search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "finals"

    உலக கோப்பை கால்பந்து மற்றும் விம்பிள்டன் ஆண்கள் ஒற்றையர் இறுதி போட்டி என இரண்டு இறுதி போட்டிகள் விருந்து படைக்க உள்ளதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். #Finals #WorldCupFootball #WimbletonTennis #Fans
    லண்டன்:

    உலக கோப்பை கால்பந்து போட்டியின் லீக் போட்டிகள் மற்றும் நாக் அவுட் சுற்று போட்டிகள் முடிந்துள்ளன. இன்று முதல் காலிறுதி போட்டிகள் நடைபெற உள்ளன. இதையடுத்து அரையிறுதி போட்டிகளும், அடுத்த வாரம் இறுதி போட்டியும் நடக்கவுள்ளது.

    இதேபோல், பிரபலமான டென்னிஸ் போட்டியான விம்பிள்ட்ன் டென்னிஸ் போட்டிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன. இதன் இறுதிப் போட்டி அடுத்த வாரம் இறுதியில் நடைபெறவுள்ளது.

    இந்த மாபெரும் இரண்டு இறுதி போட்டிகளும் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் மிகையில்லை.



    இந்த இறுதி போட்டிகளை ஒளிபரப்ப அனைத்து தொலைக்காட்சிகளும் முழு வீச்சில் ஏற்பாடுகளை தயார் செய்து  வருகின்றன. பி.பி.சி. தொலைக்காட்சி நிறுவனமும் தனது நிகழ்ச்சிகளை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளோம் என தெரிவித்துள்ளது.

    விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டி குறைந்த பட்சம் 2 மணி 45 நிமிடங்கள் நடைபெறும். உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி போட்டியும் குறைந்தது 2 மணி நேரம் நடைபெறும் என்பதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    ரஷியாவில் உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற்றாலும், லண்டனில் வசிப்பவர்கள் தங்களது இங்கிலாந்து அணி இறுதி போட்டியில் நுழைய வேண்டும் என்பதற்காக காத்திருக்கின்றனர்.

    எது எப்படியோ, இரண்டு மெகா இறுதிப் போட்டிகளை பார்த்து ரசிப்பதற்கு ரசிகர்கள் தயாராக உள்ளனர். #Finals #WorldCupFootball #WimbletonTennis #Fans
    ஜெர்மனியில் நடைபெற்ற ஹாலே ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் ரோஜர் பெடரரை வீழ்த்தி குரோசியா வீரர் போர்னா கோரிச் சாம்பியன் பட்டம் வென்றார். #HalleOpen2018 #BornaCoric #RogerFederer

    ஜெர்மனியில் ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் போட்டிகள் நடைபெற்று வந்தது. இன்று ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் முதல் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் - குரோசியாவின் போர்னா கோரிச்சை எதிர்கொண்டார். 

    இந்த போட்டியின் முதல் செட்டை 7-6 (8-6) என கோரிச் போராடி கைப்பற்றினார். இரண்டாவது செட்டை பெடரர், 6-3 என கைப்பற்றினார். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்பு அதிகரித்தது.

    மூன்றாவது செட்டில் கோரிச் அதிரடியாக விளையாடினர். இந்த செட்டை அதிரடியாக விளையாடிய கோரிச், 6-2 என எளிதாக கைப்பற்றினார். இதன்மூலம் 7-6 (8-6), 3-6, 6-2 என்ற செட்களில் வெற்றி பெற்ற கோரிச் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். #HalleOpen2018 #BornaCoric #RogerFederer
    ஜெர்மனியில் நடைபெற்றுவரும் ஹாலே ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் முன்னேறியுள்ளார். #HalleOpen2018 #RogerFederer

    ஜெர்மனியில் ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்று ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் அரையிறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் - அமெரிக்காவின் டென்னிஸ் குட்லாவை எதிர்கொண்டார். 

    இதன் முதல் செட்டை பெடரர் 7-6 (7-1) என போராடி கைப்பற்றினார். இரண்டாவது செட்டும் விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆனால் இந்த செட்டையும் பெடரர் 7-5 என கைப்பற்றினார். இதன்மூலம் 7-6 (7-1), 7-5 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற பெடரர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    தொடர்ந்து நடைபெற உள்ள மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் ஸ்பெயினின் படிஸ்டா ஆகுட், குரோசியாவின் போர்னா கோரிக் ஆகியோர் பலப்பரீட்சை செய்கின்றனர். இந்த போட்டியில் வெற்றி பெறுபவர் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ரோஜர் பெடரரை எதிர்கொள்வார். #HalleOpen2018 #RogerFederer
    மும்பையில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை அணியின் வெற்றிக்கு இன்னும் 12 ஓவர்களில் 123 ரன்கள் தேவைப்படுகிறது. #IPL2018 #VIVOIPL #CSKvSRH #Finals

    மும்பை:

    11-வது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று மாலை 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் விளையாடி வருகிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் டோனி, பந்துவீச்சு தேர்வு செய்தார். 

    இதையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. வில்லியம்சன் 47 ரன்களும், யூசுப் பதான் 45 ரன்களும் எடுத்தது. இதன்மூலம்  சென்னை அணிக்கு 179 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத். 



    இதையடுத்து சென்னை அணி பேட்டிங் செய்தது. வாட்சன், டுபிளெசிஸ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரை புவனேஷ்வர் குமார், வாட்சனுக்கு மெய்டனாக வீசினார். 2-வது ஓவரை வீசிய சந்தீப் சர்மா 5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். மீண்டும் 3-வது ஓவரை வீசிய புவனேஷ்வர் குமார் அந்த ஓவரில் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 

    4-வது ஓவரை சந்தீப் சர்மா வீச, அந்த ஓவரின் கடைசி பந்தில் டுபிளெசிஸ் கேட்சாகி வெளியேறினார். அவர் 10 ரன்கள் எடுத்திருந்தார். அவரைத்தொடர்ந்து ரெய்னா களமிறங்கினார். 5-வது ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். அந்த ஓவரில் சென்னை அணிக்கு 3 ரன்கள் மட்டுமே கிடைத்தது. 6-வது ஓவர் சந்தீப் சர்மாவிடம் கொடுக்கப்பட்டது. அந்த ஓவரில் சென்னை அணி 15 ரன்கள் எடுத்தது. இதனால் 6 ஓவர்கள் முடிவில் சென்னை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்தது.



    7-வது ஓவரை சித்தார்த் கவுல் வீசினார். அந்த ஓவரில் சென்னை அணி அதிரடியாக விளையாடி 16 ரன்கள் எடுத்தது. 8 ஓவர்கள் முடிவில் சென்னை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் எடுத்துள்ளது. வாட்சன் 28 ரன்களுடனும், ரெய்னா 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். சென்னை அணியின் வெற்றிக்கு இன்னும் 12 ஓவர்களில் 123 ரன்கள் தேவைப்படுகிறது. #IPL2018 #VIVOIPL #CSKvSRH #Finals
    மும்பையில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி, சென்னை அணியின் வெற்றிக்கு 179 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. #IPL2018 #VIVOIPL #CSKvSRH #Finals

    மும்பை:

    11-வது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று மாலை 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் விளையாடி வருகிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் டோனி,  பந்துவீச்சு தேர்வு செய்தார். 

    இதையடுத்து ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்ரீவட்ஸ் கோஸ்வாமி, ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரை சென்னை அணியின் தீபக் சஹார் வீசினார். 2-வது ஓவரை நிகிடி வீச, அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் கோஸ்வாமி 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து கேப்டன் வில்லியம்சன் களமிறங்கினார். 


    4-வது ஓவரை நிகிடி வில்லியம்சனுக்கும் மேய்டனாக வீசினார். 5-வது ஓவரை சஹார் வீச, அந்த ஓவரில் ஐதராபாத் அணிக்கு 13 ரன்கள் கிடைத்தது. ஆறாவது ஓவரை சர்துல் தாகூர் வீச அந்த ஓவரில் ஐதராபாத் அணிக்கு 12 ரன்கள் கிடைத்தது.  ஏழாவது ஓவரை கரண் சர்மா வீசினார். அந்த ஓவரில் ஐதராபாத் அணியினர் 9 ரன்கள் எடுத்தனர். 8-வது ஓவரை வீசிய பிராவோ 11 ரன்களை விட்டுக்கொடுத்தார். 

    9-வது ஓவரை ஜடேஜா வீசினார். அந்த ஓவரின் 3-வது பந்தில் தவான் கிளீன் போல்டாகி வெளியேறினார். அவர் 25 பந்தில் 26 ரன்கள் எடுத்தார். அதைத்தொடர்ந்து ஷகிப்-அல்-ஹசன் களமிறங்கினார். அவர் சந்தித்த முதல் பந்தையே பவுண்டரிக்கு அனுப்பினார். அந்த ஓவரில் ஜடேஜா 8 ரன்களை விட்டுக்கொடுத்தார். 



    10-வது ஓவரில் சஹார் 3 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். சஹார் 4 ஓவர்கள் வீசி விக்கெட் ஏதும் எடுக்காமல் 25 ரன்களை விட்டுக்கொடுத்தார். ஐதராபாத் அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் எடுத்திருந்தது. 

    11-வது ஓவரை ஜடேஜா வீசினார். அந்த ஒவரில் ஐதராபாத் அணிக்கு 17 ரன்கள் கிடைத்தது. 12-வது ஓவரை பிராவோ வீசினார். ஐதராபாத் அணியின் ஸ்கோர் 11.5 ஓவரில் 100-ஐ எட்டியது. அந்த ஓவரில் பிராவோ 11 ரன்களை விட்டுக்கொடுத்தார். 13-வது ஓவரை கரண் சர்மா வீச, அந்த ஓவரின் முதல் பந்திலேயே வில்லியம்சன் ஸ்டெம்பிங் ஆகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து யூசுப் பதான் களமிறங்கினார். 13-வது ஓவரில் ஐதராபாத் அணிக்கு 7 ரன்கள் கிடைத்தது. 



    16-வது ஓவரை பிராவோ வீசினார். அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் ஷகிப் அல் ஹசன், ரெய்னாவிடம் கேட்சாகி வெளியேறினார். அவர் 15 பந்தில் 23 ரன்கள் எடுத்தார். அவரைத்தொடர்ந்து தீபக் ஹூடா களமிறங்கினார். 17-வது ஓவரை நிகிடி வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தில் தீபக் ஹூடா ஆட்டமிழந்தார். அதன்பின் கார்லோஸ் பிரத்வெய்ட் இறங்கினார். 18-வது ஓவரை பிராவோ வீசினார். அந்த ஓவரில் ஐதராபாத் அணிக்கு 14 ரன்கள் கிடைத்தது. பிராவோ 4 ஓவர் வீசி 48 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.



    கடைசி ஓவரை சர்துல் தாகூர் வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தில் பிரத்வெய்ட் 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் சென்னை அணிக்கு 179 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத். யூசுப் பதான் 45 ரன்களுடன் களத்தில் இருந்தனர். #IPL2018 #VIVOIPL #CSKvSRH #Finals

    மும்பையில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்துவரும் ஐதராபாத் அணி 6 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 42 ரன்கள் எடுத்துள்ளது. #IPL2018 #VIVOIPL #CSKvSRH #Finals

    மும்பை:

    11-வது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று மாலை 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் விளையாடி வருகிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் டோனி, பேட்டிங் தேர்வு செய்தார். 

    இதையடுத்து ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்ரீவட்ஸ் கோஸ்வாமி, ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரை சென்னை அணியின் தீபக் சஹார் வீசினார். அந்த ஓவரில் ஐதராபாத் அணிக்கு 6 ரன்கள் கிடைத்தது. 

    இரண்டாவது ஓவரை நிகிடி வீச, அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் கோஸ்வாமி 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து கேப்டன் வில்லியம்சன் களமிறங்கினார். 2 ஒவர் முடிவில் ஐதராபாத் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 8 ரன்கள் எடுத்தது.

    3-வது ஓவரை மீண்டும் சஹார் வீசீனார். அந்த ஓவரில் அவர் 3 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். 4-வது ஓவரை நிகிடி வில்லியம்சனுக்கும் மேய்டனாக வீசினார். 5-வது ஓவரை சஹார் வீச, அந்த ஓவரில் வில்லியம்சன் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்தார். அந்த ஓவரில் ஐதராபாத் அணிக்கு 13 ரன்கள் கிடைத்தது.

    ஆறாவது ஓவரை சர்துல் தாகூர் வீச அந்த ஓவரில் ஐதராபாத் அணிக்கு 12 ரன்கள் கிடைத்தது. ஐதராபாத் அணி 6 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு  ரன்கள் எடுத்துள்ளது. தவான் 18 ரன்களுடனும், வில்லியம்சன் 17 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். #IPL2018 #VIVOIPL #CSKvSRH #Finals
    ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் இன்று மோதுகின்றனர்.#IPL2018 #CSKvSRH #CSK #SRH

    மும்பை:

    11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது.

    இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்- வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

    ஐ.பி.எல். கோப்பை யாருக்கு?

    இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் ஐ.பி.எல். கோப்பையை வெல்லப்போவது யார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் 3-வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை வெல்லும் ஆர்வத்துடனும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் 2-வது தடவையாக கோப்பையை வெல்லும் ஆர்வத்துடனும் உள்ளன. சென்னை அணி 2010, 2011-ம் ஆண்டுகளிலும் , ஐதராபாத் 2016-ம் ஆண்டும் சாம்பியன் பட்டம் பெற்று இருந்தன.

    சென்னை அணியின் பேட்டிங்கும், ஐதராபாத் அணியின் பந்துவீச்சுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும். சென்னை அணியின் பலமே பேட்டிங் தான். கேப்டன் டோனி, அம்பதி ராயுடு, வாட்சன், ரெய்னா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    ரஷீத்கான், சித்தார்த் கவூல், புவனேஷ்வர்குமார் ஆகியோர் ஐதராபாத் அணியின் பந்துவீச்சில் முத்திரை பதிக்க கூடிய வர்கள்.

    சென்னை அணியில் பந்துவீச்சில் தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீரர் நிகிடி மிகவும் நல்ல நிலையில் உள்ளார். தீபக் சாஹர், ‌ஷர்துல் தாகூர் ஆகியோரும் சிறப்பாக வீசக்கூடியவர்கள். ஐதராபாத் அணியின் பேட்டிங்கில் கேப்டன் வில்லியம்சன், தவான், மனீஷ்பாண்டே, யூசுப்பதான் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.


    இரு அணியிலும் விளையாடலாம் என்று எதிர்பார்க்கப்படும் 11 வீரர்கள் விவரம்:-

    சென்னை சூப்பர் கிங்ஸ்: டோனி (கேப்டன்), வாட்சன், டுபெலிசிஸ், ரெய்னா, அம்பதி ராயுடு, பிராவோ, ஜடேஜா, தீபக் சாஹர், ஹர்பஜன் சிங் அல்லது கரண் சர்மா, ‌ஷர்துல் தாகூர், நிகிடி.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத்: கேன் வில்லியம்சன் (கேப்டன்), விர்த்திமான் சஹா, ஷிகர் தவான், சகீப்-அல்-ஹசன், தீபக் ஹூடா, யூசுப் பதான், பிரத்வெயிட், ரஷித் கான், புவனேஷ்வர் குமார், சித்தார்த் கவூல், சந்தீப் சர்மா அல்லது கலீல் அகமது அல்லது பாசில் தம்பி.

    ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள ஆறு இறுதிப்போட்டிகள் குறித்து காண்போம். #IPL2018 #VIVOIPL #ChennaiSuperKings

    ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டிகள் கடந்த 2008-ம் ஆண்டு முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடந்த 10 சீசன் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 முறை பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. மற்ற இரண்டு முறை சென்னை அணிக்கு, ஐபிஎல் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டதால் பிளே-ஆப் சுற்றில் சென்னை அணி இல்லாமல் இருந்தது. 

    இந்நிலையில், இந்தாண்டு நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் புள்ளிகள் அடிப்படையில் இரண்டாவது இடம் பிடித்த சென்னை அணி முதல் பிளே-ஆப் போட்டியில் வெற்றி பெற்று முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இது சென்னை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவது ஏழாவது முறையகும். இதுவரை ஐபிஎல்லில் 9 முறை விளையாடியுள்ள சிஎஸ்கே இரண்டு முறை மட்டுமே இறுதிப் போட்டியில் விளையாடவில்லை.

    சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை விளையாடியுள்ள இறுதிப் போட்டிகள் குறித்து காணலாம்:

    முதல் சீசன் (2008):

    2008-ம் ஆண்டு நடைபெற்ற முதல் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய அணிகள் அரை இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றன. 

    அரையிறுதியில் பஞ்சாப் அணியை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இறுதிப்போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்கள் குவித்தது. சுரேஷ் ரெய்னா அதிகபட்சமாக 30 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். யூசுப் பதான் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

    தொடர்ந்து பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 41 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஆனால் யூசூப் பதான் 39 பந்துகளில் மூன்று பவுண்டரிகள், நான்கு சிக்ஸர்கள் உட்பட 56 ரன்கள் குவித்தார். இறுதி ஓவரில் எட்டு ரன்கள் தேவை என்ற நிலையில் பாலாஜி வீசிய அந்த ஓவரின் கடைசி பந்தில் ராஜஸ்தான் கேப்டன் ஷேன் வார்னே பவுண்டரி அடித்து  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வெற்றி பெற செய்தார். இதன்மூலம் முதல் ஐபிஎல் கோப்பையை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கைப்பற்றியது.


     2008 சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ்

    2009-ம் ஆண்டு சென்னை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறவில்லை.


    மூன்றாவது சீசன் (2010):

    மூன்றாவது ஐபிஎல் சீசனில் லீக் சுற்று முடிவில் நான்கு அணிகள் 14 புள்ளிகளை எடுத்திருந்தன. ஆனால் பெங்களூரு அணியும், சென்னை அணியும் ரன் ரேட் அடிப்படையில் அரை இறுதிக்கு முன்னேறின. முன்னதாக மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெக்கான் சார்ஜர்ஸ் ஐதராபாத் அணிகள் அரை இறுதிக்குத் தகுதி பெற்றிருந்தன.

    சென்னை அணி டெக்கான் சார்ஜர்ஸ் அணியை எளிதாக வென்று இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதியது. முதலில் ஆடிய சென்னை அணி, மும்பை அணிக்கு 169 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. சுரேஷ் ரெய்னா 35 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார்.

    தொடர்ந்து விளையாடிய மும்பை அணியால் 149 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் வெற்றி பெற்ற சென்னை அணி, முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது.


    2010 சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ்

    நான்காவது சீசன் (2011):

    4-வது ஐபிஎல் தொடரின் லீக் சுற்றின் முடிவில் சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா ஆகிய அணிகள் பிளே-ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றன. பிளே-ஆப் சுற்றில் சென்னை அணி பெங்களூரை வென்று நேரடியாக இறுதிப்போட்டியில் நுழைந்தது. சென்னை எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் சென்னை அணி மீண்டும் பெங்களூரு அணியைச் சந்தித்தது.

    முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி முரளி விஜய் மற்றும் மைக் ஹசியின் சிறப்பான ஆட்டத்தால் 205 ரன்கள் குவித்தது. முரளி விஜய் 52 பந்தில் 95 ரன்கள் எடுத்தார். பெங்களூரு அணியில் யாரும் நிலைத்து நின்று விளையாடவில்லை. இதனால் 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ், சொந்த மண்ணில் மீண்டும் கோப்பையை கைப்பற்றியது. 


    2011 சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ்

    ஐந்தாவது சீசன் (2012):

    5-வது சீசன் தொடரில் லீக் சுற்றில் பெங்களூரு அணியும் சென்னை அணியும் தலா 17 புள்ளிகளை எடுத்திருந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் சென்னை நான்காவது அணியாக பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைந்தது. மும்பை, டெல்லி, கொல்கத்தா அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறிய மற்ற மூன்று அணிகளாகும். 

    பிளே-ஆப் எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியை 38 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வென்றது. பிளே-ஆப் குவாலிபையர்-2 சுற்றில் டெல்லியை 86 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற சிஎஸ்கே இறுதிப் போட்டியில் கொல்கத்தாவைச் சந்தித்தது. இதன்மூலம் சென்னை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதில் ஹாட்ரிக் சாதனை படைத்தது.

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் கொல்கத்தாவுக்கு 191 ரன்களை இலக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயித்தது. சென்னை அணி தரப்பில் ரெய்னா 38 பந்துகளில் 73 ரன்கள் குவித்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் கம்பீர் 2 ரன்களில் அவுட் ஆனாலும் மற்றொரு தொடக்க வீரரான பிஸ்லா 48 பந்துகளில் 89 ரன்கள் குவித்தார். காலிஸ் 49 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தார்.

    இறுதி ஓவரில் ஒன்பது ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பிராவோ பந்து வீச மனோஜ் திவாரி இரண்டு பவுண்டரிகளை அடித்து  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதல் ஐபிஎல் கோப்பையை கைப்பற்ற உதவினார்.


    2012 சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

    ஆறாவது சீசன் (2013):

    இந்த சீசனில் லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் சென்னை அணி முதலிடம் பிடித்தது. மும்பை , ராஜஸ்தான், ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகளும் பிளே-ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றிருந்தன.

    முதல் குவாலிபையர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை, சென்னை 48 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஆனால் மும்பை அணி இராண்டாவது குவாலிபையர் போட்டியில் வெற்றி பெற்று, மீண்டும் சிஎஸ்கே அணியை இறுதிப் போட்டியில் சந்தித்தது.

    முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி பொல்லார்டின் அதிரடி ஆட்டத்தால் 148 ரன்களை குவித்தது. சென்னை அணியில் தோனியைத் தவிர மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இதனால் 20 ஓவர்களில் சென்னை அணியால் 125 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கேப்டன் தோனி 45 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார். இப்போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம்  சென்னை அணி தொடர்ந்து இரு இறுதிப் போட்டிகளில் தோல்வியடைந்தது.


    2013 சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்

    2014-ம் ஆண்டு சென்னை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறவில்லை.


    எட்டாவது சீசன் (2015):

    இந்த சீசனிலும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தோடு குவாலிபையர் சுற்றுக்குள் நுழைந்தது சென்னை அணி. மும்பை, பெங்களூரு, ராஜஸ்தான் அணிகளும் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறின.

    முதல் குவாலிபையர் போட்டியில் மும்பை அணியிடம் 25 வித்தியாசத்தில் சென்னை அணி தோற்றது. இரண்டாவது குவாலிபயர் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று சென்னை அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

    இறுதிப்போட்டியில் சென்னை அணியின் வெற்றிக்கு 203 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஸ்மித் தவிர சென்னை அணியில் யாரும் சரியாக பேட்டிங் செய்யவில்லை. இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸால் 161 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.  இரண்டாவது முறையாக மும்பை அணியிடம் இறுதிப் போட்டியில் தோற்று கோப்பையை தவறவிட்டது சென்னை அணி.


    2015 சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்

    அடுத்த இரு சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாட தடை விதிக்கப்பட்டதால், சென்னை அணி பங்குபெறவில்லை.


    11-வது சீசன் (2018):

    இதையடுத்து இந்தாண்டு மீண்டும் களமிறங்கிய சென்னை அணி சிறப்பாக விளையாடி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்து, பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இதுதவிர ஐதராபாத், கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகளும் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

    முதல் பிளே-ஆப் போட்டியில் சென்னை அணி ஐதராபாத்தை வீழ்த்தி 9-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.  இதுவரை விளையாடிய ஆறு இறுதிப் போட்டிகளில் சென்னை அணி நான்கு முறை தோல்வி அடைந்துள்ளது. இதன் மூலம் அதிக முறை இறுதிப் போட்டியில் தோற்ற அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது. இந்நிலையில் நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் ஐதராபாத் சன் ரைஸர்ஸ் அணியை எதிர்கொள்கிறது சென்னை அணி.



    கேன் வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் ஏற்கனவே மூன்று முறை தோற்கடித்துள்ளது. இதற்கு ஐதராபாத் பதிலடி கொடுக்குமா அல்லது சென்னை அணி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக கோப்பையை வெல்லுமா என்பது நாளை தெரிந்துவிடும். #IPL2018 #VIVOIPL #ChennaiSuperKings
    ×