என் மலர்

  நீங்கள் தேடியது "Lovers"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பல ஜோடிகள் ‘நாங்கள் நண்பரும் இல்லை.. காதலர்களும் இல்லை.. அதற்கும் மேலான உறவு..” என்று அவர்கள் சொல்லிக்கொள்கிறார்கள். இத்தகைய ‘பாதி தோழி கலாசாரம்’ பெண்களுக்கு பாதிப்பைதான் ஏற்படுத்துகிறது.
  இது ஒரு புது கலாசாரம். 18 முதல் 30 வயது வரையுள்ள ஆண்களும், பெண்களும் பல வருடங்களாக ஒன்றாகப் பழகிக்கொண்டிருக்கிறார்கள். நன்றாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது, அவர்கள் வாழ்க்கை. ஆனால் அப்படிப்பட்ட சிலரிடம், ‘நீங்கள் நண்பர்களா?’ என்று கேட்டால், இல்லை என்கிறார்கள். ‘காதலர்களா?’ என்று கேட்டால், அதற்கும் இல்லை என்றுதான் பதில் தருகிறார்கள். ‘அப்படியானால் உங்கள் நட்பிற்கும், பழக்கத்திற்கும் என்ன பெயர்?’ என்று கேட்டால், பதில் சொல்லத் தெரியாமல் சிரிக்கிறார்கள். ஆனால் அப்படி ஜோடியாக பழகும் அவர்கள் இருவரும், காதல் ஜோடியைவிடவும் நெருக்கமான தம்பதிகளைவிடவும் மிக அதிகமான அளவு தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்துகொள்கிறார்கள். ஒருவருக்கொருவர் உதவிக்கொள்கிறார்கள். அந்தரங்கமான தகவல்களைக்கூட அலசிக்கொள்கிறார்கள்.

  ‘சரி, பெயர் சூட்டப்படாத இந்த புதிய கலாசார நட்பில் எல்லாம் நன்றாகத்தானே போய்க்கொண்டிருக்கிறது. இதை பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லையே’ என்று நிம்மதி பெருமூச்சு விட முடியவில்லை. ஏனென்றால், இத்தகைய நட்பை விட்டு விலக முடியாமலும்- காதலராகவோ, கணவராகவோ அங்கீகரித்து வாழ்க்கையில் சேர்க்க முடியாமலும் பல பெண்கள் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த தவிப்பு அவர்கள் பணிசார்ந்த எதிர்காலத்தையும், (திருமணம் போன்ற) வாழ்க்கை சார்ந்த எதிர்காலத்தையும் பாதிக்கிறது என்பதுதான் இப்போதைய பிரச்சினை.

  பல ஜோடிகள் ‘நாங்கள் நண்பரும் இல்லை.. காதலர்களும் இல்லை.. அதற்கும் மேலான உறவு..” என்று அவர்கள் சொல்லிக்கொள்கிறார்கள். இத்தகைய நட்புக்கு அவரவருக்கு தக்கபடி பெயர் சூட்டிக்கொள்கிறார்கள். இவர்களில் பெரும்பாலான ஆண்கள், தங்கள் தோழியை ‘ஹாப் கேர்ள் பிரெண்ட்’ என்கிறார்கள். பெண்கள், தங்கள் தோழர்களை ‘ஹாப் பாய் பிரெண்ட்’ என்றழைக்கிறார்கள். இப்படிப்பட்ட பாதி காதலர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகிக்கொண்டிருக்கிறது.

  இவர்கள் வயதைக் கடந்தும், பருவத்தை கடந்தும் நட்பு பாராட்டி வருகிறார்கள். 18 வயது முதல் 70 வயது வரை இப்படிப்பட்ட நண்பர்கள் இருக்கிறார்கள். இத்தகைய ‘பாதி தோழி கலாசாரம்’ பெண்களுக்கு பாதிப்பைதான் ஏற்படுத்துகிறது என்பதை சமூகம் புரிந்துகொள்ளவேண்டும். நட்பு அதன் எல்லையோடு நட்பாக மட்டும் இருக்க வேண்டும்.

  விழிப்பாக இருப்பது எப்படி?

  இதுபோன்ற உறவுகளில் இருப்பவர்களை அலசி ஆராய்ந்தபோது, இந்த நட்பால் அவர்களுக்கு ஓரளவு பலன் இருந்தாலும், பாதிப்புகள் அதிகம் இருக்கின்றன. அதனால் இதுபோன்ற உறவுகளில் விழிப்பாக இருப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

  பள்ளிக்காலத்தில் இருந்தே ஆண்கள்- பெண்களோடும், பெண்கள் - ஆண்களோடும் சகஜமாக நட்பு பாராட்டத் தொடங்கவேண்டும். அப்படி நட்பு பாராட்டினால் நட்பு பற்றியும், நண்பர்கள் பற்றியும் நல்ல அனுபவங்கள் கிடைக்கும். அதன் மூலம் எதிர்காலத்தில் நட்புக்கு எல்லை வகுத்துக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.  பள்ளிக்காலத்திலே எதிர்பாலினரிடம் நட்பு பாராட்ட முடியாதவர்கள் கல்லூரி காலத்திலோ அல்லது பணிபுரியும் காலத்திலோ, தன்னை உணர்ந்த நண்பர் என்று ஒருவரை தேர்ந்தெடுத்து அவரிடம் அளவுக்கு மீறிய நிலையில் பழகும்போது, அது இத்தகைய நட்பாகிவிடுகிறது. (பள்ளிக் காலத்திலே ஆண், பெண் நட்பை சகஜமாக எதிர்கொள்வது இதற்கு நல்ல தீர்வு)

  பெற்றோரிடம் மனம்விட்டுப் பேசும் வழக்கம் இல்லாதவர் களிடமும், பிரிந்திருக்கும் பெற்றோர்களிடம் வளருகிறவர்களிடமும், தங்கள் எதிர்காலத்தை பற்றிய கவலை இருக்கும். எதிர்காலம் நிச்சயமற்றதாகவும், பாதுகாப்பாற்றதாகவும் இருப்பதாக கருதும் அவர்களிடம் தன்னம்பிக்கை குறையும். அப்போது அவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டுகிறவர், பாதுகாப்பு அளிக்கத் தகுதியானவர் என்று கருது பவர்களிடம் இத்தகைய நட்பை உருவாக்கிக்கொள்கிறார்கள். (பெற்றோர்களிடம் மனம்விட்டுப்பேசுவதும், அவர்கள் மூலம் பாதுகாப்பு கிடைப்பதும் இதற்கு நல்ல தீர்வு)

  ஒவ்வொரு ஆணின் வாழ்க்கையிலும், ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் குறிப்பிடும்படியான ரகசியங்கள் இருக்கவே செய்யும். இப்படிப்பட்ட ‘பாதி பெண் தோழிகள்’ உறவில் இருக்கும்போது பெரும்பாலான பெண்கள் தங்கள் சிறுவயது பாலியல் கசப்புகள் முதல் குடும்ப ரகசியங்கள் வரை அனைத்தையும் ஆண் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்கிறார்கள். அந்த அந்தரங்க பகிர்வுகள் எதிர்காலத்தில் அந்த பெண்களுக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது. (அதனால் இத்தகைய உறவில் இருக்கும் பெண்கள், நண்பர்களிடம் எதை பேசவேண்டுமோ அதை மட்டும் பேசுங்கள்)

  நண்பர், காதலர், கணவர் என்ற ஒவ்வொரு உறவுக்கும் வெவ்வேறு அர்த்தம் உள்ளது. ஒரு நண்பரால் நல்ல காதலராகவும், சிறந்த கணவராகவும் ஆக முடியும். அப்படி படிப் படியாக அந்த உறவை உயர்த்திச் செல்ல தைரியம் வேண்டும். அதிக தன்னம்பிக்கையும் அவசியம். ஆனால் இந்த ஹாப் கேர்ள் பிரெண்ட், ஹாப் பாய் பிரெண்ட் போன்றவர்கள் அந்த அளவுக்கு தைரியம் இல்லாதவர்கள். அதே நேரத்தில் அந்த ஆண், நண்பர் என்ற பெயரை வைத்துக்கொண்டு காதலராகவும், கணவராகவும் மறைமுகமாக செயல்பட அவர் விரும்புவார். அதற்கு ஒத்துழைக்காவிட்டால் பிரச்சினையை உருவாக்குவார். (அதனால் இப்படிப்பட்ட நண்பர் களிடம் எப்போதும் விழிப்பாக பழகுங்கள்)

  இப்படி நண்பர்களாக பழகும் பெண்களில் பலர், தனது நண்பனை உயிருக்கும் மேலாக கருதுகிறார்கள். இதனால் அவர்களது சொல்படி நடந்து பெற்றோர்களை கூட பகைத்துக்கொள்கிறார்கள். (எந்த நண்பனும், பெற்றோருக்கு நிகரில்லை என்பதை பெண்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

  இத்தகைய நட்பில் இருக்கும் ஆண்களும், பெண்களும் திருமணத்தை தள்ளிப்போடுகிறார்கள். பின்பு இந்த நட்பில் இருக்கும் ஆண், இன்னொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளும்போது, அவருடன் நட்பில் இருக்கும் பெண்ணுக்கு திருமண வயது கடந்து போயிருக்கும். அதன் பின்பு அவள் எதிர்பார்த்ததுபோல் அவளுக்கு வரன் அமையாது. பின்பு ஏதாவது ஒருவர் கிடைத்தால்போதும் என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டுவிடுவாள். அப்போது அவளுக்கு வாழ்க்கை ஏமாற்றமாகிவிடும். (தனக்கு எப்படிப்பட்ட நண்பர் இருந்தாலும் வாழ்க்கைக்கு கணவர் தேவை என்பதை பெண்கள் புரிந்து நட்பு பாராட்டவேண்டும். சரியான பருவத்தில் தகுதியானவரை திருமணம் செய்துகொள்ள வேண்டும்).

  - விஜயலட்சுமி பந்தையன்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமெரிக்காவில் கர்ப்பிணி வயிற்றை கிழித்து குழந்தையை எடுத்த காதல் ஜோடியை போலீசார் கைது செய்தனர்.
  நியூயார்க்:

  அமெரிக்காவில் வடக்கு டகோடா பகுதியில் உள்ள ஒரு ஆற்றின் அருகே சவான்னா கிரேவின்ட் (22) என்ற பெண்ணின் சடலம் கிடந்தது. அவரது வயிறு கிழிக்கப்பட்ட நிலையில் இருந்தது. பிணத்தை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

  அப்போது அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த புரூக் கிரவுஸ் என்ற பெண்ணும் அவரது காதலர் வில்லியம் கோயன் ஆகியோரும் சேர்ந்து அவரை கொலை செய்தது தெரியவந்தது.

  கொலை செய்யப்பட்ட சவான்னா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் தான் அவர் கொலை செய்யப்பட்டார். ஆனால் வயிற்றில் இருந்த குழந்தையின் நிலை என்ன ஆனது என தெரியாமல் இருந்தது.

  ஆனால் இவர்கள் இருவரும் கர்ப்பிணியாக இருந்த சவான்னாவின் வயிற்றை கிழித்து குழந்தையை வெளியே எடுத்துள்ளனர். தங்களுக்கு குழந்தை வேண்டும் என்பதற்காக இத்தகைய கொடூர செயலை புரிந்ததாக போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

  இவர்களை போலீசார் கைது செய்தனர். முன்னதாக வில்லியம் வீட்டில் சோதனை மேற்கொண்ட போலீசார் அங்கிருந்து ஒரு கயிற்றை கைப்பற்றினர். அதை டி.என்.ஏ. சோதனை மேற்கொண்ட போது அதை வைத்து சவான்னாவின் கழுத்தை வில்லியம் நெரித்து இருப்பது உறுதி செய்யப்பட்டது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெண்கள் ஆண்களிடம் பழகும் போது ஒருசில விஷயங்கள் கவனிப்பார்கள். அதில் ஆண்களின் பழக்கவழக்கங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம் அவர்களின் சுகாதாரமும் ஒன்றாகும்.
  பெண்கள் ஆண்களிடம் பழகும் போது ஒருசில விஷயங்கள் கவனிப்பார்கள். அதில் ஆண்களின் பழக்கவழக்கங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம் அவர்களின் சுகாதாரமும் ஒன்று. ஆண்கள் நன்கு சுத்தமாக, ஹேண்ட்சம்மாக இருந்தால், பெண்கள் அவர்களின் வலையில் எளிதில் விழுந்துவிடுவார்கள். ஏனெனில் பெண்கள் எதிலும் சுத்தமாக இருக்க வேண்டுமென்று நினைப்பார்கள். அதுமட்டுமின்றி, ஒருவரின் சுகாதாரம் மற்றவர்களின் முன் நல்ல மரியாதையையும் வழங்கும். சரி, இப்போது பெண்கள் ஆண்களிடம் மறைமுகமாக கவனிக்கும் சுகாதார விஷயங்கள் என்னவென்று பார்ப்போமா!!!

  உடல் முழுவதும் பெர்ப்யூம் அடித்துக் கொண்டால் மட்டும் உடலில் துர்நாற்றம் வீசாமல் இருக்காது. அளவுக்கு அதிகமான பெர்ப்யூம் அருகில் வருவோருக்கு மிகுந்த தலைவலியை ஏற்படுத்தும். ஆகவே குறிப்பிட்ட இடத்தில் மட்டும் நீங்கள் பெர்ப்யூம் அடித்தால் போதும். அதிலும் காதுகளுக்கு பின், மணிக்கட்டு மற்றும் கழுத்து போன்ற இடங்களில் மட்டும் ஆண்கள் பெர்ப்யூம் அடித்துக் கொண்டால் மட்டும் போதும். அதுவே அவர்கள் மீது அளவாக நல்ல நறுமணத்தை வீசும்.

  சில பெண்கள் ஆண்களின் முடியால் மயங்குவார்கள். அதற்காக ஆண்களின் முடியை அடிக்கடி வருடிவிடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். உங்கள் காதலி அல்லது மனைவி உங்கள் முடியை அதிகம் தொட்டுப் பேசும் போது, தலையில் பொடுகு இருந்தால் எப்படி இருக்கும். ஆகவே தினமும் மைல்டு ஷாம்பு போட்டு குளித்து உங்கள் முடியை சுத்தமாக வைத்திருங்கள்.  ஆண்களின் உதடுகளைப் பார்த்தால் முத்தம் கொடுக்க தோன்ற வேண்டும். அதைவிட்டு உலர்ந்து காணப்பட்டால், யாருக்கு தான் பிடிக்கும். ஆகவே உதடுகளை எப்போதும் வறட்சியின்றி நீர்ப்பசையுடன் வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு வேஸ்லினை உதடுகளுக்கு தடவி வாருங்கள்.

  பற்கள் காலையில் காபி குடிப்பதில் இருந்து சிகரெட் மற்றும் இதர குளிர் பானங்களைக் குடிப்பதால், முத்துப் போன்ற பற்கள் மஞ்சள் நிறத்தில் அழுகிப் போன பற்கள் போன்றாகிவிட்டன. மஞ்சள் நிறத்தில் பற்கள் இருந்தால், எந்த ஒரு பெண்ணும் அருகில் கூட ஏன் பேச கூடமாட்டாள். ஆகவே தினமும் பற்களை துலக்கும் போது பேஸ்ட்டில் சிறிது உப்பு தூவி துலக்குங்கள். அல்லது வேறு ஏதேனும் இயற்கை வைத்தியங்களைப் பின்பற்றி பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்குங்கள்.

  வயதாக ஆக உடலின் பல பகுதிகளில் தேவையற்ற முடிகள் அதிகம் வளர ஆரம்பிக்கும். ஆனால், சில ஆண்களுக்கு இளமையிலேயே மூக்குகளில் வளரும் முடியானது வெளியே நீட்டிக் கொண்டு இருக்கும். அப்படி மூக்குகளில் முடி நீட்டிக் கொண்டிருந்தால், அது மோசமான தோற்றத்தை வெளிக்காட்டும். ஆகவே அவ்வப்போது மூக்கில் வளரும் முடியை வெட்டிவிடுங்கள்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உத்தரபிரதேச மாநிலத்தில் இந்து - முஸ்லீம் காதல் ஜோடியை பிரித்த ஆன்டி-ரோமியோ படை, அந்த பெண்ணை, அந்த வாலிபரின் கையில் ராக்கி கட்ட வைத்தும், அந்த பையனை காலில் விழ வைத்தும் தண்டனை வழங்கியுள்ளனர். #UttarPradesh
  கான்பூர்:

  உத்தரபிரதேச மாநிலத்தில் பெண்களை கேலி செய்பவர்கள், பெண்கள் பின்னால் சென்று தொல்லை கொடுப்பவர்களை பிடிக்க முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தின் உத்தரவின் பேரில் காவல்துறையில், ஆன்டி-ரோமியோ படை என்ற பிரிவு உருவாக்கப்பட்டது. 

  கல்லூரிகள், பள்ளிகள், பூங்காக்கள் என பொதுமக்கள் கூடும் முக்கிய பகுதிகளில் ஆன்டி-ரோமியோ படையினர் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். அப்போது பெண்களுக்கு தொல்லை தருவோரை கைது செய்து தண்டனையும் அளித்து வருகிறார்கள். இப்படையை மாநிலம் முழுவதும் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  இந்த நிலையில், இவர்கள் கான்பூர் மாவட்டம் காடிட் பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒரு இந்து பெண்ணும், முஸ்லீம் பையனும் ஜோடியாக இருந்துள்ளனர். அவர்களுக்கு ஆன்டி-ரோமியோ படை அறிவுரை கூறி உள்ளது. அதைத் தொடர்ந்து அந்த பெண், அந்த வாலிபரின் கையில் ராக்கி கட்டி உள்ளார். அந்த பையன் பெண்ணின் கால்களைத் தொட்டு தனது நடத்தைக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.  இதுகுறித்து ஆன்டி-ரோமியோ படையை சேர்ந்த ஆயுஷ் கரே, அவரது பேஸ்புக் பக்கத்தில் இதுகுறித்து கூறியிருப்பதாவது, ஒரு முஸ்லீம் பையனும், ஒரு இந்து பெண்ணும் ஒன்றாக இருந்தார்கள். நாங்கள் அவர்களுக்கு கட்டளையிட்டோம், அந்தப் பெண் அந்த பையன் கையில் ராக்கி கட்டினார். இந்த காதல் ஜிகாத்தில் ஈடுபட வேண்டாம் என என் இந்து சகோதரிகளுக்கு நான் வேண்டுகோள் விடுகிறேன், என கூறினார். #UttarPradesh #AntiRomeoSquad

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் இன்று ஒரே நாளில் 3 காதல் ஜோடிகள் தஞ்சம் அடைந்தன.
  ஈரோடு:

  அந்தியூர் அருகே உள்ள பட்லூர் பகுதியை சேர்ந்தவர் கவுசல்யா (வயது 21). பி.இ. பட்டதாரி. ஈரோட்டை சேர்ந்தவர் ஆனந்தன் (23). பட்டதாரி.

  இவர்கள் 2 பேருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் காதலித்து வந்தனர். இவர்கள் காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிந்தது. வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

  இதையடுத்து காதல் ஜோடி ஆனந்தன், கவுசல்யா வீட்டை விட்டு வெளியேறி சேலம் மாவட்டம் மேட்டூர் முனியப்பன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். மேலும் அவர்கள் இன்று ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். பிறகு அங்கு பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

  இதே போல மேலும் 2 காதல் ஜோடிகள் இன்று ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அவர்களும் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

  ஒரே நாளில் ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் 3 காதல் ஜோடிகள் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு நிலவியது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் இன்று ஒரே நாளில் 2 காதல் ஜோடிகள் தஞ்சமடைந்தனர்.
  வேலூர்:

  வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே உள்ள பச்சூர் கவுண்டர் வட்டம் பகுதியை சேர்ந்தவர் மயில்வாணன். இவருடைய மகள் ஜெயஸ்ரீ (வயது 20). இவர் கிருஷ்ணகிரியில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி. இறுதியாண்டு படிக்கிறார். ஜெயஸ்ரீயும் வாணியம்பாடி பழைய பேட்டை பகுதியை சேர்ந்த மகேந்திரன் மகன் மயில்வாணன் (22) என்கிற வாலிபரும் 2 ஆண்டுகளாக காதலித்தனர்.

  மயில்வாணன், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டில் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஜெயஸ்ரீக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஏற்பாடு செய்தனர்.

  இதையடுத்து, ஒடிசாவில் இருந்து சொந்த ஊருக்கு வந்த மயில்வாணன் காதலி ஜெயஸ்ரீயை எதிர்ப்பை மீறி கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஐகொந்தம் கொத்தப் பள்ளி கிராமத்தில் உள்ள ஸ்ரீனிவாச பெருமாள் சாமி கோவிலுக்கு அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டார்.

  இதையடுத்து, பாதுகாப்பு கேட்டு மயில்வாணன் தனது காதல் மனைவி ஜெயஸ்ரீயுடன் வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் இன்று தஞ்சமடைந்தார்.

  குடியாத்தம் அடுத்த கே.வி.குப்பம் சந்தைமேடு பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (21). இவர், ஜம்மு-காஷ்மீரில் கடந்த 2 ஆண்டுகளாக ராணு வீரராக பணியாற்றி வருகிறார். சதீஷூம், அதே பகுதியை சேர்ந்த ஜோதிகா (18) என்ற இளம்பெண்ணும் காதலித்தனர்.

  ஜோதிகா, குடியாத்தத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. கணினி அறிவியல் பட்டப்படிப்பு 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர்களும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டு தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

  இதையடுத்து, விடுமுறை எடுத்து கொண்டு ஊருக்கு வந்த ராணுவ வீரர் சதீஷ், ஜோதிகாவை வெளியே அழைத்துச் சென்று வேலூர் அருகே அரியூரில் உள்ள மாரியம்மன் கோவிலில் வைத்து இந்து முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார்.

  பிறகு, பாதுகாப்பு கேட்டு வேலூர் எஸ்.பி. அலுவல கத்தில் தஞ்சமடைந்தனர்.

  போலீசார், 2 காதல் ஜோடிகளிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று ஒரே நாளில் ஒரே நேரத்தில் 2 காதல் ஜோடிகள் தஞ்சமடைந்ததால் எஸ்.பி. அலுவலகத்தில் பரபரப்பு காணப்பட்டது.
  ×