search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை சூப்பர் கிங்ஸ்"

    • தீபக் சஹாரை ரூ.9.25 கோடி கொடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது.
    • தீபக் சஹாரின் அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

    ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் நடைபெற்றது.

    இதில், சென்னை அணியின் முன்னாள் வேகப்பந்து பந்துவீச்சாளர் தீபக் சஹாரை ரூ.9.25 கோடி கொடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. இவரின் அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் ஜெர்சியில் தீபக் சஹார் இருக்கும் புகைப்படங்களை மும்பை இந்தியன்ஸ் அணி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த ஆண்டு மெகா ஏலத்தில் சமீர் ரிஸ்வியை சிஎஸ்கே அணி 8.40 கோடி ரூபாய்க்கு எடுத்தது.
    • 6 போட்டிகளில் 728 ரன்கள் குவித்து அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பட்டியலில் முதல் இடத்தில் ரிஸ்வி உள்ளார்.

    இந்தியாவில் தற்போது 23 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இது குறிப்பிட்ட வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டி என்பதால் இது ஒரு அங்கீகரிக்கப்படாத போட்டியாகவே அமைகிறது.

    இந்நிலையில் நேற்று விதர்பா - உத்தர பிரதேச அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த விதர்பா அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 406 ரன்கள் குவித்தது.

    இதனையடுத்து உத்தர பிரதேசம் அணி களமிறங்கி விளையாடியது. அதிரடியாக விளையாடிய அந்த அணியின் கேப்டன் 2-வது முறையாக இரட்டை சதம் விளாசினார். அவர் 95 பந்தில் 202 ரன்கள் குவித்தார். இதனால் உத்தர பிரதேசம் அணி 41.2 ஓவரில் 409 ரன்கள் குவித்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த தொடரில் இவர் அடிக்கும் 4 சதம் இதுவாகும். 6 போட்டிகளில் 728 ரன்கள் குவித்து இந்த தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பட்டியலில் முதல் இடத்தில் ரிஸ்வி உள்ளார்.

    சமீபத்தில் தான் திரிபுரா அணிக்கு எதிராக 97 பந்தில் 201 ரன்கள் ரிஸ்வி எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த ஆண்டு மெகா ஏலத்தில் சமீர் ரிஸ்வியை சிஎஸ்கே அணி 8.40 கோடி ரூபாய் கொடுத்து எடுத்தது. 

    ஆனால் அவருக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பில் பெரிய அளவில் சொபிக்கவில்லை. இதனால் இந்த முறை சிஎஸ்கே அணி சமீர் ரிஸ்வியை ஏலத்தில் வாங்க முயற்சி செய்யவில்லை. டெல்லி இவரை வெறும் ரூ. 95 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளது.

    • இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 55.5% பங்குகள் அல்ட்ரா டெக் சிமெண்ட் நிறுவனம் வாங்கியுள்ளது.
    • சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணியை உருவாக்கியவர் ஸ்ரீனிவாசன்.

    கடந்த ஜூலை மாதம் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 32.72 சதவீத பங்குகளை அல்ட்ரா டெக் சிமெண்ட் நிறுவனம் வாங்கியது.

    ஆதித்யா பிர்லா குழுமத்தின் அல்ட்ரா டெக் சிமெண்ட் நிறுவனம் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்குக்கு ரூ.390 என்ற விலை கொடுத்து மொத்தமாக ரூ.3,954 கோடி ரூபாய்க்கு வாங்கியது. ஏற்கனவே இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 22 சதவீத பங்குகளை அல்ட்ரா சிமெண்ட்ஸ் நிறுவனம் வைத்திருந்தது. இதன்மூலம் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 55.5% பங்குகள் அல்ட்ரா டெக் சிமெண்ட் நிறுவனத்திற்கு சொந்தமானது.

    டிசம்பர் 24 அன்று இந்த ஒப்பந்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம், அல்ட்ராடெக் சிமெண்டின் துணை நிறுவனமாக மாறியுள்ளது.

    அதனால் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் சிஇஓ பொறுப்பில் இருந்து ஸ்ரீனிவாசன் பதவி விலகியுள்ளார். மேலும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் ரூபா குருநாத்தும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனமானது (ICL) கடந்த 1946 ஆம் ஆண்டு எஸ்.என் சங்கரலிங்க அய்யர் மற்றும் டி.எஸ் நாராயண ஸ்வாமி ஆகியோரால் திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பகுதியில் தொடங்கப்பட்டது. 1969 ஆம் ஆண்டு தந்தை நாராயண ஸ்வாமியின் மறைவுக்குப் பின் தனது 23 வது வயதிலேயே ஸ்ரீனிவாசன் இந்தியா சிமிண்ட்ஸ் நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்ட்டராக பொறுப்பேற்றார்.

    அவரது தலைமையில் இந்தியா சிமெண்ட்ஸ் தென்னிந்தியாவின் முன்னணி சிமெண்ட் நிறுவனமாக உருவெடுத்தது. இந்நாள்வரை அந்த தலைமைப் பொறுப்பில் சிறப்பாகச் செயல்பட்டு வந்த ஸ்ரீனிவாசன் தலைமையிலான இந்தியா சிமெண்ட்ஸ் போட்டி அதிகரித்ததாலும், விலையேற்றம் உள்ளிட்ட காரணங்களாலும் நிறுவனத்தின் பங்குகளை ஸ்ரீனிவாசன் விற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஸ்ரீனிவாசனின் கிரிக்கெட் ஆர்வம் அளப்பரியதாகும். இன்று கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்பட்டுவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணியை உருவாக்கியவர் ஸ்ரீனிவாசன். மேலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் [ஐ.சி.சி] தலைவராகவும், இந்திய கிரிக்கெட் கவுன்சிலான் பி.சி.சி.ஐ தலைவராகவும் பொறுப்பு வகித்தவர் ஆவார்.

    தற்போது ஸ்ரீனிவாசன் இந்தியா சிமெண்ட்ஸை விட்டு வெளியேறினாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட்டின் 30 சதவீத பங்குகளை இந்தியா சிமெண்ட்ஸ் ஷேர்ஹோல்டர்ஸ் டிரஸ்ட், அதே பெயரில் வைத்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்காவில் காசிக்கு ஹால் ஆஃப் ஃபேம் என்ற விருது வழங்கப்பட்டது.
    • அவருக்கு சிஎஸ்கே வீரர்கள் உள்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

    தமிழ்நாடு கிரிக்கெட் அகாடமியின் முன்னாள் செயலாளர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாக அதிகாரி கல்லிடைக்குறிச்சி எஸ் விஸ்வநாதன் என்ற காசியை பாராட்டி, அமெரிக்காவில் உள்ள ஹார்ட்போர்ட் நகரில் நடைபெற்ற விழாவில் அவருக்கு ஹால் ஆஃப் ஃபேம் என்ற விருது வழங்கப்பட்டது.

    கிரிக்கெட்டில் மிகப்பெரிய இடத்தை தக்கவைத்த காசிக்கு, பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டது. இந்த விஷயம் குறித்த தகவலை, தமிழ்நாடு கிரிக்கெட் அகாடமி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து பாராட்டுகளை தெரிவித்துள்ளது.

    இதேபோல சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் உள்பட பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அது குறித்த வீடியோ தொகுப்பை சிஎஸ்கே அணி, தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில் சிஎஸ்கே வீரர்கள் ஜடேஜா தமிழில் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

    மேலும் ருதுராஜ், அஸ்வின், தமிழக வீரர் தினேஷ் கார்த்திக், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் பிளெமிங் ஆகியோர் இந்த வீடியோ மூலம் காசியை பாராட்டி உள்ளனர்.

    இந்த வீடியோ முடிவில் ஜடேஜா, காசி சார் சீக்கிரம் சென்னையில் பார்ப்போம் என தமிழில் கூறியது சிஎஸ்கே ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஜடேஜா பேசும் தமிழ் அருமையாக உள்ளது எனவும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    • கடந்த ஆண்டு மெகா ஏலத்தில் சமீர் ரிஸ்வியை சிஎஸ்கே அணி 8.40 கோடி ரூபாய்க்கு எடுத்தது.
    • இந்த முறை சிஎஸ்கே அணி சமீர் ரிஸ்வியை ஏலத்தில் வாங்க முயற்சி செய்யவில்லை.

    இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் 23 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இது குறிப்பிட்ட வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டி என்பதால் இது ஒரு அங்கீகரிக்கப்படாத போட்டியாகவே அமைகிறது.

    இந்நிலையில் இந்த தொடரில் திரிபுரா மற்றும் உத்தர பிரதேச அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த உத்தர பிரதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 405 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் சமீர் ரிஸ்வி 13 பவுண்டரிகள் மற்றும் 20 சிக்ஸர்கள் உடன் ஆட்டம் இழக்காமல் 97 பந்தில் 201 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் அதிவேக இரட்டை சதத்தை அடித்து சமீர் ரிஸ்வி சாதனை படைத்துள்ளார்.

    பொதுவாக மாநிலங்களுக்கு இடையே ஆன அங்கீகரிக்கப்பட்ட லிஸ்ட் ஏ போட்டியில் நாராயணன் ஜெகதீசன் மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் 114 பந்துகளில் அதிவேக இரட்டை சதத்தை அடித்திருக்கிறார்கள்.

    இவர்களுக்கு முன்பாக முதலிடத்தில் நியூசிலாந்தின் சாரட் போவ்ஸ் இருக்கிறார். கடந்த ஆண்டு மெகா ஏலத்தில் சமீர் ரிஸ்வியை சிஎஸ்கே அணி 8.40 கோடி ரூபாய் கொடுத்து ஆச்சரியப்படும் இடத்தில் வாங்கியது.

    ஆனால் அவருக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பில் பெரிய அளவில் சொபிக்கவில்லை. இதனால் இந்த முறை சிஎஸ்கே அணி சமீர் ரிஸ்வியை ஏலத்தில் வாங்க முயற்சி செய்யவில்லை. டெல்லி இவரை வெறும் 95 லட்ச ரூபாய்க்கு வாங்கி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ஐபிஎல் 2023 இல் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய கான்வே 672 ரன்களை எடுத்தார்.
    • 2025 ஐபிஎல் ஏலத்தை கான்வேவை ரூ.6.25 கோடிக்கு சென்னை அணியே விலைக்கு வாங்கியது.

    ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக சிஎஸ்கே அணியில் இருந்து நியூசிலாந்து வீரர் டெவான் கான்வே விடுவிக்கப்பட்டார். பின்னர் ஐபிஎல் ஏலத்தை அவரை ரூ.6.25 கோடிக்கு சென்னை அணியே விலை கொடுத்து வாங்கியது.

    வரும் ஐபிஎல் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட்டுடன் இணைந்து கான்வே தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், டெவான் கான்வே - கிம் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு ஒலிவியா கான்வே என பெயர் சூட்டியுள்ளனர்

    ஐபிஎல் 2023 இல் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய கான்வே 672 ரன்களை எடுத்தார். ஆனால் 2024 ஆம் ஆண்டு காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் அவர் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரவிச்சந்திரன் அஸ்வினை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.9.75 கோடிக்கு வாங்கியுள்ளது.
    • அஸ்வின் 2008 முதல் 2015 வரை ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியுள்ளார்.

    18-வது ஐ.பி.எல். தொடர் அடுத்த வருடம் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் ஜெட்டா நகரில் அண்மையில் நடைபெற்றது.

    இந்த ஏலத்தில் இந்திய அணியின் முன்னணி வீரரான சென்னையை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வினை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.9.75 கோடிக்கு வாங்கியுள்ளது.

    அஸ்வின் 2008 முதல் 2015 வரை ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியுள்ளார். தற்போது 9 வருடங்களுக்கு பின் மீண்டும் அஸ்வின் சென்னை அணியில் இணைந்திருப்பது ரசிகர்களை மகிழ்வித்துள்ளது.

    இந்நிலையில், எம்.எஸ்.டோனியுடன் அஷ்வின் இருக்கும் புகைப்படங்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அந்த பதிவில், "Come on Ash" izza Vibe!" என்று சி.எஸ்.கே. அணி பதிவிட்டுள்ளது.

    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 7 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 25 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
    • சிஎஸ்கே வீரர்கள் பயணம் செய்ய ஏதுவாக etihad airways நிறுவனம் தனி விமானம் ஏற்பாடு செய்துள்ளது.

    ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் 14 முதல் மே 25 வரை நடக்கிறது. இதற்கான மெக ஏலம் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்து முடிந்தது. இதன்மூலம் 10 அணிகளும் தங்களுக்கான வீரர்களை தேர்வு செய்துள்ளனர்.

    தமிழகத்தை மையமாக கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 7 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 25 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு சென்னை அணியில் 3 தமிழக வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

    இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பயணம் செய்ய ஏதுவாக etihad airways நிறுவனம் தனி விமானம் ஏற்பாடு செய்துள்ளது. அந்த விமானத்தில் சிஎஸ்கே லோகோவுடன் மஞ்சள் கலரில் தயார் செய்யப்பட்டுள்ளது. இனி சிஎஸ்கே வீரர்கள் அடுத்த மாநிலத்திற்கு செல்ல இந்த விமானத்தில் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சிஎஸ்கே அணி வீரர்கள்:-

    1. எம் எஸ் டோனி 2. ருதுராஜ் கெய்க்வாட் 3. பத்திரனா 4. சிவம் துபே 5. ஜடேஜா 6. டெவோன் கான்வே 7. ராகுல் திரிபாதி 8. ரச்சின் ரவீந்திரா 9. ரவிச்சந்திரன் அஸ்வின் 10. கலீல் அகமது 11. நூர் அகமது 12. விஜய் சங்கர் 13. சாம் கர்ரன் 14. ஷேக் ரஷீத் 15. அன்ஷுல் கம்போஜ் 16. முகேஷ் சவுத்ரி 17. தீபக் ஹூடா 18. குர்ஜப்னீத் சிங் 19. நாதன் எல்லிஸ் 20. ஜேமி ஓவர்டன் 21. கமலேஷ் நாகர்கோடி

    22. ராமகிருஷ்ண கோஷ் 23. ஷ்ரேயாஸ் கோபால் 24. வான்ஷ் பேடி 25. ஆண்ட்ரே சித்தார்த்

    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 7 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 25 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
    • குறிப்பாக 3 தமிழக வீரர்கள் சென்னையில் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

    ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் 2 நாட்கள் நடைபெற்று முடிந்தது.

    இந்த ஏலத்தில் முதல் நாளில் ஐந்து முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் ஏழு வீரர்களை வாங்கியது. 2-ம் நாளில் 13 வீரர்களை வாங்கியது. அதிக தொகையாக அஸ்வினை ரூ. 9.75 கோடிக்கு வாங்கி அசத்தியது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 7 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 25 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக 3 தமிழக வீரர்கள் சென்னையில் அணியில் இடம் பிடித்துள்ளனர். தமிழகத்தை மையமாக கொண்டு விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்கத்தில் தமிழக வீரர்கள் இடம் பிடித்தனர். அதன்பிறகு அணியில் இடம் பிடித்திருந்தாலும் 11 பேர் கொண்ட அணியில் வாய்ப்பு வழங்கபடவில்லை. அதன்பிறகு அணியில் ஒரு தமிழக வீரர் கூட இடம் பிடித்ததில்லை.

    இதனை வைத்து, சென்னை அணி என்று தான் பெயர். ஆனால் ஒரு தமிழக வீரர்கள் கூட இல்லை என மீம்ஸ்களை மற்ற அணி ரசிகர்கள் வைரலாக்கி வந்தனர். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த முறை ரவிச்சந்திரன் அஸ்வின், விஜய் சங்கர், ஆண்ட்ரே சித்தார்த் ஆகிய 3 தமிழக வீரர்கள் சென்னை அணியில் இடம்பிடித்துள்ளனர். இது சென்னை ரசிகர்களுக்கு மிகுந்து மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தக்கவைக்கப்பட்ட வீரர்கள்:-

    1. எம் எஸ் டோனி ரூ. 4 கோடி

    2. ருதுராஜ் கெய்க்வாட் ரூ. 18 கோடி

    3. பத்திரனா ரூ.13 கோடி

    4. சிவம் துபே ரூ.12 கோடி

    5. ஜடேஜா ரூ. 18 கோடி

    ஏலத்தில் எடுக்கப்பட்ட சென்னை அணி வீரர்கள்:-

    1. டெவோன் கான்வே - ரூ 6.25 கோடி

    2. ராகுல் திரிபாதி - ரூ 3.4 கோடி

    3. ரச்சின் ரவீந்திரா - ரூ 4 கோடி

    4. ரவிச்சந்திரன் அஸ்வின் - ரூ 9.75 கோடி

    5. கலீல் அகமது - ரூ 4.80 கோடி

    6. நூர் அகமது - ரூ.10 கோடி

    7. விஜய் சங்கர் - ரூ 1.2 கோடி

    8. சாம் கர்ரன் - ரூ 2.4 கோடி

    9. ஷேக் ரஷீத் - ரூ 30 லட்சம்

    10. அன்ஷுல் கம்போஜ் - ரூ 3.4 கோடி

    11. முகேஷ் சவுத்ரி - ரூ 30 லட்சம்

    12. தீபக் ஹூடா - ரூ 1.7 கோடி

    13. குர்ஜப்னீத் சிங் - ரூ 2.2 கோடி

    14. நாதன் எல்லிஸ் - ரூ 2 கோடி

    15. ஜேமி ஓவர்டன் - ரூ.1.5 கோடி

    16. கமலேஷ் நாகர்கோடி - ரூ.30 லட்சம்

    17. ராமகிருஷ்ண கோஷ் - ரூ 30 லட்சம்

    18. ஷ்ரேயாஸ் கோபால் - ரூ 30 லட்சம்

    19. வான்ஷ் பேடி - ரூ 55 லட்சம்

    20. ஆண்ட்ரே சித்தார்த் - ரூ 30 லட்சம்

    • ரஞ்சி போட்டியில் அரியானா அணிக்காக வேகப்பந்து வீச்சாளர் அன்ஷுல் கம்போஜ் விளையாடி வருகிறார்.
    • ரஞ்சி போட்டியில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அன்ஷுல் கம்போஜ் அசத்தினார்.

    ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் துவங்கியது. இந்த ஏலத்தில் 574 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். முதல் நாள் ஏலம் பல கட்டங்களாக நேற்று நடைபெற்றது. ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ரிஷப் பண்ட் ரூ. 27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

    இந்நிலையில், இன்று இரண்டாம் நாள் ஏலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. மும்பை அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் அன்ஷுல் கம்போஜ்-ஐ 3.4 கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இவரின் அடிப்படை விலையாக ரூ.30 லட்சம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

    அண்மையில், ரஞ்சி போட்டியில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அன்ஷுல் கம்போஜ் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சாம் கரணை சென்னை ரசிகர்கள் சுட்டி குழந்தை என்று அன்போடு அழைப்பர்.
    • கடந்த 3 ஆண்டுகளாக பஞ்சாப் அணியில் சாம் கரண் விளையாடி வந்தார்.

    ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் துவங்கியது. இந்த ஏலத்தில் 574 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். முதல் நாள் ஏலம் பல கட்டங்களாக நேற்று நடைபெற்றது. ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ரிஷப் பண்ட் ரூ. 27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

    இந்நிலையில், இன்று இரண்டாம் நாள் ஏலம் தொடங்கியது. அப்போது இங்கிலாந்து ஆல் ரவுண்டரான சாம் கரணை 2.4 கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. சாம் கரணின் அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது

    கடந்த 3 ஆண்டுகளாக பஞ்சாப் அணியின் விளையாடி வந்த சாம் கரண் அதற்கு முன்பு சென்னை அணியில் விளையாடி வந்தார். அப்போது சாம் கரணை சென்னை ரசிகர்கள் சுட்டி குழந்தை என்று அன்போடு அழைத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மீண்டும் சென்னை அணிக்கு திரும்பி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
    • டோனியுடனும், கெய்க்வாட் தலைமையிலும் களமிறங்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    ஜெட்டா:

    18-வது ஐ.பி.எல். தொடர் அடுத்த வருடம் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் ஜெட்டா நகரில் நேற்றும் இன்றும் நடைபெறுகிறது.

    இந்நிலையில் இந்திய அணியின் முன்னணி வீரரான சென்னையை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வினை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.9.75 கோடிக்கு வாங்கியுள்ளது.

    அஸ்வின் 2008 முதல் 2015 வரை ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியுள்ளார். தற்போது 9 வருடங்களுக்கு பின் மீண்டும் அஸ்வின் சென்னை அணியில் இணைந்திருப்பது ரசிகர்களை மகிழ்வித்துள்ளது.

    இது குறித்து அஸ்வின் வீடியோ வெளியிட்டு கூறியதாவது:-

    வாழ்க்கை ஒரு வட்டம் என சொல்வார்கள். 2008 முதல் 2015-ம் ஆண்டு வரை முதல் முறையாக மஞ்சள் ஜெர்சியை அணிந்து சென்னை அணிக்கு விளையாடியதில் இருந்து, அந்த அணிக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன். சென்னை அணியில் விளையாடியது, கற்றுக்கொண்டது தான் சர்வதேச போட்டிகளில் நான் இவ்வளவு தூரம் பயணிக்கு உதவியுள்ளது. சென்னை அணிக்காக நான் கடைசியாக விளையாடி கிட்டத்தட்ட 10 வருடங்கள் ஆகிவிட்டது. 2015-ல் கடைசியாக விளையாடியேனேன்.

    எப்படி சொல்வது என தெரியவில்லை. சென்னை அணி மீண்டும் என்னை தேர்வு செய்துள்ளது. விலை, ஹோம்கமிங் என பல்வேறு விதமாக கூறினாலும், 2011-ம் ஆண்டு சண்டை போட்டு என்னை ஏலத்தில் எடுத்தது போன்று மீண்டும் எடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. மிகவும் சிறந்த உணர்ச்சிகள் அது.

    அன்புடென் ஃபேன்ஸ் என்பதை கடந்த 9-10 ஆண்டுகளாக பார்க்கிறேன். ராஜஸ்தான் அணிக்காக விளையாடும்போதெல்லாம், சென்னை அணிக்கு எதிராக களமிறங்கும்போது கடினமாக இருந்தது. அந்த அணிக்கு விளையாடும்போது ரசிகர்கள் எனக்காக குரல் எழுப்பமாடார்கள். இந்நிலையில் மீண்டும் அணிக்கு திரும்பி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. டோனியுடனும், கெய்க்வாட் தலைமையிலும் களமிறங்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என அஸ்வின் தெரிவித்துள்ளார்.

    ×