என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
- சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் ஸ்மிருதி மந்தனா 4,000 ரன்கள் எடுத்தார்.
விசாகப்பட்டினம்:
இந்தியா, இலங்கை பெண்கள் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.
இந்தப் போட்டியில், இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்நிலையில், சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக ஸ்மிருதி மந்தனா 153 போட்டிகளில் விளையாடி 4,000 ரன்கள் எடுத்துள்ளார்.
இதன்மூலம், சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் 4,000 ரன்கள் குவித்த முதல் இந்திய வீராங்கனை என்ற உலக சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார்.
சர்வதேச அளவில் 2வது வீராங்கனை ஆவார். இதற்கு முன் நியூசிலாந்தைச் சேர்ந்த சுசி பேட்ஸ் மட்டுமே 4000 ரன்களைக் கடந்துள்ளார்.
மேலும், சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் 4000 ரன்கள் அடித்த முதல் ஆசிய வீராங்கனை என்ற வரலாற்றையும் ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார்.
- இப்போட்டியில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட் வீழ்த்தினார்.
- ஸ்டார்க் இந்தத் தொடரில் இதுவரை 22 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார்.
அடிலெய்டு:
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3வது போட்டி அடிலெய்டில் நடைபெற்றது.
இதில் இங்கிலாந்து அணியை 82 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. அத்துடன் ஆஷஸ் டெஸ்ட் தொடரையும் மீண்டும் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டும், 2வது இன்னிங்சில் 3 விக்கெட்டும் வீழ்த்தினார். இந்தத் தொடரில் இதுவரை 22 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார்.
இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 750 விக்கெட் வீழ்த்திய 3வது ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 424 விக்கெட்டும், ஒருநாள் போட்டிகளில் 247 விக்கெட்டும், டி20 போட்டிகளில் 79 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார்.
இந்தப் பட்டியலில் ஷேன் வார்ன் 999 விக்கெட்டும், கிளென் மெக்ராத் 948 விக்கெட்டுகளும் வீழ்த்தி முதல் இரு இடங்களில் உள்ளனர்.
மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் 13வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவரில் 121 ரன்கள் மட்டுமே எடுத்தது.
விசாகப்பட்டினம்:
இந்தியா வந்துள்ள இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
இந்நிலையில், இரு அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 121 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி வீராங்கனைகள் சிறப்பாக பந்து வீசி இலங்கை அணியை கட்டுப்படுத்தினர்.
இதையடுத்து, 122 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ஷபாலி வர்மா 9 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 25 ரன்னும் எடுத்தனர்.
ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்து அரை சதம் கடந்தார்.
இறுதியில், இந்திய பெண்கள் அணி 14.4 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 122 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் டி20 தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. ஜெமிமா 69 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
- பிரசாந்த் வீர் என்ற ஆல் ரவுண்டர் வீரரை சி.எஸ்.கே. அணி 14.20 கோடிக்கு ஏலம் எடுத்தது.
- 19 வயதான கார்த்திக் சர்மாவை சி.எஸ்.கே. அணி 14.20 கோடிக்கு ஏலம் எடுத்தது.
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அபுதாபியில் நடந்தது. இந்த ஏலத்தில் பிரசாந்த் வீர் என்ற (அன்கேப்ட் வீரர்) ஆல் ரவுண்டர் வீரரை சி.எஸ்.கே. அணி 14.20 கோடிக்கு ஏலம் எடுத்தது. ஜடேஜாவிற்கு மாற்றாக பிரசாந்த் வீர் இருப்பர் என்று சி.எஸ்.கே அணி எதிர்பார்த்து இந்த விலையை கொடுத்துள்ளது.
இதனையடுத்து ராஜஸ்தானை சேர்ந்த 19 வயதான கார்த்திக் சர்மா (அன்கேப்ட் வீரர்) அடிப்படை விலை ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ.14.20 கோடிக்கு ஏலம் போனார். இவரையும் சிஎஸ்கே அணி ஏலம் எடுத்தது. இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன 2 அன்கேப்ட் வீரர் வீரர்களையும் சி.எஸ்.கே அணி வாங்கியுள்ளது.
பிரபல சுழற்பந்துவீச்சாளர் ராகுல் சஹாரை ரூ. 5.20 கோடிக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஆல்ரவுண்டர் அகீல் ஹொசைனை ரூ. 2 கோடிக்கும் சி.எஸ்.கே. ஏலம் எடுத்தது. மேலும் சர்ஃபராஸ் கான் ரூ. 75 லட்சம், மேத்யூ ஷார்ட் ரூ. 1.50 கோடி மற்றும் மாட் ஹென்றி ரூ. 2 கோடிக்கும் சிஎஸ்கே அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.
இந்நிலையில், 2026 ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்சின் பிளேயிங் 11 இதுவாக தான் இருக்கும் என்று முன்னாள் சிஎஸ்கே அஸ்வின் கணித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அஸ்வினின் CSK பிளேயிங் 11
ஆயுஷ் மாத்ரே, சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, டெவால்ட் ப்ரீவிஸ், பிரசாந்த் வீர், எம்.எஸ். தோனி, அகீல் ஹொசைன்/மாட் ஹென்றி, கலீல் அகமது, நாதன் எல்லிஸ், நூர் அகமது,
இம்பாக்ட் வீரர்கள் : அன்ஷுல் கம்போஜ் / கார்த்திக் சர்மா / ஷ்ரேயாஸ் கோபால் / சர்ஃப்ராஸ் கான் (சூழ்நிலையின் அடிப்படையில்)
- முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது.
- இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது
இந்தியா வந்துள்ள இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது. இதில் இந்தியா-இலங்கை பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது.
சமீபத்தில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பையை வென்ற பிறகு இந்திய அணி பங்கேற்கும் முதல் போட்டி இதுவாகும்.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ரன் குவிக்க திணறியது. இறுதியில் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு இலங்கை அணி 121 மட்டுமே எடுத்தது. இதனையடுத்து 122 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கவுள்ளது.
- பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் குவித்தது.
- அதிகபட்சமாக சமீர் மின்ஹாஸ் 113 பந்துகளில் 172 ரன்கள் அடித்தார்.
19 வயதுக்குட்பட்ட வருக்கான (இளையோர்) 12-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. ஆயுஸ் மாத்ரே தலைமையிலான இந்திய அணி சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
லீக் போட்டியில் இந்தியாவிடம் மட்டும் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இறுதிப்போட்டி UAE இல் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சமீர் மின்ஹாஸ் 113 பந்துகளில் 172 ரன்கள் அடித்தார்.
இந்திய அணி தரப்பில் தீபேஸ் ரவீந்திரன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து 348 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 26.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 156 ரன்கள் மட்டுமே எடுத்து 191 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்த வெற்றியின் மூலம் 19 வயதுக்குட்பட்ட வருக்கான 12-வது ஆசிய கோப்பையை பாகிஸ்தான் அணி கைப்பற்றியது. 172 ரன்கள் விளாசிய சமீர் மின்ஹாஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். பாகிஸ்தான் U19 ஆசிய கோப்பை வெல்வது இதுவே முதல்முறை ஆகும்.
- நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 575 ரன் குவித்து டிக்ளேர் செய்தது.
- தொடக்க வீரர்களான கான்வே இரட்டை சதமும் (227 ரன்), கேப்டன் டாம் லாதம் சதமும் (137) அடித்தனர்.
நியூசிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மவுண்ட் மாங்கானுவில் நடைபெற்று வருகிறது.
நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 575 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. தொடக்க வீரர்களான கான்வே இரட்டை சதமும் (227 ரன்), கேப்டன் டாம் லாதம் சதமும் (137) அடித்தனர். ரச்சின் ரவீந்திரா 72 ரன் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் ஷீல்ஸ் , ஆண்டர்சன் பிலிப், ஜஸ்டின் கிரீவ்ஸ் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 420 ரன்கள் அடித்து ஆல் அவுட்டானது. இதையடுத்து 2 ஆவது இன்னிங்சில் விளையாடிய நியூசிலாந்து 2 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது. தொடக்க வீரர்களான கான்வே, டாம் லாதம் ஆகிய இருவரும் சதமடித்து அசத்தினர்.
இதனையடுத்து 462 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கியுள்ள வெஸ்ட் இண்டீஸ் 4 ஆம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் அடித்துள்ளது.
கடைசி நாளில் 88 ஓவர்களில் 419 ரன்கள் அடித்தால் வெஸ்ட் இண்டீஸ் இந்த போட்டியில் வெற்றி பெறுமா? என்பதை நாளை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.
இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக இரு இன்னிங்ஸிலும் சதம் விளாசிய முதல் தொடக்க வீரர்கள் என்ற புதிய சாதனையை டாம் லேதம், கான்வே ஜோடி படைத்தது.
இந்த டெஸ்டில் கான்வே (227, 100), லேதம் (137,101) ஆகியோர் சதம் விளாசி இருந்தனர்.
- டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- அதிகபட்சமாக சமீர் மின்ஹாஸ் 113 பந்துகளில் 172 ரன்கள் அடித்தார்.
19 வயதுக்குட்பட்ட வருக்கான (இளையோர்) 12-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. ஆயுஸ் மாத்ரே தலைமையிலான இந்திய அணி சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
லீக் போட்டியில் இந்தியாவிடம் மட்டும் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இறுதிப்போட்டி UAE இல் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சமீர் மின்ஹாஸ் 113 பந்துகளில் 172 ரன்கள் அடித்தார்.
இந்திய அணி தரப்பில் தீபேஸ் ரவீந்திரன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து 348 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கவுள்ளது. இந்த இமாலய இலக்கை துரத்தி இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
- தற்போது உள்ளூர் போட்டியில் தனது செயல் திறனை வெளிப்படுத்தி உள்ளார்.
- இந்தியாவுக்காக டி.ஆர்.எஸ். முடிவை எடுப்பதில் டோனிக்கு பிறகு ஜிதேஷ்தான் சிறந்த விக்கெட் கீப்பராக இருந்தார்.
10-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா, இலங்கையில் நடைபெறுகிறது.
இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. டெஸ்ட், ஒரு நாள் போட்டியில் கேப்டனாக இருக்கும் சுப்மன்கில் அணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.
20 ஓவர் அணியில் துணை கேப்டனாக இருக்கும் அவர் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் தேர்வுக் குழு துணிச்சலான முடிவு எடுத்து அவரை நீக்கி உள்ளது. உள்ளூர் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இஷான் கிஷன் தேர்வு செய்யப்பட்டார். இதேப் போல ரிங்குசிங்குக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியின் தேர்வில் எந்த தவறும் இல்லை என்று முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இஷான்கிஷன் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒருவர் சிறப்பாக செயல்படுவதை பார்த்தால் அவரை தேர்ந்து எடுக்க வேண்டும். இஷான் கிஷன் ஏற்கனவே அணியில் தன்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்பதை நிரூபித்து உள்ளார்.
தற்போது உள்ளூர் போட்டியில் தனது செயல் திறனை வெளிப்படுத்தி உள்ளார். அவருக்காக நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் 2 ஆண்டுகளாக அணிக்கு வெளியே இருந்தார். சையத் முஸ்தாக் அலி கோப்பையை ஜார்க்கண்ட் அணி கைப்பற்ற இஷான் கிஷன் முக்கிய பங்கு வகித்தார்.
ஜிதேஷ்சர்மா அணியில் இருந்து நீக்கப்படுவதற்கு அவர் எந்த தவறும் செய்யவில்லை. இந்தியாவுக்காக டி.ஆர்.எஸ். முடிவை எடுப்பதில் டோனிக்கு பிறகு ஜிதேஷ்தான் சிறந்த விக்கெட் கீப்பராக இருந்தார். அவருக்காக நான் வருத்தப்படுகிறேன். இளம் வீரரான அவர் மீண்டும் உள்ளூர் போட்டியில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும் என்றார்.
- 3வது டெஸ்டின் முதல் இன்னிங்சி் ஆஸ்திரேலியா 371 ரன்கள் குவித்தது.
- 3வது போட்டியில் 82 ரன்கள் வித்தயாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3வது போட்டியில் 82 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3வது போட்டியில் 82 ரன்கள் வித்தயாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்து அணிககு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றி அசத்தியது.
3வது டெஸ்டின் முதல் இன்னிங்சி் ஆஸ்திரேலியா 371 ரன்கள் குவித்த நிலையில் இங்கிலாந்து 286 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
2வது இன்னிங்சில் ஆஸ்திரேலயா 349 ரன் எடுத்தது. 435 ரன் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து 352 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
- சமாரி அட்டப்பட்டு தலைமையிலான இலங்கை அணியில் இளம் வீராங்கனைகள் அதிகம் இடம் பிடித்துள்ளனர்.
- வலுவான இந்திய அணியை சமாளிப்பது இலங்கை அணிக்கு கடும் சவாலாக இருக்கும் எனலாம்.
இந்தியா வந்துள்ள இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது. இதில் இந்தியா-இலங்கை பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று நடக்கிறது.
சமீபத்தில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பையை வென்ற பிறகு இந்திய அணி பங்கேற்கும் முதல் போட்டி இதுவாகும். ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியில் துணை கேப்டன் மந்தனா, தீப்தி ஷர்மா, சினே ராணா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷபாலி வர்மா உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.
சமாரி அட்டப்பட்டு தலைமையிலான இலங்கை அணியில் இளம் வீராங்கனைகள் அதிகம் இடம் பிடித்துள்ளனர். அடுத்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெறும் 20 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகுவதற்கு இரு அணிகளும் இந்த தொடரை சரியாக பயன்படுத்தி கொள்ள தீவிரம் காட்டும். வலுவான இந்திய அணியை சமாளிப்பது இலங்கை அணிக்கு கடும் சவாலாக இருக்கும் எனலாம்.
இவ்விரு அணிகளும் இதுவரை 26 இருபது ஓவர் போட்டியில் நேருக்கு நேர் மோதியிருக்கின்றன. இதில் 20-ல் இந்தியாவும், 5-ல் இலங்கையும் வென்று இருக்கின்றன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- கிரெய்க் எர்வின் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
- ஆல் பார்மட் துணை கேப்டனாக பிரையன் பென்னட் நியமிக்கப்பட்டார்.
ஹராரே:
ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு கூட்டம் ஹராரேவில் நடைபெற்றது. இதில் ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து பல முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதன்படி, அந்த அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான அணிக்கு புதிய கேப்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கிரெய்க் எர்வின் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஜிம்பாப்பே கிரிக்கெட்டின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான அணியின் புதிய கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட் நகரவா நியமிக்கப்பட்டார்.
ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் ஆல் பார்மட் துணை கேப்டனாக பிரையன் பென்னட் நியமிக்கப்பட்டார்.






