என் மலர்
நீங்கள் தேடியது "CSK"
- ஒவ்வொரு வருடமும் டோனியின் பிறந்தநாளுக்கு ஜடேஜா மறக்காமல் வாழ்த்து தெரிவிப்பார்.
- சிஎஸ்கே அணியுடனான நெருக்கம் குறைந்து வருவதால் 2023-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக ஜடேஜா விளையாடுவது சந்தேகம் தான் எனத் தெரியவந்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட்டில் டோனி தலைமையிலான சென்னை அணி 4 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 5-வது சீசனில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் தோல்விகளை சந்தித்து புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து 9-வது இடத்தில் நீடித்து வந்தது.
15-வது சீசன் துவங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு சிஎஸ்கே கேப்டன் பதவியை ஏற்றுக்கொண்ட ஜடேஜா முதல் 8 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுக்கொடுத்தார். அதுமட்டுமல்ல பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலுமே படுமோசமாக சொதப்பி பார்ம் அவுட்டிற்கு சென்றார்.
இந்நிலையில் கேப்டன் பதவியில் இருந்து விலகியவுடன் அவர் தொடரில் இருந்தே வெளியேறியது ரசிகர்களுக்கு குழப்பத்தை உண்டாக்கியது. கேப்டன் பொறுப்பை மாற்றியதில் அவருக்கும் அணி நிர்வாகத்திற்கும் மனக்கசப்பு ஏற்பட்டு அவர் வெளியேறியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் அதனை உறுதி செய்யும்படியான விஷயங்களை ஜடேஜா செய்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த 2021 மற்றும் 2022-ம் ஆண்டு ஐபிஎல் பதிவுகளை திடீரென முற்றிலுமாக நீக்கியுள்ளார். சிஎஸ்கே குறித்த அனைத்து புகைப்படங்களையும் நீக்கிவிட்டார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது ஒருபுறம் இருக்க டோனிக்கும் - ரவீந்திர ஜடேஜாவுக்கும் இடையேயான உறவிலும் விரிசல் ஏற்பட்டிருக்கலாம். ஒவ்வொரு வருடமும் டோனியின் பிறந்தநாளுக்கு ஜடேஜா மறக்காமல் வாழ்த்து தெரிவிப்பார். ஆனால் இந்தாண்டு மற்ற அனைத்து வீரர்களும் வாழ்த்து தெரிவித்த போதும், ஜடேஜா எதுவும் கண்டுக்கொள்ளவில்லை.
சிஎஸ்கே அணியுடனான நெருக்கம் குறைந்து வருவதால் 2023-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக ஜடேஜா விளையாடுவது சந்தேகம் தான் எனத் தெரியவந்துள்ளது.
மும்பை:
இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தி வரும் ஐ.பி.எல். 20 ஓவர் போட்டித் தொடரில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை மெகா ஏலம் நடத்தப்படுகிறது.
அடுத்த ஆண்டு நடைபெறும் 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டித் தொடர் வருகிற ஏப்ரல் 2-ந்தேதி சென்னையில் தொடங்குகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
அதற்கு முன்பாக வீரர்கள் மெகா ஏலம் நடைபெற உள்ளது. ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 4 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறைந்த பட்சம் ஒரு வெளிநாட்டு வீரர் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அணியிலும் தக்க வைக்கப்படும் வீரர்களின் பட்டியலை வருகிற 30-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் டோனி தக்க வைக்கப்படுவது ஏற்கனவே உறுதியாகி விட்டது. மற்ற 3 வீரர்கள் யார்? என்பதில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தக்க வைக்கப்படும் 3 வீரர்களின் விவரங்கள் வெளியாகி இருக்கிறது. ஆல்ரவுண்டர் ரவீந்தர ஜடேஜா, தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட், ஆகியோர் தக்கவைக்கப் படுவார்கள் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
வெளிநாட்டு வீரர்களில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயின் அலி தக்க வைக்கப்படலாம். அவர் சென்னை அணியில் இடம்பெற விரும்பவில்லை என்றால் இங்கிலாந்தை சேர்ந்த ஆல்ரவுண்டர் சாம் கர்ரன் 4-வது வீரராக தக்க வைக்கப்பட வாய்ப்பு உள்ளது.
அதேபோல் மற்றொரு தொடக்க வீரரான டூபெலிசிஸ் தக்கவைக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நட்சத்திர வீரராக திகழ்ந்த சுரேஷ் ரெய்னா சமீபத்தில் நடந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து கழற்றி விடப்படுவார் என்று தெரிகிறது. இதையடுத்து அவரது பெயர் ஏலம் பட்டியலில் இடம் பெறும்.
டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் கேப்டன் ரிஷப் பண்ட், அக்ஷர்படேல், பிரித்வி ஷா, நார்ஜே ஆகியோரும், மும்பை அணியில் கேப்டன் ரோகித் சர்மா, பும்ரா ஆகியோரும் தக்க வைக்கப்படுகிறார்கள். அந்த அணியில் பொல்லார்டும், இஷான்கிஷனும் தக்க வைக்கப்பட வாய்ப்பு உள்ளது. சூர்யகுமார் யாதவை ஏலத்தில் எடுக்க மும்பை இந்தியன்ஸ் அணி திட்டமிட்டுள்ளது.
புதிய அணியான லக்னோவுக்கு லோகேஷ் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.

புதுடெல்லி:
டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு ரூ. 1 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என்று சி.எஸ்.கே. நிர்வாகம் அறிவித்து இருந்தது.
அதன்படி டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் அவரிடம் ரூ. 1 கோடிக்கான காசோலையை சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் தலைமை செயல் அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன், சேர்மன் ஆர்.சீனிவாசன் ஆகியோர் வழங்கினர்.
ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா 87.58 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்ததை குறிக்கும் வகையில் ‘8758’ என்ற எண் பொறிக்கப்பட்ட விசேஷ சீருடையும் அவருக்கு நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது.
சென்னை அணி தோற்றாலும் வாட்சன் கடைசி வரை தனி ஒருவராக போராடி சி.எஸ்.கே. ரசிகர்களின் பாராட்டை பெற்றார். அவர் 59 பந்தில் 80 ரன் எடுத்தார். இதில் 8 பவுண்டரியும், 4 சிக்சர்களும் அடங்கும். சமூக வலைதளங்களில் அவரது ஆட்டத்தை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி இருந்தனர்.

வாட்சன் ரன் எடுக்க ஓடும் போது டைவ் அடித்ததில் அவரது காலில் காயம் ஏற்பட்டது. இதை யாரிடமும் தெரிவிக்காமல் கடைசி வரை ஆடினார். போட்டிக்கு பிறகு காலில் ஏற்பட்ட காயத்துக்கு 6 தையல் போடப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
தற்போது இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. இதைத் தொடர்ந்து சி.எஸ்.கே. ரசிகர்கள் வாட்சனை மீண்டும் ஒருமுறை பாராட்டி உள்ளனர். வாட்சனின் அர்ப்பணிப்பு நமக்கு கிடைத்த மகுடம் என்று சொல்லி சூப்பர் கிங் அணியும் பாராட்டி உள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் ஆட்டங்களின் முடிவில் முதல் தகுதிச்சுற்றில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில், இரண்டாவது தகுதிச்சுற்று ஆட்டம் விசாகப்பட்டினத்தில் இன்று இன்று இரவு 7 மணிக்கு தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி, பந்து வீச்சை தேர்வு செய்தார்.
ஆடுகளம் சுழற்பந்துக்கு சாதகமாக ஸ்லோ பிட்சாக இருந்ததால், சென்னை அணிக்கு கணிசமான ரன்களை இலக்காக வைக்க டெல்லி பேட்ஸ்மேன்கள் நினைத்தனர். இதற்காக துவக்கம் முதலே அதிரடி காட்டினர். ஆனால், அவர்கள் நினைத்ததைவிட பந்து மிகவும் மெதுவாக எழுந்து, பேட்ஸ்மேன்களை கணிக்க விடாமல் திணறச் செய்தது.
துவக்க வீரர்களாக களமிறங்கிய பிருத்வி ஷா, ஷிகர் தவான் இருவரும் 21 ரன்கள் எடுத்த நிலையில், இந்த ஜோடியை 3-வது ஓவரில் பிரித்தார் சாஹர். அவரது துல்லிய பந்துவீச்சில் பிருத்வி ஷா எல்பிடபுள்யு ஆகி வெளியேறினார். அவர் 5 ரன்க்கள் மட்டுமே சேர்த்தார். ஷிகர் தவான் 3 பவுண்டரிகளுடன் 18 ரன்கள் எடுத்தநிலையில், ஹர்பஜன் சிங்கிடம் விக்கெட்டை இழந்து வெளியேறினார். அப்போது அணியின் ஸ்கோர் 37 ரன்கள்.
பவர் பிளேவுக்கு பிறகு ரன் எடுக்க அதிக முயற்சி எடுக்க வேண்டியிருந்தது. அட்டகாசமான 4 பவுண்டரிகளை விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்திய முன்ரோ, 27 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் அய்யர் 13 ரன்களிலும், அக்சார் பட்டேல் 3 ரன்களிலும் வெளியேற, டெல்லி அணி 15 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்திருந்தது.
களத்தில் இருந்த ரிஷப் பந்த், ரூதர்போர்டு இருவரும், எப்படியாவது கவுரவமான ஸ்கோரை கொண்டு வருவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. ஹர்பஜன் ஓவரில் அபாரமாக சிக்சர் அடித்தார் ரூதர்போர்டு. அதன்பின்னர், ஆப் சைடில் வீசப்பட்ட லென்த் பாலை மீண்டும் சிக்சருக்கு அடிக்க முயன்று கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் 12 பந்துகளை சந்தித்து ஒரு சிக்சர் உள்பட 10 ரன்கள் சேர்த்தார்.

அடுத்த ஓவரில் ரிஷப் பந்த் தனது பங்கிற்கு ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடிக்க, ஓவர் முடிவில் அணியின் ஸ்கோர் 116 ஆனது. அடுத்து களமிறங்கிய கீமோ பால், 3 ரன்கள் எடுத்த நிலையில், பிராவோ பந்தில் கிளீன் போல்டானார். 19வது ஓவரின் முதல் மூன்று பந்துகளை தட்டிவிட்டு 6 ரன்கள் ஓடி எடுத்த ரிஷப் பந்த், 4வது பந்தை தூக்கி அடிக்க முயன்று கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய டிரென்ட் போல்ட், ஜடேஜா வீசிய கடைசி ஓவரில், 2வது பந்தில் தன் முழு பலத்தையும் காட்டி சிக்சர் அடித்தார். ஆனால், அடுத்த பந்தில் போல்டானார். பின்னர் வந்த இஷாந்த் சர்மா, 5வது பந்தில் பவுண்டரியும், கடைசி பந்தில் சிக்சரும் அடிக்க, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு, 147 ரன்கள் சேர்த்தது.
சென்னை அணி தரப்பில் தீபக் சாஹர், சர்துல் தாகூர், ஜடேஜா, பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர். இம்ரான் தாகிர் ஒரு விக்கெட் எடுத்தார்.
இதையடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக வாட்சனும், டு பிளிசிஸ்சும் ஆடினர். இருவரும் நேர்த்தியாக விளையாடி ரன் சேர்த்தனர். டு பிளிசிஸ் 50 ரன் அடித்திருந்த நிலையில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதேபோல் வாட்சனும் 50 ரன் இருக்கும்போது கேட்ச் ஆனார். அப்போது ஸ்கோர் 109 ரன்னாக இருந்தது. அடுத்து வந்த ரெய்னாவும், ராயுடுவும் ஜோடி சேர்ந்து ஆடினர். ரெய்னா 11 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்தாக வந்த டோனி 9 ரன்னில் வெளியேறினார். இறுதியில் சென்னை அணி 19 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 151 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் ஐபிஎல் போட்டியில் சென்னை அணி 100 வது வெற்றியை பதிவு செய்தது.