search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chepauk ground"

    சேப்பாக்கம் ‘பிட்ச்’ குறித்து டோனி மீண்டும் அதிருப்தி அடைந்துள்ளார். இது போன்ற பிட்சில் விளையாட நாங்கள் விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார். #IPL2019 #CSKvKKR #dhoni

    சென்னை:

    ஐ.பி.எல். போட்டியில் சென்னை அணி கொல்கத்தாவை வீழ்த்தி மீண்டும் முதல் இடத்தை பிடித்தது.

    சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 108 ரன்னே எடுக்க முடிந்தது.

    பந்து வீச்சுக்கு ஏற்ற இந்த மோசமான ஆடு களத்தில் ஆந்த்ரே ரஸ்சல் மட்டுமே தாக்கு பிடித்து ஆடினார். அவர் 44 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 50 ரன்கள் எடுத்தார். தீபக் சாஹர் 3 விக்கெட்டும், ஹர்பஜன்சிங், இம்ரான் தாகீர் தலா 2 விக்கெட்டும், ஜடேஜா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 16 பந்துகள் எஞ்சி இருந்த நிலையில் 109 ரன் இலக்கை எடுத்தது. 17.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 111 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டு பிளிஸ்சிஸ் 43 ரன்னும், அம்பதிராயுடு 21 ரன்னும் எடுத்தனர். சுனில் நரீன் 2 விக்கெட் வீழ்த்தினார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் பெற்ற 5-வது வெற்றியாகும். இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதல் இடத்தை பிடித்தது.

    மிகவும் குறைந்த ரன்னே எடுக்க முடிந்ததால் சேப்பாக்கம் ஆடுகளம் குறித்து மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்தில் பெங்களூர் அணியால் 70 ரன்னே எடுக்க முடிந்தது. இந்த ரன்னை எடுக்க சூப்பர் கிங்சுக்கு 18 ஓவர் வரை தேவைப்பட்டது. நேற்றைய போட்டியிலும் இதே நிலைமைதான்

    சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி, சேப்பாக்கம் ‘பிட்ச்’ குறித்து மீண்டும் அதிருப்தி அடைந்துள்ளார். போட்டி முடிந்த பிறகு அவர் இது தொடர்பாக கூறியதாவது:-

    முதல் போட்டியில் இருந்த ஆடுகளம் போலவே இந்த ஆட்டத்திலும் இருந்தது. பிட்ச் குறித்து புகார் கூறிக் கொண்டே நாங்கள் வெற்றி பெற்று விடுகிறோம். இது போன்ற பிட்சில் விளையாட நாங்கள் விரும்பிவில்லை. ஏனென்றால் மிகவும் குறைந்த ஸ்கோர் தான் எடுக்க முடிகிறது.

    எங்கள் பேட்ஸ்மேன்களுக்கு இந்த ஆடுகளத்தில் ரன் எடுப்பது கடினமாக இருக்கிறது. அதுவும் முதலில் பேட்டி செய்தால் மிகவும் கடினமாக உள்ளது. பனி பொழிவினால் 2-வது பகுதி ஆட்டத்துக்கு ஆடுகளம் கொஞ்சம் பரவாயில்லை. இது மாதிரியான ஆடுகளம் இல்லாமல் பேட்டிங்குக்கு சாதகமாக அமைந்தால் நாங்கள் சரியான அணி சேர்க்கையை சேர்த்தாக வேண்டும். என்னை பொறுத்தவரை திட்டமிடுதல் எதுவுமில்லை.

    பிராவோ காயம் அடைந்த பிறகே அணி சேர்க்கை எங்களுக்கு கடினமாக உள்ளது. ஆல்ரவுண்டர் இல்லை. டேவிட் வில்லேயும் இல்லை

    ஹர்பஜன்சிங், இம்ரான் தாகீர் ஆகியோரை பற்றி எந்த பிரச்சினையும் இல்லை. இருவரும் முதிர்ச்சி அடைந்தவர்கள். பழைய ஒயின் போன்றவர்கள். இருவரும் மிகவும் சிறப்பாக பந்து வீசி வருகிறார்கள். நான் என்ன விரும்புகிறேனோ அதற்கு ஏற்றவாறு நல்ல திறமையுடன் இம்ரான்தாகீர் வீசுகிறார். ஒட்டு மொத்தத்தில் பந்து வீச்சு துறை நன்றாக இருக்கிறது.

    இவ்வாறு டோனி கூறியுள்ளார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை நாளை மீண்டும் சந்திக்கிறது. இந்த ஆட்டம் ஜெய்பூரில் இரவு 8 மணிக்கு நடக்கிறது.

    கொல்கத்தா நைட்ரை டர்ஸ் அணி 2-வது தோல்வியை தழுவியது. அந்த அணி அடுத்த ஆட்டத்தில் டெல்லியை வருகிற 12-ந்தேதி எதிர்கொள்கிறது. #IPL2019 #CSKvKKR #dhoni

    சேப்பாக்கத்தில் 31-ந்தேதி நடைபெறும் ஐ.பி.எல். போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியது. டிக்கெட் வாங்குவதற்காக ரசிகர்கள் நள்ளிரவில் இருந்தே சேப்பாக்கம் ஸ்டேடியம் முன்பு திரண்டு இருந்தனர். #IPL2019 #CSK #CSKvRR
    சென்னை:

    12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் 7 ‘லீக்’ ஆட்டங்கள் நடக்கிறது.

    கடந்த 23-ந்தேதி நடந்த தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தியது.

    வருகிற 31-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணிக்கு 2-வது ஆட்டம் நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதுகின்றனர்.



    சேப்பாக்கத்தில் 31-ந்தேதி நடைபெறும் ஐ.பி.எல். போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 8.45 மணிக்கு தொடங்கியது.

    டிக்கெட் வாங்குவதற்காக ரசிகர்கள் நள்ளிரவில் இருந்தே சேப்பாக்கம் ஸ்டேடியம் முன்பு திரண்டு இருந்தனர். அவர்கள் நீண்ட கியூவில் நின்று மிகவும் ஆர்வத்துடன் டிக்கெட் வாங்கினார்கள். குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.1,300 ஆகும். இந்த விலையிலான டிக்கெட்டுகள் வாங்குவதற்காகவே ரசிகர்கள் ஸ்டேடியம் முன்பு குவிந்து இருந்தனர்.

    இதேபோல ஆன்லைனிலும் டிக்கெட்டுகள் விற்பனையாகின்றன. #IPL2019 #CSK #CSKvRR
    மைதானத்துக்குள் அத்துமீறி நுழைந்து எம்எஸ் டோனியை கட்டி அணைத்த கல்லூரி மாணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #IPL21019 #CSK #MSDhoni
    சென்னை:

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 23-ந் தேதி சென்னையில் தொடங்குகிறது. இதையொட்டி சென்னை சேப்பாக்கத்தில் பயிற்சி மேற்கொண்டு வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தங்களுக்குள் இரண்டு அணியாக பிரிந்து நேற்று காட்சி போட்டியில் விளையாடினர்.

    இதை பார்ப்பதற்கு சி.டி.இ. ஆகிய கேலரிகளில் ரசிகர்கள் இலவசமாக அனுமதிக்கப்பட்டனர். 3 கேலரிகளிலும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.

    போட்டி தொடங்குவதற்கு முன்பாக வீரர்கள் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது வாலிபர் ஒருவர் பாதுகாப்பை மீறி மைதானத்துக்குள் புகுந்தார். அவர் டோனியை நோக்கி கட்டி அணைக்க ஓடி வந்தார்.

    இதனை கவனித்த டோனி அவரிடம் சிக்காமல் ஓட்டம் காண்பித்தார். ஆனாலும் விடாமல் துரத்திய வாலிபர் டோனியை நெருங்கினார். அப்போது அருகில் நின்ற பந்து வீச்சு பயிற்சியாளர் பாலாஜியின் பின்னால் டோனி மறைந்து நின்றார்.



    இந்த ஓட்டம் சிறிது நேரம் மைதானத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் டோனியே அந்த வாலிபரிடம் வந்து கைகுலுக்கி கட்டி அணைத்தார். இதன் பின்னர் அந்த வாலிபர் அங்கிருந்து மகிழ்ச்சியுடன் வெளியேறினார்.

    இதையடுத்து மைதானத்துக்குள் அத்துமீறி நுழைந்த அந்த வாலிபரை திருவல்லிக்கேணி போலீசார் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

    விசாரணையில் அவர் மதுரை மாகாளிப்பட்டியை சேர்ந்த கல்லூரி மாணவரான அரவிந்த்குமார் என்பது தெரிந்தது. எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வரும் அவர் கிரிக்கெட் வீரர்களை பார்ப்பதற்காகவே மதுரையில் இருந்து வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் சென்னை வந்துள்ளார்.

    டோனியின் தீவிர ரசிகரான அரவிந்த்குமார் மைதானக்குள் டோனியை பார்த்ததும் மகிழ்ச்சியில் பாதுகாப்பை மீறி சென்றுவிட்டதாக கூறி உள்ளார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனான டோனிக்கு சென்னையில் ரசிகர்கள் அதிகம்.

    சமீபத்தில் நாக்பூரில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போதும் ரசிகர் ஒருவர் மைதானத்துக்குள் வந்து டோனியை கட்டி அணைத்தார். இந்த வீடியோ வைரலானது. தற்போது சென்னையிலும் இதேபோல் சம்பவம் நடந்துள்ளது. இந்த வீடியோவும் வைரலாக பரவி வருகிறது. #IPL21019 #CSK #MSDhoni
    ×