என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    ஹாட்ரிக் வெற்றி எளிதாக கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை: அக்சர் படேல்
    X

    ஹாட்ரிக் வெற்றி எளிதாக கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை: அக்சர் படேல்

    • ஒரு கேப்டனாக சரியான போட்டியில் நாங்கள் இதுவரை விளையாடியதாக நினைக்கவில்லை.
    • ஐபிஎல் நீண்ட தொடர். உத்வேகம் எந்த நேரத்திலும் மாறலாம்.

    ஐபிஎல் 2025 சீசனின் 16ஆவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் சிஎஸ்கே- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் 6 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது. கே.எல். ராகுல் 77 ரன்கள் விளாசினார்.

    பின்னர் விளையாடிய சிஎஸ்கே அணியால் 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. பேட்ஸ்மேன்கள் சொதப்பலாம் தோல்வியை எதிர்கொண்டது.

    2010ஆம் ஆண்டுக்குப் பின் முதன்முறையாக சேப்பாக்கம் மைதான்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை டெல்லி கேப்பிட்டல்ஸ் வீழ்த்தியுள்ளது. அத்துடன் இந்த தொடரில் இதுவரை விளையாடியுள்ள முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

    சிஎஸ்கே அணிக்கெதிரான வெற்றி குறித்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் அக்சர் படேல் கூறியதாவது:-

    மூன்று போட்டிகளில் மூன்று வெற்றி என்பது எளிதாக கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. எல்லோரும் பங்களிப்பை கொடுத்தார்கள். டீம் பேலன்ஸ் சிறப்பாக உள்ளது. ஒரு கேப்டனாக ஹாட்ரிக் வெற்றி சந்தோசம் அளிக்கிறது.

    எனது கையில் காயம் ஏற்பட்டுள்ளதால் இன்று அதிகமாக பந்து வீசவில்லை. ஒவ்வொரு போட்டியிலும் சில சிறந்த கேட்ச்கள் இருக்கும். சில கேட்ச்கள் தவறவிடப்படும். ஒரு கேப்டனாக தரமான போட்டியில் நாங்கள் இதுவரை விளையாடியதாக நினைக்கவில்லை. ஐபிஎல் நீண்ட தொடர். உத்வேகம் எந்த நேரத்திலும் மாறலாம்.

    இவ்வாறு அக்சர் படேல் தெரிவித்தார்.

    Next Story
    ×