என் மலர்
நீங்கள் தேடியது "gujarat"
- குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான விபத்தில் 270 பேர் உயிரிழந்தனர்.
- 135 உடல்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், 101 உடல்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் 242 பேருடன் மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
விமானம் விழுந்ததில் விடுதி மற்றும் குடியிருப்பு பகுதியில் உள்ள சிலரும் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 270 ஆக உயர்ந்துள்ளது.
அகமதாபாத் விமான விபத்தில் 57 வயதான போகிலால் மற்றும் அவரது மனைவி 55 வயதான ஹன்சா ஆகியோர் உயிரிழந்தனர்.
தனது தம்பி போகிலால் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாத அவரது அக்கா (65) கோமதி மாரடைப்பால் உயிரிழந்தார். .
இதில் துக்கம் என்னவென்றால் போகிலால் உடல் இன்னும் அடையாளமா காணப்படாததால் அவருக்கு இன்னும் இறுதிச் சடங்குகள் நடத்தப்பட நிலையில், கோமதியின் இறுதிச் சடங்குகள் கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.
- நாடு முழுவதும் உள்ள பல்வேறு மையங்களில் இன்றும், நாளையும் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நுழைவுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- நுழைவுத் தேர்வுக்கான (NFAT 2025) தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகத்தில் சேர இன்றும், நாளையும் நடைபெற இருந்த நுழைவுத் தேர்வுகள் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
நாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்ட இயற்கை பேரிடர் மற்றும் எதிர்பாராத தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக, நாடு முழுவதும் உள்ள பல்வேறு மையங்களில் இன்றும், நாளையும் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நுழைவுத் தேர்வு (NFAT 2025) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகத்தில் பல்வேறு கல்விப் படிப்புகளில் சேருவதற்கான NFAT தேர்வு 2025 எழுத திட்டமிடப்பட்டுள்ள அனைவருக்கும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இதனால் ஏற்பட்ட சிரமத்திற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறோம்.
நுழைவுத் தேர்வுக்கான (NFAT 2025) தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- ஒரு நாளில் நமக்கே தெரியாமல் நிறைய வெளிநாட்டு பொருட்களை பயன்படுத்துகிறோம்.
- ஹோலி வண்ண பொடிகள் கூட வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டவை.
எவ்வளவு லாபம் கிடைத்தாலும் வெளிநாட்டு பொருட்களை விற்கக் கூடாது என்று வணிகர்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
இன்று குஜராத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மோடி, "எவ்வளவு லாபம் கிடைத்தாலும் வெளிநாட்டு பொருட்களை விற்க முடியாது என வணிகர்கள் உறுதிமொழி எடுக்க வேண்டும். துரதிஷ்டவசம் என்னவென்றால், விநாயகர் சிலைகளைக் கூட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறார்கள். அந்த சிலைகளின் கண்களும் மிகச் சிறியதாக உள்ளன, கண்கள் சரியாக திறப்பது கூட இல்லை. ஹோலி வண்ண பொடிகள் கூட வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டவை."
ஒரு நாளில் நமக்கே தெரியாமல் நிறைய வெளிநாட்டு பொருட்களை பயன்படுத்துகிறோம். நாம் பயன்படுத்தப்படும் ஹேர்பின், சீப்பு கூட வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டவை தான். 'ஆபரேஷன் சிந்தூர்' என்பது நமது படைகள் கைகளில் மட்டும் இல்லை, 140 கோடி இந்தியர்கள் கைகளிலும் உள்ளது" என்று தெரிவித்தார்.
- பிரிவினைக்குப் பிறகு உருவான நாடு இந்தியா மீதான வெறுப்பில் வாழ்கிறது.
- பாகிஸ்தானின் ஒரே நோக்கம் இந்தியாவுடனான பகைமை மற்றும் பாரதத்திற்கு தீங்கு விளைவிக்க வேண்டும் என்பதே.
பிரதமர் மோடி இன்று குஜராத் மாநிலம் சென்றிருந்தார். அங்குள்ள தாஹோத்தில் நடைபெற்று பேரணியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
* கடந்த 2014ஆம் ஆண்டு இதே தினத்தில் (மே26- 2014) ஆம் ஆண்டு முதல் முறையாக பிரதமரானேன்.
* நாடு முழுவதும் 70 வழித்தடங்களில் வந்தே பாரத் ரெயில்கள் இப்போது இயக்கப்படுகின்றன.
* மக்கள் ஹோலி, தீபாவளி மற்றும் வினாயகர் பூஜை போன்ற பண்டிகைகளின் போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.
* நமது நாட்டின் முன்னேற்றத்திற்குத் தேவையான அனைத்தும் இந்தியாவில் இங்கேயே செய்யப்பட வேண்டும்
* பின்தங்கிய பகுதிகளுக்கு வளர்ச்சியை எடுத்துச் செல்வதே எங்கள் அரசாங்கத்தின் கொள்கை
* நமது சகோதரிகளின் குங்குமத்தை அகற்ற யாராவது துணிந்தால், அவர்களின் முடிவு நெருங்கிவிட்டது.
* பிரிவினைக்குப் பிறகு உருவான நாடு இந்தியா மீதான வெறுப்பில் வாழ்கிறது
* பாகிஸ்தானின் ஒரே நோக்கம் இந்தியாவுடனான பகைமை மற்றும் பாரதத்திற்கு தீங்கு விளைவிக்க வேண்டும் என்பதே.
* இந்தியாவின் இலக்கு வறுமையை ஒழித்தல், பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துதல் மற்றும் வளர்ந்த நாடாக மாறுதல்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
- பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக இன்று சொந்த மாநிலமான குஜராத்துக்கு சென்றார்.
- ரூ.82 ஆயிரத்து 950 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக இன்று சொந்த மாநிலமான குஜராத்துக்கு சென்றார்.
2 நாட்கள் பயணத்தில் அவர் ரூ.82 ஆயிரத்து 950 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
பிரதமர் மோடி இன்று காலை தாஹோத் நகரில் ரெயில் என்ஜின் உற்பத்தி தொழிற் சாலையை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இந்த தொழிற்சாலை உள்நாட்டு பயன்பாட்டுக்காகவும், ஏற்றுமதிக்காகவும் 9 ஆயிரம் குதிரைத்திறன் கொண்ட மின்சார ரெயில் என்ஜின்களை உற்பத்தி செய்யும். இந்த தொழிற்சாலையில் இருந்து தயாரிக்கப்பட்ட முதல் மின்சார ரெயில் என்ஜினையும் பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்திய ரெயில்வேயின் சரக்கு ஏற்றுதல் திறனை அதிகரிக்க இந்த ரெயில் என்ஜின்கள் உதவும்.
அதை தொடர்ந்து தாஹோத் பகுதியில் சுமார் ரூ.24 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அத்துடன் நிறைவடைந்த திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.
இவற்றில் ரெயில்வே திட்டங்கள் மற்றும் குஜராத் அரசின் பல்வேறு திட்டங்களும் அடங்கும். வேராவல்-அகமதாபாத் இடையே வந்தே பாரத் விரைவு ரெயிலையும், வல்சாத்-தாஹோத் இடையே விரைவு ரெயிலையும் அவர் கொடி யசைத்து தொடங்கி வைத்தார். பாதை மாற்றப்பட்ட கட்டோசன்-கலோல் பிரிவையும் திறந்து வைத்ததோடு அதில் ஒரு சரக்கு ரெயிலையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மாலை 4 மணியளவில் பிரதமர் மோடி பூஜ் நகருக்கு செல்கிறார். அங்கு ரூ.53,400 கோடி மதிப்புள்ள பல மேம்பாட்டு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் அங்கு நிறை வடைந்த திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
நாளை காலை 11 மணிக்கு பிரதமர் மோடி காந்தி நகருக்கு செல்கிறார். அங்கு ரூ.5,536 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.
பிரதமர் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் 22 ஆயி ரத்துக்கும் அதிகமான குடியிருப்புகளையும் திறந்து வைக்கிறார். நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குஜராத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.3,300 கோடி நிதியை அவர் விடுவிக்கிறார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரை நிகழ்த்துகிறார்.
- மோடியின் முதல் ரோடு ஷோ நிகழ்ச்சி வதோதராவில் இன்று காலை நடை பெற்றது.
- அப்போது சாலையின் இருபுறமும் கூடி நின்ற பொதுமக்கள் பிரதமர் மோடிக்கு மலர் தூவினார்கள
குஜராத்தின் டஹோட் நகரில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள ரெயில் என்ஜின் உற்பத்தி ஆலையை திறந்து வைக்க பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக இன்று குஜராத் சென்றார். தனது சுற்றுப் பயணத்தின் போது 4 இடங்களில் ரோடு ஷோ நடத்துகிறார்.
மோடியின் முதல் ரோடு ஷோ நிகழ்ச்சி வதோதராவில் இன்று காலை நடை பெற்றது. அவர் 1 கி.மீ. தூரத்துக்கு ரோடு ஷோவாக சென்றார். காரின் கதவை திறந்து வைத்து அதில் நின்றபடி பயணம் செய்தார்.
அப்போது சாலையின் இருபுறமும் கூடி நின்ற பொதுமக்கள் பிரதமர் மோடிக்கு மலர் தூவினார்கள். ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் விதத்தில் பெண்கள் உற்சாகமாக வாழ்த்து கோஷம் எழுப்பி வரவேற்றனர்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் கர்னல் சோபியா குரேஷி முக்கிய பங்கு வகித்தார். அவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். அவரது குடும்பத்தினர் பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்றனர். அவரது பெற்றோர், சகோதரர் முகமது சஞ்சய் குரேஷி, சகோதரி ஷைனா சன்சாரா ஆகியோர் வரவேற்பில் பங்கேற்றனர். மேலும் பொதுமக்கள் ஏராளமானோர் தேசியக்கொடியுடன் காணப்பட்டனர். பொதுமக்களை பார்த்து அவர் உற்சாகமாக கையசைத்தபடியே சென்றார்.
மாலை 3.30 மணிக்கு பூஜ் பகுதியில் ரோடு ஷோ செல்கிறார். அதற்கடுத்து, இரவு 7.45 மணிக்கு பிரதமர் மோடி அகமதாபாத்தில் ரோடு ஷோ செல்கிறார். அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இந்திரா பாலம் வரை சுமார் 3 கி.மீ தூரத்துக்கு அவர் ரோடு ஷோ செல்கிறார். பின்னர் நாளை காலை 10.30 மணிக்கு காந்திநகரில் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரோடுஷோ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
- ரெயில் என்ஜின் உற்பத்தி ஆலையை திறந்து வைக்க பிரதமர் மோடி குஜராத்தை வருகிறார்.
- பூஜ் நகரில் ரூ.53,414 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார்.
குஜராத்தின் டஹோட் நகரில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள ரெயில் என்ஜின் உற்பத்தி ஆலையை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்
மேலும், பூஜ் நகரில் ரூ.53,414 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார்.
இந்நிலையில், அகமதாபாத் வரும் பிரதமர் மோடியை வரவேற்க வழிநெடுக பிரதமரின் புகைப்படத்துடன் 'ஆபரேஷன் சிந்தூர்' விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தனது அரசியல் ஆதாயத்திற்காக பாஜக பயன்படுத்துகிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- சட்டமன்ற தொகுதிகளுக்கு ஜூன் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
- வாக்குகள் 23ம் தேதி எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.
குஜராத், கேரளா, பஞ்சாப், மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
அதன்படி, குஜராத், கேரளா, பஞ்சாப், மேற்குவங்கத்தில் காலியாக உள்ள 5 தொகுதிகளுக்கு ஜூன் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தின் காடி, விசாவதர், கேரளாவின் நீலாம்பூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு ஜூன் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இதேபோல், பஞ்சாபின் லூதியானா மேற்கு, மேற்குவங்கத்தின் கலிகஞ்ச் தொகுதிகளுக்கு ஜூன் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
5 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஜூன் 19ம் தேதி நடைபெறும் என்றும் வாக்குகள் 23ம் தேதி எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
- சம்பித் பத்ரா, வினோத் தவ்டே, தருண் சக் மற்றும் பிற மூத்த தலைவர்கள் பிரச்சாரத்தை ஒருங்கிணைத்து வருகின்றனர்.
- பாஜகவின் பிற மூத்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் மாநிலந்தோறும் யாத்திரைகளை வழிநடத்தி வருகின்றனர்.
பாகிஸ்தானுடனான போர் நிறுத்தம் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக பாஜகவின் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர்களுடன் தலைவர் ஜே.பி. நட்டா பேசி ஒரு முடிவுக்கு வந்தார்.
அதாவது, பாஜக நாடு முழுவதும் திரங்கா யாத்திரை நடத்துவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி மே 13 முதல் மே 23 வரை 10 நாள் திரங்கா யாத்திரை திட்டமிடப்பட்டது.
இந்த யாத்திரையில் மக்களிடம் ஆபரேஷன் சிந்தூரின் சாதனைகளைப் பற்றி எடுத்துக்கூற பாஜக விழைகிறது. சம்பித் பத்ரா, வினோத் தவ்டே, தருண் சக் மற்றும் பிற மூத்த தலைவர்கள் பிரச்சாரத்தை ஒருங்கிணைத்து வருகின்றனர்.
பாஜகவின் பிற மூத்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் மாநிலந்தோறும் யாத்திரைகளை வழிநடத்தி வருகின்றனர்.
முன்னாள் ராணுவ வீரர்கள், சமூக சேவையாளர்கள் மற்றும் பிற பிரதிநிதிகளை யாத்திரையில் முன்னிலைப் படுத்த பாஜக திட்டமிட்டது.
இந்நிலையில், குஜராத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் "திரங்கா யாத்திரை" நடைபெற்றது.
ஆப்ரேஷன் சிந்தூரை தொடர்ந்து முப்படைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், அகமதாபாத்தில் மூவர்ணக் கொடியை ஏந்தியபடி அமித் ஷா பேரணியில் பங்கேற்றார்.
- சிசிடிவியை ஆய்வு செய்ததில் மாணவி எல்லா பாடங்களையும் எழுதியிருப்பது தெரியவந்தது.
- தேர்வுக்கு வராத மாணவருக்கு 52% மதிப்பெண்களுடன் தேர்ச்சி எனவும் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது
குஜராத்தில் கடந்த மே 8 ஆம் தேதி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. சோட்டா உதேபூரில் வசிக்கும் அகிக்ஷா பர்மர் என்ற மாணவி தனது 10 ஆம் வகுப்பு முடிவுகளை பார்த்து அதிர்ச்சியில் உரைந்தார்.
அதாவது, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து பாடங்களும் தேர்வெழுதிய தனக்கு, ஆப்சன்ட் என்பதால் ஃபெயில் என ரிசல்ட் வந்ததால் அவர் குழம்பிப்போனார்.
இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் மாவட்ட கல்வி அதிகாரியிடம் புகார் கொடுத்த பிறகு, சிசிடிவியை ஆய்வு செய்ததில் மாணவி எல்லா பாடங்களையும் எழுதியிருப்பது தெரியவந்தது.
சோட்டா உதேபூர் மாவட்ட கல்வி அதிகாரி (DEO) ஆனந்த் பர்மர், தேர்வு மேற்பார்வையாளர் ஆசிரியர்கள் மற்றும் பொறுப்பாளர் உட்பட ஆறு பேருக்கு இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
மேலும் நடத்தப்பட்ட விசாரணையில் தேர்வுக்கு வராத மாணவருக்கு 52% மதிப்பெண்களுடன் தேர்ச்சி எனவும் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட கல்வி அதிகாரி ஆனந்த் பர்மர் தெரிவித்தார்.
- எல்லையோர மாநில பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த வாய்ப்பு.
- குஜராத், ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுளளது.
இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் பாகிஸ்தான் எல்லையில் உள்ள மாநிலங்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இன்று பிரதமர் மோடி பாகிஸ்தான் எல்லையில் உள்ள மாநில முதல்வர்களை போனில் தொடர்பு கொண்டு பேசினார்.
குஜராத் பாகிஸ்தான் எல்லையில் உள்ள மாநிலங்களில் ஒன்று. இதனால் இந்த மாநிலத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று இங்குள்ள நகரங்களிலும் மின்சாரம் (BlackOut) அணைக்கப்பட்டது.
இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் எந்தவொரு நிகழ்ச்சியின்போதும் பட்டாசு வெடிக்கவும், டிரோன்கள் பறக்க விடவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவுக்கு ஒத்துழைப்பு வழங்கி, வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என குஜராத் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி தெரிவித்துள்ளார்.
- கடந்த மூன்று ஆண்டுகளாக இவரிடம் அந்த மாணவன் டியூஷன் பயின்று வந்துள்ளார்.
- மருத்துவப் பரிசோதனையில் அந்தப் பெண் ஐந்து மாத கர்ப்பிணி என்பது தெரியவந்துள்ளது.
குஜராத் மாநிலம் சூரத்தில், 14 வயது மாணவனால் 23 வயது டியூஷன் ஆசிரியை கர்ப்பமாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் 25 ஆம் தேதி டியூஷன் ஆசிரியையும் மாணவரும் வீட்டை விட்டு ஓடியுள்ளனர். நான்கு நாள் தேடுதலுக்குப் பிறகு செல்போன் சிக்னல் மூலம் குஜராத்-ராஜஸ்தான் எல்லைக்கு அருகே இருவரையும் போலீசார் கண்டுபிடித்தனர்.
டியூஷன் ஆசிரியை சூரத்தில் உள்ள அவரது வீட்டிலும், கைது செய்யப்படுவதற்கு முன்பு அவர்கள் சென்ற இடங்களிலும், சிறுவனுடன் பலமுறை உடல் உறவில் ஈடுபட்டுள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
கடந்த மூன்று ஆண்டுகளாக இவரிடம் அந்த மாணவன் டியூஷன் பயின்று வந்துள்ளார். கடந்த ஓராண்டாக இவர்கள் மிக நெருக்கமாக இருந்ததாகவும் இருவரும் பல மாதங்களாக உடல் ரீதியான உறவில் ஈடுபட்டதாக அப்பெண் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், மருத்துவப் பரிசோதனையில் அந்தப் பெண் ஐந்து மாத கர்ப்பிணி என்பது தெரியவந்துள்ளது. 14 வயது சிறுவன் தான் அந்த குழந்தையின் தந்தை என்று அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய போலீசார், "தனக்கும் அந்த சிறுவனுக்கும் சிறந்த வாழ்க்கை அமைய, கருவை கலைக்க அப்பெண் விருப்பம் தெரிவித்துள்ளார். நீதிமன்றம் அனுமதி அளித்தவுடன் கருவை கலைக்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம். கருக்கலைப்புக்குப் பிறகு டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்படும்" என்று தெரிவித்தனர்.