என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஆல் ஏரியாவிலும் ஐயா கில்லிடா... இங்கிலாந்து மண்ணில் புதிய சாதனை படைத்த ஜடேஜா
- இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதிய 4-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
- இந்த டெஸ்ட் தொடரில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதிய 4-வது டெஸ்ட் போட்டி மான் செஸ்டரில் உள்ள ஓல்ட் டிரா போர்ட் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதை தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 669 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 311 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2 ஆவது இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி இறுதியில் 4 விக்கெட்டுக்கு 425 ரன்கள் குவித்தது. ஜடேஜா 107 ரன்னும், வாஷிங்டன் சுந்தர் 101 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதையடுத்து போட்டி டிராவில் முடிந்தது. ஆனாலும் தொடரில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.
இப்போட்டியில் 2 ஆவது இன்னிங்சில் சதம் அடித்து அசத்திய ஜடேஜா 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினார். இதன்மூலம் இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் 1000+ ரன்கள் மற்றும் 30+ விக்கெட்கள் எடுத்த ஒரே இந்திய வீரர் என்ற சாதனையை ஜடேஜா படைத்துள்ளார்.






