என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- ஷபாலி வர்மா 4 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தை பிடித்துள்ளார்.
- ஜெமிமா ரோட்ரிக்ஸ் 9-ல் இருந்து 10-வது இடத்துக்கு சரிந்தார்.
துபாய்:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) பெண்கள் 20 ஓவர் போட்டி வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது.
இதன்படி பேட்டர்களின் தரவரிசையில் டாப்-5 இடங்களில் மாற்றமில்லை. ஆஸ்திரேலியாவின் பெத் மூனி, வெஸ்ட் இண்டீசின் மேத்யூ ஹெய்ன்ஸ், இந்தியாவின் மந்தனா, ஆஸ்திரேலியாவின் தாலியா மெக்ராத், தென்ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட் முதல் 5 இடங்களில் தொடருகின்றனர்.
இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடரில் தொடர்ச்சியாக 3 அரைசதங்கள் அடித்த இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் ஷபாலி வர்மா 4 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தை பிடித்துள்ளார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 9-ல் இருந்து 10-வது இடத்துக்கு சரிந்தார்.
இதன் பந்து வீச்சாளர் தரவரிசையில் இந்திய ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மா முதலிடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலியாவின் அனபெல் சுதர்லாண்ட் 2-வது இடத்திலும், பாகிஸ்தானின் சாதியா இக்பால் 3-வது இடத்திலும் உள்ளனர். இலங்கைக்கு எதிரான 3-வது ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங் 8 இடங்கள் எகிறி 6-வது இடத்தை தென்ஆப்பிரிக்காவின் மிலாபாவுடன் பகிர்ந்துள்ளார். இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரீசரனி 17 இடங்கள் உயர்ந்து 52-வது இடத்தை பெற்றுள்ளார். இலங்கை தொடரில் அறிமுகம் ஆன இந்திய சுழற்பந்து வீச்சாளர் வைஷ்ணவி ஷர்மா 124-வது இடத்தை பிடித்துள்ளார்.
- தேவையற்ற சர்ச்சைகளில் சிக்க எனக்கு விருப்பமில்லை
- வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சூர்யகுமார் யாதவ் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.
இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் குறித்து பாலிவுட் நடிகை குஷி முகர்ஜி கூறியுள்ள கருத்துக்கள் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
நடிகை குஷி முகர்ஜி ஒரு நேர்காணலில் பேசுகையில்,"எனக்கு கிரிக்கெட் வீரர்களுடன் டேட்டிங் செய்வதில் விருப்பமில்லை. பல கிரிக்கெட் வீரர்கள் என்னைத் தொடர்கிறார்கள். சூர்யகுமார் யாதவ் எனக்கு நிறைய மெசேஜ்கள் செய்வார். தேவையற்ற சர்ச்சைகளில் சிக்க எனக்கு விருப்பமில்லை" என்று அவர் கூறியுள்ளார்.
நடிகையின் இந்தக் குற்றச்சாட்டு குறித்து சூர்யகுமார் யாதவ் தரப்பிலிருந்து இதுவரை எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை.
இதற்கிடையில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சூர்யகுமார் யாதவ் தனது மனைவி தேவிஷாவுடன் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.
- 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.
- கேப்டன் சமாரி அட்டப்பட்டு (2), நிலக்ஷிகா சில்வா (3), கவிஷா தில்ஹாரி (3) என முக்கிய வீராங்கனைகள் சொதப்பினர்.
இந்தியா வந்துள்ள இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. நான்கு போட்டிகள் முடிவில் இந்திய அணி வெற்றி பெற்று டி20 தொடரில் 4-0 என கைப்பற்றியது.
இந்நிலையில், இரு அணிகள் இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி கேரளாவின் திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்தது. முன்னணி வீராங்கனைகள் விரைவில் அவுட்டாகினர். 77 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து இந்திய அணி தத்தளித்தது.
கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தனி ஆளாகப் போராடி அரை சதம் கடந்தார். அவர் 43 பந்தில் 68 ரன்கள் குவித்தார். அமன்ஜோத் கவுர் 21 ரன்கள் எடுத்தார்.
கடைசி கட்டத்தில் அருந்ததி ரெட்டி அதிரடியில் மிரட்டி 11 பந்தில் 27 ரன்கள் எடுத்தார்.
இலங்கை சார்பில் சமாரி கவிஷா திஹாரி, ராஷ்மிகா, சமாரி அட்டபட்டு ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.
இலங்கை வீராங்கனை ஹசினி பெரேரா அதிகபட்சமாக 42 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார். இமேஷா துலானி 39 பந்தில் அரை சதம் அடித்து அவுட் ஆனார்.
ஹாசினி பெரேரா 42 பந்தில் 8 பவுண்டரி, 1 சிக்சருடன் 65 ரன்கள் எடுத்தனர்.
கேப்டன் சமாரி அட்டப்பட்டு (2), நிலக்ஷிகா சில்வா (3), கவிஷா தில்ஹாரி (3) என முக்கிய வீராங்கனைகள் சொதப்பினர்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இலங்கை அணி 7 விக்கெட் இழந்து 160 ரன்கள் மட்டுமே எடுத்து 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இதன் மூலம் 5 டி20 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி இலங்கையை ஒயிட்வாஷ் செய்துள்ளது.
- இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் கொல்கத்தாவில் நடந்தது.
- இந்த டெஸ்டின் மூன்றாவது நாளில் இந்தியாவை 30 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா தோற்கடித்தது.
துபாய்:
தென்னாப்பிரிக்க அணி இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளுக்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது.
கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்டின் மூன்றாவது நாளில் இந்திய அணியை 30 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா தோற்கடித்தது.
இந்தப் போட்டி மூன்று நாளில் முடிவுக்கு வந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்தப் போட்டியில் மொத்தம் 8 விக்கெட் வீழ்த்திய தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் ஹார்மர் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால் பலரின் விமர்சனத்திற்கு உள்ளானது.
இந்நிலையில், ஈடன் கார்டன் மைதானம் 'திருப்திகரமானது' (Satisfactory) என ஐசிசி மதிப்பிட்டுள்ளது. இதனால் இந்த மைதானத்திற்கு அபராதம் விதிக்கப்படவில்லை.
- டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 175 ரன்கள் எடுத்தது.
திருவனந்தபுரம்:
இந்தியா வந்துள்ள இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. நான்கு போட்டிகள் முடிவில் இந்திய அணி வெற்றி பெற்று டி20 தொடரில் 4-0 என கைப்பற்றியது.
இந்நிலையில், இரு அணிகள் இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி கேரளாவின் திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்தது. முன்னணி வீராங்கனைகள் விரைவில் அவுட்டாகினர். 77 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து இந்திய அணி தத்தளித்தது.
கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தனி ஆளாகப் போராடி அரை சதம் கடந்தார். அவர் 43 பந்தில் 68 ரன்கள் குவித்தார். அமன்ஜோத் கவுர் 21 ரன்கள் எடுத்தார்.
கடைசி கட்டத்தில் அருந்ததி ரெட்டி அதிரடியில் மிரட்டி 11 பந்தில் 27 ரன்கள் எடுத்தார்.
இலங்கை சார்பில் சமாரி கவிஷா திஹாரி, ராஷ்மிகா, சமாரி அட்டபட்டு ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்குகிறது.
- எலிஸ் பெர்ரி ஆர்சிபி அணியில் இடம் பிடித்திருந்தார்.
- சதர்லேண்டு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம் பிடித்திருந்தார்.
4-வது பெண்கள் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நவி மும்பை மற்றும் வதோதராவில் ஜனவரி 9-ந்தேதி முதல் பிப்ரவரி 5-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.
இத்தொடர் தொடங்க இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பிடித்திருந்த ஆஸ்திரேலியா வீராங்கனை எலிஸ் பெர்ரி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம் பிடித்திரந்த மற்றொரு ஆஸ்திரேலிய வீராங்கனை அன்னாபெல் சதர்லெண்டு ஆகியோர் சொந்த வேலை காரணமாக விலகியுள்ளனர்.
எலிஸ் பெர்ரிக்குப் பதிலாக இந்திய வீராங்கனை சயாலி சத்காரே ஆர்.சி.பி. அணியில் இணைவார் என்றும், சதர்லேண்டுக்குப் பதிலாக ஆஸ்திரேலியா லெக் ஸ்பினனர் அலானா கிங் டெல்லி அணியில் இணைவார் என்று பெண்கள் பிரீமியர் லீக் அறிவித்துள்ளது.
ஆர்.சி.பி. அணி ரூ. 30 லட்சத்திற்கு சயாலி சத்காரேவையும், டெல்லி அணி ரூ. 60 லட்சத்திற்கு அலானா கிங்கையும் ஒப்பந்தம் செய்துள்ளன.
உ.பி. வாரியார்ஸ் அணியில் சார்லி நாட்டிற்குப் பதிலாக இடது கை வேகப்பந்து வீச்சாளர் தாரா நோரிஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
இவர் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை குவாலிபையருக்கான ஆஸ்திரேலியா அணியில் இடம் பிடித்துள்ளார்.
- இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி வரும் ஜனவரி 11-ம் தேதி நடக்கவுள்ளது.
- ஜனவரி 14 மற்றும் 18 ஆம் தேதிகளில் முறையே 2-வது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 5 டி20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இருக்கிறது.
இதில் முதலில் ஒருநாள் தொடரும் அதனை தொடர்ந்து டி20 தொடரும் நடைபெற உள்ளது. இதற்கான முதல் ஒருநாள் போட்டி வரும் ஜனவரி 11-ம் தேதி தொடங்க உள்ளது. ஜனவரி 14 மற்றும் 18 ஆம் தேதிகளில் முறையே 2-வது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.
இந்த நிலையில் 3 ஒருநாள் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல் ஒருநாள் போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை டிசம்பர் 31-ந் தேதி காலை 11 மணி முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2-வது மற்றும் 3-வது ஒருநாள் போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை ஜனவரி 1-ந் தேதி காலை 11 மணி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- 10-வது ஐ.சி.சி. டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7-ந்தேதி தொடங்குகிறது.
- இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
சென்னை:
20 அணிகள் இடையிலான 10-வது ஐ.சி.சி. டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் நடப்பு சாம்பியனான இந்திய அணி 'ஏ' பிரிவில் பாகிஸ்தான், நமீபியா, நெதர்லாந்து மற்றும் அமெரிக்காவுடன் இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த தொடருக்கான 16 வீரர்கள் கொண்ட இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஹாரி ப்ரூக் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் அதிரடி வீரர்களாக லியாம் லிவிங்ஸ்டன், ஜேமி ஸ்மித் ஆகியோருக்கு இடம் இல்லை.
ஹாரி புரூக் (கேப்டன்), ரேஹான் அகமது, ஜோப்ரா ஆர்ச்சர், டாம் பேன்டன், ஜேக்கப் பெதெல், ஜாஸ் பட்லர், பிரைடன் கார்ஸ், சாம் கரண், லியாம் டாசன், பென் டக்கெட், வில் ஜாக்ஸ், ஜேமி ஓவர்டன், ஆதில் ரஷித், ஃபில் சால்ட், ஜோஷ் டங், மற்றும் லூக் வுட்.
- ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் அடுத்த வருடம் நடைபெற உள்ளது.
- அடுத்த ஐ.பி.எல். தொடர் வரும் மார்ச் மாதம் தொடங்க உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) 18 சீசன்களை வெற்றிகரமாக கடந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் டி20 கிரிக்கெட்டை வளர்க்கும் நோக்கில் கடந்த 2008-ம் ஆண்டு இந்த தொடங்கப்பட்ட இந்த தொடர் உலகளாவிய லீக் தொடர்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்திய வீரர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு முன்னணி வீரர்களும் இணைந்து விளையாடுவதால் இந்த சரவெடி கிரிக்கெட்டுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் அமோக வரவேற்பு உண்டு. இதன் 18-வது சீசன் கடந்த வருடம் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இதனையடுத்து இந்த தொடரின் 19-வது சீசன் அடுத்த வருடம் நடைபெற உள்ளது. அதன்படி, அடுத்த ஐ.பி.எல். தொடர் வரும் மார்ச் மாதம் தொடங்க உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இந்த தொடரின் பிளேஆப் சுற்றுகள் பஞ்சாப் நகரில் முல்லான்பூர் ஸ்டேடியத்தில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஐபிஎல் 2025-ல் குவாலிஃபையர் 1 & எலிமினேட்டர் ஆகிய போட்டிகள் முல்லன்பூரில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
- டெஸ்ட் போட்டிக்கு புதிய பயிற்சியாளரை நியமிக்க பி.சி.சி.ஐ. முடிவு செய்ததாக தகவல் வெளியானது.
- இதற்காக முன்னாள் வீரர் வி.வி.எஸ். லட்சுமணனை பி.சி.சி.ஐ. அணுகியதாகவும் கூறப்பட்டது.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் கடந்த ஆண்டு ஜூலை 10-ந்தேதி நியமிக்கப்பட்டார். 2027-ல் நடைபெற உள்ள ஐ.சி.சி. ஒருநாள் உலக கோப்பை வரை அவரது பதவிக்காலம் இருக்கிறது.
கம்பீரின் பயிற்சியின் கீழ் இந்திய அணி ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சாம்பியன்ஸ் டிராபி, ஆசிய கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றது.
ஆனால் டெஸ்டில் இந்திய அணி பெரிய அளவில் வெற்றிகளை பெறவில்லை. சொந்த மண்ணில் நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்காவிடம் முழுமையாக டெஸ்ட் தொடரை இழந்தது. இதனால் அவர் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார்.
இதனால் டெஸ்ட் போட்டிக்கு புதிய பயிற்சியாளரை நியமிக்க பி.சி.சி.ஐ. (இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரியம்) முடிவு செய்ததாக தகவல் வெளியானது. இதற்காக முன்னாள் வீரர் வி.வி.எஸ். லட்சுமணனை பி.சி.சி.ஐ. அணுகியதாகவும் கூறப்பட்டது. இதை கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே நிராகரித்து இருந்தது.
இந்த நிலையில் பயிற்சியாளர் பதவியில் இருந்து கம்பீர் நீக்கம் இல்லை என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பி.சி.சி.ஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறியதாவது:-
பயிற்சியாளர் கவுதம் கம்பீர் குறித்து பரவி வரும் யூகங்கள் குறித்து நான் மிக தெளிவாக கூற விரும்புகிறேன். இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கம்பீரை நீக்கவோ அல்லது புதிய பயிற்சியாளரை நியமிக்கவோ எந்த திட்டமும் இல்லை என்பதை பி.சி.சி.ஐ செயலாளர் (தேவஜித் சைகியா) மிகத் தெளிவாக தெரிவித்துவிட்டார்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- முதல் 4 ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 4-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
- தமிழகத்தை சேர்ந்த விக்கெட் கீப்பர் 17 வயதான கமலினிக்கு மட்டும் களம் காணும் வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை.
திருவனந்தபுரம்:
இந்தியாவுக்கு வந்துள்ள சமாரி அட்டப்பட்டு தலைமையிலான இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் 4 ஆட்டங்களிலும் இந்திய அணி வரிசையாக வெற்றி பெற்று தொடரில் 4-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா- இலங்கை மோதும் 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி திருவனந்தபுத்தில் இன்று நடக்கிறது.
முதல் 3 ஆட்டங்களிலும் இலங்கையை 130 ரன்னுக்குள் சுருட்டிய இந்தியா அந்த இலக்கை 15 ஓவருக்குள் எட்டிப்பிடித்து அசத்தியது. ஆனால் கடந்த ஆட்டம் ஓரளவு சவால் நிறைந்ததாக காணப்பட்டது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி ஸ்மிர்தி மந்தனா, ஷபாலி வர்மா ஆகியோரது அரைசதத்தால் 221 ரன்கள் குவித்தது. 20 ஓவர் போட்டியில் இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். பதிலுக்கு இலங்கை அணி 191 ரன்கள் எடுத்து நெருங்கியது. இன்றைய ஆட்டத்திலும் அத்தகைய சவாலை எதிர்பார்க்கலாம்.
இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறுகையில், 'உலகக் கோப்பையை வென்ற பிறகு எங்களது தரத்தை இன்னும் உயர்த்த வேண்டும். 20 ஓவர் கிரிக்கெட்டில் மேலும் ஆக்ரோஷமாக விளையாட வேண்டும் என விவாதித்தோம். அந்த வகையில் இது எங்கள் அனைவருக்கும் சிறந்த தொடராக அமைந்துள்ளது.' என்றார். தொடரை முழுமையாக வெல்லும் உத்வேகத்துடன் உள்ள இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த விக்கெட் கீப்பர் 17 வயதான கமலினிக்கு மட்டும் களம் காணும் வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை. இது சம்பிரதாய ஆட்டம் என்பதால் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம்.
இலங்கை அணியை பொறுத்தவரை ஆறுதல் வெற்றியோடு தாயகம் திரும்ப முயற்சிக்கும். அந்த அணியின் கேப்டன் சமாரி அட்டப்பட்டு கூறுகையில், '4-வது ஆட்டத்தில் பேட்டிங்கில் முன்னேற்றம் கண்டிருந்தோம். ஆனாலும் இன்னும் அதிரடியான ஷாட்டுகளை விளாசுவதில் முன்னேற்றம் தேவை. எங்களது பவுலர்கள் நன்றாக வீசவில்லை. ஆனால் அவர்கள் இளம் மற்றும் அனுபவமில்லாதவர்கள். இந்த தொடரில் இருந்து அவர்கள் நிறைய கற்றுக்கொள்வார்கள். கடைசி ஆட்டத்தில் தங்களது மிகச்சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன்' என்றார்.
இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் புதுச்சேரி- ஜார்கண்ட் அணிகள் மோதின.
- இந்த போட்டியில் ஜார்கண்ட் அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் அகமதாபாத்தில் (ஏ பிரிவு) நடந்த புதுச்சேரிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஜார்கண்ட் 7 விக்கெட்டுக்கு 368 ரன்கள் குவித்தது.
கேப்டன் குமார் குஷாக்ரா 105 ரன்களும், அனுகுல் ராய் 98 ரன்களும் எடுத்தனர். இமாலய இலக்கை நோக்கி ஆடிய புதுச்சேரி அணி 41.4 ஓவர்களில் 235 ரன்னில் அடங்கி தோற்றது.
முன்னதாக புதுச்சேரி கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான 29 வயதான அமன் கான் 10 ஓவர்களில் 123 ரன்களை வாரி வழங்கி ஒரு விக்கெட் மட்டுமே எடுத்தார். லிஸ்ட் ஏ கிரிக்கெட் வரலாற்றில் (சர்வதேச மற்றும் உள்ளுர் ஒருநாள் போட்டிகளை சேர்த்து) ஒரு பவுலரின் மோசமான பந்து வீச்சாக இது பதிவாகியுள்ளது.
இதற்கு முன்பு இதே தொடரில் பீகாருக்கு எதிரான ஆட்டத்தில் அருணாசலபிரதேச பவுலர் மிபோம் மோசு 116 ரன்களை வழங்கியதே மோசமான பவுலிங் சாதனையாக இருந்தது.






