search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ravindra Jadeja"

    • அஸ்வினுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது.
    • 1 கோடி ரூபாய் காசோலை ஆகியவை அஸ்வினுக்கு வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது.

    சென்னை:

    இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 4 - 1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. அதில் தர்மசாலாவில் நடந்த கடைசி போட்டியில் இந்தியாவுக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 14-வது வீரர் என்ற சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்தார். அப்போட்டியில் 128 ரன்கள் கொடுத்து 9 விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

    அதன் வாயிலாக உலகிலேயே தனது 100-வது டெஸ்ட் போட்டியில் சிறந்த பவுலிங்கை பதிவு செய்த வீரர் என்ற முத்தையா முரளிதரனின் சாதனையை உடைத்து அஸ்வின் புதிய சாதனை படைத்தார். அத்துடன் உலகிலேயே தன்னுடைய அறிமுகப் போட்டியிலும் 100-வது போட்டியிலும் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையும் அவர் படைத்தார்.

    இந்நிலையில் இந்தியாவுக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் தமிழக வீரராக சாதனை படைத்த அஸ்வினுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் 500 சாதனை விக்கெட்டுகளை பிரதிபலிக்கும் வகையில் 500 தங்க நாணயங்கள் கொண்ட சிறப்பு பரிசு, செங்கோல் மற்றும் 1 கோடி ரூபாய் காசோலை ஆகியவை அஸ்வினுக்கு வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது.

    மேலும் அந்த நிகழ்ச்சியில் அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட் போன்ற ஜாம்பவான்கள் கலந்து கொண்டு அஸ்வினை பாராட்டி பேசினார்கள். அதே நிகழ்ச்சியில் அஸ்வினுடைய பவுலிங் பார்ட்னரான ரவீந்திர ஜடேஜா காணொளியில் வந்து வாழ்த்தி பேசினார். அந்த காணொளியில் ரவீந்திர ஜடேஜா பேசியது பின்வருமாறு:-

    "ஹாய் ஆஷ் அண்ணா. 100 போட்டிகளில் விளையாடி 500 டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த உங்களுக்கு வாழ்த்துகள். உங்களுக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்திய கிரிக்கெட்டுக்காக உங்களுடைய பங்கு அபாரமானதாகும். நீங்கள் தொடர்ந்து நிறைய விக்கெட்டுகள் எடுத்து உங்களுடைய மாஸ்டர் மூளையை என்னுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நானும் சில விக்கெட்டுகளை எடுத்து உங்களைப்போல் ஒரு ஜாம்பவானாக வர முடியும். நாங்கள் ஒரு பெயரையும் பகிர்ந்து கொண்டுள்ளோம். நான் ரவி இந்திரன். நீங்கள் ரவி சந்திரன். மீசை வைத்தவன் இந்திரன் மீசை வைக்காதவன் சந்திரன்" என்று கலகலப்பாக பேசினார்.

    அதாவது தில்லு முல்லு திரைப்படத்தில் மீசை வைத்த கேரக்டரில் வரும் ரஜினிகாந்த் இந்திரனாகவும் மீசை வைக்காத கேரக்டரில் வரும் ரஜினி சந்திரனாகவும் இருப்பார்கள். அதே ஸ்டைலில் மீசை வைக்காத அஸ்வின் சந்திரனாகவும் மீசை வைத்த ஜடேஜா இந்திரனாகவும் இந்திய அணியில் செயல்பட்டு வெற்றிகளில் பங்காற்றி வருவதாக ரவீந்திர ஜடேஜா வித்தியாசமாக பாராட்டினார். குறிப்பாக அதை ஜடேஜா தமிழில் பேசி அஸ்வினை பாராட்டியது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.

    • சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் இந்த சீசனின் முதல் போட்டியில் மோதுகின்றன.
    • புகைப்படம், வீடியோக்கள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகின்றன.

    இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) 2024 டி20 கிரிக்கெட் தொடர் அடுத்த வாரம் துவங்க இருக்கிறது. மார்ச் 22-ம் தேதி நடைபெறும் ஐ.பி.எல். துவக்க விழாவை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இந்த சீசனின் முதல் போட்டியில் விளையாட இருக்கின்றன.

    விரைவில் ஐ.பி.எல். தொடர் துவங்க இருக்கும் நிலையில், ஒவ்வொரு அணியும் அதற்கான பயிற்சியை துவங்கியுள்ளன. இது தொடர்பாக அந்தந்த அணிகள் சார்பில் புகைப்படம், வீடியோக்கள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகின்றன.


     

    அந்த வரிசையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா ஐ.பி.எல். தொடருக்கு ஆயத்தமாகும் வகையில், சென்னை வந்தடைந்தார். இது தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டு இருக்கிறது.

    பதிவில் புகைப்படத்துடன் ரவீந்திர ஜடேஜாவை குறிக்கும் வகையில் 'ராஜா இங்கு கைப்பற்ற இருக்கிறார்,' என தலைப்பிடப்பட்டுள்ளது. இத்துடன் ரவீந்திர ஜடேஜாவின் புகைப்படமும் இணைக்கப்பட்டு உள்ளது. இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கும் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 7-ந் தேதி தர்மசாலாவில் நடைபெறவுள்ளது.
    • ராஞ்சியில் உள்ள டோனியின் வீட்டிற்கு இந்திய வீரரும், சிஎஸ்கே வீரருமான ரவீந்திர ஜடேஜா சென்றுள்ளார்.

    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 5 போட்டிகள் கொண்ட தொடரையும் 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 7-ந் தேதி தர்மசாலாவில் நடைபெறவுள்ளது.

    இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனியின் வீட்டிற்கு இந்திய வீரரும், சிஎஸ்கே வீரருமான ரவீந்திர ஜடேஜா சென்றுள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த பதிவில் ஜாம்பவான் வீட்டின் முன் ஒரு ரசிகனாக போஸ் கொடுப்பது வேடிக்கையாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    • இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டில் 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை இந்திய அணி வீழ்த்தியது.
    • 112 ரன்கள் எடுத்து, 7 விக்கெட்டுகள் கைப்பற்றிய ஜடேஜா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டில் 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை இந்திய அணி வீழ்த்தியது. அதில், 112 ரன்கள் எடுத்து, 7 விக்கெட்டுகள் கைப்பற்றிய ஜடேஜா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    இந்த டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்சில், 112 ரங்களும், 2 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்த ஜடேஜா, 2-வது இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதன் மூலம், தனது சொந்த மாநிலமான குஜராத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்று ஜடேஜா அசத்தியுள்ளார்.

    மேலும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது மிகப்பெரிய வெற்றியை இப்போட்டியில் இந்திய அணி பதிவு செய்துள்ளது. 434 ரன்கள் வைத்தியத்தில் இமாலய வெற்றியை இந்திய அணி பெற்றுள்ளது. இதற்கு முன்பு 2021-ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், 372 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே மிகப்பெரிய வெற்றியாக இருந்தது.

    இந்த வெற்றியை தொடர்ந்து, இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.

    • இந்தியா, இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடந்துவருகிறது.
    • இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ், ஹர்ட்லி ஆகியோரை ரவீந்திர ஜடேஜா வீழ்த்தினார்.

    ராஜ்கோட்:

    இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த இந்தியா ரோகித், ஜடேஜா ஆகியோரின் சதத்தின் மூலம் முதல் இன்னிங்சில் 445 ரன்கள் குவித்தது.

    தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 319 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    இந்தியா சார்பில் சிராஜ் 4 விக்கெட்டும், குல்தீப், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து இந்தியா 126 ரன்கள் முன்னிலை பெற்றதுடன், 2வது இன்னிங்சை ஆடி வருகிறது.

    இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸை ஜடேஜா அவுட் ஆக்கினார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது 281வது விக்கெட்டாக அமைந்தது.

    இந்நிலையில், ஜடேஜா சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய மண்ணில் 200 விக்கெட்டுகளை எடுத்த 5-வது இந்திய பவுலர் என்ற சாதனையை ஜடேஜா நிகழ்த்தியுள்ளார்.

    அனில் கும்ப்ளே 350 விக்கெட்டும், அஸ்வின் 347 விக்கெட்டும், ஹர்பஜன் சிங் 265 விக்கெட்டும், கபில்தேவ் 219 விக்கெட்டும் வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆட்ட நேரம் முடிய 15-20 நிமிடங்கள் இருந்த போது ஜடேஜாவின் தவறால், சர்ப்ராஸ் கான் ரன்-அவுட் ஆனார்.
    • சர்ப்ராஸ் கான் ரன்-அவுட்டில் சிக்கியதால், வீரர்கள் ஓய்வறையில் இருந்த கேப்டன் ரோகித் சர்மா கோபத்தில் தொப்பியை தூக்கி எறிந்தார்.

    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 326 ரன்கள் எடுத்தது.

    இந்த போட்டியில் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்த சர்ப்ராஸ் கான் 62 ரன்னில் ரன் அவுட் ஆனார். ஜடேஜா 99 ரன்னில் இருந்த போது, பந்தை அருகில் தட்டிவிட்டு ஒரு ரன்னுக்கு ஓட முயற்சித்தார். பிறகு வேண்டாம் என்று திரும்பினார். அதற்குள் எதிர்முனையில் நின்ற சர்ப்ராஸ்கான் பாதி தூரம் வந்து விட்டு திரும்புவதற்குள் மார்க்வுட்டால் பிரமாதமாக ரன்-அவுட் செய்யப்பட்டார்.

    ஆட்ட நேரம் முடிய 15-20 நிமிடங்கள் இருந்த போது ஜடேஜாவின் தவறால், சர்ப்ராஸ் கான் ரன்-அவுட்டில் சிக்கியதால், வீரர்கள் ஓய்வறையில் இருந்த கேப்டன் ரோகித் சர்மா கோபத்தில் தொப்பியை தூக்கி எறிந்தார். சர்ப்ராஸ்கான் 62 ரன்களில் (66 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்) வெளியேறினார்.

    இந்த நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிந்ததும் ஜடேஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'சர்ப்ராஸ்கானுக்காக வருந்துகிறேன். இந்த ரன்-அவுட் எனது தவறான அழைப்பால் தான் நடந்தது. அவர் அருமையாக ஆடினார்' என்று கூறியுள்ளார். 'கிரிக்கெட்டில் இது போல் நடப்பது சகஜம் தான். அதனால் இது ஒரு பெரிய விஷயமல்ல' என்று சர்ப்ராஸ் குறிப்பிட்டார்.

    • முதல் டெஸ்ட்டில் ஏற்பட்ட காயத்தால் 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து ஜடேஜா மற்றும் கே.எல். ராகுல் விலகினர்.
    • இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.

    மும்பை:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை நடைபெற உள்ளது.

    முதல் டெஸ்ட்டில் ஏற்பட்ட காயத்தால் 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து ஜடேஜா மற்றும் கே.எல். ராகுல் விலகினர். இந்நிலையில் 3-வது டெஸ்ட் போட்டியிலும் ஜடேஜா விலக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அவருக்கு ஏற்பட்ட காயம் இன்னும் முழுமையாக குணமடையாததால் அவர் 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதில் சிக்கல் எழுந்துள்ளது. இருப்பினும் இது குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வரவில்லை.

    இவரை தவிர மற்றொரு வீரரான முகமது சமி காயம் காரணமாக முதல் 2 போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இவர் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து விலகுவது தகவல் வெளியாகி உள்ளது.

    • டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது.
    • இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து காயம் காரணமாக கேஎல் ராகுல், ஜடேஜா ஆகியோர் விலகி உள்ளனர்.

    இந்தியா, இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நடந்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து காயம் காரணமாக கேஎல் ராகுல், ஜடேஜா ஆகியோர் விலகி உள்ளனர்.

    அவர்களுக்கு பதிலாக சர்பராஸ் கான் மற்றும் இடது கை சுழற்பந்து வீச்சாளர் சௌரப் குமார் மற்றும் ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இந்திய அணியில் இணைந்துள்ளனர்.

    இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 2-ந் தேதி விசாகப்பட்டினத்தில் நடக்கிறது.

    • நாங்கள் ஒரு சிறந்த தொடரை விளையாடினோம்.
    • நாங்கள் அனைவரும் மனம் உடைந்துள்ளோம்.

    2023-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா நேற்று மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 240 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதலில் விக்கெட்டுகளை இழந்தாலும் அதன்பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை தோற்கடித்தது. இதன் மூலம் 6-வது முறையாக உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியது.

    இந்நிலையில் நாங்கள் இன்றும் எப்போதும் உங்களுடன் இருக்கிறோம் என தோல்வியடைந்த இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்தார். அது மட்டுமின்றி இந்திய வீரர்களின் ஓய்வு அறைக்கு நேரில் சென்று அனைவரையும் சந்தித்து பேசினார்.

    இந்த சந்திப்பு குறித்து ஜடேஜா எக்ஸ் தளத்தில் மோடியின் வருகை ஊக்கமளிப்பதாக இருந்தது என தெரிவித்திருந்தார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நாங்கள் ஒரு சிறந்த தொடரை விளையாடினோம். ஆனால் நேற்று குறுகிய காலத்தில் அது முடிந்தது. நாங்கள் அனைவரும் மனம் உடைந்துள்ளோம். ஆனால் எங்கள் மக்களின் ஆதரவு எங்களை தொடர்ந்து முன்னேற துண்டுகிறது. பிரதமர் மோடி எங்கள் ஓய்வு அறைக்கு வருகை தந்தது சிறப்பானது மற்றும் ஊக்கமளிப்பதாக இருந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நடப்பாண்டில் மே மாதம் வரை ஆல்-ரவுண்டர் ஜடேஜா தன்னை அதிகமுறை ஊக்க மருந்து சோதனைக்கு உட்படுத்தி கொண்டுள்ளார்.
    • அவருக்கு அடுத்தப்படியாக தமிழக வீரர் டி.நடராஜன் 2 முறை பரிசோதனை மாதிரிகள் வழங்கியுள்ளார்.

    புதுடெல்லி:

    கிரிக்கெட் வீரர்களுக்கும் ஊக்க மருந்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் மே மாதம் வரை ஆல்-ரவுண்டர் ஜடேஜா தன்னை அதிகமுறை ஊக்க மருந்து சோதனைக்கு உட்படுத்தி கொண்டுள்ளார். அவர் ஜனவரி முதல் மே வரையிலான 5 மாதங்களில் 3 தடவை பரிசோதனைக்கான மாதிரிகள் வழங்கியதாக தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை தெரிவித்துள்ளது. அவருக்கு அடுத்தப்படியாக தமிழக வீரர் டி.நடராஜன் 2 முறை பரிசோதனை மாதிரிகள் வழங்கியுள்ளார்.

    இந்த ஆண்டின் முதல் 5 மாதங்களில் இந்திய கிரிக் கெட் வீரர், வீராங்கனைகள் 55 பேர் தங்களை ஊக்க மருந்து பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டனர். அவர்களிடம் இருந்து மொத்தமாக 58 மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.

    • ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆடும் லெவன் அணியை கேப்டனும், அணி நிர்வாகமும் ஏற்கனவே முடிவு செய்து விட்டது.
    • பெரும்பாலும் இந்திய அணி தோற்கும் போது இது போன்ற விமர்சனங்கள் வருகின்றன.

    தரோபா:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் சில தினங்களுக்கு முன்பு, 'இந்திய அணியில் வீரர்களுக்கு நிறைய பணம் கொட்டும் போது, கூடவே ஈகோவும், கர்வமும் வந்து விடுகிறது. அவர்கள், கிரிக்கெட்டில் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கிறார்கள். சுனில் கவாஸ்கர் போன்ற ஜாம்பவான்கள் உங்கள் அருகில் இருக்கிறார்கள். அவரிடம் ஆலோசனை கேட்பதில் உங்களுக்கு என்ன தயக்கம். அவர் 50 ஆண்டுகள் கிரிக்கெட்டிலேயே வாழ்ந்தவர். அவரிடம் பேசினால் புதுப்புது யோசனை கிடைக்கும்' என்று சரமாரியாக சாடி இருந்தார். ஆனால் எந்த வீரர்களின் பெயரையும் குறிப்பிடவில்லை.

    கபில்தேவின் விமர்சனம் குறித்து இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா பதில் அளித்துள்ளார்.

    அவர் அளித்த பேட்டியில், 'கபில்தேவ் எப்போது இப்படி சொன்னார் என்பது தெரியவில்லை. இது போன்ற விஷயங்களை சமூக வலைதளத்தில் தேடிப் பார்ப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கருத்து உண்டு. முன்னாள் வீரர்கள் தங்களுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்ள உரிமை இருக்கிறது. அதே நேரத்தில் தற்போதைய இந்திய அணியில் திமிர் போக்குடன் நடந்து கொள்ளும் வீரர்கள் யாரும் இல்லை.

    அணியில் ஒவ்வொரு வீரர்களும் தங்களது கிரிக்கெட்டை அனுபவித்து ரசித்து விளையாடுகிறார்கள். இதற்காக கடினமாக உழைக்கிறார்கள். அவர்களுக்கு எதுவும் எளிதாக கிடைத்துவிடவில்லை. அணிக்கு தங்களது 100 சதவீத பங்களிப்பை வழங்குகிறார்கள். பெரும்பாலும் இந்திய அணி தோற்கும் போது இது போன்ற விமர்சனங்கள் வருகின்றன. இது நல்ல வீரர்களை கொண்ட சிறந்தஅணி. நாங்கள் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துகிறோம். அது தான் எங்களது முக்கிய இலக்கே தவிர தனிப்பட்ட விஷயங்களுக்கு இங்கு இடமில்லை' என்றார்.

    மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த ஜடேஜா, 'வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சில வீரர்களை களம் இறக்கி பரிசோதனை முயற்சிகள் மேற்கொண்டாலும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆடும் லெவன் அணியை கேப்டனும், அணி நிர்வாகமும் ஏற்கனவே முடிவு செய்து விட்டது' என்றார்.

    • 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.
    • இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், ஜடேஜா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பிரிட்ஜ்டவுன்:

    இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 23 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், ஜடேஜா 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 115 ரன் வெற்றி இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 22.5 ஓவர்களில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 118 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்த ஆட்டத்தில் ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியன் மூலம் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கபில்தேவின் சாதனையை முறியடித்துள்ளார்.

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சர்வேதேச ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய அணியின் பந்துவீச்சாளராக இருந்த கபில் தேவை பின்னுக்கு தள்ளி தற்போது ஜடேஜா 44 விக்கெட்டை கைப்பற்றி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். 43 விக்கெட்டுகளுடன் கபில் தேவ் 2-வது இடத்திலும் 41 விக்கெட்டுகளுடன் அணில் கும்ப்ளே 3-வது இடத்திலும் உள்ளனர்.

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற புதிய சாதனையை அவர் படைத்துள்ளார்.

    ×