புறுத்தினர். எனக்கு பார்வையில் பிரச்சனை இருப்பதால், என்னால் அவர்களின் அடையாளங்களை காண முடியவில்லை என்றும் அவர் கூறினார்.
பிறகு, அங்கிருந்த ஆடு மேய்ப்பவர்கள் தன்னைக் காப்பாற்ற வந்தபோது, மர்ம நபர்கள் தன்னை கல்லால் தலையில் அடிக்க முயன்றதாகவும் அவர் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், இந்த தாக்குதல் வகுப்புவாத தாக்குதலாக இல்லாமல் கொள்ளையாக நடந்ததாக தெரிகிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, கொப்பல் காவல்துறை கண்காணிப்பாளர் யசோதா வந்தகோடி கூறுகையில்" பாதிக்கப்பட்ட நபரின் முதுகில் கீறல்களும், முகத்தில் மற்ற காயங்களும் உள்ளன. அவர் ஒரு பாட்டிலால் தாக்கப்பட்டதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை. இது வகுப்புவாத காரணங்களைக் காட்டிலும் பணத்துக்கான தாக்குதலாகவே தெரிகிறது. விசாரணைகள் நடைபெற்று வருகின்றன" என்றார்.
- மர்ம நபர் பைத்தியகாரத் தனமாக சிரித்தது என் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கிறது.
- வனிதாமீது தாக்குதல் நடத்திய சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை:
நடிகர் விஜயகுமார் மகளும், நடிகையுமான வனிதா மர்மநபர் ஒருவர் திடீரென தாக்கியதாக வலைதளத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
நான் பிக்பாஸ் நிகழ்ச்சி விமர்சனத்தை முடித்து விட்டு இரவு உணவு சாப்பிட்டுவிட்டு என் காரில் இறங்கி நடந்துசென்று கொண்டிருந்தேன். காரை என்னுடைய சகோதரி சவுமியா வீட்டு அருகே இருட்டான பகுதியில் நிறுத்தினேன்.
அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு மர்ம நபர் பிரதீப்புக்கு ரெட்கார்டு கொடுக்கிறீங்களா? என கேட்டார்.
அதுக்கு நீ வேற சப்போர்ட்டுக்கு வர்றியா? என சொல்லி என் முகத்தில் பலமாக தாக்கிவிட்டு ஓடிவிட்டார். இதனால் காயம் அடைந்து ரத்தம் வழிந்தது. நள்ளிரவு 1 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததால் என் அருகில் யாரும் இல்லை. என் சகோதரியை கீழே வரும்படி அழைத்த நிலையில் அவர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யும் படி தெரிவித்தார்.
ஆனால் நான் அவளிடம் போலீசில் புகார் தெரிவிப்பதில் நம்பிக்கை இல்லை என தெரிவித்தேன்.
காயத்திற்காக முதலுதவி செய்துவிட்டு கோபத்துடன் வெளியேறி தாக்கியவரை அடையாளம் காண நினைத்தேன். முடியவில்லை. அந்த மர்ம நபர் பைத்தியகாரத் தனமாக சிரித்தது என் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கிறது.
நான் திரையில் தோன்றும் அளவுக்கு உடல் நலத்துடன் இல்லாததால் ஓய்வு எடுத்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
வனிதாமீது தாக்குதல் நடத்திய சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ்-7 சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக நடிகர் பிரதீப் ஆண்டனி பங்கேற்றார்.
சவாலான போட்டியாளராக திகழ்ந்த பிரதீப் சக பெண்களின் பாதுகாப்பு பிரச்சினைக்கு காரணமாக இருந்ததாக கூறி ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார்.
இந்த விவகாரம் வலை தளத்தில் சர்ச்சை பொருளாக பதிவு செய்யப்பட்டு வந்தது.
பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்து கருத்து தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- முத்து உள்பட 9 பேர் கும்பல் ரமேஷ், அவரது சகோதரர், தாயார் ஆகிய 3 பேரையும் தாக்கினர்.
- தாக்குதலின்போது ரமேஷின் செல்போன், ரூ.5 ஆயிரத்தையும் பறித்து விட்டு தப்பி சென்று விட்டனர்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் சேதுராயபுரம் காலனியை சேர்ந்தவர் காளியப்பன் மகன் ரமேஷ் (வயது 25). சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்த போது, ஜெ.ஜெ.நகரை சேர்ந்த இசக்கியப்பன், அக்பர், தமிழன், முத்து உள்பட 9 பேர் கும்பல் திடீர் என வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து, ரமேஷ் அவரது 17 வயது சகோதரர், அவரது தாயார் தங்கம்மாள் (44) ஆகிய 3 பேரையும் தாக்கினர். மேலும் ரமேஷின் செல்போன், ரூ.5 ஆயிரத்தையும் பறித்து விட்டு தப்பி சென்று விட்டனர். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது.
சப்-இன்ஸ்பெக்டர் வேலம்மாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இசக்கியப்பன் உள்பட 9 பேர் கும்பலையும் தேடி வருகிறார்.
- தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
- நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கருப்பசாமி வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 38). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார்.
இந்தநிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மணிகண்டனுக்கு அந்த பகுதியை சேர்ந்த திருமணமான 36 வயது இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.
இந்த கள்ளக்காதல் விவகாரம் மணிகண்டனின் மனைவிக்கு தெரிய வரவே அவர் கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மணிகண்டன் மனைவி அவரை பிரிந்து விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இதனையடுத்து மணி கண்டன் கள்ளக்காதலி வீட்டில் திருமணம் செய்யா மல் அவருடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்க ளுக்கு முன்பு கள்ளக்காத லர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இளம்பெண் மணிகண்டனுடன் பேசுவதையும் பழகுவதையும் தவிர்த்து வந்தார்.
சம்பவத்தன்று மணிக ண்டன் கள்ளக்காதலியின் வீட்டிற்கு சென்று கள்ளக்காதலி மற்றும் அவரது மகள் ஆகியோரை தகாத வார்த்தைகளால் பேசினார்.
அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மன வேதனை அடைந்த இளம்பெண் விஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் அவர் மயங்கினார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த இளம்பெண்ணின் உறவினர்கள் மணிகண்டனை தாக்கினர். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விஷம் குடித்து உயிருக்கு போராடிய இளம்பெண்ணை அவரது உறவினர்கள் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இந்த சம்பவம் குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஆதிநாராயணனுக்கும், அவரது மனைவி விமலாவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர்.
- சம்பவத்தன்று விமலா, அவரது மகன் கார்த்திக் ஆகியோர் அன்னசுந்தரத்திடம் சென்று வீட்டை எழுதித் தருமாறு கேட்டுள்ளனர்.
களக்காடு:
ஏர்வாடி அருகே உள்ள வேப்பன்குளம் மேலூர், அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நம்பி மனைவி அன்னசுந்தரம் (வயது 70). இவரது மகன் ஆதி நாராயணன். ஆதிநாராய ணனுக்கும், அவரது மனைவி விமலா விற்கும் (38) கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர்.
சம்பவத்தன்று விமலா, அவரது மகன் கார்த்திக் (20) ஆகியோர் அன்ன சுந்தரத்திடம் சென்று வீட்டை எழுதித் தருமாறு கேட்டுள்ளனர். அதற்கு அன்னசுந்தரம் மறுத்ததாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த விமலா, கார்த்திக் ஆகியோர் சேர்ந்து அன்னசுந்தரத்தை கம்பால் தாக்கினர். இதனால் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி ஏர்வாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி விமலாவையும், அவரது மகன் கார்த்திக் கையும் தேடி வருகின்றனர்.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த கந்தம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி சசிகலா (வயது 33) .இவரும் அதே ஊரை சேர்ந்த பாஸ்கர் மனைவி தேவியும் கடந்த 16-ந் தேதி கந்தம்பாளையம் மீன் மார்க்கெட் அருகில் மகளிர் சுய உதவிக் குழு பணம் சேமிப்புதொடர் பாக கடன் பெற்றது குறித்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது இவர்களுக்குள்வாய்தகராறுஏற்பட்டது.
இருவருக்கும் கடும் வாக்கு வாதம் நடந்தது. அப்போது மீன் வெட்டிக் கொண்டிருந்த தேவியின் கணவர் பாஸ்கரன் சசிகலாவைஅசிங்கமாக திட்டி கையில் வைத்திருந்த மீன் வெட்டும் கத்தியால் சசிகலாவை வெட்ட வந்தபோது சசிகலாவின் கணவர் முருகன் தடுத்ததில் முருகனின் இடது கையில் கத்தி பட்டது.இதில் காயம் அடைந்த முருகனை அவரதுமனைவிசசிகலா அழைத்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் சென்ற போது பாஸ்கரின் மனைவி தேவி காலால் எட்டி உதைத்து கையில் வைத்திருந்த ஐஸ் உடைக்கும் கட்டையால் சசிகலாவை அடித்து மிரட்டினார். இதனால் காயமடைந்த சசிகலா அவரது கணவர் முருகன்ஆகியோர் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில்சிகிச்சை பெற்றனர்.இதுகுறித்து சசிகலா பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில்பாஸ்கர் மற்றும் பாஸ்கரின் மனைவி தேவி மீது வழக்கு பதிவு செய்து பண்ருட்டி போலீசார்விசாரித்து வருகின்றனர்.
- மாதவன் வீட்டிற்கு செல்லும் வழிப்பாதையை அதே தெருவை சேர்ந்த ஆனந்த் கல் போட்டு அடைத்ததாக கூறப்படுகிறது.
- இதனை மாதவனின் மனைவி கனகராஜம் தட்டிக் கேட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
களக்காடு:
திருக்குறுங்குடி அடுத்துள்ள சுந்தர பாண்டியபுரம், தெற்கு தெருவை சேர்ந்தவர் மாதவன். இவரது வீட்டிற்கு செல்லும் வழிப்பாதையை அதே தெருவை சேர்ந்த வேல்பாண்டி மகன் ஆனந்த் (22) கல் போட்டு அடைத்ததாக கூறப்படுகிறது.
இதனை மாதவனின் மனைவி கனகராஜம் தட்டிக் கேட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஆனந்த், கனகராஜத்தை தாக்கினாராம். மேலும் அவரது கணவர் மாதவனை அவதூறாக பேசி கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ஆனந்த் அதே பகுதியை சேர்ந்த மகாலிங்கம் மகன் மணிகண்டன், அருணாசலம் மகன் மனோகரன் ஆகியோர் சேர்ந்து தன்னை தாக்கியதாக திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்துள்ளார்.
இதுகுறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- தகராறின்போது முத்துசரவணன், இசக்கியை கம்பால் தாக்கினார்.
- காயமடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள விஜயநாராயணம் போலீஸ் சரகம் பதைக்கம் கிராமத்தை சேர்ந்தவர் இசக்கி (வயது 45). விவசாயி. இவரது மகன் முருகன், அதே ஊரை சேர்ந்த முத்துசரவணனுடன் (23) ஒரே மோட்டார் சைக்கிளில் அடிக்கடி வந்துள்ளார். இது இசக்கிக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் அவர் முத்துசரவணனை கண்டித்துள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் முத்துசரவணன், இசக்கியை கம்பால் தாக்கினார். இதைப்பார்த்த இசக்கியின் மகள் அதனை தடுக்க வந்தார். அவரையும் முத்துசரவணன் கம்பால் தாக்கினார். தாக்குதலில் காயமடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுபற்றி விஜய நாராயணம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முத்துசரவணனை கைது செய்தனர்.
- ஒரு மாதத்திற்கு முன்பு முகேஷ் என்பவருக்கும், மதன் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
- சிவா உள்பட 4 பேரும் சேர்ந்து ராமனை இரும்பு கம்பியால் தாக்கினர்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம் மலையடியை சேர்ந்தவர் ராமன் (வயது 45). விவசாயி. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அதே ஊரை சேர்ந்த முகேஷ் என்பவருக்கும், மதன் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதற்கு ராமன் தான் காரணம் என முகேஷ் குடும்பத்தினர் கருதினர். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று ராமன் தனது வீட்டு முன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முகேஷ் (26), அவரது சகோதரர் அஜித் (23), நம்பிராஜன் மகன் பவின் (24), காரியாண்டியை சேர்ந்த சிவா ஆகிய 4 பேரும் சேர்ந்து ராமனை இரும்பு கம்பியால் தாக்கினர்.
அதனை தடுக்க வந்த ராமனின் மாமனார் சுப்பிரமணியனையும் அவர்கள் தாக்கினர். இதில் காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கிருந்து ராமன் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது.
அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முகேஷ், அஜித் உள்பட 4 பேரையும் தேடி வருகின்றனர்.