என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள வீரர்களுக்கு போதைப் பழக்கம் உள்ளது - ரவீந்திர ஜடேஜா மனைவி பகீர் கருத்து
    X

    இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள வீரர்களுக்கு போதைப் பழக்கம் உள்ளது - ரவீந்திர ஜடேஜா மனைவி பகீர் கருத்து

    • ரிவாபா ஜடேஜா பாஜக ஆளும் குஜராத்தின் கல்வி அமைச்சராக உள்ளார்.
    • என் கணவர் ரவீந்திர ஜடேஜா கிரிக்கெட்டுக்காக லண்டன், துபாய், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குச் செல்கிறார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக ரவீந்திர ஜடேஜா உள்ளார். அவரின் மனைவி ரிவாபா ஜடேஜா பாஜக ஆளும் குஜராத்தின் கல்வி அமைச்சராக உள்ளார்.

    இந்நிலையில் துவாரகாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய ரிவாபா, "என் கணவர் ரவீந்திர ஜடேஜா கிரிக்கெட்டுக்காக லண்டன், துபாய், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குச் செல்கிறார். ஆனாலும், இன்றுவரை அவர் எந்தவொரு போதைப் பழக்கத்தையோ அல்லது வேறு எந்த தீய பழக்கத்தையோ தொட்டது கூட கிடையாது.

    அவருக்குத் தனது பொறுப்பு என்னவென்று தெரியும். ஆனால், அணியில் உள்ள மற்ற வீரர்கள் சிலர் இது போன்ற பழக்கங்களில் ஈடுபடுகிறார்கள். அவர்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை" என்று தெரிவித்தார்.

    தனது கணவனை புகழும் அதே வேளையில் ரிவாபா மற்ற வீரர்களை அவமதித்ததாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    Next Story
    ×