என் மலர்
நீங்கள் தேடியது "ரிவாபா ஜடேஜா"
- குஜராத் மாநிலத்தில் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டது.
- இதில் ஜடேஜாவின் மனைவி உள்பட 19 புதுமுகங்கள் மந்திரியாக பதவியேற்றனர்.
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தில் முதல் மந்திரி பூபேந்திர படேல் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. அங்கு அடுத்த ஆண்டு உள்ளாட்சி தேர்தலும், 2027-ம் ஆண்டு சட்டசபை தேர்தலும் நடக்கின்றன.
அதற்குமுன் மந்திரி சபையை மாற்றி அமைக்க முதல் மந்திரி முடிவு செய்தார். அவரது அறிவுறுத்தலின்படி, அவரைத் தவிர மீதி உள்ள 16 மந்திரிகளும் நேற்று முன்தினம் கூண்டோடு ராஜினாமா செய்தனர். அவர்களில் 6 பேரின் ராஜினாமாவை முதல் மந்திரி ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்நிலையில், நேற்று கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆச்சார்ய தேவ்ரத்தை முதல் மந்திரி பூபேந்திர படேல் சந்தித்தார். புதிய மந்திரிகள் பதவியேற்புக்கு அனுமதி கோரினார். கவர்னரும் ஒப்புதல் அளித்தார்.
இதையடுத்து, காந்தி நகரில் உள்ள மகாத்மா காந்தி மாநாட்டு மையத்தில் மந்திரி சபை விரிவாக்க நிகழ்ச்சி நடந்தது.
19 புதுமுகங்களுக்கு மந்திரி பதவி அளிக்கப்பட்டது. அவர்களுக்கு கவர்னர் ஆச்சார்ய தேவ்ரத் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
அவர்களில், ஆச்சரியப்படத்தக்க புதுமுகமாக கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவபா புதிய மந்திரியாக பதவியேற்றார். ஜடேஜாவும், அவருடைய மகளும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
- நேற்று அனைத்து அமைச்சர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
- உள்துறை அமைச்சர் ஹர்ஷா சங்விக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
முதல்வர் பூபேந்திரா படேல் தலைமையில் பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் அமைச்சவரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மாநில அமைச்சரவையை முழுமையாக மறுசீரமைக்க வசதியாக நேற்று அனைத்து அமைச்சர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
இதைத்தொடர்ந்து இன்று ஆளுநர் ஆச்சார்யா தேவ்விரத்-தை பூபேந்திரா படேல் சந்தித்தார். இந்நிலையில் 26 புதிய அமைச்சர்களை பூபேஷ் படேல் தேர்வு செய்துள்ளார்.
இந்த பட்டியலில் கிரிக்கெட் பிரபலம் ரவீந்தர் ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. 2019 இல் அவர் பாஜகவில் இணைந்த நிலையில் தற்போது அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
முந்தைய அமைச்சரவையில் மூன்று பேர் மட்டுமே தக்கவைக்கப்பட்டுள்ளனர். அமைச்சரவையில் உள்ள 19 பேரும் புதிய முகங்கள் ஆவர். உள்துறை அமைச்சர் ஹர்ஷா சங்விக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா இன்றே ஆளுநர் தலைமையில் நடைபெற உள்ளது. 2027 இல் குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இதற்கான நகர்வாக இந்த அமைச்சரவை மாற்றம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
- ரிவாபா ஜடேஜா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
- கட்சியில் உறுப்பினர் சேர்க்கைக்காக சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவீந்திர ஜடேஜா பாஜக கட்சியில் இணைந்துள்ளார். முன்னதாக ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இந்த நிலையில், தனது கணவர் ரவீந்திர ஜடேஜா பாஜக கட்சியில் இணைந்ததை ரிவாபா ஜடேஜா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு தெரிவித்துள்ளார்.
பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா சார்பில் நடத்தப்பட்ட சிறப்பு முகாமில் ரவீந்திர ஜடேஜா பாஜக உறுப்பினர் ஆகியுள்ளார். கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் பாஜக உறுப்பினர் சந்தா புதுப்பிக்கப்பட்ட நிலையில், கட்சியில் உறுப்பினர் சேர்க்கைக்காக சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
கடந்த 2019 ஆம் ஆண்டு ரிவாபா ஜடேஜா பாஜக கட்சியில் இணைந்தார். பிறகு 2022 ஆம் ஆண்டு ஜாம்நகர் தொகுதியில் போட்டியிட்டு தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரை விட அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரவீந்திர ஜடேஜா அறிவித்தார்.






