என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பதிவு திருமணம்"

    • அப்பாவி பெண்கள் ஏமாற்றப்படுவது, மத மாற்றம் செய்வது என கலாசார ஊடுருவல் நடந்து வருகிறது.
    • படேல், தாக்கூர் மற்றும் சத்திரிய சமூகத்தினர் நீண்டகாலமாகக் கோரி வந்தனர்.

    குஜராத்தில் பதிவு திருமணம் செய்ய இனி பெற்றோர் சம்மதம் கட்டாயம் என என சட்டம் இயற்ற உள்ளதாக அங்கு ஆளும் பாஜக அரசு அறிவித்துள்ளது.

    குஜராத் சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது பேசிய ணை முதலமைச்சர் ஹர்ஷ் சங்கவி, திருமண பதிவு முறையை கடுமையாக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வர இருப்பதாக தெரிவித்தார்.

    காதல் திருமணம் என்ற பெயரில் அப்பாவி பெண்கள் ஏமாற்றப்படுவது, மத மாற்றம் செய்வது என கலாசார ஊடுருவல் நடந்து வருவதாக கூறிய அவர், இதனை தடுக்கும் பொருட்டு திருமண பதிவு முறையில் மாற்றம் கொண்டு வர இருப்பதாக தெரிவித்தார்.

    பெண்கள் ஏமாற்றப்படுவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை என்றும் அரசு காதல் திருமணங்களுக்கு எதிரானது அல்ல என்றும் அவர் கூறினார்.

    இந்தத் திருத்தங்கள் குறித்து 30 நாட்களுக்குள் பொதுமக்களின் கருத்துகள் கேட்கப்பட்டு, ஒரு குழுவின் ஆய்வுக்குப் பிறகே இது இறுதிச் சட்டமாக மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன்படி, திருமணம் செய்து கொள்ள விரும்பும் மணமக்கள், தாங்கள் அந்த தகவலை பெற்றோருக்கு தெரிவித்துவிட்டோம் என்பதற்கான உறுதிமொழிப் பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

    உதவிப் பதிவாளர் மணமக்களின் பெற்றோருக்குத் தொலைபேசி வாயிலாகவோ அல்லது நேரடியாகவோ தகவல் தெரிவிப்பார்.

    அனைத்தும் சரியாக இருக்கும்பட்சத்தில், திருமணச் சான்றிதழ் வழங்கப்படும்.

    பெற்றோரின் அனுமதியின்றி நடக்கும் திருமணங்களை செல்லாததாக அறிவிக்க வேண்டும் என்று படேல், தாக்கூர் மற்றும் சத்திரிய சமூகத்தினர் நீண்டகாலமாகக் கோரி வந்த நிலையில் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

    ஆனால் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்று சட்ட வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

    வழக்கறிஞர் மகேஷ் பாரியா கூறுகையில், "இந்திய அரசியலமைப்பின் பிரிவு 21-ன் கீழ் குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையான தனிமனித சுதந்திரத்தை இது மீறுகிறது" என்று தெரிவித்துள்ளார். 

    • கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 2 பேரும் தஞ்சமடைந்தனர்.
    • சுவேதா கடந்த 16-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறி சென்னையில் ராஜ்குமாரை பதிவு திருமணம் செய்து கொண்டார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் கொத்தங்குடி தெருவை சேர்ந்தவர் சுவேதா (வயது 23). அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி. படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவருக்கும் சுவேதாவுக்கும் காதல் ஏற்பட்டது. கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்கள் 2 பேரும் ெவவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் காதல் விவகாரம் சுவேதாவின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் இந்த காதலுக்கு தடை விதித்ததோடு வேறுஒரு நபருடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர். அதிர்ச்சியடைந்த சுவேதா கடந்த 16-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறி சென்னையில் ராஜ்குமாரை பதிவு திருமணம் செய்து கொண்டார். பின்னர் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 2 பேரும் தஞ்சமடைந்தனர். அப்போது சுவேதா கொடுத்துள்ள புகார் மனுவில், எனது பெற்றோரால் ஆபத்து உள்ளது. எனவே எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    ×